கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காவல் துறை அலுவலரிடமே களவு செய்த ஓட்டுநர் (புதிய தொழில்நுட்பங்களை நாமே கற்றுக் கொள்வது நல்லது அல்லது நம்பகமான ஆட்களிடம் மட்டும் உதவி பெறுவது நல்லது )...

 சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் குற்றபிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் அன்புகரசன். இவரின் போலீஸ் ஜீப்புக்கு அரசு சார்பில் ஓட்டுநர் நியமிக்கபடாததால், அன்புகரசனே பாலவாக்கத்தை சேர்ந்த மகேஷ் என்பவரை ஓட்டுநராக வைத்திருந்துள்ளார். டிரைவர் மகேசுக்கு மாதம் ரூ 10,000 ரூபாய் சம்பளம் மற்றும் படிகள் வழங்கியுள்ளார். கடந்த 8 மாதங்களாக மகேஷ் இன்ஸ்பெக்டர் அன்புக்கரசனுக்கு ஓட்டுநராக பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மகேஷ் பணிக்கு வரவில்லை. இன்ஸ்பெக்டர் பல முறை போனில் தொடர்பு கொண்ட போதும் மகேஷ் போனை எடுக்கவில்லை,

இதற்கிடையே, இன்ஸ்பெக்டர் அன்புகரசன் தனது கூகுள் பே கணக்கை சரி பார்த்தார். அப்போது தன் கணக்கிலிருந்த ரூ. 1,15,000ரூபாய் பணம் குறைந்திருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். காவல் ஆய்வாளர் அன்புகரசனுக்கு கூகுள் பே கணக்கை சரியாக உபயோகிக்க தெரியாததால், தன் குடும்பத்தினரிடத்தில் கொடுத்து வங்கிக் கணக்கை சோதனை செய்து பார்த்துள்ளார். அன்புக்கரசனின் வங்கிக் கணக்கில் இருந்து பல முறை மகேஷின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப் பட்டதை குடும்பத்தினர் கண்டுபிடித்தனர்.

இதனால் , அதிர்ச்சியடைந்தை அன்புக்கரசன், உடனடியாக மகேஷை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறார்.

காவல் ஆய்வாளர் அன்புகரசனுக்கு கூகுள் பே சேவையை பயன்படுத்த தெரியாது என்பதால் , தனது செல்போனை மகேஷிடத்தில் கொடுத்து வாகனத்துக்கு டீசல் போடுவது , சாப்பாடு வாங்க பணம் கொடுப்பது, ரீச்சார்ஜ் செய்வது என பண பரிவர்த்தனை செய்து வந்துள்ளார். அப்படி செல்போனை கொடுக்கும் போது, மகேஷ், அன்புகரசன் வங்கி கணக்கில் இருந்து பல முறை தன் வங்கிக் கணக்கும் 10,000, 20,000 என டிரான்ஸ்பர் செய்துள்ளார். அன்புக்கரசனுக்கு கூகுள் பே சேவையை பயன்படுத்த தெரியாததை சாதகமாக்கிக் கொண்டு இன்ஸ்பெக்டரின் பணத்தையே டிரைவர் மகேஷ் ஆட்டைய போட்டுள்ளார். இந்த விஷயம் வெளியே தெரிந்தால், தனக்கு அசிங்கம் என்று கருதிய இன்ஸ்பெக்டர் அன்புக்கரசன் புகார் கொடுக்காமல் ரகசியமாக மகேஷிடத்தில் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

ஒடிசா: நீட் தேர்வில் தேர்ச்சி - மருத்துவம் படிக்கும் 64 வயது மாணவர் - ஜெய கிஷோர் பிரதான்...

 


நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 64 வயது முதியவருக்கு ஒடிசாவின் விம்சார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

உலகில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை  தங்கள் வாழ்க்கை லட்சியமாக கொண்டிருப்பர். ஏதாவது ஒரு சூழ்நிலையின் காரணாமாக அவர்களால் அந்த கனவை எட்ட முடியாமல் போயிருக்கும். ஒரு கட்டத்தில் லட்சியத்தை ஒதுக்கி வைத்து விட்டு வேறு வேலையை பார்க்க தொடங்கிவிடுவார்கள். இன்னும் சிலரோ கனவை அடைய முடியாத விரக்தியில், தங்களை தாங்களே அழித்துக் கொள்ளக் கூட துணிவார்கள். 

