கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு? - அமைச்சர் செங்கோட்டையன்...

 


எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு; சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு: அமைச்சர் செங்கோட்டையன்

 சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தலாம் எனக் கல்வியாளர்களுடன் கலந்து பேசி தமிழக முதல்வர் முடிவெடுப்பார் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை பொறுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவில்பட்டியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆன்மிகவாதிகளும், திராவிடவாதிகளும் ஏற்றுக்கொள்ளும் அரசாக அதிமுக அரசு உள்ளது. மதநல்லினம் என்ற வகையில் அனைவரையும் அரவணைத்து செல்லும் முதல்வராக  உள்ளார்.

சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தலாம் என கல்வியாளர்களுடன் கலந்து பேசி தமிழக முதல்வர் முடிவெடுப்பார்.

நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12-ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் முதல்வரின் அனுமதி பெற்று அட்டவணை வெளியிடப்படும். கரோனா ஊரடங்கு காரணமாக 10, 12-ம் வகுப்புகளுக்கு 100 சதவீத பாடங்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. 

குறிப்பிட்ட காலத்தில் பள்ளிகளை திறக்க முடியவில்லை. பள்ளிகள் திறக்கின்ற நாட்கள் குறைந்து வருவதால், அதற்கேற்ப பாடத்திட்டங்களை மாற்றியமைத்து அதிலுள்ள சாரம்சங்களை கொண்டு கேள்விகள் கேட்க வேண்டிய நிலையில் முதல்வர் உத்தரவு வழங்கி உள்ளார்.

அதனடிப்படையில், கல்வியாளர்களின் கருத்துகளை அறிந்து பணிகள் நிறைவடைந்துள்ளது. முதல்வரின் ஒப்புதல் பெற்றவுடன் செய்முறை தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும்.

வரும் சட்டப்பேரவை தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அதனை பொறுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் தேதிகள் குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.

நீட் தேர்வு பயிற்சியை பொறுத்தவரை இன்றுவரை 28,150 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், தற்போது 5,020 பேருக்கு ஆன் லைன் வழியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 11-ம் வகுப்பில் இருந்தே அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மூலமாக நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்.

ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டது. பென் டிரைவ் மூலமாக ஸ்மார்ட் போர்டு வழியாக பயிற்சி வழங்கும் திட்டம். மேலும், ஐ.சி.டி. மூலம் மேல்நிலைப்பள்ளிக்கு 20 கணினிகளும், உயர்நிலைபள்ளிகளுக்கு 10 கணினிகளும் வழங்கப்பட்டு, அதில் அனைத்து பாடங்களையும் தரவிறக்கம் செய்து அதன் மூலம் பயிற்சி அளிக்க முடியுமா என அரசு பரிசீலித்து வருகிறது, என்றார் அவர்.

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள் - புதிய வரைபடம்... (MAP) TAMIL & ENGLISH VERSION...

 தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள் - புதிய வரைபடம்... (MAP) 

தமிழ்நாடு வரைபடம் 

 

 TAMILNADUMAP

 (ENGLISH VERSION)



தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களின் பெயர்கள்...

Tamil Nadu 38 Districts Name List...

  1.     சென்னை
  2.     கடலூர்
  3.     காஞ்சிபுரம்
  4.     செங்கல்பட்டு
  5.     திருவள்ளூர்
  6.     திருவண்ணாமலை
  7.     வேலூர்
  8.     விழுப்புரம்
  9.     கள்ளக்குறிச்சி
  10.     திருப்பத்தூர்
  11.     இராணிப்பேட்டை
  12.     அரியலூர்
  13.     மயிலாடுதுறை
  14.     நாகப்பட்டினம்
  15.     பெரம்பலூர்
  16.     புதுக்கோட்டை
  17.     தஞ்சாவூர்
  18.     திருச்சிராப்பள்ளி
  19.     திருவாரூர்
  20.    தருமபுரி
  21.     திண்டுக்கல்
  22.     கோயம்புத்தூர்
  23.     கரூர்
  24.     ஈரோடு
  25.     கிருட்டிணகிரி
  26.     நாமக்கல்
  27.     நீலகிரி
  28.     சேலம்
  29.     திருப்பூர்
  30.   கன்னியாகுமரி
  31.     மதுரை
  32.     இராமநாதபுரம்
  33.     சிவகங்கை
  34.     தேனி
  35.     தூத்துக்குடி
  36.     திருநெல்வேலி
  37.     தென்காசி
  38.     விருதுநகர்

