கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வீட்டு வாடகை ரசீது / 2021 - 2022ஆம் நிதியாண்டு / 2022-2023ஆம் மதிப்பீட்டு ஆண்டு (Receipt of House Rent (Under Section1 (13-A) of Income Tax Act) / Financial Year 2021-2022 / Assessment Year 2022-2023 / Old Regime)...



>>> வீட்டு வாடகை ரசீது / 2021 - 2022ஆம் நிதியாண்டு / 2022-2023ஆம் மதிப்பீட்டு ஆண்டு  (Receipt of House Rent (Under Section1 (13-A) of Income Tax Act) / Financial Year 2021-2022 / Assessment Year 2022-2023 / Old Regime)...


வருமான வரி கணக்கீட்டுப் படிவம் / 2021 - 2022ஆம் நிதியாண்டு / 2022-2023ஆம் மதிப்பீட்டு ஆண்டு / பழைய முறை (Income Tax Calculation Statement / Financial Year 2021-2022 / Assessment Year 2022-2023 / Old Regime)...



>>> வருமான வரி கணக்கீட்டுப் படிவம் / 2021 - 2022ஆம் நிதியாண்டு / 2022-2023ஆம் மதிப்பீட்டு ஆண்டு / பழைய முறை (Income Tax Calculation Statement / Financial Year 2021-2022 / Assessment Year 2022-2023 / Old Regime)...

இன்றைய (27-12-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

டிசம்பர் 27, 2021




மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வாகன பயணங்களில் நிதானம்  வேண்டும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நம்பிக்கை மேம்படும் நாள். 




அதிர்ஷ்ட திசை :  தெற்கு


அதிர்ஷ்ட எண் :  1


அதிர்ஷ்ட நிறம் :  அடர் சிவப்பு




அஸ்வினி :  எண்ணங்கள் ஈடேறும். 


பரணி :  நிதானம் வேண்டும். 


கிருத்திகை :  அனுகூலமான நாள்.

---------------------------------------



ரிஷபம்

டிசம்பர் 27, 2021




புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். தன்னம்பிக்கையுடன் எந்தவொரு காரியத்திலும் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணைவர் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும் நாள். 




அதிர்ஷ்ட திசை :  மேற்கு


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் :  இளநீலம்




கிருத்திகை :  வெற்றிகரமான நாள். 


ரோகிணி :  முயற்சிகள் ஈடேறும். 


மிருகசீரிஷம் :  முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------


மிதுனம்

டிசம்பர் 27, 2021




வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான தருணங்கள் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பும், ஆதரவான பலன்களும் உண்டாகும். நண்பர்களுடன் இன்பச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். விளையாட்டு தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். நிறைவான நாள். 





அதிர்ஷ்ட திசை :  தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் :  7


அதிர்ஷ்ட நிறம் :  நீலநிறம்




மிருகசீரிஷம் :  மாற்றமான நாள்.


திருவாதிரை :  ஆதரவு கிடைக்கும். 


புனர்பூசம் :  முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------



கடகம்

டிசம்பர் 27, 2021




வேலையாட்கள் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். மனதில் புதுவகையான சிந்தனைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். உற்சாகமான நாள். 




 அதிர்ஷ்ட திசை :  கிழக்கு


அதிர்ஷ்ட எண் :  9


அதிர்ஷ்ட நிறம் :  பிங்க் நிறம்




புனர்பூசம் :  கருத்து வேறுபாடுகள் தோன்றும்.


பூசம் :  அனுகூலமான நாள். 


ஆயில்யம் :  தெளிவு கிடைக்கும்.

---------------------------------------



சிம்மம்

டிசம்பர் 27, 2021




வெளிவட்டாரத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கட்டுப்பாடு வேண்டும். இழுபறியாக இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலைகள் காணப்படும். புதிய நபர்களிடம் தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நன்மை நிறைந்த நாள்.  




 அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் :  4


அதிர்ஷ்ட நிறம் :  பழுப்பு நிறம்




மகம் :  நம்பிக்கை அதிகரிக்கும். 


பூரம் :  கட்டுப்பாடு வேண்டும். 


