கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-11-2021 - செவ்வாய் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.11.21

  திருக்குறள் :


ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும். 


பொருள் 


 ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்


பழமொழி :

No one knows another's burden.


எருதின் நோய்  காக்கைக்கு தெரியுமா?


இரண்டொழுக்க பண்புகள் :


1. படுத்த படுக்கையை மடித்து வைப்பேன். 


2. உணவு உண்ட தட்டை கழுவி வைப்பேன்.


பொன்மொழி :


பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு இணையானவன்.


- சுவாமி விவேகானந்தர்



பொது அறிவு :


1. மிகப்பெரிய தரைகடல் எது?

மத்தியத் தரைக்கடல்


2. தென்னிந்திய ஆறுகளில் மிக நீளமானது எது?

கோதாவரி


English words & meanings :


Tiny - very small, மிக சிறிய, 


starving - very hungry, அதிக பசி


ஆரோக்ய வாழ்வு :


வேப்பம்பூ

இந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும், அவை எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது. வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் வேப்பிலை, வேப்பம்பூ, வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் நமக்கு உணவாக, மருத்துவப் பொருட்களாக பயன்படுகின்றன.


சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து, காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும்.


கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன வெயிலால் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது.


கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.


குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. பாங்காக்கில் உள்ள தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், `புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை வேப்பம்பூ அழிக்கும் தன்மை வாய்ந்தது' எனக் கண்டறிந்து நிரூபித்துள்ளனர். `


அரோமா தெரபி' எனப்படும் சிகிச்சையில் மன அமைதியையும், சாந்தமான மனநிலையை உண்டாக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர். 


கணினி யுகம் :


Alt + 0241 - ñ. 


Alt + 0228 - ä


நவம்பர் 16

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள், மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந்நிறுவனம் இயங்கி வருகின்றது.


உலக சகிப்புத் தன்மை நாள்

உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance) என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது.


நீதிக்கதை


பிறந்தநாள் பரிசு

அன்று மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் கோலகாலமாக இருந்தது. மக்கள் தங்கள் பிறந்தநாள் போல, மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். 


மறுநாள் சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர். 


பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தார். அவரை எல்லோரும் வியப்போடு பார்த்தனர். 


தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால், அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று எதிர்பார்த்ததால், அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர். 


தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தார். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை. 


அதனால் எல்லோரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தார். அதில் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்று இருந்தது. 


அவையினர் கேலியாகச் சிரித்தனர். அரசர் கையமர்த்தி சிரிப்பை அடங்கியவுடன், தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவர் தரும் விளக்கம் பெரிதாக இருக்கும் என்றார். உடனே ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன? 


அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். 


அவர் பழத்தின் சுவையைப் போல் இனிமையானவராகவும், அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்னும் புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்றார். அதற்காக தான் இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன் என்றார். 


அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்தநாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை. 


இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது, என உத்தரவிட்டார். 


அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றை எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.


இன்றைய செய்திகள்

16.11.21

★தமிழை ஆட்சி மொழியாகவும், திருக்குறளை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


★யுஜிசி நெட் தேர்வுக்கு பாடவாரியான தேர்வுகால அட்டவணை, ஹால் டிக்கெட்-களை தேசிய தேர்வுமுகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.


★பேரிடர் மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு என, சமச்சீரான இழப்பீடு வழங்க விதிகளை வகுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


★நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி அவசியம்; தேவைப்பட்டால் பூஸ்டர் எடுக்கலாம்: ஐஎம்ஏ பரிந்துரை.


★டெல்லியை உலுக்கும் காற்று மாசு; அவசர கூட்டத்தை கூட்ட மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.


★கரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் என்பது மிகப்பெரிய ஊழல் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


★உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மரியா சக்காரியை வீழ்த்தி ஸ்பெயின் வீராங்கனை  பாலா படோசா அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.


★முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி.



Today's Headlines


★ Chief Minister of Tamil Nadu MK Stalin has urged the Central Government to declare Tamil as the official language and Thirukurala as the national book.


 ★ The National Examinations Authority (NDA) has released the syllabus and hall tickets for the UGC NET examination.


