கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி திறப்பு (01.09.2021)க்குப் பின்னர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்:34462/பிடி1/இ1/2020, நாள்:06-09-2021...

 


பள்ளி திறப்பு (01.09.2021)க்குப் பின்னர் கொரோனா பெருந்தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்:34462/பிடி1/இ1/2020, நாள்:06-09-2021...


பள்ளிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார்...? எத்தனை பேர்...? என்ற விவரத்தை தினந்தோறும் பகல் 1 மணிக்கு Update செய்ய, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...


>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்:34462/பிடி1/இ1/2020, நாள்:06-09-2021 மற்றும் படிவம்...


இன்றைய (12-09-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

செப்டம்பர் 12, 2021



மற்றவர்களுக்கு ஆலோசனைகள் கூறுவதில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளின் மூலம் அலைச்சல்களும், ஒருவிதமான சோர்வும் ஏற்படும். மாமியார் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். நெருங்கிய நபர்களிடம் அனுசரித்து செல்லவும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : சோர்வு ஏற்படும்.


பரணி : சேமிப்புகள் குறையும்.


கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 12, 2021



வியாபாரம் தொடர்பாக நண்பர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். வாக்குவன்மையின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்களும், தொடர்புகளும் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.


ரோகிணி : மேன்மை உண்டாகும்.


மிருகசீரிஷம் : அறிமுகம் ஏற்படும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 12, 2021



வாழ்க்கைத்துணைவருடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். மனதில் வைராக்கிய சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் வாய்ப்புகள் உண்டாகும். போட்டிகளில் முயற்சிக்கேற்ப வெற்றி கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 



மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


திருவாதிரை : விவேகம் வேண்டும்.


புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 12, 2021



மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் சந்திப்புகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் பாராட்டுகள் கிடைக்கும். புதிய சிந்தனைகள் மற்றும் பயிற்சிகள் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



புனர்பூசம் : ஈடுபாடு உண்டாகும்.


பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.


ஆயில்யம் : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 12, 2021



நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவரிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



மகம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


பூரம் : கவலைகள் குறையும்.


உத்திரம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 12, 2021



திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வேலையாட்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.


அஸ்தம் : இன்னல்கள் குறையும்.


சித்திரை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 12, 2021



நண்பர்களின் மூலம் வியாபாரம் தொடர்பான உதவிகள் கிடைக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் கல்வி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



சித்திரை : உதவிகள் கிடைக்கும்.


சுவாதி : பாராட்டுகளை பெறுவீர்கள்.


விசாகம் : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 12, 2021



இளைய சகோதரர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் ஏற்படும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் காரியங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்படும். பயணங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வாசனை திரவியம் சார்ந்த பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



விசாகம் : காரியசித்தி உண்டாகும்.


அனுஷம் : குழப்பமான நாள்.


கேட்டை : லாபங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 12, 2021



ஆடம்பரப் பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த சில முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். எதிர்பார்த்த சில பணிகளில் இழுபறிகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மூலம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.


பூராடம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


உத்திராடம் : இழுபறிகள் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 12, 2021



தனவரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மூத்த சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



உத்திராடம் : ஆசைகள் பிறக்கும்.


திருவோணம் : ஆதரவான நாள்.


அவிட்டம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 12, 2021



வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். செயல்பாடுகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். மனதில் மறைந்து இருந்த சில ரகசியங்களை வெளிப்படுத்துவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை



அவிட்டம் : இழுபறிகள் குறையும்.


சதயம் : செல்வாக்கு அதிகரிக்கும்.


பூரட்டாதி : ரகசியங்கள் வெளிப்படும்.

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 12, 2021



குடும்ப பெரியவர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். தெளிவான சிந்தனைகள் பிறக்கும். புதுவிதமான விஷயங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



பூரட்டாதி : ஆர்வம் கிடைக்கும்.


உத்திரட்டாதி : சாதகமான நாள்.


ரேவதி : இழுபறிகள் குறையும்.

---------------------------------------


9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி எந்த அடிப்படையில் வழங்க வேண்டும்: பள்ளிக் கல்வி ஆணையர் விளக்கம்...

 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி எந்த அடிப்படையில் வழங்க வேண்டும்: பள்ளிக் கல்வி ஆணையர் விளக்கம்...



>>> புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தை பயன்படுத்தும் முறை குறித்து தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு...



NHIS 2021 New Application Format...

New Health Insurance Scheme 2021...



>>> Click here to Download NHIS 2021 New Application Format...


ஓய்வு பெற்ற இந்திய ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வைக் கணக்கிடுவது எப்படி?