உத்திரம் :  விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------



கன்னி

டிசம்பர் 27, 2021




வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பார்த்த  பணிகள் திருப்திகரமாக இருந்தாலும் சில அலைச்சல்கள் உண்டாகும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.  மனதில் தோன்றும் சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். தெளிவு பிறக்கும் நாள். 




அதிர்ஷ்ட திசை :  மேற்கு


அதிர்ஷ்ட எண் :  3


அதிர்ஷ்ட நிறம் :  பிங்க் நிறம்




உத்திரம் :  சிந்தித்து செயல்படவும். 


அஸ்தம் :  குழப்பங்கள் உண்டாகும். 


சித்திரை :  மதிப்பு மேம்படும்.

---------------------------------------



துலாம்

டிசம்பர் 27, 2021




விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில காரியங்கள் நடைபெறுவதில் காலதாமதம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு ஏற்படும். பாராட்டுகள் நிறைந்த நாள். 




அதிர்ஷ்ட திசை :  வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் :  1


அதிர்ஷ்ட நிறம் :  சிவப்பு நிறம்




சித்திரை :  காலதாமதம் உண்டாகும். 


சுவாதி :  எண்ணங்கள் மேம்படும். 


விசாகம் :  ஈடுபாடு ஏற்படும்.

---------------------------------------



விருச்சிகம்

டிசம்பர் 27, 2021




செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவி கிடைக்கும். பேச்சில் தெளிவும், மனதில் தன்னம்பிக்கையும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். சகோதர, சகோதரி வழியில் நன்மை உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள். 




 அதிர்ஷ்ட திசை :  தெற்கு


அதிர்ஷ்ட எண் :  8


அதிர்ஷ்ட நிறம் :  மயில் நீலம்




விசாகம் :  மந்தத்தன்மை நீங்கும்.


அனுஷம் :  தன்னம்பிக்கையான நாள். 


கேட்டை :  மதிப்பு அதிகரிக்கும்.

---------------------------------------



தனுசு

டிசம்பர் 27, 2021




கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவர் வழியில் அனுகூலமான சூழல் உண்டாகும். பிடிவாத குணத்தை விட்டுவிடுவது நல்லது. எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள். 




அதிர்ஷ்ட திசை :  தெற்கு


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் :  வெண்சாம்பல் 




மூலம் :  சிந்தித்து செயல்படவும். 


பூராடம் :  அனுகூலம் உண்டாகும். 


உத்திராடம் :  வரவுகள் கிடைக்கும்.

---------------------------------------



மகரம்

டிசம்பர் 27, 2021




வர்த்தகம் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தடைகள் குறையும் நாள். 




அதிர்ஷ்ட திசை :  கிழக்கு


அதிர்ஷ்ட எண் :  7


அதிர்ஷ்ட நிறம் :  நீலநிறம்




உத்திராடம் :  லாபகரமான நாள்.


திருவோணம் :  சிந்தனைகள் மேம்படும். 


அவிட்டம் :  கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------



கும்பம்

டிசம்பர் 27, 2021




புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். எதிர்பார்த்திருந்த ஆதரவு காலதாமதமாக கிடைக்கும். முன்னேற்றம் ஏற்படும் நாள். 




அதிர்ஷ்ட திசை :  தென் மேற்கு


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் :  இளஞ்சாம்பல் 




அவிட்டம் :  வாதங்களை தவிர்க்கவும். 


சதயம் :  பொறுமை வேண்டும். 


பூரட்டாதி :  காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------



மீனம்

டிசம்பர் 27, 2021




மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியங்கள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன், பொருள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆதரவு கிடைக்கும் நாள். 




 அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் :  6


அதிர்ஷ்ட நிறம் :  சந்தன வெள்ளை நிறம்




பூரட்டாதி :  எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


உத்திரட்டாதி :  பிரச்சனைகள் குறையும். 


ரேவதி :  ஒத்துழைப்பான நாள்.