ஆனால் மருத்துவராக  வேண்டும் என்ற கனவோடு இருந்த இளைஞர் ஒருவர், தன்  குடும்ப வறுமை காரணமாக லட்சியத்தை தொலைத்து விட்டார். பின்னர், வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி தற்போது பணியில் இருந்தும் கூட ஓய்வு பெற்று விட்டார். ஓய்வு பெற்ற பிறகுதான், தான் இளமையில் கண்ட கனவை நிறைவேற்றி இப்போது மருத்துவராகியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

ஒடிசாவில் உள்ள பார்கர் மாவட்டத்தில் அட்டபிரா என்ற  ஊரை சேர்ந்தவர் 64 வயதாகும் முதியவர் ஜெய கிஷோர் பிரதான். சிறு வயதில் இருந்தே இவருக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. தனது பள்ளி படிப்பை முடித்த இவர், மருத்துவ நுழைவு தேர்வை எழுதியுள்ளார். அப்போது அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.

தனது குடும்ப நிலையை கருத்தில் கொண்ட இவர், பி.எஸ்.சி படிப்பை முடித்தார். பின்னர்  வங்கி ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார். தனது வருமானத்தை சிறிது சிறிதாக சேமித்து, குடும்பத்தை கரைசேர்த்துள்ளார் ஜெய கிஷோர். கடந்த 1989 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது. இவருக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.  காலங்கள் உருண்டோடியதே தவிர மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை மட்டும் ஜெய கிஷோரை விட்டு துளி அளவு கூட அகலவில்லை.

தன்னால் தான் மருத்துவராக  முடியவில்லை. தனது 3 குழந்தைகளையும் எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்பது ஜெய கிஷோரின் கனவாக இருந்துள்ளது. இதற்கிடையே  மூத்த மகள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். இரண்டாவது மகள் தற்போது சட்டீஸ்கர் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவ பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மகன் தற்போது 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில்,  கடந்த 2016 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றுள்ளார் ஜெய கிஷோர்.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஜெயகிஷோர், வீட்டில் சும்மா இருக்கவில்லை.  சிறு வயது லட்சியமாக மருத்துவராகும் கனவை நிறைவேற்ற முடிவு செய்தார். தற்போது மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது. இதில், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் நீட் தேர்வை எழுதலாம். வயது வரம்பு விதிமுறைகள் இல்லை. இதனை கருத்தில் கொண்ட ஜெயகிஷோர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் உதவியுடன் நீட் நுழைவு தேர்வுக்கு தன்னை தயார் படுத்தினார். 

 நீட் தேர்வை எழுதிய  ஜெயகிஷோர் முதல் அட்டெமிட்டிலேயே தேர்ச்சியும் பெற்றார். தற்போது ஜெயகிஷோருக்கு ஒடிசாவின் விம்சார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. 64 வயதில் கல்லூரிக்கு செல்லும் இந்த இளைஞர் தற்போது தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறியுள்ளார்.

மருத்துவரானவுடன்  ஏழை, எளியோருக்கு சேவை செய்வதே தனது லட்சியம் என்று இந்த  மாண்புமிகு மாணவர் ஜெயகிஷோர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான கணக்கெடுப்பு பணி துவக்கம்...

 


தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழகத்திற்கு முதற்கட்டமாக 5 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த தடுப்பூசியை முன்களப் பணியாளர்களுக்கு செலுத்துவதற்கான கணக்கெடுப்பு பணியில்  சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் , அதில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள்,  மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட  விவரங்களை,  சென்னை தேனாம்பேட்டை - DMS வளாகத்தில் இருந்து காணொலி மூலம் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம் என 2 ஆயிரத்து 854 உள்ளன.

இது தவிர, 35 ஆயிரம், தனியார் மருத்துவ மனைகள், ஆய்வக்கூடம், தனியார் கிளினிக் உள்ளிட்டவைகளும் கணக்கெடுக்கப்பட உள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு எப்படியிருக்கும்? - கண் தெரியாத பெண் பாபா வாங்கா கணிப்பு வைரலாகிறது...

