அஞ்சல் துறை சார்பில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வாகன காப்பீட்டுத்திட்டம்...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
மாணவர்களுக்கு பாடத்திட்டக் குறைப்பா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்...
பாடத்திட்டத்தைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
''ஸ்மார்ட் போர்டு, இன்ட்ராக்டிவ் போர்டு, ஹைடெக் ஆய்வகம் ஆகியவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று ஆரம்பகட்டமாக 432 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க முடிவு செய்து, அந்தப் பணியைத் தொடங்கி இருக்கிறோம். இன்று முதல் 5 நாட்களுக்கு இந்தப் பயிற்சி ஆன்லைனில் நடைபெறும்.
அவர்கள் அடுத்தகட்டமாக மற்ற ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளார்கள். அந்த வகையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் தொடக்கப் பள்ளி, நடுநிலை, மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க உள்ளோம். இந்த நிகழ்வில் கல்வி தகவல் மேலாண்மை (EMIS) தளத்தில் பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த விவரங்களைப் பதிவேற்றம் செய்வது குறித்தும் பயிற்சி வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்குத் திடீரென 7 மாதங்களில் பொதுத் தேர்வு என்று அறிவிக்க முடியாது. பாடத்திட்டத்தைக் குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு மழலையர் வகுப்புகள் கட்டாயம் என்பது விதிமுறைகளில் இல்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்''.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
M.Phil , Ph.D - Entrance Test Notification 2021 - 22...
M.Phil , Ph.D - Entrance Test Notification 2021 - 22...
Periyar university - Notification for Common Entrance Test for admission to M.Phil . and Ph.D. ( July 2021 Session ) Programmes for 2021-22
Applications are invited via online for the admission of M.Phil . / Ph.D. ( July 2021 Session ) programme in the University Departments / Affiliated Colleges / Research Institutions for the academic year 2021 - 2022.
For more details visit www.periyaruniversity.ac.in
9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க ஆலோசனை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...
தமிழ்நாட்டில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கு ஆலோசனை செய்து வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடர்ந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் இயங்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது .
இந்த வருடம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.
மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத அளவுக்கு நிலைமை மோசமானது. எனவே பள்ளிகளை திறப்பது பற்றி யோசித்து கூட பார்க்கவில்லை மாநில அரசு. தற்போது, தொற்று குறைந்து வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்துள்ள பேட்டி:
ஒரு தவணை 40% இன்னொரு தவணை 35 சதவீதம் என்ற அளவுக்கு மொத்தத்தில், வழக்கமாக வாங்குவதை ஒப்பிட்டால் 75% அளவுக்குத்தான் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு புதிதாக சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது. கடந்த வருடம் பிறப்பித்த உத்தரவை இப்போது பின்பற்ற முடியாது என்று பல பள்ளிகள் தெரிவித்ததன் காரணமாக புதிதாக சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
புகார் வந்தால் நடவடிக்கை
சில பள்ளி நிர்வாகங்கள் தங்களுக்கும் கஷ்டம் இருப்பதாகவும், எனவே மாதா மாதம் 25 சதவீதம் என்ற வகையில் பெற்றோர்களிடம் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். இருப்பினும் தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு 75 சதவீதத்துக்கு மேல் கட்டணம் வசூலிக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. அதையும் தாண்டி கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். எந்த பள்ளி பற்றியாவது, எங்களுக்கு பெற்றோரிடமிருந்து புகார் வந்தால், அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கண்டிக்கிறோம். அதையும் மீறி அவர்கள் சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும் என்று நினைத்து செயல்பட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை பாயும்.Ted தேர்வு நடைமுறை வராமல் இருந்திருந்தால் வெயிட்டேஜ் முறை படி ஆசிரியர் தேர்வு எளிதாக நடைபெற்றிருக்கும். இப்போது இந்த புதிய தேர்வு முறை நடைமுறைக்கு வந்திருக்கிறது. எனவே ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது. இவை அனைத்தும் சீர் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் முன்வைத்துள்ளோம். நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நம்புகிறோம்.
டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு கிடையாது
ஒரு ஆசிரியரை பணிக்கு சேர்க்க வேண்டுமென்றால் இந்த வகையில்தான் பணி கிடைக்க வேண்டும் என்ற ஒரே நெறிமுறையை கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு ஆசிரியர் தேர்வு நடத்தப்படும். டிஎன்பிஎஸ்சி மூலம் ஆசிரியர் தேர்வு நடத்தும் திட்டம் அரசிடம் இல்லை.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு
தமிழ்நாட்டில் 9, 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. லாக்டவுன் பிறப்பிக்கப்படும் முன்பாக மருத்துவ வல்லுனர்கள் உடன் முதல்வர் ஆலோசனை நடத்துவது வழக்கம். பள்ளிகளை திறக்க வேண்டும் என்று முடிவு செய்தால் அதைவிட கூடுதலாக, விரிவாக, முதல்வர் ஆலோசனை நடத்துவார். அந்த ஆலோசனையில் மருத்துவ வல்லுநர்களின் கருத்துக்களை கேட்டு அவர்கள் பள்ளிகளை திறக்க அனுமதித்தால் முதல்வர் அதற்கு சம்மதம் தெரிவிப்பார். அப்படி நிகழும் பட்சத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எந்த மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது பற்றிய அப்போது அறிவிப்போம். இவ்வாறு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
---------
பொதுத்தேர்வை நடத்துவதை பொறுத்தவரை இன்னும் 7 மாதங்கள்தான் உள்ளன. அதற்குள் தற்போதுள்ள முழுமையான பாடத்திட்டத்துக்கு மாணவர்கள் தயாராகிவிடுவார்களா என்பதை பார்க்க வேண்டியுள்ளது. தற்போது உள்ள பாடத்திட்டத்தில் 60 சதவீத பாடத்திட்டத்தை குறைத்து பொதுத்தேர்வை நடத்தலாமா என்று விவாதித்து வருகிறோம்.
எல்.கே.ஜி., யூ.கே.ஜி. படிக்காமல் குறிப்பிட்ட வயதை அடைந்த குழந்தைகளை முதலாம் வகுப்பில் சேர்க்க தனியார் பள்ளிகள் மறுக்கக்கூடாது. அப்படி மறுப்பதற்கு எந்த விதியும் இல்லை என கூறினார். கல்வி மேலாண்மை தகவல் மையம் (EMIS) வலைதளம் சாப்ட்வேர் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
பள்ளிக்கல்வித் துறையில் தற்போது உள்ள தகவல் தொழில்நுட்பத்தை அனைத்து ஆசிரியர்களும் அறிந்துகொள்ளும் வகையிலும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்ததுள்ளது எனக் கூறினார். கொரோனா காரணமாக தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்துவரும் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போதுவரை 2 லட்சத்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
தனியார் பள்ளிகளில் இருந்து மட்டும் 75 ஆயிரத்து 725 பேர் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் என கூறினார். ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான செல்போன், இன்டர்நெட் வசதி போன்றவை குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன் என தெரிவித்தார்.
மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வு - மே - 2021 - பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கி அரசுத் தேர்வுகள் அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் ந.க.எண்: 025650/ எச்1/2021 நாள்: 27.07.2021...
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு - மே - 2021 - பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு...
>>> அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் ந.க.எண்: 025650/ எச்1/2021 நாள்: 27.07.2021...
கல்வித் தொலைக்காட்சி(Kalvi TV) பயன்பாடு மற்றும் மாணாக்கர்களுக்கு பாடத் தொடர்பான பணிகளை ஆய்வு செய்து விவரங்களை உரிய படிவத்தில் அனுப்புதல் சார்ந்து கடலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - ந.க.எண்: 6156/இ5/2021, நாள்: 27.07.2021 மற்றும் படிவங்கள்...
கல்வித் தொலைக்காட்சி பயன்பாடு மற்றும் மாணாக்கர்களுக்கு பாடத் தொடர்பான பணிகளை ஆய்வு செய்து விவரங்களை உரிய படிவத்தில் அனுப்புதல் சார்ந்து கடலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 6156/இ5/2021, நாள்: 27.07.2021 மற்றும் படிவங்கள்...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings
+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...