கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (14-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



 மேஷம்

ஏப்ரல் 14, 2021



புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து சுமூகமான சூழல் ஏற்படும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும். 


பரணி : கலகலப்பான நாள்.


கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 14, 2021



உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். வேலை தொடர்பான முக்கிய முடிவுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத செயல்களின் மூலம் அலைச்சல்கள் மேம்படும். பங்காளி வகை உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : மேன்மையான நாள். 


ரோகிணி : கவனம் வேண்டும். 


மிருகசீரிஷம் : அலைச்சல்கள் மேம்படும். 

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 14, 2021



தொழில் மேன்மைக்கான உதவிகள் மற்றும் ஆதரவு கிடைக்கும். பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும். 


திருவாதிரை : ஆசைகள் நிறைவேறும்.


புனர்பூசம் : அனுபவம் உண்டாகும். 

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 14, 2021



அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த பணிகள் நிறைவடையும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள். மனை தொடர்பாக எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாக அமையும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



புனர்பூசம் : பயணங்களை மேற்கொள்வீர்கள். 


பூசம் : காரியசித்தி உண்டாகும்.


ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 14, 2021



திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். செய்யும் பணியில் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புதிய மனை வாங்குவதற்கான சூழல் அமையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : வாய்ப்புகள் உண்டாகும். 


பூரம் : ஆசிகள் கிடைக்கும்.


உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும். 

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 14, 2021



குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான வியாபாரத்தில் நிதானமாக செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திரம் : அனுசரித்து செல்லவும்.


அஸ்தம் : நிதானமாக செயல்படவும். 


சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 14, 2021



பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவேறும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். இணைய வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை அடைவீர்கள். அந்நியர்களின் நட்புகள் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



சித்திரை : எண்ணங்கள் ஈடேறும். 


சுவாதி : விருப்பங்கள் நிறைவேறும்.


விசாகம் : நட்புகள் கிடைக்கும். 

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 14, 2021



நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். நெருங்கிய நண்பர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். பிள்ளைகளின் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



விசாகம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.


அனுஷம் : கவனம் வேண்டும்.


கேட்டை : மனமகிழ்ச்சியான நாள். 

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 14, 2021



உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல்நலம் சீராகும். நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : அனுசரித்து செல்லவும்.


பூராடம் : புத்துணர்ச்சியான நாள். 


உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும். 

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 14, 2021



விவசாயம் தொடர்பான புதுவிதமான ஆலோசனைகளும், ஆதரவுகளும் கிடைக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும். பண விஷயங்களில் சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். கோபம் கொண்ட பேச்சுக்களை தவிர்க்கவும். மனதில் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.


திருவோணம் : கவனம் வேண்டும்.


அவிட்டம் : மகிழ்ச்சியான நாள். 

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 14, 2021



தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்விற்கான சூழல் அமையும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். புத்திரர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். 



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : தன்னம்பிக்கை உண்டாகும்.


சதயம் : அங்கீகாரம் கிடைக்கும்.


பூரட்டாதி : தடைகள் அகலும். 

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 14, 2021



நவீன பொருட்களை வாங்குவதற்கான எண்ணங்கள் நிறைவேறும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



பூரட்டாதி : எண்ணங்கள் நிறைவேறும். 


உத்திரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும். 


ரேவதி : பொறுமை வேண்டும்.

---------------------------------------


RTE மாணவர்கள் சேர்க்கை எப்போது?

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஜூனில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறைக்கு முன், மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.





இதன் காரணமாக, அனைத்து நர்சரி மற்றும் தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் பல்வேறு வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, மார்ச்சிலேயே துவங்கிவிட்டது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, ஆர்வத்துடன் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில், அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கை, இன்னும் துவக்கப்படவில்லை. 



இந்த திட்டத்தில், சிறுபான்மை அந்தஸ்து பெறாத தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பில், 20 சதவீத இடங்கள், இலவச சேர்க்கைக்கு வழங்கப்படுகின்றன.அரசு திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு, எட்டாம் வகுப்பு வரையிலான கல்வி கட்டணத்தை, பெற்றோர் செலுத்த வேண்டாம். அவர்களுக்கு பதில், பள்ளிகளுக்கு அரசே கட்டண தொகையை வழங்கும். எனவே, இந்த திட்டத்தில், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, தாமதமின்றி துவங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துஉள்ளது.

அரசுப்பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கு மாணவர் சேர்க்கை பணியை தொடங்க அறிவுறுத்தல் - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்...

 அரசுப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை தொடங்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. 



தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பிளஸ் 2 தவிர்த்து இதர வகுப்புகளுக்கு வீட்டுப் பள்ளி திட்டத்தின் கீழ் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையில் நடப்பு கல்வி ஆண்டு இம்மாத இறுதியில் முடி வடைகிறது. இதையடுத்து , அடுத்த கல்வி ஆண்டுக்கான ( 2021-22 ) மாணவர் சேர்க்கை பணிகளில் தனியார் பள்ளிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனால் , தமிழக அரசின் அனுமதி இல்லாததால் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் , தற்போது அரசுப் பள்ளிகளும் மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணியை தொடங்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


 இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது :


 கரோனா பரவலால் பள்ளிகளை முழுமையாக திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனினும் , சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தினமும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது . புதிய மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை தொடங்குதல் உள்ளிட்ட இதர கல்விசார் வேலைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கை விவரம் கோரி பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தால் , அவர்களை முறையாக வரவேற்று , உரிய முன்விவரங்களை வாங்கிவைத்து , பதிவு செய்துகொள்ள வேண்டும். அதேபோல , அரசுப்பள்ளிகளில் உள்ள நலத்திட்டங்கள் குறித்து அருகிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் தகவல்களை தெரிவித்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும். 