 


கொரோனா எனும் கொடிய வைரஸ் சீனாவில் பிறந்து  உலகில் உள்ள மூளை முடுக்கெங்கிலும் பரவிவிட்டது. எஸ்.பி. பாலசுப்ரமணியம் போன்ற இந்த வருடத்தின் தொடக்கத்தில் நம்மோடு இருந்தவர்கள், ஆண்டின் இறுதியில் நம்மோடு இல்லை. பல உயிரிழப்புகள், சோகங்கள், புயல் மழைகளை தாண்டி   2020ஆம் ஆண்டின் இறுதி தருவாயில் உள்ளோம். வரப்போகும், 2021 ஆம் ஆண்டாவது சிறப்பாக அமைய வேண்டும் என்பது ஒட்டுமொத்த மனித இனத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

'பேரழிவுகள் மற்றும் பெரும் பேரழிவுகள்' முதல் 'புற்றுநோயை குணப்படுத்துவது' வரை, 2021 ஆம் ஆண்டிற்கான பார்வையற்ற பாபா வாங்காவின் கணிப்புகள் இங்கே...

2021 ஆம் ஆண்டு பற்றியும், வருங்காலம் பற்றியும் பாபா வங்கா என்ற மர்ம பெண் கூறிய கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

9/11 பயங்கரவாத தாக்குதல்களை முன்னறிவித்த பார்வையற்ற பல்கேரிய விசித்திரமான பாபா வாங்கா 2021 ஆம் ஆண்டில் "உலகம் பல பேரழிவுகள் மற்றும் பெரும் பேரழிவுகளால் பாதிக்கப்படும்" என்று கணித்துள்ளார்.

 பாபா வாங்கா செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல் மற்றும் பிரெக்சிட் ஆகியவற்றை கணித்துள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

பாபா வங்காவின் உண்மையான பெயர் வங்கேலியா குஷ்டெரோவா, அவரது வினோதமான கூற்றுக்களுக்காக 'பால்கன் நாஸ்ட்ராடாமஸ்' என்று செல்லப்பெயர் பெற்றார். ஒரு பெரிய புயலின் போது தனது 12 வயதில் மர்மமான முறையில் தனது பார்வையை இழந்த பின்னர், எதிர்காலத்தைப் பார்க்க கடவுளிடமிருந்து மிகவும் அரிதான பரிசு வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.


சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, இளவரசி டயானாவின் மரணம் மற்றும் செர்னோபில் பேரழிவு பற்றிய அவரது கூற்றுக்கள் உண்மைதான். அவர் கணித்ததில் 85 சதவீதம் சரியாக கிடைத்ததாக நம்பப்பட்டது.


பாபா வாங்கா கணிப்புகள் 2021

இந்தநிலையில், 2021 ஆம் ஆண்டு பற்றியும், வரும்காலங்கள் பற்றியும் மர்ம பெண் கூறிய கருத்துக்கள், தற்போது வைரலாகி வருகிறது. பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் பாபா வங்கா என்ற பெண்மணி. இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு தனது 85ஆவது வயதில் உயிரிழந்தார். 12 வயது வரை மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார் பாபா வங்கா. ஆனால் அதன் பிறகு நோய்வயப்பட்டு, தனது பார்வையை முற்றிலுமாக இழந்தார். பார்வையை இழந்தவுடன் , வருங்காலம் குறித்து அறிந்து கொள்ள கடவுள் தனக்கு புது வித சக்தியை கொடுத்திருப்பதாக தெரிவித்தார். அந்த வகையில், இவர் இறப்பதற்கு முன்னரே வருங்காலம் குறித்து பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் பல சம்பவங்கள் உண்மையாக நிகழ்ந்துள்ளது.

உதாரணமாக, அமெரிக்காவில் அமைந்துள்ள இரட்டை கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் என கூறியிருந்தார். அதன்படி 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அந்த சம்பவம், நடைப்பெற்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேப்போல அமெரிக்காவின் 44 - வது ஜனாதிபதியாக கருப்பினத்தவர் ஒருவர் பதவியேற்பார் என தெரிவித்திருந்தார். அதன்படி பாராக் ஒபாமா தான் அமெரிக்காவின் 44ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார். இப்படி பாபா வங்கா ஏற்கனவே கணித்துள்ளவைகளில், ஏறக்குறைய 85 சதவீத விஷயங்கள் உண்மையில் நிகழ்ந்துள்ளன. 

இன்னும் சில தினங்களில், 2021 ஆம் ஆண்டு பிறக்கவுள்ள  நிலையில், அடுத்த ஆண்டு குறித்தும், இனி வரும் காலங்களில் உலகம் எப்படியிருக்கும் என்பது குறித்தும் பாபா வங்கா சில விஷயங்களை கூறியுள்ளார். 

