கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆரணி அருகே அரசு பள்ளி மாணவிகள் மீது சிகரெட் புகைவிட்ட பிளஸ்1 மாணவனை கண்டித்ததாக 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் - மேலும் 2 பேர் பணியிட மாற்றம் - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு (Near Arani, 2 Teachers Suspended - 2 more transferred - Chief Education Officer orders for assaulting a Plus 1 student who had smoked a cigarette on Government School Girls) நாளிதழ் செய்தி..

 


ஆரணி அருகே அரசு பள்ளி மாணவிகள் மீது சிகரெட் புகைவிட்ட பிளஸ்1 மாணவனை கண்டித்த 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் - மேலும் 2 பேர் பணியிட மாற்றம் - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு (Near Arani, 2 Teachers Suspended - 2 more transferred - Chief Education Officer orders for assaulting a Plus 1 student who had smoked a cigarette on Government School Girls) நாளிதழ் செய்தி..


ஆரணி அருகே அரசு பள்ளி மாணவிகள் மீது சிகரெட் புகை விட்ட புகாரில் விசாரணை நடத்திய ஆசிரியர்கள் பிளஸ்1 மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 2 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்தும், 2 பேரை டிரான்ஸ்பர் செய்தும் சிஇஓ அதிரடி உத்தரவிட்டுள்ளார். 


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 783 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 16 ஆசிரியை, ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது, பிளஸ் 1 மாணவர் ஒருவர் தனது, நண்பர்களுடன் சிகரெட் பிடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக பள்ளி முடித்து வீட்டிற்கு சென்ற சில மாணவிகள் முகத்தில் புகை விட்டு கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. மாணவி ஒருவர் இது பற்றி ஆசிரியர்களிடம் புகார் செய்தார். இதனால் சம்பந்தப்பட்ட மாணவரை பள்ளி ஆசிரியர்கள் வெங்கட்ராமன், திலீப்குமார், நித்யானந்தம், பாண்டியன் ஆகியோர் மதிய உணவு நேரத்தில் ஒரு அறைக்கு அழைத்து சென்று மாணவியின் முகத்தில் சிகரெட் புகை விட்டதற்கு கண்டித்துள்ளனர்.


இதனால், மாணவனுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வரம்பு மீறிய அந்த மாணவனை ஆசிரியர்கள் கடுமையாக கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது. இதில், அந்த மாணவருக்கு உள் காயம் ஏற்பட்டதாக பெற்றோரிடம் மாணவர் தெரிவித்துள்ளார். உடனே, அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். இதுதவிர, புகை பிடித்த மாணவரின் பெற்றோர் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் புகழ் ஆகியோர் நேற்று அந்தப் பள்ளிக்கு சென்று பெற்றோர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் வெங்கட்ராமன், திலீப்குமார் ஆகியோரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேஷ்குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், ஆசிரியர்கள் நித்தியானந்தம், பாண்டியன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.












தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வருமா பழைய பென்ஷன் திட்டம்? விகடன் கட்டுரை (Tamil Nadu Government Employees will get the Old Pension Scheme? Vikatan article)...



 தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வருமா பழைய பென்ஷன் திட்டம்? விகடன் கட்டுரை (Tamil Nadu Government Employees will get the Old Pension Scheme? Vikatan article)...


தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர்- ஆசிரியர் மாநாட்டில், 'வாழ்வாதாரப் பழைய பென்ஷனை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்க, 'நிதிநிலை சீரடைந்ததும் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என்று உறுதி அளித்துள்ளார்.



"பழைய பென்ஷனை மீண்டும் கொண்டு வருவதில் பல்வேறு இடர்ப்பாடுகள் உள்ளன" எனத் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கடந்த மாதம் சட்டப் பேரவையில் தெரிவித்தார்.



