கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சாதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிறிய மனிதரின் பெரிய சாதனை



சிறிய மனிதரின் பெரிய சாதனை


"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு 

அச்சாணி அன்னார் உடைத்து".


பொருள்: ஒருவரின் உருவத்தின் சிறிய தோற்றத்தைக் கண்டு அவரை இகழக் கூடாது. பெரிய உருவம் கொண்ட தேருக்கு, மிகச் சிறிய அச்சாணியே முக்கியமானது போல, உலகத்தில் சிறிய தோற்றம் உடையவர்களும் பெரிய திறமை உடையவர்களாக இருக்க கூடும்.


“என் மகனை சர்க்கஸுக்கு அனுப்ப மாட்டேன்; அவனைப் படிக்க வைத்து, நாளை ஒரு மருத்துவராக்குவேன் !” 👑


இவர் தான் கணேஷ் பாரையா. வெறும் 3 அடி உயரமும் 20 கிலோ எடையும் கொண்ட இளைஞர். இன்று இவரது பெயர் பலருக்கும் ஒரு மிகப்பெரிய உத்வேகம். 


பல ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ் சிறுவனாக இருந்தபோது, அவரது உடல் தோற்றத்தைக் கண்டு சர்க்கஸ் நடத்துபவர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். கணேஷை தங்களிடம் ஒப்படைத்தால், அவரது தந்தைக்கு 5 லட்சம் ரூபாய் தருவதாக அவர்கள் கூறினர். அக்காலத்தில் ஒரு சாதாரண குடும்பத்திற்கு அது மிகப்பெரிய தொகை.


ஆனால் அந்தத் தந்தை உறுதியாகச் சொன்னார்:


“என் மகனை நான் படிக்க வைப்பேன். சர்க்கஸுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்க மாட்டேன்!”


தந்தை கண்ட அந்தக் கனவுக்கு சிறகுகள் கொடுக்க, கணேஷ் தனது முழு முயற்சியுடன் படித்தார்.


2018-ஆம் ஆண்டு NEET தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், அவரது உயரம் குறைவாக இருப்பதாகக் கூறி மருத்துவக் கல்லூரியில் MBBS சேர்க்கை மறுக்கப்பட்டது.


ஆனால் கணேஷ் தோல்வியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. உயர்நீதிமன்றத்திலும், பின்னர் நாட்டின் உச்ச நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடத்தி, தனது மருத்துவக் கல்விக்கான உரிமையைப் பெற்றார்.


இன்று, MBBS படிப்பையும் இன்டர்ன்ஷிப்பையும் நிறைவு செய்து, டாக்டர் கணேஷ் பாரையா ஆகியிருக்கிறார்! 


சமீபத்தில் கௌன் பனேகா குரோர்பதி (KBC) நிகழ்ச்சியில் தனது வாழ்க்கைப் பயணத்தை கணேஷ் பகிர்ந்தபோது, அதை கேட்ட அமிதாப் பச்சனின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. 


வரம்புகள் உடலுக்குத்தான்; மனதிற்கு அல்ல என்பதை தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்த கணேஷுக்கும், தனது மகனின் திறமையின் மீது முழு நம்பிக்கை வைத்த அந்தத் தந்தைக்கும் மிகப் பெரிய பாராட்டுகள்


தன் மருத்துவக் கனவை அடைய உயரம் ஒரு தடையே இல்லை என்பதை சாத்தியப்படுத்திக் காட்டியுள்ளார், 3 அடி உயரமுள்ள 23 வயது மருத்துவர் கணேஷ் பாரையா. 


உயரத்தைக் காரணம் காட்டி இவருக்கு எம்.பி.பி.எஸ் படிக்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது. 3 அடி உயரம் இருப்பதால் அவசர கால சிகிச்சைகளைக் கையாள முடியாது எனக் கூறி அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.


தன் லட்சியத்தை அடைய அவர் பள்ளித் தலைமை ஆசிரியர் உதவியோடு மாவட்ட ஆட்சியர், மாநில கல்வி அமைச்சரை அணுகியதோடு, குஜராத் உயர் நீதிமன்றத்தையும் நாடினார். குஜராத் உயர் நீதிமன்றத்தில் தோல்வியைச் சந்தித்தவர், அந்தத் தீர்ப்பையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.


2018-ல் இந்த வழக்கில் வெற்றி பெற்றவர், 2019-ல் எம்பிபிஎஸ் படிக்க அனுமதிக்கப்பட்டார். தன் படிப்பை முடித்த பிறகு பாவ்நகர் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார்.


தன் வெற்றி குறித்துக் கூறிய கணேஷ் பாரையா, ``நான் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதற்காக விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்த பிறகு, இந்திய மருத்துவ கவுன்சில் குழு என் உயரத்தைக் காரணம் காட்டி நிராகரித்தது.


