கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சுகாதாரத் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுகாதாரத் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 5 முதல் டிசம்பர் 31 வரை அவரவர் பள்ளிகளிலேயே DPT & TD தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான வழிகாட்டுதல்கள் - பொது சுகாதாரத் துறை வெளியீடு (Guidelines for school students to be vaccinated with DPT & TD in their schools from November 5 to December 31 - Public Health Department Release)...



>>> பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 5 முதல் டிசம்பர் 31 வரை அவரவர் பள்ளிகளிலேயே DPT & TD தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான வழிகாட்டுதல்கள் - பொது சுகாதாரத் துறை வெளியீடு (Guidelines for school students to be vaccinated with DPT & TD in their schools from November 5 to December 31 - Public Health Department Release)...

அரசு மருத்துவர்களுக்கு உயர் கல்வித் தகுதிகளுக்கு சிறப்பு ஊதிய உயர்வுகள் - அரசாணை வெளியீடு...



 அரசு மருத்துவர்களுக்கு உயர் கல்வித் தகுதிகளுக்கு சிறப்பு ஊதிய உயர்வுகள் (Special Increments) - அரசாணை வெளியீடு...


G.O.Ms.No.293, Dated: 18.06.2021 - GRANT OF ALLOWANCES - HEALTH & FAMILY WELFARE DEPARTMENT...


>>> Click here to Download G.O.Ms.No.293, Dated: 18-06-2021...



சமூக வலைதளங்களில் வருகின்ற புகை போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக் கொள்ள கூடாது - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்...

 


பொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் முக நூல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வருகின்ற புகை போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக் கொள்ள கூடாது - மாண்புமிகுமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் வேண்டுகோள்...


>>> செய்தி வெளியீடு - நாள்: 17-05-2021 / மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் வேண்டுகோள்...


அடுத்த 2 வாரம் மிகவும் முக்கியம்: சுகாதாரத் துறை செயலாளர் எச்சரிக்கை...

 கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரிக்க துவங்கி உள்ளதால், அடுத்த இரண்டு வாரம் மிக முக்கியமான காலம். பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்; தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்,'' என, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.



சென்னை, வளசரவாக்கத்தில், கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின், அவர் அளித்த பேட்டி:

கொரோனா தொற்றால், சென்னையில், 18 ஆயிரத்து, 673 பேர் உட்பட, தமிழகம் முழுதும், 49 ஆயிரத்து, 985 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில், 81 ஆயிரத்து, 871; 'கோவிட் கேர்' மையங்களில், 28 ஆயிரத்து, 95 படுக்கைகள் என, தமிழகத்தில், மொத்தமாக, 81 ஆயிரத்து, 871 படுக்கைகள் உள்ளன. 


தற்போது, 6,517 வென்டிலேட்டர்களும்; 1 லட்சத்து, 49 ஆயிரத்து, 822, 'ரெம்டெசிவிர்' மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. 


தமிழகத்திற்கு, 54 லட்சத்து, 85 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில், 40 லட்சத்து, 99 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கொரோனா விதிமீறிலில் ஈடுபட்ட, 2.39 லட்சம் பேரிடம், 5.07 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரிக்க துவங்கி உள்ளது. இதன் வேகம் படிப்படியாக உயரும் என்பதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு, மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம்.


இயல்பாக உள்ளது என்ற எண்ணத்தில், பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். 


பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் சூழலை நிறுவனங்கள் பின்பற்றுவது நல்லது. பொதுமக்கள், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்; பொது இடங்களுக்குச் செல்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.மஹாராஷ்டிரா மாநிலம் போன்ற சூழல் தமிழகத்தில் இல்லை. ஊரடங்கு போடுவது குறித்து, அரசு கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டும். தமிழகம் முழுதும், 3,766 அரசு தடுப்பூசி மையம் உட்பட, 4,795 மையங்கள் உள்ளன. முதல் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று ஏற்படுகிறது; ஆனால், பாதிப்பு குறைவாக உள்ளது.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழகத்தில் மினி ஊரடங்கு அமல்படுத்த முடிவு...

 தமிழகம் முழுவதும் ஊரடங்கு இல்லை என்று சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். பாதித்த பகுதிகளில் மட்டும் மினி ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு கொரோனா தொற்று குறைந்துகொண்டே வந்ததால் ஊரடங்கில் படிப்படியாக  தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத்  திரும்பியுள்ளனர்.



இந்த நிலையில் மார்ச் தொடக்கத்தில் இருந்து மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் தொற்று  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, குறிப்பிட்ட தெரு, வீடு, பகுதிகளில் மட்டும் ஊரடங்கை செயல்படுத்த அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


முழு ஊரடங்கு என்று யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம்  எனக் கேட்டுக்கொண்ட அவர், முகக்கவசம் அணியாமல், அலட்சியமாக இருப்பதால் தான் கொரோனா பரவுவதாகவும், முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியைக் கடைபிடிப்பதோடு, தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதிகரித்து வரும் கொரோனாவை எதிர்கொள்ள கூடுதல் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன எனவும் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

அதிகரிக்கும் கொரோனா குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் அறிவிப்பு...

 தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்- ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்.


அரசியல் கூட்டங்களால், குடும்ப நிகழ்ச்சிகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்.


அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வோர் மாஸ்க் அணிவதில்லை.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக் கூடும்- ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...