 ★ The Chennai High Court has directed an order to the Tamil Nadu government to lay down rules to provide symmetrical compensation to those who were killed in disasters and road accidents.


 ★ Corona vaccine is essential for all diabetics;  Booster can be taken if needed: IMA recommendation.


 ★ Air pollution shaking Delhi;  The Supreme Court ordered the federal government to convene an emergency meeting.


 ★ The World Health Organization says the booster dose of the corona vaccine is the biggest scandal.


 ★ Spain's Bala Badosa advanced to the semifinals of the World Women's Tennis Championships after defeating Maria Zachary.


 ★ The Australian team won the T20 World Cup for the first time.

 

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இன்றைய (16-11-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 16, 2021



நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மற்றவர்களின் குணநலன்களை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் குறையும். 


பரணி : மகிழ்ச்சியான நாள். 


கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

நவம்பர் 16, 2021



மூத்த சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சிலருக்கு அமையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




கிருத்திகை : ஆதரவான நாள். 


ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும். 


மிருகசீரிஷம் : மரியாதை அதிகரிக்கும். 

---------------------------------------





மிதுனம்

நவம்பர் 16, 2021



கற்றல் சார்ந்த புதிய பயிற்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். மாணவர்களுக்கு நினைவாற்றலில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தெளிவான சிந்தனைகளின் மூலம் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்




மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும். 


திருவாதிரை : மந்தமான நாள். 


புனர்பூசம் : இலக்குகள் பிறக்கும்.

---------------------------------------





கடகம்

நவம்பர் 16, 2021



வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவமும், மதிப்புகளும் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும். உதவிகள் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




புனர்பூசம் : சாதகமான நாள். 


பூசம் : அனுபவம் மேம்படும்.


ஆயில்யம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------





சிம்மம்

நவம்பர் 16, 2021



மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். விரயங்கள் ஏற்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




மகம் : குழப்பமான நாள். 


பூரம் : காலதாமதம் உண்டாகும்.


உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





கன்னி

நவம்பர் 16, 2021



அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் மூலம் தன உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : மேன்மையான நாள். 


அஸ்தம் : உதவிகள் கிடைக்கும். 


சித்திரை : ஆதாயமான நாள்.

---------------------------------------





துலாம்

நவம்பர் 16, 2021



மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர்வு உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். தொழில் சார்ந்த ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். அமைதியை கடைபிடிப்பதன் மூலம் அனுகூலம் உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




சித்திரை : உயர்வு உண்டாகும்.


சுவாதி : நெருக்கடிகள் குறையும். 


விசாகம் : அனுகூலமான நாள்.

---------------------------------------





விருச்சிகம்

நவம்பர் 16, 2021



உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். வெளியூர் தொடர்பான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். அரசாங்க பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குடும்பத்தில் குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். ஆர்வம் பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




விசாகம் : அனுசரித்து செல்லவும். 


அனுஷம் : இழுபறிகள் குறையும்.


கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





தனுசு

நவம்பர் 16, 2021



பயணங்களின் மூலம் நன்மைகள் கிடைக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.  மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆதரவுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மூலம் : சாதகமான நாள். 


பூராடம் : முன்னேற்றம் உண்டாகும்.


உத்திராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------





மகரம்

நவம்பர் 16, 2021



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். இழுபறியாக இருந்துவந்த காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்கு சார்ந்த பணிகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். உயர்வுகள் ஏற்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




உத்திராடம் :  ஒத்துழைப்பு மேம்படும். 


திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------





கும்பம்

நவம்பர் 16, 2021



வியாபார ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல்நிலையில் அவ்வப்போது சோர்வு ஏற்பட்டு நீங்கும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வாக்குறுதிகள் கொடுக்கும் போது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். சிந்தனைகள் உண்டாகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.


சதயம் : சோர்வு நீங்கும். 


பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





மீனம்

நவம்பர் 16, 2021



பொருளாதார நெருக்கடிகள் குறையும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அனுபவங்கள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும். 


உத்திரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.


ரேவதி : தேவைகள் நிறைவேறும்.

---------------------------------------


தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 01.01.2021 நிலவரப்படியான பதவி உயர்வுப் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education for Preparation of Promotion Panel as on 01.01.2021 for teachers working in Elementary Education) ந.க.எண்: 756/டி1/2021, நாள்: 15-11-2021...



