கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணியின் போது ஊனம் ஏற்பட்டால், அரசு ஊழியர்களுக்கு இழப்பீடு - மத்திய அமைச்சர்...

 மத்திய அரசு ஊழியர்கள் பணியின் போது ஊனம் ஏற்பட்டு, பணியில் தொடர்ந்தாலும், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் டாக்டர். ஜித்தேந்திர சிங் நேற்று அறிவித்தார்.  புத்தாண்டில் முக்கியமான அறிவிப்பாக இது கருதப்படுகிறது.

இந்த உத்தரவு, பணிச்சூழல் காரணமாக இப்பிரச்சினைகளை அதிகம் சந்திக்கும் மத்திய ஆயுதப்படைகளில் பணியாற்றும் சிஆர்பிஎப், பிஎஸ்எப் மற்றும் சிஐஎஸ்எப் வீரர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும். 

1.1.2004ஆம் ஆண்டுக்குப் பின் நியமனம் செய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்  (என்பிஎஸ்) உள்ளவர்களுக்கு மத்திய சிவில் சர்வீசஸ், சிறப்பு ஓய்வூதியத் திட்ட விதிமுறைகளில், இது போன்ற ஊனம் இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்தப் புதிய உத்தரவு மூலம்  என்பிஎஸ் திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்களும், சிறப்பு ஓய்வூதிய விதிமுறைகளின் கீழ் உள்ள பயன்களைப் பெறலாம்.

அரசு ஊழியர் பணியின் போது ஊனம் அடைந்து பணியில் தொடர்ந்தாலும், அவருக்கு இழப்பீட்டுத் தொகை, உடல் உறுப்பு பாதிப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படும்.

இந்த உத்தரவு குறித்து திருப்தி தெரிவித்த டாக்டர். ஜித்தேந்திர சிங், ‘‘விதிமுறைகளை எளிதாக்குவதாகவும், பாரபட்சமான உட்பிரிவுகளை அகற்றவும் மோடி அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறது’’ என கூறினார்.   

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685413

பட்டதாரிகள், பட்டியலின, ‘ரேங்க்’ மாணவர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு...


 முதுகலை பயிலும் ஒற்றை பெண் பட்டதாரிகள், பட்டியலின, ரேங்க் பெற்ற பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


முதுநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ஒற்றைப் பெண் பட்டதாரிகள், பட்டியலின மாணவர்கள் மற்றும் ரேங்க் வென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உதவித்தொகை வழங்கி வருகிறது. அதன்படி, 2020-21-ம் ஆண்டுக்கான உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


பெண் இரட்டையர்

முதுநிலைப் பட்டப்படிப்பில், ஒற்றைப் பெண் பட்டதாரிகளுக்கு முதுநிலை இந்திரா காந்தி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல், இரட்டையர்களாகப் பிறந்த பெண் பட்டதாரிகளுக்கும் வழங்கப்படுகிறது. 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

முழுநேரமாக முதலாம் ஆண்டு முதுநிலை பட்டப் படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும். மொத்தம் 3 ஆயிரம் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.36,000 என 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.


பட்டியலின மாணவர்கள்

தொழில்துறை படிப்புகளில் முதுநிலை அளவில் படித்துவரும் பட்டியலின  மாணவர்களில் 1,000 பேருக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் எம்.டெக்,எம்.இ. படிக்கும் பட்டியலின  மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.7,800, இதர தொழிற்துறை படிப்புகளை மேற்கொள்பவர்களுக்கு மாதந்தோறும் ரூ.4,500 என 2 முதல் 3 ஆண்டுகள் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.


ரேங்க் பெற்ற பட்டதாரிகள்

அதேபோல், பல்கலைக்கழக ரேங்க் வென்ற மாணவர்களுக்கான முதுநிலை பட்டப்படிப்பு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலைப் பட்டம் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல் அல்லது இரண்டாம் ரேங்க் பெற்றவராக இருத்தல் அவசியம். எனினும் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


60 சதவீதம் மதிப்பெண்

அதன்படி, உயிரியல், வேதியியல், இயற்பியல், புவியியல், கணிதம், சமூக அறிவியல், வணிகவியல், மொழிப் படிப்புகள் ஆகிய பாடப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிலும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு மாதம் ரூ.3,100 என 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.


பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவித் தொகைகளைப் பெற www.scholarship.gov.in என்ற இணையதளம் வழியாக மாணவர்கள் தங்களுடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவேற்ற வேண்டும். விண்ணப்பிக்க டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில் ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவேற்றக் கடைசி நாள் ஜன.20-ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?

ஆதார் அட்டையின் நகல், மாணவரின் புகைப்படம், 10-ம் வகுப்பு, பிளஸ் 2 (அல்லது அதற்கு இணையான படிப்பு), இளநிலை பட்டப்படிப்பு ஆகியவற்றின் மதிப்பெண் சான்றிதழ், நடப்பு ஆண்டு கல்விக் கட்டண ரசீது, ஒற்றைப் பெண் பட்டதாரி எனில் அதை உறுதிப்படுத்தும் சான்றிதழ், பட்டியலின மாணவர்கள் எனில் சாதி சான்றிதழ் ஆகியவற்றை ஆன்லைன் விண்ணப்பத்துடன் பதிவேற்ற வேண்டும்.

தேர்தல் அறிவிப்புக்கு பின், பொதுத்தேர்வு அறிவிப்பு & ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணை விரைவில் - அமைச்சர் செங்கோட்டையன்...

 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகே, பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் & ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்...



24 கணினி ஆசிரியர் நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு...

 


தமிழகத்தில் இன்று நடைபெற்ற 742 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 718 பேர் தேர்வு.

24 பேரின் நியமனம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு.

வெளிமாநில மாணவர்களா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு.

மாற்றுத்திறனாளி அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பொழுது விரும்பினால் துணையாளரை, உடன் அழைத்துச் செல்வதற்கான மருத்துவச் சான்றிதழ் படிவம்...

 


மாற்றுத்திறனாளி அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பொழுது விரும்பினால் துணையாளரை உடன் அழைத்துச் செல்வதற்கான மருத்துவச் சான்றிதழ் படிவம்...

>>> மருத்துவச் சான்றிதழ் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அனைத்து தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயனுள்ள PDF புத்தகம், அலுவலக நடைமுறை வரைவுகள், செயல்முறைகள், குறிப்பாணைகள், அனைத்து விண்ணப்ப படிவங்கள் - மாதிரிகள் தொகுப்பு...

 


அனைத்து தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயனுள்ள PDF புத்தகம்,  அலுவலக நடைமுறை வரைவுகள், செயல்முறைகள், குறிப்பாணைகள், அனைத்து விண்ணப்ப  படிவங்கள் - மாதிரிகள் தொகுப்பு...

அரசுப் பணியாளர்களுக்கான வரைவுகள் கையேடு - அண்ணா மேலாண்மை நிலையம் வெளியீடு - ஆண்டு : 2019...

>>> அரசுப் பணியாளர்களுக்கான வரைவுகள் கையேடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




அனைத்து ஆசிரியர்களுக்கும் ஜனவரி 18 முதல் Jolly Phonics ஆன்லைனில் பயிற்சி நடத்துவதற்கான வழிகாட்டுதல்...

 ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் வாயிலாக 2018-19ம் கல்வியாண்டில் Jolly Phonics பயிற்சி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து அரசு மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகளின் அனைத்து ஆசிரியர்களுக்கும் (SGT, BT and PG) Phonetic பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு மாவட்ட அளவில் பயிற்சி கட்டகம் தயாரிக்கப்பட்டது. Covid - 19 கால சூழ்நிலை மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இப்பயிற்சியினை காணொளி வாயிலாக வழங்கவும், முதற்கட்டமாக மாவட்ட அளவிலான பயிற்சி 04.01.2021 முதல் 8 நாட்களுக்கு அரை நாள் வீதம் (09.30 AM - 01.00PM) வரை காணொளி வாயிலாக பயிற்சி அளிக்கவும், இதனைத் தொடர்ந்து வட்டார அளவில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 18.01.2021 முதல் காணொளி வாயிலாக பயிற்சி அளிக்கவும் திட்டமிடபட்டுள்ளது.