---------------------------------------


மாறும் கார்டு பேமென்ட் விதிமுறைகள்: Tokenization - ஜனவரி 1க்குப் பிறகு(தற்போது ஜூலை 1) என்னாகும்? ஆன்லைன் பர்சேஸ் செய்பவர்கள் அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல் (Dynamic Card Payment Terms: Tokenization - What happens after January 1 (now July 1)? The most important information that all online purchasers need to know)...



>>> மாறும் கார்டு பேமென்ட் விதிமுறைகள்: Tokenization - ஜனவரி 1க்குப் பிறகு(தற்போது ஜூலை 1) என்னாகும்? ஆன்லைன் பர்சேஸ் செய்பவர்கள் அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல் (Dynamic Card Payment Terms: Tokenization - What happens after January 1 (now July 1)? The most important information that all online purchasers need to know) - PDF File...


💳 மாறும் கார்டு பேமென்ட் விதிமுறைகள்; ஜனவரி 1-க்குப் பிறகு என்னாகும்? 


👉 வரும் ஜனவரி 1, 2022-லிருந்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பேமென்ட்களுக்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் அமலாகின்றன. இதனால், ஆன்லைன் கார்டு பேமென்ட்களில் பெரியளவில் மாற்றங்கள் நடக்கவிருக்கின்றன. 


🔴என்ன மாற்றம்?


இதைப் புரிந்துகொள்வதற்கு முன்பு தற்போது ஆன்லைன் பேமென்ட்கள் எப்படி நடக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.


👉 இப்போது, ஆன்லைனில் ஏதேனும் சேவைகளுக்காக (உதாரணம் ஸ்விக்கி, அமேசான்) பேமென்ட் மேற்கொள்ள வேண்டுமென்றால், பில்லிங் அல்லது செக் அவுட் பகுதிக்குச் சென்று 3 வேலைகளைச் செய்யவேண்டும்.


1. நம்முடைய டெபிட் / கிரெடிட் கார்டு எண்ணை கொடுப்பது.

2. கார்டின் CVV எண்ணை கொடுப்பது

3. பிறகு OTP-யைப் பதிவு செய்து, பணம் செலுத்துவது.


இந்த மூன்றும்தான் பொதுவாக நடக்கும் விஷயம். இதில், இந்த சேவை நிறுவனங்கள் கூடுதலாக நம்மை இன்னொரு விஷயமும் செய்யச்சொல்லும்.


அது, நம் கார்டு விவரங்களை நிரந்தரமாக அந்த இணையதளம் / App-ல் சேமித்து வைத்துக்கொள்வது. 


`இதுதான் தவறான விஷயம்!’ என்கிறது ரிசர்வ் வங்கி.


🔴இதில் என்ன பிரச்னையாம்?

வாடிக்கையாளர்கள் ஒவ்வொருமுறையும் கார்டு விவரங்களைப் பதிவுசெய்யாமல், எளிமையாகவும் விரைவாகவும் பணம் செலுத்தத்தான் கார்டு விவரங்களை சேமித்து வைக்கின்றன வணிக நிறுவனங்கள்.


இன்று நாம் ஒவ்வொருவரும் பல்வேறு தளங்களில் நம் கார்டு விவரங்களை இப்படி சேமித்து வைத்திருப்போம். இங்குதான் பிரச்னை


👉ஹேக்கிங், டேட்டா கசிவு போன்ற நிகழ்வுகளில் இதுபோன்ற நிறுவனங்களின் டேட்டாபேஸில் இருந்து மொத்தமாக கார்டு விவரங்கள் களவு போகவும், அதை வைத்து அந்த டேட்டா உரிமையாளர்களின் பணத்தை அபேஸ் செய்யவும் வாய்ப்பு அதிகம்.


👉அதென்ன வணிக நிறுவனங்கள் மட்டும்? அப்படியெனில் வங்கிகளின் டேட்டா மட்டும் முழு பாதுகாப்புடன் இருக்குமா? இல்லை; அங்கும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படலாம்தான். ஆனால், இப்படி பல்வேறு இடங்களில் நம் தகவல்கள் இருந்தால் அவை திருடப்படும் வாய்ப்பு அதிகமல்லவா?

