G.O.No: 242 -மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு, விநியோகம் செய்வதை கண்காணிக்க சிறப்பு இணை பணிக்குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
G.O.No: 242 -மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு, விநியோகம் செய்வதை கண்காணிக்க சிறப்பு இணை பணிக்குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு...
ஆக்சிஜன் , தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் , ஒரு நிரந்தரத் தீர்வாக நம் மாநிலத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைத் துவக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
இதுமட்டுமின்றி , மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள் , ஆக்சிஜன் செறிவூட்டிகள் , தடுப்பூசிகள் மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை நம் மாநிலத்திலேயே உருவாக்குவதற்கும் , தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள் . இதனடிப்படையில் தொழில் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ( TIDCO ) , மேற்காணும் அத்தியாவசிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும் , உதவிகளையும் அளிக்கும் என்றும் , குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் , டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் ( Joint venture ) இவ்வாலைகளை நிறுவுவதற்கு விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கருத்துகளை ( Expression of Interest ) 31-5-2021 - க்குள் கோரியுள்ளது.
அவ்வாறு பெறப்படும் விருப்பக் கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு , ஆக்சிஜன் , தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி உட்கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
>>> செய்தி வெளியீடு எண்: 91, நாள்: 18-05-2021...
தமிழகத்திற்கு வரும் ஆக்சிஜன் கன்டெய்னர்களை ஒருங்கிணைக்க 2 அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியீடு...
தமிழகத்திற்கு வரும் ஆக்சிஜன் கன்டெய்னர்களை ஒருங்கிணைக்க 2 அதிகாரிகளை நியமித்து அரசாணை (G.O.Rt.No.2029, Dated: 15-05-2021) வெளியீடு...
ரெம்டெசிவிர், ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு...
மக்களின் உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கியும், அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில், வீட்டுத் தனிமையில் இருப்போர் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. ரெம்டெசிவிர் மருந்து தேவையும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவையும் அதிகரித்து வருகிறது.
இதைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்கின்றனர். இதில் மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் சிக்கிக் கைதாகின்றனர். இதுகுறித்து திடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருப்பதால் அவ்வாறு பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
“மக்களின் உயிர் காக்கும் பெரும் பொறுப்பை முதன்மைக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு. அதற்கு நேர் எதிராகச் செயல்படுபவர்களின் போக்கை கடுமையான நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
உலகளாவிய அளவிலும், குறிப்பாக இந்திய ஒன்றியத்திலும் கரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி வளையத்தில் இருந்து தமிழகமும் தப்பிக்கவில்லை. நாள்தோறும் அதிகரித்து வரும் நோய்த் தொற்று எண்ணிக்கையையும், இறப்புகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மக்களுக்கான இந்த அரசு இரவு பகல் பாராது செயல்பட்டு வருகிறது. மேலும், இப்பணியில் அனைவரும் அவரவர் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கேற்ப, நல்லோர் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கி வருகிறார்கள்.
எளிய மக்கள்கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைத் தாண்டி, அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை விழுங்கி, மக்களின் உயிரைக் காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். அதே நேரத்தில், சில சமூக விரோதிகள் ரெம்டெசிவிர் மருந்துகளைப் பதுக்கி, கள்ளச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.
அதுபோலவே, ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் வருகின்றன. பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும்.
தடுப்பூசி இறக்குமதி, ரெம்டெசிவிர் மருந்து விநியோகம், ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தல், கட்டுப்பாட்டு மையங்கள் வாயிலாக உடனுக்குடன் சிகிச்சைக்கான ஏற்பாடு எனத் தமிழக அரசு தொய்வின்றித் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீதும் அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வரும் நிலையில், அதற்கு மாறாக, ரெம்டெசிவிர் மருந்துகளைப் பதுக்குவோர் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு...
தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.
"ஆக்ஸிஜன்" உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம் - தமிழக அரசு அறிவிப்பு.
மானிய சலுகை பெற இந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் உற்பத்தியை தொடங்க வேண்டும்.
முன்னுரிமை அடிப்படையில் சிப்காட், சிட்கோ மூலம் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்படும் - தமிழக அரசு.
கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவு...
தமிழகத்தில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது அரசு மருத்துவமனைகளில் 41 ஆயிரம் படுக்கைகள் உள்ள நிலையில், 22 ஆயிரம் படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய 12 ஆயிரத்து 468 படுக்கைகள் தயாராகி வருகின்றன. இதில் 5000 படுக்கைகள் தயார் செய்யும் பணி முடிவடைந்துள்ளன. மீதமுள்ள படுக்கைகளை தயார் செய்யும் பணி ஒரு வாரத்தில் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.
ரயில் மூலம் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வருகிறது...
மேற்கு வங்கம் துர்காபூரில் இருந்து ரயில் மூலம் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வருகிறது; நேற்றிரவு புறப்பட்ட ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையை வந்தடையும் என தகவல்...
ரயில் மூலம் தமிழகத்துக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்படுவது இதுவே முதல் முறை என தெற்கு ரயில்வே ட்விட்டரில் பதிவு...
தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 519 மெட்ரிக் டன்னாக உயர்வு - சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 519 மெட்ரிக் டன்னாக உயர்வு - சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
முதல்வரின் கோரிக்கையை ஏற்று கடந்த 8ம் தேதி ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெ.டன் ஆக மத்திய அரசு உயர்த்திய நிலையில் தற்போது மேலும் அதிகரிப்பு.
DRDO மூலம் ஆக்சிஜன் உற்பத்தி வசதியை ஏற்படுத்தக் கோரி மாநில அரசு PM Cares அமைப்புக்கு விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்
உடனடியாக விண்ணப்பிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்.
மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும்; மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.
கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...