கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School Team Visit - தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளை உயர் அலுவலர்கள் குழு ஆய்வு செய்வதற்கான உத்தேச அட்டவணை...

மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் தலைமையில் நடைபெறும் பள்ளிப்பார்வை மற்றும் ஆய்வு கூட்டத்திற்கான உத்தேச அட்டவணை...




இன்றைய (08-12-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

டிசம்பர் 08, 2021




குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாகனம் தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் பெரியோர்களின் ஆலோசனைகளால் தெளிவு பிறக்கும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பணிகளில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். விருப்பம் நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : மேன்மை உண்டாகும். 


பரணி : தெளிவு பிறக்கும். 


கிருத்திகை : இன்னல்கள் குறையும்.

---------------------------------------




ரிஷபம்

டிசம்பர் 08, 2021




எந்தவொரு செயலையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபார பணிகளில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தகவல் தொடர்புத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட ஆதரவு கிடைக்கும். விடாமுயற்சி வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



கிருத்திகை : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


ரோகிணி : சிந்தனைகள் மேலோங்கும்.


மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

டிசம்பர் 08, 2021




குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் சில மாற்றங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். நேரம் தவறி உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்பட்டால் சாதகமான சூழல் உண்டாகும். நண்பர்களிடம் விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மிருகசீரிஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.


திருவாதிரை : கவனம் வேண்டும். 


புனர்பூசம் : நிதானத்துடன் செயல்படவும்.

---------------------------------------





கடகம்

டிசம்பர் 08, 2021




சிந்தனையில் புதிய தெளிவும், உற்சாகமும் காணப்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். இழுபறியான சில பணிகளை எளிதில் முடிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வரவுகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



புனர்பூசம் : உற்சாகமான நாள். 


பூசம் : மாற்றம் பிறக்கும்.


ஆயில்யம் : இழுபறிகள் குறையும்.

---------------------------------------




சிம்மம்

டிசம்பர் 08, 2021




செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வும், மந்தத்தன்மையும் குறையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மகம் : சோர்வு நீங்கும். 


பூரம் : முன்னேற்றமான நாள். 


உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------




கன்னி

டிசம்பர் 08, 2021




பூர்வீகச் சொத்துக்களின் வழியில் அலைச்சலும், விரயங்களும் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். உத்தியோகம் சம்பந்தமான பணிகளில் மேன்மை உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். நுட்பமான சில விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். அமைதி வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திரம் : தடைகள் விலகும். 


அஸ்தம் : மேன்மை உண்டாகும்.


சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

டிசம்பர் 08, 2021




கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உதிரி பாகம் தொடர்பான வியாபாரத்தில் சாதகமான சூழல் காணப்படும். மருத்துவம் சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.


சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும். 


விசாகம் : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

டிசம்பர் 08, 2021




உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் மெத்தனம் இன்றி கவனத்துடன் செயல்பட வேண்டும். வெளியிடங்களில் கோபத்தை விட விவேகத்தை கையாளுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



விசாகம் : ஆதரவு கிடைக்கும். 


அனுஷம் : ஆதாயம் உண்டாகும்.


கேட்டை : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------





தனுசு

டிசம்பர் 08, 2021




குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் சம்பந்தமாக இருந்துவந்த இன்னல்கள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். போட்டி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு



மூலம் : நெருக்கம் அதிகரிக்கும். 


பூராடம் : இன்னல்கள் குறையும்.


உத்திராடம் : வரவுகள் மேம்படும்.

---------------------------------------




மகரம்

டிசம்பர் 08, 2021




வர்த்தகம் சார்ந்த துறைகளில் புதுவிதமான நுட்பங்களுடன் லாபத்தை மேம்படுத்துவீர்கள். மனதில் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்தும்போது நபரின் தன்மையை அறிந்து செயல்படவும். தோற்றப்பொலிவில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவரின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகம் சாதகமாகும். பாராட்டுகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3 


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திராடம் : நுட்பங்களை அறிவீர்கள்.


திருவோணம் : மாற்றங்கள் ஏற்படும். 


அவிட்டம் : அறிமுகம் சாதகமாகும்.

---------------------------------------





கும்பம்

டிசம்பர் 08, 2021




குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புரிதலும், அனுபவமும் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


சதயம் : பொறுப்புகள் மேம்படும். 


பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.

---------------------------------------





மீனம்

டிசம்பர் 08, 2021




புதிய வேலை சம்பந்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். மனதளவிலும், உடலளவிலும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் சிலருக்கு சாதகமாக அமையும். பணி சம்பந்தமான வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



பூரட்டாதி : தடைகள் குறையும்.


உத்திரட்டாதி : உற்சாகமான நாள். 