உயரம் குறைவாக இருப்பதால் அவசரகால சிகிச்சைகளை என்னால் கையாள முடியாது என்று கூறினார்கள். அதன்பின் நான் என் பள்ளித் தலைமை ஆசிரியர், டாக்டர் தல்பத் பாய் கட்டாரியா மற்றும் ரேவசிஷ் சேர்வையா ஆகியோரிடம் இதைப் பற்றி பேசினேன். 


2018-ல், உச்ச நீதிமன்றம் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்க்க உத்தரவிட்டது. ஆனால், அதற்குள் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான சேர்க்கை முடிந்துவிட்டது. ஆதலால், 2019-ல் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்க்கை பெறுவார் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


நான் பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் பெற்றேன், அதன்பின் என் எம்.பி.பி.எஸ் பயணம் தொடங்கியது. முதலில் என்னைப் பார்க்கும் நோயாளிகள் என் மீதான அபிப்பிராயத்தை உயரத்தை வைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால், காலப்போக்கில் அவர்கள் இணக்கமாகி, என்னை மருத்துவராக ஏற்றுக்கொண்டனர். அவர்கள் என்னுடன் அன்பாகவும் நேர்மறையாகவும் நடந்துகொள்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார். 


வாழ்த்துகள் டாக்டர் கணேஷ் பாரையா!


Railway Gate Man to DSP - சாதித்த இளைஞர்



Railway Gate Man to DSP - சாதித்த இளைஞர்


பீகாரில் ராஜு குமார் என்ற இளைஞர், ரயில்வே கேட்மேனாக பணியாற்றியபடியே அரசு தேர்வு எழுதி, 1st முயற்சியிலேயே வென்று மாநில அளவில் 72வது இடம்பிடித்து DSP-ஆக தேர்வாகி அசத்தல். 


12 வயதில் தந்தையை இழந்த குமார், குடும்ப பாரத்தை சுமந்துகொண்டே அயராது உழைத்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 


எளிய பின்னணியில் இருந்து வந்த குமாரின் வெற்றி, அரசு வேலைக்காக போராடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உதாரணமாக மாறியுள்ளது 


அன்று ‘நீட்’ தேர்வில் தோல்வி ; இன்று ரூ.72 லட்சம் சம்பளத்தில் வேலை : ஒரு சாதனை நிகழ்வு

 


அன்று ‘நீட்’ தேர்வில் தோல்வி ; இன்று ரூ.72 லட்சம் சம்பளத்தில் வேலை : ஒரு சாதனை நிகழ்வு


கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் மாணவி ரிதுபர்ணா (20). இவர் மங்களூருவை அடுத்துள்ள அடியாரில் உள்ள சயாத்ரி பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன் பொறியியல் பிரிவில் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். 


இவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72.2 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.


இதுகுறித்து ரிதுபர்ணா கூறுகையில், “எனக்கு பள்ளி நாட்களில் இருந்து மருத்துவராக வேண்டும் என்பது கனவாக இருந்தது. இதற்காக 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று, நீட் நுழைவுத் தேர்வு எழுதினேன். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த தேர்வில் என்னால் வெற்றி பெற முடியவில்லை.


இதனால் எனது கனவுகள் கலைந்து போனதாக மனமுடைந்து போனேன். எனது பெற்றோரும் நண்பர்களும் என்னை தேற்றி, பொறியியல் படிக்குமாறு கூறினர். இதனால் சயாத்ரி கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன் பிரிவில் சேர்ந்தேன்.


எனது கல்லூரி பேராசிரியர்கள், மூத்த மாணவர்கள் ஒருங்கிணைத்த அனைத்துவிதமான புதுமையான திட்டங்களிலும் ஆர்வத்தோடு பங்கேற்றேன்.


குறிப்பாக ரோபோ இயந்திர வடிவமைப்பு, ஆட்டோமேஷன் பயன்பாடு, இயந்திர வடிவமைப்பு ஆகியவற்றில் எனக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது. 


கல்லூரி நண்பர்களுடன் இணைந்து பாக்கு மரங்களுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் கருவி, பாக்கு அறுவடை மற்றும் தரம் பிரிக்கும் ரோபோ ஆகியவற்றை வடிவமைத்தேன்...


எங்களின் இந்த முயற்சிக்கு கோவாவில் நடந்த ரோபோட்டிக்ஸ் சர்வதேச மாநாட்டில் பதக்கம் கிடைத்தது.


இதன் மூலம் சிங்கப்பூர், ஜப்பான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை சேர்ந்த ரோபோட்டிக்ஸ் நிபுணர்களின் அறிமுகம் கிடைத்தது. மேலும் இங்கிலாந்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸில் ஜெட் இன்ஜின் தயாரிப்பு நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் ஆக ஓராண்டு பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. இதற்காக எனக்கு ஆண்டுக்கு ரூ.39.58 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டது.