மாவட்டங்கள் பிரிப்பு - வரலாறு

1947 ஆகத்து மாதம் இந்திய விடுதலை பெற்ற பின்னர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணமானது, சென்னை மாநிலம் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1953 முதல் 1956 வரையிலான மாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக தற்போதைய எல்லைகள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநிலமானது, 1969ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக, தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது. முந்தைய சென்னை மாகாணமானது 13 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை: செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மெட்ராஸ், மதுரை, நீலகிரி, வட ஆற்காடு, இராமநாதபுரம், சேலம், தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகியனவாகும். இம்மாவட்டங்கள் கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டு, தற்போதைய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

1966: சேலம் மாவட்டத்தைப் பிரித்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1974: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1979: கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1985: மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைப் பிரித்து, புதிதாக சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

1985: மதுரை மாவட்டத்தைப் பிரித்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1986: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1989: வட ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

1991: தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

1993: தென் ஆற்காடு மாவட்டம், புதிதாக விழுப்புரம், கடலூர் ஆகிய இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

1995: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

1996: மதுரை மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1997: சேலம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1997: முந்தைய செங்கல்பட்டு மாவட்டமானது, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

2004: தர்மபுரி மாவட்டத்திலிருந்து புதிதாக கிருட்டிணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

2007: பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

2009: கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, புதிதாக திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

2019: விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், (2019, சனவரி 8 ஆம் நாள் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழகத்தின் 33 வது மாவட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது); மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக செங்கல்பட்டு மாவட்டமும் (2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது); மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக தென்காசி மாவட்டமும் 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக திருப்பத்தூர் மாவட்டமும் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டமும் 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி உருவாக்கப்பட்டன.

2020: நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் ஆனது மார்ச் 24, 2020 அன்று உருவாக்கப்பட்டது.

G.O. 787, Dated: 22-12-2020 -புத்தாண்டு-2021 கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு...



புத்தாண்டு-2021 கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு...


சர்வதேச வானியல் போட்டியின் விவரங்கள் (INTERNATIONAL ASTRONOMY CONTEST : 2020-2021)...

 


>>> சர்வதேச வானியல் போட்டியின் விவரங்கள் (INTERNATIONAL ASTRONOMY CONTEST 2020-2021) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிக் கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 9,10 மற்றும் 11 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சர்வதேச வானியல் போட்டியில் கலந்து கொள்ள இலவச பதிவு மேற்கொள்வது குறித்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... இணைப்பு: போட்டியின் விபரங்கள்...


பள்ளிக் கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 9,10 மற்றும் 11 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சர்வதேச வானியல் போட்டியில் கலந்து கொள்ள இலவச பதிவு மேற்கொள்வது குறித்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் R.C.No.:055492/M/S2/2020, Dated: 08-12-2020...

>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>>இணைப்பு: போட்டியின் விபரங்கள்.




தமிழக ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு சம்பளம் உயர்வு - தமிழக அரசு திட்டம் (நாளிதழ் செய்தி)...

 


தமிழக ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு அவர்களின் கோரிக்கையை ஏற்று சம்பளத்தை ரூ. 6,000 வரை உயர்த்தி தமிழக அரசு அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அரசு மக்களுக்கு வழங்கும் முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் விலையில்லா பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மக்களுக்கு சேருகிறது. இதனை சிறப்பாக செய்வது ரேஷன் கடைகளில்

பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் தான். இவர்களின் உதவி இல்லாமல் அரசின் திட்டங்கள் எதுவும் மக்களை சென்று சேர முடியாது.


