கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முழு ஆண்டுத் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முழு ஆண்டுத் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆண்டுத் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் முறை - வழிகாட்டு நெறிமுறைகள் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

 

6,7,8 வகுப்புகளுக்கு ஆண்டுத் தேர்வு  வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் முறை -  வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2023 - 2024ஆம் கல்வி ஆண்டிற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 6 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்விற்கான வினாத்தாட்கள் பதிவிறக்கம் செய்வது தொடர்பாகக் கீழ்க்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது...


1. இந்த ஆண்டு பள்ளி இறுதித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.


2. தேர்வு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் காலை 9 மணி முதல் தேர்வு நாள் மதியம் 1.00 மணி வரை அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் வினாத் தாள்களைப் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.


3. வினாத்தாட்களைப் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.


4. தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே, பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாட்களை வகுப்பாசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.


5. அனைத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் இணைப்பில் உள்ள வழிமுறைகளை தெளிவாக அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


6. அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் வினாத்தாட்கள் பதிவிறக்கம் செய்து பள்ளியில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பிரிண்டர்களின் மூலம் பிரதி எடுத்துக் கொள்வதற்குத் தேவையான Paper & Tonnerக்கு ஆகும் செலவினத் தொகை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நிதியில் இருந்து வழங்கும் வகையில், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து தலைமையிட மாவட்டக் கல்வி அலுவலர்களும் கால தாமதமின்றி இத்தொகையினை நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் வங்கி கணக்கிற்கு மின்னணு பரிமாற்றம் (NEFT / RTGS) மூலம் விடுவித்திட வேண்டும். (SNA வங்கிக் கணக்குத் தவிர்த்து)


மேற்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆண்டுத் தேர்வுகளை சிறப்பாக நடத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள். இணைப்பு: வழிகாட்டு நெறிமுறைகள்


பெறுநர்


மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), அனைத்து மாவட்டம்.


தொடக்கக்கல்வித்துறை


தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் - 1 முதல் 8ஆம் வகுப்புகள் வரை - மூன்றாம் பருவத்தேர்வு ஆண்டு இறுதித் தேர்வு - கால அட்டவணை - திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Elementary and Middle Schools - Classes 1 to 8 - Term 3 & Annual Examinations - Time Table - Proceedings of Tiruppur District Educational Officer)...

 

>>> தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் - 1 முதல் 8ஆம் வகுப்புகள் வரை - மூன்றாம் பருவத்தேர்வு ஆண்டு இறுதித் தேர்வு - கால அட்டவணை - திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Elementary and Middle Schools - Classes 1 to 8 - Term 3 & Annual Examinations - Time Table - Proceedings of Tiruppur District Educational Officer)...


எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு? - அமைச்சர் செங்கோட்டையன்...

 


எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு; சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு: அமைச்சர் செங்கோட்டையன்

 சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தலாம் எனக் கல்வியாளர்களுடன் கலந்து பேசி தமிழக முதல்வர் முடிவெடுப்பார் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை பொறுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவில்பட்டியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆன்மிகவாதிகளும், திராவிடவாதிகளும் ஏற்றுக்கொள்ளும் அரசாக அதிமுக அரசு உள்ளது. மதநல்லினம் என்ற வகையில் அனைவரையும் அரவணைத்து செல்லும் முதல்வராக  உள்ளார்.

சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தலாம் என கல்வியாளர்களுடன் கலந்து பேசி தமிழக முதல்வர் முடிவெடுப்பார்.

நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12-ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் முதல்வரின் அனுமதி பெற்று அட்டவணை வெளியிடப்படும். கரோனா ஊரடங்கு காரணமாக 10, 12-ம் வகுப்புகளுக்கு 100 சதவீத பாடங்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. 

குறிப்பிட்ட காலத்தில் பள்ளிகளை திறக்க முடியவில்லை. பள்ளிகள் திறக்கின்ற நாட்கள் குறைந்து வருவதால், அதற்கேற்ப பாடத்திட்டங்களை மாற்றியமைத்து அதிலுள்ள சாரம்சங்களை கொண்டு கேள்விகள் கேட்க வேண்டிய நிலையில் முதல்வர் உத்தரவு வழங்கி உள்ளார்.

அதனடிப்படையில், கல்வியாளர்களின் கருத்துகளை அறிந்து பணிகள் நிறைவடைந்துள்ளது. முதல்வரின் ஒப்புதல் பெற்றவுடன் செய்முறை தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும்.

வரும் சட்டப்பேரவை தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அதனை பொறுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் தேதிகள் குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.

நீட் தேர்வு பயிற்சியை பொறுத்தவரை இன்றுவரை 28,150 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், தற்போது 5,020 பேருக்கு ஆன் லைன் வழியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 11-ம் வகுப்பில் இருந்தே அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மூலமாக நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்.

ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டது. பென் டிரைவ் மூலமாக ஸ்மார்ட் போர்டு வழியாக பயிற்சி வழங்கும் திட்டம். மேலும், ஐ.சி.டி. மூலம் மேல்நிலைப்பள்ளிக்கு 20 கணினிகளும், உயர்நிலைபள்ளிகளுக்கு 10 கணினிகளும் வழங்கப்பட்டு, அதில் அனைத்து பாடங்களையும் தரவிறக்கம் செய்து அதன் மூலம் பயிற்சி அளிக்க முடியுமா என அரசு பரிசீலித்து வருகிறது, என்றார் அவர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...