ரேவதி : எண்ணங்கள் கைகூடும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-12-2021 - புதன் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.12.21

திருக்குறள் :


பால்: பொருட்பால்


இயல்: அரசியல்


அதிகாரம்: ஆள்வினை உடைமை


குறள் எண்: 620


குறள்:

 ஊழையும் உப்பக்கம் காண்பவர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்.


சோர்வில்லாமல் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகின்றவர்கள்,

வெற்றிக்குத் தடையாய் வரும் விதியையும் வென்று விடுவார்கள்.


பழமொழி :

Necessity has no law

ஆபத்துக்கு பாவமில்லை



இரண்டொழுக்க பண்புகள் :


1. ஓதாத கல்வி கெடும், ஒழுக்கமில்லா வாழ்வு கெடும். எனவே ஆசிரியர் கொடுக்கும் கல்வி பயின்று ஆசிரியரும் பெற்றோரும் கற்றுக் கொடுக்கும் ஒழுக்க வாழ்வினை வாழ்வேன். 


2. பணத்தால் அமைதி கெடும், கடன் பட்டால் வாழ்வு கெடும் எனவே பண ஆசை இல்லாமல் சரியான முறையில் செலவு செய்து வாழ்வேன்.


பொன்மொழி :


ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.----- சார்லஸ்



பொது அறிவு :


1. கிராம்பு என்பது கிராம்பு செடியின் எந்தப் பகுதி ஆகும்? 


விரியாத மொட்டுப்பகுதி. 


2.வைக்கோலில் உள்ள வேதிப்பொருள் எது? 


லிக்னைன்.



English words & meanings :


Down to earth - a simple practical person, பேச பழக எளிமையானவர். 


Chatter box - someone who talks non stop, ஓயாது பேசுபவர் 



ஆரோக்ய வாழ்வு :


ஒருவர் ஒரு நாளைக்கு 9 மணிநேரத்திற்கு மேல் தூங்கினால், நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுவதாக உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தினமும் 7-8 மணிநேரத்திற்கு மேல் தூங்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.





கணினி யுகம் :


Ctrl + shift + R - Reply all. 


Ctrl + shift + Q - New meeting request



நீதிக்கதை


விடா முயற்சி


கதை :

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். 


பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருந்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். 


முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா இரண்டடி என்று சொல்வதற்கு பதிலாக ஓரடி என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை. 


எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே. 


அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் சரி தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். 


இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள். 


நீதி :

எந்த செயல் எடுத்தாலும் அதை பாதியில் நிறுத்து விடாமல் விடாமுயற்சியுடன் செய்தால் கண்டிபாக பலன் கிடைக்கும்.



இன்றைய செய்திகள்


08.12.21



★பிப்ரவரி மாதத்தில் குரூப்-2, 2A தேர்வுகளுக்கும், மார்ச் மாதத்தில் குரூப்-4 தேர்வுகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகும். அறிவிப்பாணை வெளியான 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி.


★சிட்கோ தொழில் மனைகளின் விலை குறைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.


★வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தில் உள்ள 14,138 ஏரிகளில், 8,690 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் சராசரி மழைப்பொழிவாக 3.6 மி.மீட்டர் பதிவாகியுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


★நாட்டில் இருந்து வரதட்சணை கொடுமையை ஒழிக்க சட்டத்தில் கடும் விதிமுறைகளை கொண்டு வரவேண்டும் என்று தேசிய சட்ட ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.


★டெல்டாவைவிட ஒமைக்ரானால் மீள் தொற்றுக்கு மூன்று மடங்கு அதிக வாய்ப்பு: உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தகவல்.


★பிரிட்டிஷ் விளையாட்டு விருதுகள்: இந்த ஆண்டின் சிறந்த வீராங்கனையாக எம்மா ராடுகானு தேர்வு.


★இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான 21 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


Today's Headlines


★ Group-2 and 2A exams will be announced in February and Group-4 exams in March. The elections will be held within 75 days of the announcement says the TNPSC President in an interview. 


 ★ Reduction in prices of CIDCO industrial estates: Announcement by Chief Minister MK Stalin.


 ★ Out of 14,138 lakes in Tamil Nadu, 8,690 lakes have reached their full capacity due to the northeast monsoon and the average rainfall in 30 districts in the last 24 hours was 3.6 mm, the Tamil Nadu government said.


 ★ The Supreme Court has recommended to the National Law Commission to bring in strict punishments in the law to eradicate dowry cruelty from the country.


 ★ Omicron is three times more likely to cause re-infection than delta: says World Health Organization scientist Sawmiya Swaminathan.


 ★ British Sports Awards: Emma Radukanu selected as this year's Player of the Year.