``அதைத்தான் குறைக்க நினைக்கிறோம்” எனச் சொல்கிறது ரிசர்வ் வங்கி.


அப்படியெனில் ஆன்லைன் நிறுவனங்கள் எப்படி இயங்கும்? ஒவ்வொருமுறையும் வாடிக்கையாளர்களையே கார்டு விவரங்களை பதியச் சொல்வதெல்லாம் மிகவும் சிரமமான காரியமாச்சே?


🚨ஆமாம், அதனால்தான் `Tokenisation’ வழிமுறையைப் பின்பற்றச் சொல்லி வலியுறுத்துகிறது ரிசர்வ் வங்கி. இதன்படி,


🗓இப்போது வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களைச் சேமித்து வைத்திருக்கும் அனைத்து நிறுவனங்களும், அவற்றை டிசம்பர் 31, 2021 உடன் தங்கள் டேட்டாபேஸிலிருந்து அழித்துவிட வேண்டும்.

ஜனவரி 1 முதல் எந்த நிறுவனமும் வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களைச் சேமிக்கக்கூடாது.


மாறாக, வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை Tokenization செய்து, அந்த Token-களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


🔴அதென்ன Tokenization?


👉ஆன்லைன் பேமென்ட் எப்படி நடக்கிறது என மேலே பார்த்தோம் இல்லையா? இனி, இந்த Tokenization எப்படி நடக்கும் எனப் பார்ப்போம்.



1. நீங்கள் அமேசானில் கார்டு மூலம் பணம் செலுத்துவதாக வைத்துக்கொள்வோம். முதலில் கார்டு எண்ணை பதிவு செய்வீர்கள். பின்னர் CVV.

2. இது நடந்ததும், அமேசானானது இந்த கார்டு விவரங்களை, tokenise செய்ய உங்களிடம் அனுமதி கேட்கும். நீங்கள் அனுமதியளித்ததும் சம்பந்தப்பட்ட கார்டு நிறுவனத்திற்கு (Visa, RuPay போன்றவை) உங்கள் கார்டு விவரங்களை அனுப்பும்.

3. உடனே அந்த கார்டு நிறுவனம், உங்கள் கார்டு விவரங்களை உறுதி செய்துவிட்டு, கார்டின் 16 இலக்க எண்ணிற்கு பதிலாக, வேறு 16 இலக்க எண்களை Token-னாக அமேசானிற்கு அனுப்பிவைக்கும். இப்போது அமேசானிடம் இருப்பது உங்கள் கார்டு எண் அல்ல; மாறாக, உங்கள் கார்டு நிறுவனம் தந்திருக்கும் Token மட்டுமே.

4. இப்போது, இந்த டோக்கனை எதிர்கால பரிவர்த்தனைகளுக்காக அமேசான் சேமித்து வைத்துக்கொள்ளலாம்; நீங்கள் அனுமதி கொடுத்தால் மட்டும்.

5. அடுத்து, எதிர்காலத்தில் நீங்கள் அதே கார்டைப் பயன்படுத்தி, அமேசானில் பணம் செலுத்த வேண்டுமென்றால் நீங்கள் ஏற்கெனவே பெற்ற இந்த Token-ஐ CVV மற்றும் OTP கொடுத்து பயன்படுத்தலாம். அது அமேசான் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதால், நீங்கள் பதிவிட வேண்டியதில்லை.

6. ஆனால் இதே கார்டை, உதாரணமாக வேறொரு தளத்தில் பயன்படுத்தினால், அமேசானில் கிடைத்த அதே Token எண் கிடைக்காது. அங்கு, கார்டு நிறுவனம் வேறு Token வழங்கும். இப்படி ஒரே கார்டை வெவ்வேறு தளங்களில் பயன்படுத்தினால், தனித்தனி Token உருவாகும். எங்குமே உங்கள் கார்டு எண்கள் சேமிக்கப்படாது.