"பழைய பென்ஷனை மீண்டும் கொண்டு வருவது விபரீத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" என்று தமிழக முன்னாள் நிதிச் செயலாளர் ஒருவரும், பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார நிபுணர் குழுவும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், முதல்வரின் இந்த வாக்குறுதியானது, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடையே மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தாலும், பொதுமக்களிடம் கொஞ்சம் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர சாத்தியம் இருக்கிறதா என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.




பழையது போய், புதியது வந்தது எப்போது? ஆங்கிலேய ஆட்சியில் 1871-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட 'பழைய பென்ஷன்' எனப்படும் வரையறுக்கப்பட்ட பயன் தரும் பென்ஷன் (Defined Benefit Pension), தமிழக அரசு மற்றும் மத்திய அரசில் 2003-ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. அதாவது, கடந்த 26.06.2001-ல் பென்ஷனை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை பரிந்துரை செய்தது. இதன் விளைவாக, சி.பி.எஸ், என்.பி.எஸ் என்கிற இரு திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.




 சி.பி.எஸ் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS - Contributory Pension Scheme)

 இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழக அரசின் பென்ஷனுக்கான செலவினங்கள் அதிகமாக உள்ளது என்பதால், 2002-03-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிவிப்பின்படி, 01.04.2003 முதல் சி.பி.எஸ் (Contributory Pension Scheme) எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் நடைமுறைக்கு வந்ததால், பழைய பென்ஷன் முடிவுக்கு வந்தது. சி.பி.எஸ் திட்டத்தை தமிழக அரசின் தகவல் மையம் (டேட்டா பிராசஸிங் சென்டர் - Data Processing Centre) பராமரிக்கிறது. சி.பி.எஸ்ஸில் கட்டப்படும் பணம் முழுவதும் தமிழக அரசுக் கணக்கில் (Public account) உள்ளது.




 என்.பி.எஸ் (NPS - National Pension Scheme)...


தமிழக அரசு சி.பி.எஸ் பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அதாவது, 01.01.2004 முதல் மத்திய அரசும் தன் ஊழியர்களுக்கான (பங்களிப்பு) நேஷனல் பென்ஷன் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. ஊழியர்களின் மாதாந்தர பங்களிப்பு 10% , மத்திய அரசின் பங்களிப்பு 14%.  இவை இரண்டும் சேர்ந்த 24% தொகை மத்திய அரசின் (Public account) கணக்கில் இல்லை. ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Pension Fund Regulatory and Development Authority - PFRDA) பராமரிப்பில் என்.பி.எஸ் டிரஸ்டில் உள்ளது.




பழைய பென்ஷனுக்கு இணையாக எல்லா வசதிகளும் என்.பி.எஸ்ஸிலும் உண்டு. 01.04.2004 முதல் 31.03.2019 வரை    என்.பி.எஸ் திட்டத்துக்கான தனது பங்களிப்பாக 10% தொகையை மட்டுமே மத்திய அரசு தன் ஊழியர்களின் கணக்கில் செலுத்திவந்தது. அவ்வப்போது எழுந்த 'பழைய பென்ஷன்' கோரிக்கையை சமன்படுத்தும் விதமாக 01.04.2019 முதல் என்.பி.எஸுக்கான தனது மாதாந்தர பங்களிப்பை 14 சதவிகிதமாக உயர்த்தியது, மத்திய அரசு. என்.பி.எஸ் திட்டத்தில் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு, மத்திய அரசின் பழைய பென்ஷன் திட்டத்தைச் சார்ந்த ஊழியருக்கு உள்ளது போன்றே பணிக்கொடை (Gratuity) வழங்கப்படுகிறது.



