கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.No.: 382, Dated: 12-07-2021 - தமிழ்நாடு அரசு - அமைச்சர்களுக்கான அலுவல்கள் ஒதுக்கீடு (Allocation of Business) செய்து அரசாணை வெளியீடு...


 அரசாணை (நிலை) எண்: 382, நாள்: 12-07-2021 - தமிழ்நாடு அரசு - அமைச்சர்களுக்கான அலுவல்கள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு...


>>> அரசாணை (நிலை) எண்: 382, நாள்: 12-07-2021...


G.O.No.: 148, Dated: 14-09-2006 - அடிப்படை விதிகள் - அரசால் ஏற்பளிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அரசுப் பணியாளர்கள் - 60 நாட்களுக்கு மிகைப்பட்ட காலத்திற்கு மருத்துவச் சான்றின் பெயரில் ஈட்டா விடுப்பு (Medical Leave)- மருத்துவக் குழுவின் பரிந்துரையின்றி விடுப்பு ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது...

 


அரசு ஆணை (நிலை) எண்: 148, நாள்: 14-09-2006 - அடிப்படை விதிகள் - அரசால் ஏற்பளிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அரசுப் பணியாளர்கள் - 60 நாட்களுக்கு மிகைப்பட்ட காலத்திற்கு மருத்துவச் சான்றின் பெயரில் ஈட்டா விடுப்பு - மருத்துவக் குழுவின் பரிந்துரையின்றி விடுப்பு ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது...


>>> அரசு ஆணை (நிலை) எண்: 148, நாள்: 14-09-2006...


NEET தேர்வு ஆய்வுக்குழு அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு...

 நீட் தேர்வு ஆய்வுக்குழு அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு...



தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 9 பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு கடந்த மாதம் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.


நீட் தேர்வின் தாக்கம் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது.


அதன்படி, சுமார் 89,342 பேர் நீட் தேர்வுக்கு எதிராகவும், சிலர் ஆதரவாகவும், கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த கருத்துகளை பரிசீலனை செய்த ஆய்வுக்குழு, பல கட்ட ஆலோசனைகளை நடத்தியது.


இந்நிலையில், ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆய்வுக்குழு நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.


நீட் ஆய்வுக்குழுவுக்கு எதிரான மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி ஆன நிலையில் முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.


ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.

பள்ளிக் கல்வி - முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 020561/எம்/இ2/2021, நாள்: 14-07-2021...



 பள்ளிக் கல்வி - முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் சார்ந்து...


>>> பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 020561/எம்/இ2/2021, நாள்: 14-07-2021...


ஒரே மேடையில்‌ உலகிலேயே உயரம்‌ குறைந்த பெண்‌ணும், உயரமான மனிதரும்...


உலகிலேயே உயரம்‌ குறைந்த பெண்‌ ஜோதி கிசாஞ்சே அம்கே. வயது 28. உயரம்‌ 2 அடி 6 அங்குலம்‌. இவர்‌ இந்தியாவின்‌ மகாராஸ்டிரா மாநிலம் நாக்பூரைச்‌ சேர்ந்தவர்‌.



உயரமான மனிதர் சுல்தான் கோசென். வயது  38. உயரம்‌ 8 அடி 9 அங்குலம்‌. துருக்கியைச்‌ சேர்ந்தவர்‌.




>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...



மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28%ஆக உயர்வு...

 மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28%ஆக உயர்வு...


17 % லிருந்து 28 சதவீதமாக அதிகரித்து 1.7.2021 முதல் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு...




மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக அகவிலைப்படி 17 ல் இருந்து 28 % ஆக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார்.


கோவிட் பரவலை தொடர்ந்து, கடந்தாண்டு, ஜனவரி முதல், 2021 ஜூலை 1 வரையிலான மூன்று தவணைகளுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப் படி உயர்வும், ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரண தொகை உயர்வும், நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.


இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தவும், இதனை ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளதாக, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்களிடம் தெரிவித்தார்.















இன்றைய (14-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

ஜூலை 14, 2021



புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். உத்தியோகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். உற்றார், உறவினர்கள் வகையில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : தாமதங்கள் குறையும்.


பரணி : பேச்சுவார்த்தைகள் ஈடேறும்.


கிருத்திகை : மேன்மையான நாள்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 14, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.


ரோகிணி : முன்னேற்றமான நாள்.


மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 14, 2021



கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதில் பலவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மிருகசீரிஷம் : பொறுப்புகள் குறையும்.


திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும்.


புனர்பூசம் : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 14, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் ஆதரவின் மூலம் புதிய நம்பிக்கை மேம்படும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் தொடர்பான வேலைவாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.


பூசம் : நம்பிக்கை மேம்படும்.


ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 14, 2021



தனவரவுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். இணையம் சார்ந்த பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மகம் : தனவரவுகள் மேம்படும்.


பூரம் : திறமைகள் வெளிப்படும்.


உத்திரம் : ஆதாயமான நாள்.

---------------------------------------




கன்னி

ஜூலை 14, 2021



குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகளும், மகிழ்ச்சியான தருணங்களும் உண்டாகும். பொன், பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்



உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.


அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


சித்திரை : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

ஜூலை 14, 2021



உறவினர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். அரசு தொடர்பான காரியங்களின் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.


சுவாதி : பிரச்சனைகள் குறையும்.


விசாகம் : மேன்மையான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 14, 2021



இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நன்மையான வாய்ப்புகள் அமையும். அரசாங்கத்தின் மூலம் சாதகமான காரியங்கள் நடைபெறும். எதிர்பாராத இடமாற்றங்கள் சிலருக்கு புதிய அனுபவங்களை ஏற்படுத்தும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



விசாகம் : தனவரவுகள் கிடைக்கும்.


அனுஷம் : சாதகமான நாள்.


கேட்டை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

ஜூலை 14, 2021



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் சிறு அலைச்சல்கள் பின்பு சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் அவ்வப்போது மனக்குழப்பங்களும், ஒருவிதமான சோர்வும் ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மூலம் : நெருக்கம் அதிகரிக்கும்.


பூராடம் : மேன்மை உண்டாகும்.


உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 14, 2021



வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பாராத வீண் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களுக்காக எந்தவொரு பெறுப்புகளையும் ஏற்காமல் இருப்பது நல்லது. சமூகப்பணிகளில் இருப்பவர்கள் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் 



உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.


திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.


அவிட்டம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 14, 2021



எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். விருந்து மற்றும் கேளிக்கை தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சமூகத்தில் பெரிய நபர்களின் நட்புகள் சிலருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் மற்றும் அது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.


சதயம் : சாதகமான நாள்.


பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

ஜூலை 14, 2021



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் எதிர்பாராத உதவிகளின் மூலம் இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான உபாதைகள் படிப்படியாக குறையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 



பூரட்டாதி : ஆதரவான நாள்.


உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும்.


ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...