7. இப்படி, கார்டு விவரங்களை நேரடியாக சேமிக்காமல், அதற்கு பதிலாக Token சிஸ்டமை பயன்படுத்துவதுதான் Tokenization. ``நாளை இந்த Token-களை யாரேனும் ஹேக் செய்தால் கூட, அதை வைத்து நம் கார்டு விவரங்களைக் கண்டுபிடிப்பதும் கடினம்” என்கிறது ரிசர்வ் வங்கி.

8. இப்படி உங்கள் கார்டுகளுக்கு நீங்கள் பெறும் Token-கள் அனைத்தும், உங்கள் வங்கி அல்லது கார்டு நிறுவனத்தின் இணையதளத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். அவற்றை குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து நீக்கவேண்டுமென்றால், அதை நீங்களே செய்து கொள்ளலாம்.


🔴 ஜனவர் 1-க்குப் பிறகு செய்யவேண்டியது என்ன?


ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்படி, ஜனவரி 1-க்குப் பிறகு, ஆன்லைன் தளங்கள் / App-களில் இதுவரை நீங்கள் சேமித்து வைத்த கார்டு விவரங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிடும்.


👉 அதன்பின்பு, மேலே சொன்னதுபோல ஒவ்வொரு தளத்திலும் மீண்டும் உங்கள் கார்டு விவரங்களைக் கொடுத்து Tokenization-க்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு முறையும் கார்டு எண்களைப் பதிவு செய்தே, பணம் செலுத்தமுடியும்.


👉 வங்கிகள், கார்டு நிறுவனங்கள் விரைவில் இதுதொடர்பான அலர்ட்களை உங்களுக்கு அனுப்பும்; அல்லது ஏற்கெனவே அனுப்பியிருக்கும். அதில் உங்கள் கார்டுக்கான பிரத்யேக வழிகாட்டல்கள் இருந்தால் அவற்றைப் பின்பற்றலாம்.


👉 ஸொமோட்டோ, கூகுள் ப்ளே போன்ற தளங்கள் வாடிக்கையாளர்களை, தங்கள் கார்டு விவரங்களை இப்போதே மீண்டும் கொடுத்து பதிவு செய்யச் சொல்கின்றன.


👉 இப்படி சின்னச் சின்ன விஷயங்களைத் தாண்டி, வாடிக்கையாளர்கள் தரப்பிலிருந்து இப்போதைக்கு செய்ய எதுவும் இல்லை. ஜனவரி 1-க்குப் பிறகுதான் எந்த நிறுவனம், என்ன செய்கிறது எனத் தெரியும்.


ஆனால், வங்கிகளும், பேமென்ட் நிறுவனங்களும்தான் இன்னும் 10 நாள்களுக்குள் நடக்கவிருக்கும் இந்த மாற்றங்களுக்கு தயாராகாமல் திணறிக்கொண்டிருக்கின்றன.


🔴 என்ன காரணம்?


👉சில மாதங்களுக்கு முன்பு, நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்றவற்றிற்கெல்லாம் சப்ஸ்கிரிப்ஷனை புதுப்பிக்க முடியாமல் உங்களில் பலரும் திணறியிருக்கலாம். அந்தப் பிரச்னைக்கு காரணம், அண்மையில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த Recurring Payment விதிமுறைகள்தான்.

அப்போது பல நிறுவனங்களும், வங்கிகளும் இந்த மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறின. மக்கள் அவதிப்பட்டனர்.


தற்போது ஜனவரிக்குப் பிறகும் இதேபோல நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.


👉காரணம், ``இந்த மாற்றங்களுக்காக ரிசர்வ் வங்கி, கார்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு கொடுத்த கால அவகாசம் மிகவும் குறைவு” என்கின்றனர் வங்கி தரப்பினர். எனவே இதை நீட்டிக்கச் சொல்லியும் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.

மேலும், கிரெடிட் கார்டில் EMI மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு இந்த Token சிஸ்டம் எப்படி சரிவரும் என்ற குழப்பமும் நிலவுகிறது.

கூடவே ஜனவரி 1 அன்று வங்கிகள், பேமென்ட் அக்ரிகேட்டர் மற்றும் பேமென்ட் கேட்வே நிறுவனங்கள் முழுவதும் தயாராகவில்லையெனில், அது ஆன்லைன் கார்டு பரிவர்த்தனைகளில் பெரியளவில் சிக்கலை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் நிலவுகிறது.


