+2 - கணக்கு (Mathematics) - மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சிக் கையேடு (100% Pass - Minimum Learning Material)...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
15 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கான கோவிட்-19 தடுப்பூசியின் முக்கியத்துவம் - பொது சுகாதாரத்துறை இயக்குனர் அவர்களின் விளக்கம் (Importance of COVID-19 vaccine for children between the ages of 15 and 18 - Director of Public Health)...
15 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கான கோவிட்-19 தடுப்பூசியின் முக்கியத்துவம் - பொது சுகாதாரத்துறை இயக்குனர் அவர்களின் விளக்கம் (Importance of COVID-19 vaccine for children between the ages of 15 and 18 - Director of Public Health)...
>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...
இல்லம் தேடிக் கல்வி மையங்கள் _கோவிட்-19 தடுப்பு - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (Illam Thedi Kalvi Centers _COVID-19 Prevention - Standard Operating Procedures)...
இல்லம் தேடிக் கல்வி மையங்கள் _கோவிட்-19 தடுப்பு நிலையான வழிகாட்டு நடைமுறைகள்
இல்லம் தேடிக் கல்வி மையங்கள் செயல்படும் பொழுது கோவிட்-19 நோய்ப் பரவல் தடுப்பிற்காக கீழ்க்கண்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.
1) மையங்களுக்கு வரும் குழந்தைகள், தன்னார்வலர்கள், பெற்றோர் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.
2) மையங்களில் குழந்தைகள் அமர்வதற்கு தவறாமல் சமூக இடைவெளி வட்டங்கள் வரைந்து இருக்கவேண்டும்.
3) குழந்தைகள் மையங்களுக்கு வரும்பொழுது கைகளை முழுவதும் சுத்தம் செய்துகொள்ள சோப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். இவற்றில் கைகளை சுத்தம் செய்து கொண்ட பிறகு குழந்தைகள் மையங்களுக்கு வர ஏற்பாடு செய்தல் வேண்டும்.
4) கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி ( Hand sanitizer) பயன்படுத்தலாம்.
5) குழந்தைகள் வகுப்பில் நெருக்கமாக அமர்வதை தவிர்க்க வேண்டும். மேலும், பாடல் மற்றும் செயல்வழிக்கற்றல் நடைபெறும் பொழுது கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.
6) இல்லம் தேடி கல்வி மையங்களை பார்வையிடும் அலுவலர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் முழுமையான முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.
7) தன்னார்வலர்கள் எப்பொழுதும் முகக்கவசம் அணிந்து வகுப்புகள் நடத்த வேண்டும்.
8) குழந்தைகளை கையாள வேண்டி உள்ளதால் தன்னார்வலர்கள் தவறாமல் _தடுப்பூசி_ செலுத்திக் கொண்டு இருத்தல் வேண்டும்.
9) குழந்தைக்கு ஏதேனும் சளி அல்லது காய்ச்சல் தென்பட்டால் உடனடியாக மருத்துவ துறையின் உதவியை பெற்றோர்கள் நாடுவதற்கு தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்தல் வேண்டும்.
10) இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு தேவைப்படும் கிருமி நாசினி மற்றும் சோப்பு ஆகியவற்றை நன்கொடையாகப் பெறுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் உதவியை கல்வித்துறை அலுவலர்கள் பெறலாம்.
11) இல்லம் தேடி கல்வி மையம் செயல்படும் இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அவ்விடங்களை அவ்வபோது கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தல் வேண்டும்.
12) தன்னார்வலர்கள் வீட்டில் யாருக்கும் சளி, காய்ச்சல் போன்ற நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் தன்னார்வலர்கள் மையங்களுக்கு வருதல் கூடாது. மருத்துவத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்பட்டதாகவும், ஜனவரி 5-ம் தேதி அதற்கான அரசாணை வெளியிட உள்ளதாகவும் பரவும் செய்தி - உண்மை என்ன? (What is the truth? - News spread that the retirement age for Tamil Nadu government employees has been reduced to 58 and the government is set to issue an order on January 5)
தமிழக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்பட்டது அமலுக்கு வருவதாகவும், ஜனவரி 5-ம் தேதி அதற்கான அரசாணை வெளியிட உள்ளதாகவும் புதிய தலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
2020-ல் கொரோனா பாதிப்பால் நிதிச் சிக்கல்களைச் சந்தித்து வந்த நிலையில், அன்றைய முதல்வர் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி அறிவித்தார். இதன் மூலம், 2020-ல் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வுக் கால பணப் பயன்களை வழங்குவதை அரசு தவிர்த்தது. மேலும், கடந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலையால், ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படும் என அரசு அறிவித்தது.
அதன்பின் புதிதாகப் பொறுப்பேற்ற அரசால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60-ல் இருந்து 58 ஆக குறைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான கோப்புகள் தயாராகி வருவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக செய்திகளின் வாயிலாக பேசப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில்தான், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆக குறைப்பு அமலுக்கு வருதாக புதியதலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று பரவி வருகிறது. ஆனால், ஓய்வு பெறும் வயது குறித்து புதிய தலைமுறை மட்டுமின்றி எந்தவொரு செய்தி நிறுவனமோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்போ இன்னும் வெளியாகவில்லை. இது எடிட் செய்யப்பட்டது.
இதுகுறித்து, புதியதலைமுறை இணையதளப் பிரிவை தொடர்பு கொண்டு கேட்கையில், இது போலியான நியூஸ் கார்டு. நாங்கள் வெளியிடவில்லை ” எனத் தெரிவித்து இருந்தனர்.
முடிவு :
நம் தேடலில், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆக குறைப்பு அமல் என்றும், 05.01.2022 முதல் அரசாணை வெளியீடு என்றும் பரவும் நியூஸ் கார்டு போலியானது. தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என அறிய முடிகிறது.
1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 10-01-2022 வரை விடுமுறை - ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வருகைபுரிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் - திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Holidays for 1st to 8th Standard students only - Teachers must attend school as usual - Dindigul District Chief Educational Officer Proceedings) ஓ.மு.எண்: 86/அ1/2021, நாள்: 02-01-2022...
1 முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை - ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் - இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் வழக்கம் போல நடைபெறும் - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கடிதம் (Prohibition of direct classes from 1st to 8th Standard - Teachers should come to school - Illam Thedi Kalvi Scheme classes will be held as usual - Tiruvannamalai District Collector's letter)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Tree and parents - need love and warmth - today's short story
மரமும் பெற்றோரும் - தேவை அன்பும் அரவணைப்பும் - இன்றைய சிறுகதை Tree and parents - need love and warmth - today's short story இன்று ஒரு ச...