>>> தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 01.01.2021 நிலவரப்படியான பதவி உயர்வுப் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education for Preparation of Promotion Panel as on 01.01.2021 for teachers working in Elementary Education) ந.க.எண்: 756/டி1/2021, நாள்: 15-11-2021...

கனமழை காரணமாக இன்று (15.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...

 


கனமழை - விடுமுறை அறிவிப்பு(15.11.2021)


1. கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


2. சென்னை - நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


3. செங்கல்பட்டு - நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


4. காஞ்சிபுரம் - நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை



குறிப்பு: 

பிற மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டால் உடனடியாக இங்கு Update செய்யப்படும். 

இன்றைய (15-11-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 15, 2021



மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியூர் பயணம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.  அனுபவம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி :  அனுகூலமான நாள். 


பரணி :  வாய்ப்புகள் கிடைக்கும்.


கிருத்திகை :  முதலீடுகள் அதிகரிக்கும். 

---------------------------------------





ரிஷபம்

நவம்பர் 15, 2021



வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மேன்மை உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் :  அடர் பச்சை



கிருத்திகை :  எண்ணங்கள் ஈடேறும். 


ரோகிணி :  உதவி கிடைக்கும்.


மிருகசீரிஷம் :  ஈடுபாடு உண்டாகும்.

---------------------------------------





மிதுனம்

நவம்பர் 15, 2021



பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். முன்னேற்றம் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



மிருகசீரிஷம் :  நம்பிக்கை அதிகரிக்கும். 


திருவாதிரை :  இன்னல்கள் குறையும்.


புனர்பூசம் :  சோர்வான நாள்.  

---------------------------------------





கடகம்

நவம்பர் 15, 2021



குழந்தைகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். சேவை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் இழுபறிகள் குறையும். எதிர்பாராத சிறு வாய்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



புனர்பூசம் :  முன்னேற்றம் ஏற்படும். 


பூசம் :  இழுபறிகள் குறையும். 


ஆயில்யம் :  அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------





சிம்மம்

நவம்பர் 15, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில அனுபவங்களின் மூலம் புதுமையான சூழ்நிலைகள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் 



மகம் :  வாதங்களை தவிர்க்கவும். 


பூரம் :  குழப்பங்கள் நீங்கும்.


உத்திரம் :  புதுமையான நாள். 

---------------------------------------





கன்னி

நவம்பர் 15, 2021



வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான செல்வாக்கு மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் உண்டாகும். புதிய அறிமுகம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



உத்திரம் :  செல்வாக்கு மேம்படும்.


அஸ்தம் :  பொறுப்புகள் அதிகரிக்கும். 


சித்திரை :  பொருட்சேர்க்கை உண்டாகும்.

---------------------------------------





துலாம்

நவம்பர் 15, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஒத்துழைப்பு கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை :  கருத்து வேறுபாடுகள் குறையும். 


சுவாதி :  ஆர்வம் அதிகரிக்கும்.


விசாகம் :  ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------





விருச்சிகம்

நவம்பர் 15, 2021



குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் நன்மைகள் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எண்ணங்கள் நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



விசாகம் :  விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


அனுஷம் :  நன்மையான நாள். 


கேட்டை :  வாதங்களை தவிர்க்கவும். 

---------------------------------------





தனுசு

நவம்பர் 15, 2021



மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மூலம் :  தெளிவு பிறக்கும்.


பூராடம் :  ஒத்துழைப்பு மேம்படும். 


உத்திராடம் :  ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------





மகரம்

நவம்பர் 15, 2021



செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபச்செலவுகள் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். மாற்றங்கள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் :  வெற்றி கிடைக்கும்.


திருவோணம் :  போட்டிகள் குறையும். 


அவிட்டம் :  தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------





கும்பம்

நவம்பர் 15, 2021



உடல் நிலையில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். இழுபறியான பிரச்சனைகளுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதுவித அனுபவங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். வாதங்களை தவிர்க்க வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அவிட்டம் :  ஏற்ற, இறக்கமான நாள். 


சதயம் :  பொறுப்புகள் குறையும்.


பூரட்டாதி :  மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------





மீனம்

நவம்பர் 15, 2021



நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்கள் சாதகமான முடிவுகளை ஏற்படுத்தும். தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். தடுமாற்றம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



பூரட்டாதி :  மகிழ்ச்சியான நாள். 