💳 எனவே கார்டு பேமென்ட்களை அதிகளவில் சார்ந்திருப்பவர்கள், இந்த விவகாரத்தை அடுத்த சில நாள்களுக்கு தொடர்ந்து கவனித்து வாருங்கள்



🔴 Update: ரிசர்வ் வங்கி, இந்த `Tokenization' விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான காலத்தை தற்போது ஜூன் 30, 2022 வரை நீட்டித்துள்ளது.

2021-2022ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை, ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் / கணினி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் Onlineல் பொது மாறுதல் கலந்தாய்வு ( General Counselling ) 28.12.2021 மற்றும் 29.12.2021 ஆகிய இரண்டு நாட்கள் இணைய வழியில் நடைபெற உள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கான காலிப்பணியிட விவரங்கள் ( General Transfer Counselling in Online for the academic year 2021-2022 for the posts of Higher Secondary School / High School / Middle School / Primary School Headmasters, Post Graduate Teachers, Computer Instructor, Director of Physical Education and Graduate Teacher / Tamil Teacher / Physical Education Teacher / Secondary Grade Teacher / Computer Teacher is to be held online on 28.12.2021 and 29.12.2021. Vacancy details for the above posts)...



>>> 2021-2022ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை, ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் / கணினி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் Onlineல் பொது மாறுதல் கலந்தாய்வு ( General Counselling ) 28.12.2021 மற்றும் 29.12.2021 ஆகிய இரண்டு நாட்கள் இணைய வழியில் நடைபெற உள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கான காலிப்பணியிட விவரங்கள்... 

இன்றைய (26-12-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

டிசம்பர் 26, 2021



மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நிலுவையில் இருந்துவந்த பணிகளை நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். விவசாயம் சார்ந்த பணியில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களுக்கு தீர்வு ஏற்படும். புதிய முயற்சிகளின் மூலம் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அனுகூலமான நாள். 




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அஸ்வினி : எண்ணங்கள் ஈடேறும். 


பரணி : மேன்மையான நாள்.


கிருத்திகை : முடிவு கிடைக்கும்.

---------------------------------------





ரிஷபம்

டிசம்பர் 26, 2021



மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் கல்வி நிமிர்த்தமான எண்ணங்கள் மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள். 




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.


ரோகிணி : எண்ணங்கள் மேம்படும்.


மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------





மிதுனம்

டிசம்பர் 26, 2021



கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கடன் தொடர்பான பிரச்சனைகளில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களிடத்தில் நிதானம் வேண்டும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள். 




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும். 


திருவாதிரை : உதவிகள் கிடைக்கும். 


புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------





கடகம்

டிசம்பர் 26, 2021



மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். எந்தவொரு செயலையும் தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் துறையில் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். சோதனை நிறைந்த நாள். 




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




புனர்பூசம் : தன்னம்பிக்கையான நாள். 


பூசம் : மாற்றம் பிறக்கும். 


ஆயில்யம் : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------





சிம்மம்

டிசம்பர் 26, 2021



சமூகம் தொடர்பான பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். வாக்கு சாதுரியத்தின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். நன்மை நிறைந்த நாள். 




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




மகம் : ஆதரவான நாள். 


பூரம் : இழுபறிகள் குறையும். 


உத்திரம் : மகிழ்ச்சியான நாள். 

---------------------------------------





கன்னி

டிசம்பர் 26, 2021



பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். தாயுடன் வீண் விவாதம் ஏற்பட்டு நீங்கும். ஆன்மிக பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பயணம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழல் உண்டாகும். வரவு மேம்படும் நாள். 




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




உத்திரம் : விவாதம் ஏற்படும். 


அஸ்தம் : புரிதல் மேம்படும். 


சித்திரை : மாற்றமான நாள்.

---------------------------------------





துலாம்

டிசம்பர் 26, 2021



வியாபாரத்தில் வேலையாட்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். செலவுகள் நிறைந்த நாள். 




