கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CPS குறித்த செய்தி: வல்லுநர் குழுவின் அறிக்கையினை பரிசீலித்து அரசாணைகள் வெளியிடப்படும் - அரசு சார்பு செயலாளர் கடித எண்: 1321/ நிதி (PGC-I)/2021, நாள்: 03-02-2021...

 


ஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் பெறப்படும் கடன் மீதான தொகைக்கு காப்பீடு செய்யும் தொகையை வருமான வரி 80C-ன் கீழ் கழித்துக் கொள்ளலாம்...

 


ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப இந்த மாத இறுதிக்குள் அட்டவணை – அமைச்சர் செங்கோட்டையன்...



 ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை திட்ட பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன்  பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


  • அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் இணைக்கப்படாத ஏரி, குளங்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 

  • 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் இல்லை. அதற்கு பதிலாக 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்.

  • இன்றைய சூழ்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை. தற்போது 98.5 சதவிகித மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருகிறார்கள்.

  • போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிறப்பாசிரியர்களுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் நிதி 5500 ரூபாய் மட்டும் தான். ஆனால் தமிழக அரசு ரூ.10 ஆயிரம் வழங்கி வருகிறது.

  •  உடற்பயிற்சி ஆசிரியர்கள் காலிப்பணி இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

  • ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்ப இந்த மாத இறுதிக்குள் அதற்கான அட்டவணை வெளியிடப்படும். 

  • நீட் தேர்வு இருமுறை நடத்துவது குறித்து மத்திய அரசு கடிதங்கள் வந்த பிறகுதான் நீட் தேர்வு எவ்வாறு நடத்துவது என்பது முடிவு செய்யப்படும்.

  • 10,12-ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணைகள் வெளியிடுவது குறித்து முதல்வர் முடிவு செய்து பள்ளிகல்வித்துறை ஆலோசனையுடன் அட்டவணைகள் வெளியிடப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்

6, 7, 8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்...



 தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றிற்கு பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த மாதமே 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கல்வித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.


அடுத்த வாரம் பள்ளிகள் திறக்க வாய்ப்பிருக்கிறது என எதிர்பார்த்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்த புதிய தகவலை தெரிவித்திருக்கிறார்.


கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், நோய் தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததன் காரணமாக பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 19-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.



இதையடுத்து 9, 11-ம் வகுப்புகளுக்கும் 30 முதல் 40 சதவீதம் வரையில் பாடத்திட்டங்களை குறைத்து அறிவிப்பை வெளியிட்டதோடு, அவர்களுக்கான நேரடி வகுப்புகளும் கடந்த 8-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 


அதனை தொடர்ந்து  6,7,8 ஆகிய வகுப்புகள் எப்பொழுது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், அவர்களுக்கும் விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்க வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலும் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.


இந்நிலையில் தமிழகத்தில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 


இது குறித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-


இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. தற்போது 98.5 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர் . 6,7,8ம் வகுப்புகளுக்கு டேப் வழங்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

CPS ACCOUNT STATEMENT வலைதளத்தில் தரவிறக்கம் செய்யும் வழிமுறை...

 


>>> Click here to Download CPS ACCOUNT STATEMENT DOWNLOAD PROCEDURE...



>>>  CPS ACCOUNT STATEMENT பதிவிறக்கம் செய்யும் வலைதள முகவரி...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

BT to PG Promotion - சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தம் இருப்பின் 11.02.2021க்குள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 2803, 2804, 2805, 2806, 2813, 2814, 2815, 2816 / W2/ S1/ 2021, நாள்: 10-02-2021...

 


>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 2803, 2804, 2805, 2806, 2813, 2814, 2815, 2816  / W2/ S1/ 2021, நாள்: 10-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> 01.01.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல் வெளியீடு - (இயற்பியல் வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வணிகவியல், வரலாறு மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை 1.)...


கலப்புத் திருமணம் (Inter Caste Marriage - ICM) செய்து கொண்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில் தாய் அல்லது தந்தை சாதியின் அடிப்படையில் சாதிச் சான்று வழங்கலாம் என்று தெளிவுரை வழங்கி அரசாணை எண்:8, நாள் : 09-02-2021 வெளியீடு...

 


Issuance of Community Certificate to the Children born to the Parents belonging to two different castes - Clarifications Issued...

G.O.(Ms).No.: 8, Dated: 09-02-2021 Released...

>>> அரசாணை எண்:8, நாள் : 09-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...