உத்திரட்டாதி :  தனவரவுகள் கிடைக்கும். 


ரேவதி :  அனுபவங்கள் மேம்படும்.

---------------------------------------


ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகிறது (நாளிதழ் செய்தி)...

 ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகிறது - இன்றைய தினமலர் சென்னை பதிப்பு...



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2021 - திங்கள் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.11.21

 திருக்குறள் :


பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை. 


பொருள் - ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்


பழமொழி :

Little strokes fell great oaks



அடி மேல் அடியடித்தால்  அம்மியும் நகரும்



இரண்டொழுக்க பண்புகள் :


1. படுத்த படுக்கையை மடித்து வைப்பேன். 


2. உணவு உண்ட தட்டை கழுவி வைப்பேன்.


பொன்மொழி :


தன்னம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும் உள்ள வாய்ப்பை பார்க்கின்றார்கள்.. நம்பிக்கை இல்லாதவர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள பிரச்சனையை பார்க்கிறார்கள்.------கமலா ஹாரிஷ்



பொது அறிவு :


1. உலகின் மிக பெரிய நீர் வீழ்ச்சி எது? 


வெனிசூலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி. 


2. உலகின் மிகப்பெரிய அணைக்கட்டு எது? 


கனடாவில் உள்ள சின்குரூட் டெய்லிங்ஸ் அணைக்கட்டு


English words & meanings :


Little - not much அதிகம் என்னிடம் இ‌ல்லை , 


a little - some, என்னிடம் கொஞ்சம் உள்ளது


ஆரோக்ய வாழ்வு :


மூங்கில் அரிசி


மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துச் சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர தேகமெல்லாம் வலுவடையும். வஜ்ரம்போல் இறுகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். மூட்டுவலியை குணமாக்கும். இன்று பலருக்கும் பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது, முழங்கால் மூட்டு வலிக்கிறது.


ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடைப்பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான். அவர்கள் சாப்பிட்ட மூங்கில் அரிசிக் கஞ்சியின் விவரம் - மூங்கில் அரிசி, நொய் அரிசி -  வகைக்கு 150 கிராம், சீரகம், ஓமம் - வகைக்கு அரைத் தேக்கரண்டி, பல்பூண்டு - 6, சுக்கு - ஒரு துண்டம், நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவைக்கு.


மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும். பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அதில்,  நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும்.


நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும். இதை உண்பதால் மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும். மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. உடல் வலிமை பெறும். சர்க்கரை அளவைக் குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.


கணினி யுகம் :


Alt + 0236 - ì. 


Alt + 0242 - ò


நவம்பர் 15


கிஜூபாய் பதேக்கா அவர்களின் பிறந்தநாள்... 


கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை[1] அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை [2] நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.


நீதிக்கதை


தங்க மஞ்சள் குருவி!


விஜயநகர் விழா கோலம் பூண்டிருந்தது! அரச உற்சவம்! அதில் கலந்துகொள்ள அண்டை நாட்டு அரசன் விஜயவர்தனர் வந்தார். விழா முடிந்த பிறகும் சில தினங்கள் விஜயநகரில் தங்கினார். ஒருநாள் அரசர் அவரிடம், அரசே நான் கேள்விப்பட்டேனே...? தங்கள் அவைப் புலவர் தெனாலிராமன் மிகவும் சாதுரியசாலியாமே! அவரிடம் சொல்லி, எனக்குக் காலையில் தங்கமஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்பு நிறத்திலும், இரவில் ஏழு வர்ணங்களிலுமாக உருமாறும் அற்புதக் குருவி ஒன்றைக் கொண்டு வந்து தரச் சொல்லுங்களேன்... என்றார்.


மேலும், அது சில சமயம் மூன்று காலாலும், சில சமயம் இரட்டைக் காலாலும், பிறகு ஏழு இறக்கை கொண்டு வானில் பறக்கவும் வேண்டும் என்றார். அரசர் உடனே தெனாலியை அழைத்து, விரைவில் அத்தகைய குருவியைக் கொண்டு வா... என்று உத்தரவிட்டார். அதைக் கேட்டுத் தெனாலிராமனுக்குத் தலை சுற்றியது. அத்தகைய பறவை பற்றி அவர் ஒரு போதும் கேள்விப்பட்டது கூட இல்லை. ஆனால் சிரித்தவாறே, சரி.... அரசே! நாளைக்கு நான் அத்தகைய பறவையோடு வருகிறேன் என்றார்.