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




சித்திரை : கருத்து வேறுபாடுகள் மறையும். 


சுவாதி : திறமைகள் வெளிப்படும். 


விசாகம் : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------





விருச்சிகம்

டிசம்பர் 26, 2021



செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். கிடைப்பதை கொண்டு திருப்தி அடைவதன் மூலம் மனதளவில் நிம்மதி ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். சமூகம் தொடர்பான பணிகளில் ஆதரவு மேம்படும். முயற்சி நிறைந்த நாள். 




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




விசாகம் : இன்னல்கள் குறையும். 


அனுஷம் : நிம்மதி ஏற்படும். 


கேட்டை : ஆதரவு மேம்படும்.

---------------------------------------





தனுசு

டிசம்பர் 26, 2021



எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். நிர்வாகம் தொடர்பான மாற்றங்களில் உடனிருப்பவர்களின் மீது கவனம் வேண்டும். நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஓய்வான நாள். 




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




மூலம் : மாற்றம் ஏற்படும். 


பூராடம் : கவனம் வேண்டும். 


உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும். 

---------------------------------------




மகரம்

டிசம்பர் 26, 2021



நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சுதந்திரத்தன்மை வெளிப்படும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். சுபகாரியம் தொடர்பான செயல்களை சில அலைச்சலுக்கு பின்பு செய்து முடிப்பீர்கள். சிந்தனைகள் மேம்படும் நாள். 




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 




உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 


திருவோணம் : சுதந்திரத்தன்மை வெளிப்படும். 


அவிட்டம் : போட்டிகள் குறையும். 

---------------------------------------




கும்பம்

டிசம்பர் 26, 2021



மற்றவர்கள் கூறும் பேச்சினை நம்பி முடிவு எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். ஆடம்பர பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள் பற்றிய பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். அமைதி வேண்டிய நாள். 




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அவிட்டம் : சிந்தித்து செயல்படவும். 


சதயம் : ஈர்ப்பு அதிகரிக்கும். 


பூரட்டாதி : பழைய நினைவுகள் ஏற்படும்.

---------------------------------------





மீனம்

டிசம்பர் 26, 2021



வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். காரசாரமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. முன்னேற்றமான நாள். 




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




பூரட்டாதி : இழுபறிகள் குறையும். 


உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும். 


ரேவதி : புரிதல் உண்டாகும். 

---------------------------------------


நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரை : 15 - 18 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி - முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி (Prime Minister Narendra Modi's speech to the people of the country: Vaccine for 15 - 18 year olds - Booster vaccine for front line workers)...



  •  கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி பிரதமர் மோடி தனது உரையை துவங்கினார்.

  • இந்தியாவில் உருமாறிய ஒமிக்ரான் தொற்று பரவ தொடங்கியுள்ளது.

  • ஒமிக்ரான் பரவலைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை - பிரதமர் மோடி

  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

  • கைகளை கழுவ வேண்டும்; முகக்கவசம் அணிய வேண்டும்.

  • குழந்தைகளுக்காக 90,000 படுக்கைகள், 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளன - பிரதமர் மோடி

  • தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதிலும், அதனை மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதிலும் மத்திய அரசு விரைவாக செயல்படுகிறது-  பிரதமர் நரேந்திர மோடி.

  •  மரபணு தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

  • நாட்டில் 61% பொதுமக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர்- பிரதமர் மோடி.

  • இந்தியாவில் இதுவரை 141 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

  • 18 வயதுக்கு மேற்பட்டோரில் 90% பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்- பிரதமர் மோடி.

  • முன்கள பணியாளர்களுக்கு  பூஸ்டர் தடுப்பூசி.

  • நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.

  • ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 - 18 வயதுள்ளவர்களுக்கும் தடுப்பூசி

  • இந்தியாவில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது-பிரதமர் மோடி அறிவிப்பு.

  • ஒமிக்ரான் பரவி வருகிறது. நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

  • ஒமிக்ரானை கண்டு பீதியடைய வேண்டாம். எச்சரிக்கையுடன் இருங்கள் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...