கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதல்வர் ஸ்டாலினுக்கு 7 வயது மாணவி எழுதிய கடிதம் எதிரொலி: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆய்வு...



 பொன்னேரியில் புதிய பள்ளிக் கட்டிடம் அமைக்கக் கோரி முதல்வருக்கு 7 வயது மாணவி கடிதம் எழுதியதன் விளைவாக,  சம்பந்தப்பட்ட பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாஸ்கரன். இவரது மகள் அதிகை முத்தரசி (7). இவர் பொன்னேரி சிவன்கோயில் அருகே உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.





இந்நிலையில், பள்ளிக் கட்டிடத்தைச் சீரமைக்கக் கோரியும், ஆக்கிரமிப்புக்குள்ளான பள்ளி மாணவர்கள் விளையாடப் பயன்படுத்திய அரசு புறம்போக்கு நிலத்தை மீட்கக் கோரியும் 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் அதிகை முத்தரசி பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்தது. அப்போது, ஒரு ஆண்டுக்குள் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித் தர வேண்டும். ஆக்கிரமிப்புக்குள்ளான புறம்போக்கு நிலத்தை மீட்டு விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது





 

இதற்கிடையே பள்ளி நிர்வாகம் தரப்பில் அதிகை முத்தரசிக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே, எதிர்கால நலன் கருதி, அதிகை முத்தரசி, தற்போது தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். பொன்னேரி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் அமைக்கக் கோரி முதல்வருக்கு 7 வயது மாணவி கடிதம் எழுதியதால், நேற்று அப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், ஓராண்டாகியும் உயர் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. ஆகவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 7-ம் தேதி அதிகை முத்தரசி கடிதம் எழுதினார். அதன் விளைவாக இன்று பொன்னேரிக்கு வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவி அதிகை முத்தரசி, அவரது தந்தை பாஸ்கரன் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்; முதல்வருக்குக் கடிதம் எழுதிய மாணவியைப் பாராட்டி, அவருக்குப் புத்தகத்தைப் பரிசாக அளித்தார். தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளி வளாகத்தைச் சுற்றிப் பார்த்து, ஆய்வு மேற்கொண்டார்.




 

அந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ''பொன்னேரியில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வளாகத்தில் 17.32 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு சமீபத்தில்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆகவே, புதிய பள்ளிக் கட்டிடம் அமைக்கும் பணியை உடனடியாகத் தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். அரசுக்கு வருகிற மனு பெரியவர்களிடம் இருந்து வருகிறதா? சிறியவர்களிடம் இருந்து வருகிறதா? எனப் பார்ப்பதில்லை. மனுவின் உண்மைத் தன்மை குறித்து அறிந்து, எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்ற மனநிலையில் முதல்வர் ஸ்டாலின் என்னை பொன்னேரிக்கு அனுப்பியுள்ளார்” என்று தெரிவித்தார். அமைச்சரின் இந்த ஆய்வின்போது, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி எம்.எல்.ஏ.,க்களான டி.ஜெ. கோவிந்தராஜன், துரை. சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்தியாவில் அவரச நிலையை பிரகடனம் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை - உயர் நீதிமன்றம்...

 


இந்தியாவில் அவரச நிலையை பிரகடனம் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.


இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்து ஆக்ஸிஜன், மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் & மருத்துவமனைகள் ஆகியவற்றை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கோரிய மனு மீது நீதிபதிகள் கருத்து.

தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 519 மெட்ரிக் டன்னாக உயர்வு - சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.



 தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 519 மெட்ரிக் டன்னாக உயர்வு - சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.


முதல்வரின் கோரிக்கையை ஏற்று கடந்த 8ம் தேதி ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெ.டன் ஆக மத்திய அரசு உயர்த்திய நிலையில் தற்போது மேலும் அதிகரிப்பு.


DRDO மூலம் ஆக்சிஜன் உற்பத்தி வசதியை ஏற்படுத்தக் கோரி மாநில அரசு PM Cares  அமைப்புக்கு விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்


உடனடியாக விண்ணப்பிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்.


மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும்; மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.


கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்.

மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அரிசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 📍 அரிசி குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க தடை விதிக்கக்கோரி வழக்கு                         

📍இது தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த  வழக்கறிஞர் பா.ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:


📍தமிழகத்தில் 2,07,87,950 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் கட்டமாக மே 15 முதல் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை மே 10ல் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


📍மே 15 முதல் அனைத்து ரேசன் கடைகளிலும் தினமும் 200 குடும்ப அட்டைகள் வீதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.


📍கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு போன்றவற்றால் வாழ்வாதார பாதிப்பை சந்திந்தவர்களுக்கு பொருளாதார உதவி செய்யும் வகையில் நிதி வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.


📍ஆனால் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் அரிசி குடும்ப அட்டைகள் வைத்துள்ளனர். இவர்களுக்கு ஊரடங்கு காலத்திலும் முழு சம்பளம் வழங்கப்படுகிறது. ஊரடங்கால் அரசு ஊழியர்களுக்கு வருமான இழப்பு ஏற்படவில்லை.


📍அரசு ஊழியர்களின் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணத்தை ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்கவும், புதிய ஆக்சிஜன் உற்பத்தியை ஆலை அமைக்கவும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தவும் பயன்படுத்தலாம்.


📍வாடகைக்கார், ஆட்டோ, மினி பஸ், ஆம்னி பஸ், தனியார் பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், நடைபாதை வியாபாரிகள், ஊரடங்கு உத்தரவால் தற்காலிகமாக மூடப்பட்ட வணிக வளாகங்கள், பெரிய கடைகள், சினிமா தியேட்டர்கள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், சிறு தொழிலக உரிமையாளர்கள், தொழிலாளிகள், கூலித் தொழிலாளிகள், தள்ளுவண்டி வியாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தான் கரோனா ஊரடங்கால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


📍இவர்களுக்கு தான் பொருளாதார உதவி தேவைப்படுகிறது.


📍எனவே, மத்திய அரசு, மாநில அரசு ஊழியர்கள், அரசு சார்பு நிறுவனங்களின் பணிபுரிபவர்கள், ஓய்வூதியர்களின் அரிசு குடும்ப அட்டைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க தடை விதித்தும், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், கரோனா ஊரடங்கால் உண்மையில் வருவாய் இழப்பு ஏற்பட்டவர்களின் குடும்ப அட்டைகளுக்கும் ரூ.2 ஆயிரம், அதற்கு மேல் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


📍இந்த வழக்கு விடுமுறை  கால நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.


 📍 மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அரிசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்க தடை கோரிய இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றுவரை தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள், சபாநாயகர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் பட்டியல்...

 


List of Chief Ministers, Speakers and Leaders of Opposition in Tamil Nadu till date ...




SpO2 அளவு 96க்கு மேல் உள்ளவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கக் கூடாது - கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு...

 


COVID 19 Pandemic - Treatment Protocol for Patients with Corona Virus infection - Approved - Orders issued...

SpO2 அளவு 96க்கு மேல் உள்ளவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கக் கூடாது - கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நெறிமுறைகள் - அரசாணை (G.O.Ms.No.:233, Dated: 10-05-2021) வெளியீடு...


>>> Click here to Download G.O.Ms.No.:233, Dated: 10-05-2021...

மே 2021 துறை தேர்வுகளுக்கு ஜூன் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - TNPSC அறிவிப்பு....



 டிசம்பர் 2020 ல் நடைபெற்ற துறை தேர்வு முடிவுகள் - மீதமுள்ள 14 தேர்வுகளுக்கு ஜுன் 8 ஆம் தேதி வெளியீடு...

டிசம்பர் 2020 ல் நடைபெற்ற துறைத் தேர்வுகளில் இதுவரை தேர்வு முடிவு வெளியிடப்படாத தேர்வுகளுக்கு  08.06.2021 அன்று முடிவுகள் வெளியீடு - இதன் காரணமாக மே - 2021 துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 15.06.2021 வரை கால அவகாசம் நீட்டிப்பு - TNPSC அறிவிப்பு.

மே 2021 துறை தேர்வுகளுக்கு ஜூன் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - TNPSC அறிவிப்பு....


>>> TNPSC அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...