கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தமிழகத்தில் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் தயார் - அமைச்சர் செங்கோட்டையன்...
மக்கள் நல்வாழ்வு துறை அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
பவானியில் காலிங்கராயன் நாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது : தமிழகத்தில் பள்ளிகளை திறக்க மக்கள் நல்வாழ்வுத் துறையின் அறிவுரைப் படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.
மாணவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் சுகாதார நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல் நாளில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வழங்க 30 லட்சம் சத்து மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அட்டவணை வெளியாவதை பொருத்து, பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழக முதல்வரிடம் கலந்து பேசி பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் – பள்ளி கல்வித்துறை இயக்குநர்...
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் சென்னை ஷெனாய் நகரில் உள்ள திரு.வி.க மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப் பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, கடந்த 2 தினங்களாக பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.மேலும் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில், மல்டி விட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்கவும் எற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்டு இருக்கும் பாடங்களை நடத்தி முடிக்க முடியுமா? ஆசிரியர்கள் கருத்து என்ன?
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவுறுத்தலின்படி நேரம் இருந்தால் கூடுதல் பாடங்களையும் நடத்த முடியுமா?, மாணவர்கள் அதனை எளிதில் கற்றுக்கொள்வார்களா? என்பது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-
இந்த அளவுக்கு பாடங்கள் குறைப்பு என்பது ஏற்றுக்கொள்ள கூடியது தான். ஆனால் பொதுத்தேர்வு சற்று தாமதமாக தொடங்கினால் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிப்பது என்பது சாத்தியப்படும். இல்லையென்றால் குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பது சிரமம்.
கடினமான பாடங்கள் எதையும் நீக்கவில்லை. எளிதாக மாணவர்கள் மதிப்பெண் எடுக்கக்கூடிய சில பாடங்களை நீக்கி இருப்பது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு. மாணவர்களுக்கு எது கஷ்டமோ? அதை குறைக்காமல், மற்றவற்றை குறைத்து இருக்கிறார்கள்.
குறுகிய நேரத்தில் பாடங்களை நடத்தி மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வது என்பது கடினம். ஓரளவுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் அவற்றை 3 மாதங்களுக்குள் நடத்தி முடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...