2021 ஆம் ஆண்டில் இந்த உலகம் சில பேரழிவுகளை சந்திக்கும் என்றும் அமெரிக்கவின் 45- ஆவது அதிபர்  ( டொனால்ட் டிரம்ப் மர்ம நோயால் பாதிக்கப்படுவார் என்றும் கூறியுள்ளார்.அது அவரை காது கேளாதது, மற்றும் மூளை அதிர்ச்சியை ஏற்படுத்தும்" என்று அவர் கூறியிருந்தார். அடுத்த 200 ஆண்டுகளுக்குள் மனிதர்கள் ஏலியன்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதாவது வங்காவின்  கணிப்பின் படி இன்னும் 200 ஆண்டுகளில் மனிதன் வாழ தகுந்த இடமாக பூமி இருக்காது என்கிறார். 

1996 இல் தனது 85 வயதில் இறப்பதற்கு சற்று முன்பு, பாபா வாங்கா 2021 ஆம் ஆண்டு பேரழிவின் ஆண்டாக இருக்கும் என்று கணித்திருந்தார் (இயற்கை உலகில் ஒரு பெரிய அளவிலான வன்முறை நிகழ்வு). "உலகம் ஏராளமான பேரழிவுகள் மற்றும் பெரும் பேரழிவுகளால் பாதிக்கப்படும். மக்களின் உணர்வு மாறும். கடினமான காலங்கள் வரும். மக்கள் தங்கள் நம்பிக்கையால் பிளவுபடுவார்கள். மனிதகுலத்தின் தலைவிதியையும் விதியையும் மாற்றும் பேரழிவுகரமான நிகழ்வுகளை நாங்கள் காண்கிறோம்," அவர் கூறினார்.

புற்றுநோய்க்கு ஒரு தீர்வு காணப்படும்போது 2021 இருக்கும் என்று பால்கன் நாஸ்ட்ராடாமஸ் கூறியிருந்தார். "21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மனிதம் புற்றுநோயிலிருந்து விடுபடும். புற்றுநோய் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்படும் நாள் வரும்" என்று பாபா வாங்கா கூறியிருந்தார்.

ஐரோப்பாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக தனது சொந்த நாட்டிற்குள் யாரோ ஒரு கொலை முயற்சி மேற்கொள்ளப்படுவார்கள் என்றும் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஐரோப்பாவில் தாக்குதலை நடத்துவார்கள் என்றும் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.

டிரம்ப் மற்றும் புடினுக்கான அழிவு 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அவர் கணித்திருந்தார். இந்த ஆண்டு அக்டோபரில் டிரம்ப் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், 2012 இல் புடினை படுகொலை செய்யும் முயற்சி நிறுத்தப்பட்டதாலும் அவர்கள் இருவரும் தப்பிப்பிழைத்துள்ளனர்.

பாபா வாங்கா, "தீவிரவாதிகள் ஐரோப்பியர்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவார்கள்" என்று கூறியிருந்தார்.

"பெட்ரோல் உற்பத்தி நின்றுவிடும், பூமி ஓய்வெடுக்கும்" மற்றும் "ரயில்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி" பறக்கும் "என்றும்  கூறினார்.

2021 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் மிகவும் வினோதமான கணிப்பு என்னவென்றால், ஒரு டிராகன் கிரகத்தை கைப்பற்றும். "ஒரு வலுவான டிராகன் மனிதகுலத்தைக் கைப்பற்றும். மூன்று பூதங்களும் ஒன்றுபடும். சிலருக்கு சிவப்பு பணம் இருக்கும். 100, 5 மற்றும் பல பூஜ்ஜியங்களை நான் காண்கிறேன்."


"டிராகன்" என்று பாபா வாங்கா கூறியது சீனா என்று மொழிபெயர்ப்பாளர்கள் கருதுகின்றனர். மூன்று ராட்சதர்கள் ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகியவையாக இருக்கலாம். பணம் 100 யுவான் மற்றும் 5,000 ரூபிள் நோட்டுகள் இரண்டும் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடும் என்று அவர்கள் விளக்குகிறார்கள்.


2028 ஆம் ஆண்டளவில் உலகப் பசிக்கு முற்றுப்புள்ளி வைப்பது,  காலனிகள் 2256 வாக்கில் அணு ஆயுதங்களைப் பெறுவது மற்றும் 2341 வாக்கில் பூமி வசிக்க முடியாதது என அவர் கணித்த பிற நிகழ்வுகள் அடங்கும். உலகம் முடிவுக்கு வரும் என்று அவர் கூறிய 5079 ஆம் ஆண்டு வரை அவரது தீர்க்கதரிசனங்கள் இயங்குகின்றன.