மேற்காண் பயிற்சியினை சிறந்த முறையில் அளிக்கவும், உரிய நேரத்தில் ஆசிரியர்களை பயிற்சியில் பங்கேற்கவும் அறிவுறுத்துமாறு அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பயிற்சி 9.45AM - 11:15AM வரை முதல் பாடவேளை 11.15AM - 11.30AM வரை இடைவேளை 11.30 AM – 1.00PM வரை இரண்டாவது பாட வேளைகளாக நடைபெறும் பயிற்சிக்கான Link மூலமாக 9.30 ( மக்கு பயிற்சியில் இகணையவும், இணைந்தவுடன் தங்களது Mic mute செய்திடவும் தங்களது வருகையை Google Meet ல் உள்ள Chat Boxல் பதிவிட வேண்டும் பயிற்சியின்போது வழங்கப்படும் கருத்துக்களை குறிப்பெடுத்து ஒவ்வொரு நாள் இறுதியில் கேட்கப்படும் கேள்விற்கு பதிலளிக்க வேண்டும். பயிற்சியின் இடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு Chat Box வழியாக பதியளிக்கலாம்.

பயிற்சி சார்ந்து கருத்தாளரிடம் கேள்விகள் ஏதேனும் கேட்கவேண்டும்போது மட்டுமே Mic Unmute செய்து கேட்க வேண்டும் இரண்டாவது வேளை இறுதியில் Google fom வழியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பங்கேற்பாளர்கள் அனைவரும் பதிலளிக்க வேண்டும். பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் Google Meeti Present பட்டனை அழுத்தக்கூடாது என்பதனையும் Google Meet எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதனை குறுவர்கமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்களின் எண்னாரிக்கைக்கு ஏற்பட கருத்தாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். கருத்தாளர்கள் மற்றும் கணினி இயக்க தெரிந்த ஒரு நபருடன் இணைந்து 90 - 95 ஆசிரியர்களுக்கு ஒரு Batch ஆக பயிற்சி அளிக்கலாம் ஒன்றியத்திலுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கேற்ப Batch எண்ணிக்கை வட்டார அளவில் தேர்வு செய்து ஆசிரியர்களுக்கு பயிற்சியினை 18.01.2021 தொடங்கி - 28.02.2021 க்குள் பயிற்சியளித்து முடிக்கும் வகையில் அட்டவணை தயார் செய்து பயிற்சி அளிக்க வேண்டும்.மாநில திட்ட இயக்ககத்தின் வாயிலாக நடைபெறும் பயிற்சிகள் பாதிக்காவண்ணம் வட்டார அளவிலான பயிற்சி அட்டவணை தயார் செய்து பயிற்சி நடத்தப்படவேண்டும். இணைய வசதி இல்லாத ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்கும் வகையில் வட்டார வளமையத்தில் நேரடியாக சமூக இடைவெளியுடன் பங்கேற்க செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் ஆசிரியர்களின் பங்கேற்பினை உறுதி செய்யவும், ஆசிரியர்களின் வருகை பதிவினை கண்காணித்து அறிக்கை அளிக்கவும் அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் பயிற்சி சார்ந்த கட்டசுத்தை நகல் எடுத்து பயிற்சியின் போது கட்டாயம் பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் பயிற்சி நடைபெறுவதை இமையவாயி(Link) கானாத்திட மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் பயிற்சியினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் நடத்திடவும், பயிற்சியில் பங்கேற்றோர் விவரம், ஆசிரியர்களின் பின்னூட்ட அறிக்கை மற்றும் புகைப்பட ஆவணங்களுடன் அறிக்கை அளிக்க அனைத்து வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key

    3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...