அரசின் அனுமதி கிடைத்தவுடன் மாணவர் சேர்க்கை பணிகளை எமிஸ் தளம் வழியாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த பணிகளின்போது கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர் .

கொரோனா பரவலால் 2.4 கோடி குழந்தைகள் படிப்பை கைவிடும் அபாயம்...

'கொரோனா வைரஸ் நெருக்கடியால், உலகம் முழுவதும், 2.4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், தங்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடக்கூடும்' என்ற தகவல், ஆய்வில் தெரியவந்துள்ளது.



உலகில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, அனைத்து நாடுகளும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில், இந்த கொரோனா நெருக்கடியால், 2.4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், பள்ளி படிப்பை கைவிடக்கூடும் என்ற அதிர்ச்சிக்குரிய தகவல் கிடைத்துள்ளது.


இந்தியாவிலும், ஏராளமான ஏழைக் குழந்தைகள், பள்ளிக்கு மீண்டும் செல்வதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு நடத்திய ஆய்வில், இந்த தகவல் வெளியாகி உள்ளது. ' கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால், அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை செலுத்தமுடியாமல், பல பெற்றோர்கள் தவிக்கின்றனர். 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடப்பதால், அதற்கு தேவையான உபகரணங்கள் இன்றி, ஆயிரக்கணக்கான ஏழை குழந்தைகள், பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால், நிதிச் சுமையில் தள்ளாடும் ஏழைக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு, பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுவதாக, சமூக நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

2மணி நேரத்துக்குள் 36 புத்தகங்கள் படித்து 5 வயது சிறுமி உலக சாதனை...

 அபுதாபியில் வசித்து வரும் 5 வயதான இந்திய-அமெரிக்க சிறுமி 2 மணி நேரத்துக்குள் 36 புத்தகங்களை படித்து உலக சாதனை படைத்துள்ளார்.



சென்னையைச் சேர்ந்த பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறந்த இந்திய -அமெரிக்க சிறுமி கியாரா கவுர். 5 வயதான இச்சிறுமி தற்போது பெற்றோருடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். இந்த சிறுவயதில் 36 புத்தகங்களை 1 மணி நேரம் 45 நிமிடங்களில் படித்து முடித்து உலக சாதனை செய்துள்ளார். இந்த சாதனைக்காக லண்டன் உலக சாதனை புத்தகத்திலும் ஆசியா சாதனைப் புத்தகத்திலும் கியாரா கவுர் இடம் பிடித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதியன்று 36 புத்தகங்களை இடைவிடாமல் 105 நிமிடங்களில் படித்ததற்காக ‘குழந்தை மேதை’ என்று லண்டன் உலக சாதனை புத்தகம் கியாரா கவுரை பாராட்டி உள்ளது.



கியாரா கவுருக்கு புத்தகங்கள் படிப்பதில் இருந்த ஆர்வத்தை அபுதாபியில் அவரது ஆசிரியர்தான் முதலில் கவனித்து ஊக்கமளித்துள்ளார். கடந்த ஆண்டில் 200 புத்தகங்களுக்கு மேல் கியாராகவுர் படித்ததாகவும் புதிய புத்தகங்கள் மட்டுமின்றி ஏற்கெனவே படித்த புத்தகங்களை மீண்டும் படிக்க விரும்புவதாகவும் அவரது பெற்றோர் தெரிவி்த்தனர். ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட், சிண்ட்ரெல்லா, லிட்டில் ரெட் ரைடிங் ஹூட் மற்றும் ஷூட்டிங் ஸ்டார் ஆகியவை கியாராவுக்கு பிடித்த சில புத்தகங்கள்.



கியாரா கவுர் கூறுகையில், ‘‘புத்தகங்கள் படிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் விரும்பும் இடத்துக்கு புத்தகங்களை கொண்டு செல்லலாம். ஸ்மார்ட் போன்களில் படிக்கும்போதோ, வீடியோக்கள் பார்க்கும்போதோ இணையம் இணைப்பு இல்லாவிட்டால் படிக்க முடியாது. புத்தகங்களை எங்கும் எப்போதும் படிக்கலாம்’’ என்றார்.

வட்டாரக் கல்வி அலுவலகத்தில் அலுவலர்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிப்பு...

 


தமிழகத்தில் கடந்த ஒரு வருடமாக முறையான சம்பளமின்றி தவிக்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் - வாழ்வாதாரம் இழந்த 10 லட்சம் குடும்பங்கள்...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. Released to set up new fire stations at 7 places

 7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியீடு Promulgation of decree to set up new fire stations at 7 places ▪️ கருமத்தம்பட...