பாபா வாங்காவின் இந்த கணிப்புகள் எத்தனை சரியானவை என்பதை காலம் மட்டுமே சொல்லும்.

2,500 பேர் எழுதிய தேர்வில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி - 32 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவு...

 தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த நவம்பர் 1ம் தேதி நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றம் நடத்திய முதல் நிலைத் தேர்வில், கீழமை நீதிமன்ற நீதிபதிகள், சிவில், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என மொத்தம் மூவாயிரத்து 2,500 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு எழுத குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வழக்கறிஞர்களாக பணிபுரிந்திருக்க வேண்டும். இந்த முதல் நிலைத் தேர்வில், அரசியல் அமைப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் குறித்தான கேள்விகள் கேட்கப்படும்.

இந்த நிலையில், முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளது நீதித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் கேள்விகள் மிகக் கடுமையாக இருந்ததாகவும், தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்பட்டதாலும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. இதே போல் கடந்த ஆண்டு நடந்த நீதிபதி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. முதல்நிலைதேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பிரதான தேர்வில் கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக் கல்வித் துறையில் 130 பேருக்கு பதவி உயர்வு...

 பள்ளி கல்வித் துறையில், 130 பணியாளர்களுக்கு, உதவியாளராக பதவி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

இந்தாண்டு மார்ச், 15 நிலவரப்படி, உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதியான, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகியோரில், 130 பேருக்கு, உதவியாளர் பதவி உயர்வு வழங்கப்படும்.இதற்கான பட்டியலில் உள்ள, 150 பேரை, இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வரவழைத்து, முன்னுரிமை அடிப்படையில், கவுன்சிலிங் வழியே பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

90 அரசு கலைக் கல்லூரிகளில் கல்வி கற்போர் உதவி மையம் - தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியது...


 90 அரசு கலைக் கல்லூரிகளில் கல்வி கற்போர் உதவி மையத்தைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்விக் கூடத்தின் வாயிலாக, தமிழகத்தில் உள்ள 90 அரசு கலைக் கல்லூரிகளில் திறந்தநிலைக் கல்வி கற்போர் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்குத் தமிழக அரசின் உயர் கல்வித்துறை அரசாணை (எண். 150) வெளியிட்டுள்ளது. இதன்படி கோவை அரசு கலைக் கல்லூரியில் கல்வி கற்போர் உதவி மையம்  தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மண்டல ஒருங்கிணைப்பாளர் என்.சரவணக்குமார் கூறும்போது, ''அரசு கலைக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ள கல்வி கற்போர் உதவி மையங்கள் மூலமாக, பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்விக்கூடத்தில் நடத்தப்படும் 38 முதுநிலை பட்டப்படிப்புகள், 42 இளநிலை பட்டப்படிப்புகள், 20 டிப்ளமோ படிப்புகள், 140 சான்றிதழ் படிப்புகள் மற்றும் குறுகிய காலப் படிப்புகள் கற்பிக்கப்பட உள்ளன.

இவை அனைத்தும் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீரிக்கப்பட்ட பாடப் பிரிவுகள் ஆகும். அரசுப் பணியில் சேருவதற்குத் தகுதியுடை படிப்புகள் இவை. இணையவழி வகுப்புகள் மூலமாகப் படித்து பட்டம் பெறலாம்'' என்றார்.

இதுகுறித்துக் கல்வி கற்போர் உதவி மைய அரசு கலைக் கல்லூரி  ஒருங்கிணைப்பாளர் எம்.புகழேந்தி கூறும்போது, ''பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளில் சேர விரும்புபவர்கள் வரும் டிச.31-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக இணையதளம் மூலமாகவோ, அரசுக் கல்லூரியிலோ சேர்ந்து கொள்ளலாம். பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் இவற்றில் ஏதேனும் ஒன்றை ஸ்கேன் செய்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 99433-75556, 98947-39777 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Manarkeni App Download - DEE Proceedings - Key Considerations

  மணற்கேணி செயலி பதிறக்கம் செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள் - முக்கியக் கருததுகள் Manarkeni App Download - DEE Proceedings - Important Thi...