கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (01-05-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மே 01, 2021



உங்களின் மீதான நம்பிக்கையும், மனதில் புத்துணர்ச்சியும் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அஸ்வினி : புத்துணர்ச்சியான நாள்.


பரணி : மாற்றங்கள் ஏற்படும்.


கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




ரிஷபம்

மே 01, 2021



புதிய முயற்சிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் அமையும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் மனஅமைதி உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : கவனம் வேண்டும்.


ரோகிணி : விவாதங்களை தவிர்க்கவும்.


மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மிதுனம்

மே 01, 2021



கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி லாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மிருகசீரிஷம் : திருப்திகரமான நாள்.


திருவாதிரை : சேமிப்புகள் அதிகரிக்கும்.


புனர்பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------





கடகம்

மே 01, 2021



உழைப்பிற்கேற்ற முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் புதிய வியூகங்களை கற்றுக்கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.


பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------




சிம்மம்

மே 01, 2021



மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் சிலருக்கு சாதகமாக அமையும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மகம் : விருப்பங்கள் நிறைவேறும்.


பூரம் : உதவிகள் கிடைக்கும்.


உத்திரம் : இழுபறிகள் அகலும்.

---------------------------------------




கன்னி

மே 01, 2021



தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.


அஸ்தம் : பேச்சுவார்த்தைகள் சாதகமாகும்.


சித்திரை : சிந்தனைகள் தோன்றும்.

---------------------------------------




துலாம்

மே 01, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இருந்துவந்த போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : ஆதரவு கிடைக்கும்.


சுவாதி : கவனம் வேண்டும்.


விசாகம் : அறிமுகம் உண்டாகும்.

---------------------------------------




விருச்சகம்

மே 01, 2021



மகிழ்ச்சியான செய்திகளின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் மூலம் மேன்மை ஏற்படும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



விசாகம் : கலகலப்பான நாள்.


அனுஷம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


கேட்டை : மேன்மை ஏற்படும்.

---------------------------------------




தனுசு

மே 01, 2021



குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமும், ஈடுபாடும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : கவனம் வேண்டும்.


பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


உத்திராடம் : ஆசைகள் தோன்றும்.

---------------------------------------




மகரம்

மே 01, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் வழியில் லாபம் மேம்படும். திட்டமிட்ட காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நடைபெறும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : லாபம் மேம்படும்.


திருவோணம் : திட்டங்கள் நிறைவேறும்.


அவிட்டம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------




கும்பம்

மே 01, 2021



தனவரவுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அவிட்டம் : தாமதங்கள் அகலும்.


சதயம் : இன்னல்கள் குறையும்.


பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

மே 01, 2021



மனதில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். மனைவிவழி உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மறைமுகமாக இருந்த திறமைகளை வெளிப்படுத்தி பரிசும், பாராட்டுகளையும் பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



பூரட்டாதி : தெளிவு கிடைக்கும்.


உத்திரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.


ரேவதி : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------


தபால் ஓட்டு எந்தெந்த சமயங்களில் தள்ளுபடியாகும் / செல்லாததாகும்...?

தள்ளுபடி செய்யவேண்டிய தபால் ஓட்டுகள் குறித்து தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.தபால் ஓட்டு பதிவில், செல்லாத ஓட்டு கண்டறிய, தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. 




தபால் ஓட்டு உறைக்குள், உறுதிமொழி படிவம் இல்லை என்றாலோ, படிவத்தில் வாக்காளர் மற்றும் சான்றொப்பம் செய்த அதிகாரியின் கையெழுத்து இல்லை என்றாலோ, அது செல்லாத ஓட்டாக கருதப்படும்.உறுதிமொழி படிவத்தில் 



உள்ள வாக்காளர் வரிசை எண்ணும், ஓட்டு சீட்டு உறை மீது எழுதியுள்ள வரிசை எண்ணும் வேறுபட்டு இருந்தால், தள்ளுபடி செய்யலாம்.