 கடந்தாண்டு ஜனவரி முதல் இந்தாண்டு ஜூன் வரையில் ஓய்வு பெற்ற ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை எவ்வாறு கணக்கிட்டு வழங்குவது என்பது பற்றிய புதிய உத்தரவை ஒன்றிய நிதியமைச்கம்  பிறப்பித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 17 சதவீத  அகவிலைப்படியை ஒன்றிய அரசு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் 28 சதவீதமாக உயர்த்தி வழங்கி வருகிறது. அதோடு,  நிவாரணப் படியையும் அதிகரித்து இருக்கிறது. கடந்தாண்டு கொரானோ  பரவல் காரணமாக, ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு வழங்காமல், நிறுத்தி வைத்தது. வழக்கமாக, இதுபோன்ற சூழல்களில் இந்த படி உயர்வுகள் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும்.



ஆனால், இம்முறை 2021, ஜூலை 1ம் தேதியில் இருந்து மட்டுமே அகவிலைப்படி, நிவாரணப் படி உயர்வு வழங்கப்படும் என ஒன்றிய அறிவித்துள்ளது. இதனால், 2020ம் ஆண்டு ஜனவரி முதல் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்கள், தங்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில், கடந்த புதன்கிழமை ஒன்றிய நிதியமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில், இந்தாண்டு ஓய்வு பெற்றவர்களுக்கு 6 மாதங்களுக்கு மட்டுமே 28 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. மற்றவர்களுக்கு அவர்கள் ஓய்வு பெற்ற ஆண்டு, மாதங்களை கணக்கிட்டு, 21 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

*  2020ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 2020ம் ஆண்டு, ஜூன் 30ம் தேதி வரையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 21 சதவீத (17+4) அகவிலைப்படி கணக்கிட்டு வழங்கப்படும்.

* 2021ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதியில் இருந்து 2021, ஜூன் 30ம் தேதி வரையிலான காலங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே 28 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். இவர்களுக்கு 2020ம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையில் 21 சதவீதமும், (17+4), 2020ம் ஆண்டு, ஜூலை 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையில் 17+4+4 என்ற அளவிலும், 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி  முதல் ஜூன் 30ம் தேதி வரையில் மேலும் 3 சதவீதமும் கூட்டி, 28 சதவீதம் வழங்கப்படும்.

* இது  தவிர, பயன்படுத்தப்படாத விடுமுறைகளுக்கான தொகையும் வழங்கப்படும்.

* 2020ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி  முதல் 2020ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி வரையில் ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு 25 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். இவர்களுக்கு 2020ம் ஆண்டு, ஜனவரி 1 முதல் 2020ம் ஆண்டு ஜூன் 30 வரையில் 21 சதவீதமும் (17+4), 2020ம் ஆண்டு ஜூலை 1ம் தேதியில் இருந்து  2020, டிசம்பர் 31 வரையிலான காலக்கட்டத்துக்கு கூடுதலாக மேலும் 4 சதவீதமும் அளிக்கப்படும்.


>>> 01-01-2020 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு அவ்வப்போது உயர்த்தப்பட்ட அகவிலைப்படி சதவீதத்தில், ஈட்டிய விடுப்பு மற்றும் பணிக்கொடை கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான மத்திய அரசின் செயல்முறைகள்...


பள்ளிக்குள் நுழைய வெளிநபர்களுக்கு தடை...

 ‘பள்ளிக்கு தொடர்பில்லாத நபர்கள், எந்த வகையிலும் நுழைய அனுமதிக்கக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 


இதுகுறித்து பள்ளி கல்வி கமிஷனர் அனுப்பிய சுற்றறிக்கை: 


மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், பள்ளிகளுக் குள் நுழையும் போது, உடல் வெப்ப பரிசோ தனை செய்ய வேண்டும். 


உடல் வெப்ப நிலை அதிகமாக இருப்பவர்களை, பள்ளிகளுக்குள் அனுமதிக்க கூடாது. 


சுகாதார துறை அலுவலர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 


பள்ளிக்குள் நுழையும் போது, கிருமி நாசினி மற்றும் சோப் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வது கட்டாயம். 


அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். 


அனைத்து ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்து, மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். 


பள்ளி வளாகத்தில், சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். 


பள்ளிக்கு தொடர்பில்லாத நபர்கள், பள்ளிக்குள் நுழைவதை அனுமதிக்க கூடாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



NEET- 2021 தேர்வு 12-09-2021 (ஞாயிறு) அன்று எழுத இருக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவுரைகள்...

 தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு நீட் (UG)-2021 | 12 செப்டம்பர் 2021 (ஞாயிறு) முக்கிய அறிவுரைகள்

National Testing Agency Excellence in Assessment 


தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு நீட் (UG)-2021 12 செப்டம்பர் 2021 (ஞாயிறு) முக்கிய அறிவுரைகள் 


பொது அறிவிப்பு 11 செப்டம்பர் 2021 


நீட் (UG)-2021 தேர்வு பேனா மற்றும் பேப்பர் முறையில் 12 செப்டம்பர் 2021 அன்று (ஞாயிறு) மாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரை (IST) நடைபெறுகிறது. 


மாணவர்களுக்கு, அவர்களின் சம்பந்தப்பட்ட நுழைவு அட்டைகளில் கோவிட்-19 சம்பந்தமான ஆலோசனைகள் மற்றும் தேர்வுக்கான முக்கிய அறிவுரை குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் தங்களது நுழைவு அட்டையை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள கோவிட்-19 சம்பந்தமான ஆலோசனைகள் மற்றம் அறிவுரைகளை கவனமாக வாசித்து அவைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கோவிட்-19 சம்பந்தமாக மாணவர்களுக்கு அவர்களது நுழைவு அட்டையில் ஆலோசனைகள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டு இருப்பதால், தேர்வு மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மாணவர்கள் சம்பந்தப்பட்ட தங்களது நுழைவு அட்டையில் கொடுக்கப்பட்டுள்ளபடி குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவர்கள் கீழ்கண்ட செயல்பாடுகளை பின்பற்ற வேண்டும்:- 


• சமூக இடைவெளியை பின்பற்றவும். 


• தேர்வு மையத்தில் வழங்கப்படும் N95 முக கவசத்தை மட்டுமே கட்டாயமாக பயன்படுத்தவும். ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்கள் (குறைந்தது 20 நொடிகளுக்கு) தேவைப்படும் போது பயன்படுத்தவும். 


• சுவாச நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றவும். இதில் இருமல், தும்பும் போது டிஸ்யூ கைகுட்டை, பிளக்ஸடு எல்போ கொண்டு வாய் மற்றும் மூக்கை கண்டிப்பாக மூடிக்கொள்ளவும். மற்றும் பயன்படுத்தப்பட்ட டிஸ்யூகளை சரியாக அகற்றவும் 


 அனைவரும் ஆரோக்கியத்தை சுயமாக கண்கானிக்கவும் மற்றும் ஏதேனும் அறிகுறி இருப்பின் உடனே தெரியபடுத்தவும். ஆபேட்சகர்கள் தேர்வு மையத்துக்குள் தங்களுடன் கீழ்கண்ட அயிட்டங்களை மட்டுமே கொண்ட செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 


தனிப்பட்ட வெளிப்படையான தண்ணீர் பாட்டில் 



விண்ணப்ப படிவத்தில் அப்லோடு செய்றவை போன்ற கூடுதல் புகைப்படம் வருகை பதிவேட்டில் ஒட்டப்படவேண்டும். 


தனிப்பட்ட கை சானிடைசர்(50ml) முறையே நிரப்பப்பட்ட NTA இணையதளத்திலிருந்து (A4 அளவு பேப்பரில் எடுக்கப்பட்ட தெனிவான பிரிண்ட் அவுட்) டவுன்செய்யப்பட்ட கொடுக்கப்பட்ட இடத்தில் (பக்கம் 2) ஒட்டப்பட்ட தபால் கார்டு அளவு புகைப்படத்துடன் சுய உறுதிமொழி (சுய விபரங்கள்) உடன் அனுமதி அட்டை 


மையத்திற்கு வரும் முன் ஆபேட்சகர்கள் தெளிவாக எழுதப்பட்ட சுய விபரங்களில் தேவையான விபரங்களை கண்டிப்பாக எண்டர் செய்ய வேண்டும். செல்லுபடியான அரசு ID அத்தாட்சி • 


PWD சான்றிதழ் மற்றும் ஸ்கைரப் தொடர்பான ஆவணங்கள் பொருந்துமாறு, மாணவர்கள் மின்னணு கருவிகள், மொபைல் போன்கள் மற்றும் தகவல் குறிப்பேட்டில் பட்டியலிடப்பட்டுள்ளபடி தடை செய்யப்பட்டுள்ள இதர பொருட்களை தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை. தனிநபர் பொருட்களின் பாதுகாப்பிற்கு தேர்வு அதிகாரிகள் பொறுப்பேற்க மாட்டார்கள். மேலும் அங்கு அதற்கான வசதி கிடையாது. தேர்வு நாளில் தேனும் ஏற்படும் இடர்பாட்டை தவ வகையில் மாணவர்கள் ஒரு நாள் முன்னதாகவே தேர்வு நடை றும் இடத்தை பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 


Dr.சாதனாபரசார் davp 21354/11/0013/2122 சீனியர் டைரக்டர் (NTA)



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...