அந்த பயிற்சி காலத்தில் எனது முழு கவனத்தையும் செலுத்தி கடினமாக‌ உழைத்தேன். 


ஜெட் விமானத்தின் இன்ஜின் தயாரிக்கும் பிரிவில் எனது பரிந்துரைகள் பெரிதும் ஏற்கப்பட்டன. 


இதன் காரணமாக கடந்த மாதத்தில் எனக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72.2 லட்சம் சம்பளம் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.


அதற்கான பணி நியமன கடிதத்தை பெற்றதும் என் பெற்றோரிடமும், கல்லூரி நிர்வாகத்திடம் காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்.


இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி, ஏராளமானோர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.


கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர், மங்களூருவை சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்கள், கல்லூரி பேராசிரியர்கள் என ஏராளமானோர் என்னை நேரில் சந்தித்து பாராட்டினர்.


என்னைப் பொறுத்தவரை, தோல்விகளை கண்டு அச்சப்படாமல் இளைஞர்கள் புதிய துறைகளில் உற்சாகத்துடன் போராடினால், நிச்சயம் இமாலய வெற்றி கிடைக்கும். 


நான் எனது மருத்துவர் கனவு சிதைந்த போதும், துவளாமல் வேறு துறையில் ஆர்வமோடு இயங்கினேன். இப்போது இளம் பொறியாளராக, படிப்பை முடிக்கும் முன்பாகவே ரூ.72 லட்சம் சம்பளத்துக்கு வேலை செய்கிறேன். இதன் மூலம் எனது பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவேன்.” என்றார்.


20 வயதிலேயே சாதித்த ரிதுபர்ணாவை சமூக வலைதளங்களில் ஏராளமான இளைஞர்களும், கல்வியாளர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


Achievements of School Education Department - Press Release No: 1397, Date: 10-09-2024...


 திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையின் சாதனைகள் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்: 1397, நாள்: 10-09-2024...


Achievements of School Education Department under Dravida Model Government - Government of Tamil Nadu Press Release No: 1397, Date: 10-09-2024...





2மணி நேரத்துக்குள் 36 புத்தகங்கள் படித்து 5 வயது சிறுமி உலக சாதனை...

 அபுதாபியில் வசித்து வரும் 5 வயதான இந்திய-அமெரிக்க சிறுமி 2 மணி நேரத்துக்குள் 36 புத்தகங்களை படித்து உலக சாதனை படைத்துள்ளார்.



சென்னையைச் சேர்ந்த பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறந்த இந்திய -அமெரிக்க சிறுமி கியாரா கவுர். 5 வயதான இச்சிறுமி தற்போது பெற்றோருடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். இந்த சிறுவயதில் 36 புத்தகங்களை 1 மணி நேரம் 45 நிமிடங்களில் படித்து முடித்து உலக சாதனை செய்துள்ளார். இந்த சாதனைக்காக லண்டன் உலக சாதனை புத்தகத்திலும் ஆசியா சாதனைப் புத்தகத்திலும் கியாரா கவுர் இடம் பிடித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதியன்று 36 புத்தகங்களை இடைவிடாமல் 105 நிமிடங்களில் படித்ததற்காக ‘குழந்தை மேதை’ என்று லண்டன் உலக சாதனை புத்தகம் கியாரா கவுரை பாராட்டி உள்ளது.



கியாரா கவுருக்கு புத்தகங்கள் படிப்பதில் இருந்த ஆர்வத்தை அபுதாபியில் அவரது ஆசிரியர்தான் முதலில் கவனித்து ஊக்கமளித்துள்ளார். கடந்த ஆண்டில் 200 புத்தகங்களுக்கு மேல் கியாராகவுர் படித்ததாகவும் புதிய புத்தகங்கள் மட்டுமின்றி ஏற்கெனவே படித்த புத்தகங்களை மீண்டும் படிக்க விரும்புவதாகவும் அவரது பெற்றோர் தெரிவி்த்தனர். ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட், சிண்ட்ரெல்லா, லிட்டில் ரெட் ரைடிங் ஹூட் மற்றும் ஷூட்டிங் ஸ்டார் ஆகியவை கியாராவுக்கு பிடித்த சில புத்தகங்கள்.



கியாரா கவுர் கூறுகையில், ‘‘புத்தகங்கள் படிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் விரும்பும் இடத்துக்கு புத்தகங்களை கொண்டு செல்லலாம். ஸ்மார்ட் போன்களில் படிக்கும்போதோ, வீடியோக்கள் பார்க்கும்போதோ இணையம் இணைப்பு இல்லாவிட்டால் படிக்க முடியாது. புத்தகங்களை எங்கும் எப்போதும் படிக்கலாம்’’ என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.4.6 - Updated on 02-10-2026

    தற்போது TNSED Schools  App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.4.6 - Updated on 02-10-2026 - SRC Feedback ...