மறுநாள் தெனாலி, சபைக்குத் தாமதமாக வந்தார். அவர் நிலைமை மிக மோசமாக இருந்தது. கிழிந்த உடைகள். அதில் புற்களும், முட்களும், மண்ணும் ஒட்டியிருந்தன. கையில் குருவி எதுவும் இல்லாத ஒரு பறவைக் கூண்டு இருந்தது. அவர் அரசரிடம், என்ன சொல்வேன் அரசே! அதிசயமான கதை நடந்து விட்டது. அந்தக் குருவி கையில் கிடைத்து விட்டது. நானும் அதைக் கூண்டில் அடைத்து விட்டேன். அதை இங்கு எடுத்து வரும்போது, அது தனது மாயமான ஏழு இறக்கைகளை விரித்துப் பறந்து சென்று விட்டது. காட்டில் அதைத் துரத்திக் கொண்டு வெகுதூரம் சென்று விட்டேன். அது மீண்டும் என் கையில் சிக்கவில்லை என்றார்.


தொடர்ந்து, சற்று தூரத்தில் பறந்து சென்றவாறே அது என்னிடம் சொல்லிற்று, அரசரிடம் போய்ச் சொல்... காலையாகிற போதோ அல்லது இரவாகிறபோதோ அல்லது நடுப்பகல் ஆகிறபோதோ, வெளிச்சமோ இருட்டோ இல்லாத போது, நானே எனது ஏழு இறக்கைகளால் பறந்து, திரும்ப வந்து விடுகிறேன்... என்றது என்றார். அதைக் கேட்டதும் அரசருக்கு மட்டுமல்ல, அண்டை நாட்டு மன்னர் விஜயவர்தனருக்கும் தலை சுற்றியது. அப்படிப்பட்ட சமயம் எங்கு உண்டாகும்? காலை ஆகாமல், நடுப்பகல் ஆகாமல், இரவு ஆகாமல் வெளிச்சம், இருட்டு ஆகும் சமயம் எது? என்று அனைவரும் வியப்படைந்தனர். அதைக் கேட்டு விஜயவர்தனர், அரசர் இருவரும் சிரித்து விட்டனர். விஜயவர்தனர் சொன்னார், தெனாலியின் சாதுர்யம் பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டுள்ளேனே தவிர, இப்போது தான் நேரில் பார்த்தேன்... என்று புகழ்ந்தார்.


நீதி : அறிவுடையார் எல்லாம் உடையார்


இன்றைய செய்திகள்


15.11.21


* முதல்வர் சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். கன்னியாகுமரி மாவட்டம் செல்ல உள்ளார்.


* சம்பா நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் என்று வேளாண்மை, உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.


* மேட்டூர் அணையின் 88 ஆண்டு கால வரலாற்றில் 41வது முறையாக நேற்றிரவு முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இதனால் அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பாலம் வழியாக 24 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


* டோக்கியோ ஒலிம்பிக்கில், ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு, கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.


* தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக வி.வி.எஸ்.லெட்சுமணன் நியமிக்கப்படவுள்ளதை பி.சி.சி.ஐ தலைவர் சவ்ரவ் கங்குலி உறுதி செய்துள்ளார்.



Today's Headlines


 * CM MK Stalin inspects rain-affected areas in Chennai and will visit Kanyakumari District also. 


* For the crop insurance of Samba Rice, tomorrow is the last day said the department of Agriculture and Farmer Welfare. 


* In the history of 88 years Mettur Dam water reaches its full capacity of 120 feet for the 41st time yesterday night. Due to this 24,000 cc surplus water is released through the hydropower stations and 16 eyes sluice gate. So flood Warning is given to 11 districts. 


* For 12 sports stars including Neeraj Sopra who won gold in Tokyo Olympics in Javelin throw President Ramnad Govind gave Kel Ratna Award. 


* VVS Lakshman becomes the Head of the National Cricket Academy. It is confirmed by BCCI head Sourav Ganguly

 

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...