உறுதிமொழி படிவத்தை, தனியாக உறைக்குள் வைக்காமல், ஓட்டு சீட்டுடன் சேர்த்து சிறிய உறைக்குள் வைத்திருந்தாலும் தள்ளுபடி செய்யலாம். ஓட்டு சீட்டை 'படிவம் ~ 13பி'க்குள் வைக்காமல், தனியே வைத்திருந்தாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளருக்கு ஓட்டளித்திருந்தாலும், போலி ஓட்டு சீட்டு என்றாலும் தள்ளுபடி செய்யலாம். 




சேதமாகி, முற்றிலும் கிழிந்த மற்றும் கசங்கிய நிலையிலோ உள்ள தபால் ஓட்டுகளையும் தள்ளுபடி செய்யலாம். இவற்றை தள்ளுபடி செய்ய தேர்தல் நடத்தும் அலுவலரின் முன் அனுமதி பெற வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கு அவரசகால வாட்ஸ்ஆப் உதவி எண் – தேசிய பெண்கள் ஆணையம் அறிமுகம்...

 நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணிகளுக்காண அவசர கால உதவி எண்ணை புதிதாக அறிமுகப்படுத்தியுளளது தேசிய பெண்கள் ஆணையம். இந்த எண் எல்லா நேரங்களிலும் செயல்பாட்டில் இருக்கும் என அறிவித்துள்ளது.


அவசர கால உதவி எண்:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் பாதிப்பும் புதிய உச்சம் அடைகிறது. கொரோனா இரண்டாம் அலை 



தற்போது இந்தியாவில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த வருடத்தை விட இந்த கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை உருவாக்கியுள்ளது.


இதனால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. போதுமான படுக்கை வசதிகள் 



இல்லாததால் தரையில் படுக்கும் அவல நிலை ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் பரவியதில் இருந்தே மருத்துவமனைகளில் மற்ற நோய்களுக்கு சிகிக்சை அளிப்பதில்லை.


அதே போல் கர்பிணிகளையும் சில தனியார் மருத்துவமனைகள் அனுமதிப்பதில்லை. இதனால் கர்ப்பிணிகளுக்கு உரிய நேரத்தில் சிகிக்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது நாடு முழுவதும் இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்குகள் இருப்பதால் 



கர்ப்பிணிகளுக்கு அவசரமான நேரங்களில் போக்குவரத்து சேவைகள் கிடைப்பதில்லை. இதனை கருத்திற்கொண்டு இந்திய தேசிய பெண்கள் ஆணையம் கர்ப்பிணிகளுக்கு என அவசர உதவி வாட்ஸ் ஆப் எண்ணை 9354954224 மேலும் helpatnew@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண் எல்லா நேரங்களிலும் செயல்பாட்டில் இருக்கும் எனவும் பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வி - இடைநிற்றலை தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின் முழுமையான வங்கிக் கணக்கு விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு...



 பள்ளிக் கல்வி - இடைநிற்றலை தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின் முழுமையான வங்கிக் கணக்கு விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 31944/ கே / இ2/ 2020, நாள்: 23-04-2021...


>>>  பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 31944/ கே / இ2/ 2020, நாள்: 23-04-2021...




624 தற்காலிகப் பணியிடங்களுக்கு (G.O.No.47, Dated:20.03.2013) ஏப்ரல் - 2021 முதல் 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வெளியீடு...



624 தற்காலிகப் பணியிடங்களுக்கு (G.O.No.47, Dated:20.03.2013) ஏப்ரல் - 2021 முதல் 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வெளியீடு -  Proceedings of the Director of School Education R.C.No.000688/ L / E3 / 2021, Dated: 27-02-2021...


>>> Click here to Download Proceedings of the Director of School Education R.C.No.0011657/ L / E3 / 2021, Dated: 26-03-2021...



5000 ஆசிரியரல்லா பணியிடங்களில் தற்போது பணிபுரியும் 1272 பணியாளர்களுக்கு ஏப்ரல் 2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை...



5000 ஆசிரியரல்லா பணியிடங்களில் தற்போது பணிபுரியும் 1272 பணியாளர்களுக்கு ஏப்ரல் 2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை - பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் கடிதம் எண்: 8082/ ப.க.4(1) / 2021-1, நாள்: 30-04-2021...

>>> பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் கடிதம் எண்: 8082/ ப.க.4(1) / 2021-1, நாள்: 30-04-2021...





தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அறிவிப்பு...

 






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...