ஊழியர்களின் கோரிக்கை:

பல வருடங்களாக ரேஷன் கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்தக்கோரி அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் அரசிடம் இருந்து இதற்கு எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பாக மக்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்குவது வழக்கம். இந்த வருடம் பரிசுத்தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கமும் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதை மக்களுக்கு வழங்கும் பொறுப்பு வழக்கம் போல் ரேஷன் கடை பணியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த ரேஷன் கடை பணியாளர்கள் அரசு தங்களின் ஊதிய உயர்வை அறிவித்தால் மட்டுமே இந்த வருட பொங்கல் பரிசு தொகுப்பை மக்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபடுவோம் இல்லையென்றால் பணியை புறக்கணிப்போம் என்று அறிவித்தனர்.

இதனால் அரசு 33,000 ரேஷன் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆலோசனை நடத்தி ஊதிய உயர்வை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி, புதிதாக ரேஷன் கடைக்கு பணியில் சேருபவர்களுக்கு ரூ.12,000 சம்பளம் வழங்கப்படும். அனுபவத்தை பொறுத்து ரூ.2,500 முதல் ரூ. 6,000 வரை வரை ஊதியம் உயர்த்தப்படும் என்று அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அரசு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

பணியாளர்களின் பணிக்கொடையில் அபராதப் பிடித்தம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு...

 பணியாளர்களின் பணிக்கொடையை நிறுத்தி வைக்க, தேவைப்பட்டால் அந்தத் தொகையை எடுத்துக்கொள்ளும் அதிகாரத்தையும் நிறுவனங்கள் எடுத்துக்கொள்ள முடியும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் பணியில் இருக்கும் பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது விதிமுறையாகும். பணியில் இருக்கும் ஒவ்வோர் ஆண்டுக்கும் தலா 15 நாள்கள் சம்பளத்தை பணிக்கொடையாக நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

கிராஜூவிட்டி நிறுத்தம்..

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (செயில்) நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் ஓய்வு பெற்ற பிறகும் நிறுவனத்தின் குடியிருப்பை காலி செய்யாமல் இருந்திருக்கிறார். அதற்கு வாடகையும் கொடுக்கவில்லை, வாடகை செலுத்தாதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், எந்தத் தொகையையும் செலுத்தவில்லை என்பதால் நிறுவனம் கொடுக்க வேண்டிய பணிக்கொடையை (Gratuity) நிறுத்தி வைத்தது.

இது தொடர்பான வழக்கு ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் நடந்தது. ஓய்வுக் காலத்துக்குப் பிறகு, குடியிருந்த காலத்துக்கு வழக்கமான வாடகை மட்டுமே வசூலிக்க முடியும். இதற்கு அபதாரம் விதிக்கக் கூடாது. மேலும் பணிக்கொடையை உடனடியாக வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தநிலையில் இந்த வழக்கு மேல்முறையிட்டுக்குச் சென்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி கவுல் தலைமையில் விசாரணை நடந்தது. இதன் தீர்ப்பில் 2017-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியாது. மேலும், செலுத்த வேண்டிய அபராத்தை பணிக்கொடையில் இருந்து நிறுவனம் எடுத்துக்கொள்ள எந்தத் தடையும் இல்லை எனத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

பணி ஓய்வு பெற்ற பிறகும், நிறுவனத்தின் குடியிருப்பில் தங்கி இருந்தால் அபராதம் என்பது இயல்பானதுதான். அதனால் அந்த அபராதத்தை நிறுவனம் கொடுக்க வேண்டிய தொகையில் இருந்தும் எடுத்துகொள்ளலாம், பணிக்கொடையிலிருந்தும் எடுத்துக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...