 ★ The 21 members of South African squad for the Test series against India has been announced. 

 

 Prepared by


Covai women ICT_போதிமரம்

தொடக்கக்கல்வித்துறை - பள்ளி விவரப் படிவம் (DEE - School Profile Format)...



>>> தொடக்கக்கல்வித்துறை - பள்ளி விவரப் படிவம் (DEE - School Profile Format)...


>>> பள்ளிக்கல்வி ஆணையரின் கடிதம் ந.க.எண்: 59699/பிடி1/இ2/2021, நாள்: 25-11-2021...


>>> School Team Visit - தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளை உயர் அலுவலர்கள் குழு ஆய்வு செய்வதற்கான உத்தேச அட்டவணை...


ENNUM EZHUTHUM MISSION - Consultative Meeting for Teachers - Login Details...

 ENNUM EZHUTHUM MISSION - Consultative Meeting for Teachers...

Date and time: 9th Dec 2021 (Thursday), 9 am to 5 pm

Participants : Teachers Handling Classes 1 to 5 Primary HMs of all government and aided schools 

Place : Hi-Tech Lab 

Exam portal : https://exams.tnschools.gov.in/login 

Login Credentials 

User name : Staff ID 

Password : First 4 digits of registered mobile number @ year of birth 





09.12.2021 அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் - SCERT இயக்குநரின் செயல்முறைகள்... (Proceedings of the Director, SCERT, R.C.No. 2411/D2/2021, Dated : 06-12-2021 - Consultative meeting regarding implementation of Ennum Ezhuthum Mission--participation of all Government and Government Aided school Primary teachers on 09.12.2021)...



 Ennum Ezhuthum Mission is envisioned to be implemented from the year 2022-2023 to ensure that by 2025 all students in Tamilnadu by age 8 are able to read with comprehension and possess basic arithmetic skills.

In view of the above , a consultative meeting is planned to be conducted online for all Government and Government Aided school primary teachers through Government High and Higher Secondary school Hi - Tech labs on 09.12.2021. The Chief Educational Officers , in consultation with BRTES shall prepare a schedule in such a manner that 50 % of teachers of a school attend in the forenoon session and the remaining 50 % of the teachers attend in the afternoon session and communicate the same to the Government and Government Aided primary and upper primary schools and ensure that all primary teachers participate on 09.12.2021 without fail . The detailed instructions to the technical coordinator of Hi - Tech labs will be communicated from EMIS.


எண்ணும் எழுத்தும் திட்டம் 2022-2023 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. 2025 ஆம் ஆண்டிற்குள் 8 வயதுக்குள் உள்ள அனைத்து தமிழ்நாட்டு மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்க மற்றும் அடிப்படை எண் கணித திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, அனைவருக்கும் ஆன்லைன் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தொடக்க ஆசிரியர்கள் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்  மூலம் 09.12.2021 அன்று முதன்மைக் கல்வி அலுவலர்கள், BRTES உடன் கலந்தாலோசித்து ஒரு அட்டவணையைத் தயாரிக்க வேண்டும். ஒரு பள்ளியின் 50% ஆசிரியர்கள் முற்பகல் அமர்வில் கலந்து கொள்ளும் விதமும் மற்றும் மீதமுள்ள 50% ஆசிரியர்கள் பிற்பகல் அமர்வில் கலந்து கொள்ளவும் தொடர்புடைய அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அனைத்து தொடக்கபள்ளி ஆசிரியர்களும் 09.12.2021 அன்று தவறாமல் பங்கேற்க வேண்டும். விரிவான வழிமுறைகள் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளருக்கு EMIS இலிருந்து தெரிவிக்கப்படும்.


Sub : Consultative meeting regarding implementation of Ennum Ezhuthum Mission--participation of all Government and Government Aided school Primary teachers on 09.12.2021 - regarding


Ref : School Education (ERT) Department G.O. Ms. No. 147, Dated:  22.10.2021.


>>> Proceedings of the Director, State council of Educational Research and Training, R.C.No. 2411/D2/2021, Dated : 06-12-2021...


இல்லம் தேடி கல்வி (Illam Thedi Kalvi) திட்டம் - ஒரு நாள் அறிமுகப் பயிற்சி அளிப்பது தொடர்பாக ITK திட்டத்தின் சிறப்புப் பணி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 449/C7/SS/2021, நாள்: 05-12-2021..

இல்லம் தேடி கல்வி (Illam Thedi Kalvi) திட்டம் - ஒரு நாள் அறிமுகப் பயிற்சி அளிப்பது தொடர்பாக ITK திட்டத்தின் சிறப்புப் பணி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 449/C7/SS/2021, நாள்: 05-12-2021..



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பழ...