பணியில் உள்ள என்.பி.எஸ் ஊழியர்களுக்கு உடல் இயக்கம் பாதிக்கப்பட்டாலோ, மூளை செயல்திறன் இழந்து போனாலோ, பழைய பென்ஷன்தாரர்களுக்கு உள்ளது போலவே இயலாமை ஓய்வூதியம் (Invalid Pension) உண்டு. பணியில் உள்ள என்.பி.எஸ் ஊழியர் இறந்துபோகும் பட்சத்தில் அவரின் குடும்பத்துக்கு குடும்ப பென்ஷன் உண்டு. ஜி.பி.எஃப்-க்கு இணையாக கிடைக்கும் நன்மைகள்    என்.பி.எஸ்ஸில் கணக்கு II-லும் (Tier II Account) கிடைக்கும். ஆக மொத்தம், பழைய பென்ஷனுக்கு இணையாக எல்லா வசதிகளும் என்.பி.எஸ் திட்டத் திலும் உண்டு. 




 ஆண்டு முழுக்க பென்ஷன் பெற என்ன செய்யலாம்?


 ஓய்வு பெறும்போது என்.பி.எஸ் மூலம் கிடைக்கும் தொகையை என்.பி.எஸ்ஸின் அன்யூட்டி திட்டத்தில் டெபாசிட் செய்தால், மாதம் தோறும் பென்ஷன் போல ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் அன்யூட்டி தொகை ஓய்வு பெறும் தேதியில் பழைய பென்ஷன்தாரர் பெறும் பென்ஷனுக்கு இணையாகவும் இருக்கலாம். ஆனால், அன்யூட்டியில் வருடாந்தர உயர்வை எதிர்பார்க்க முடியாது. வாழ்நாள் முழுக்கக் கிடைக்கும் தொகை ஒரே அளவாகவே இருக்கும். ஆனால், செலவு ஏறுமுகமாக இருக்குமே! தவிர, சம்பள கமிஷன் (Pay Commission) உயர்வு, அகவிலைப்படி உயர்வு என எதுவும் என்.பி.எஸ்ஸில் கிடைக்காதே என்பது அரசு ஊழியர்களின் கவலை. 



அரசு ஊழியர்களுக்குக் கொண்டாட்டம்; அரசுக்கு..?

அகவிலைப்படி தரப்படும் போதெல்லாம் 'பழைய பென்ஷன் மூலம் கிடைக்கும் தொகை உயர்ந்துகொண்டே போகும். சம்பள கமிஷன் வந்தால் 'ஓஹோ' என்று எகிறும். இதனால் அரசு ஊழியர்களுக்குக் கொண்டாட்டம். ஆனால், அரசுத் தரப்புக்குத் திண்டாட்டம். கடந்த காலத்தில் பழைய பென்ஷன் மூலம் கிடைத்த தொகை எப்படி உயர்ந்து வந்தது என்பதைப் பாருங்கள்...  1984-ல் குறைந்தபட்ச பென்ஷன் (235+12) ரூ.247 மட்டுமே. தற்போதைய குறைந்தபட்ச பென்ஷன் (7850+2669+300) ரூ.10,819. செப்டம்பர் 1984-ல் அதிகபட்ச பென்ஷன் (1500+54) ரூ.1,554 மட்டுமே. தற்போதைய அதிகபட்ச பென்ஷன் (1,12,500+38250+300) ரூ.1,50,780.



எகிறிய குடும்ப பென்ஷன்...


  அதுமட்டுமல்ல, 1.7.1960-க்குமுன் ஓய்வு பெற்றவர்களுக்கு குடும்ப பென்ஷன் இல்லை. 8.2.1971 முதல் குறைந்தபட்ச குடும்ப பென்ஷன் ரூ.50; அதிகபட்சம் ரூ.300-தான். 31.12.2015 வரை அதிகபட்ச குடும்ப பென்ஷன் (23100+26,796) ரூ.49,896 மட்டுமே. ஆனால், 01.01.2016 முதல் அதிகபட்ச (உயர்த்தப் பட்ட) குடும்ப பென்ஷன் ரூ.1,12,500. இத்துடன் முடிந்ததா என்றால், இல்லை. பணிக் கொடைக்காக அரசாங்கம் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்ய வேண்டியிருக்கிறது.



அதாவது,

 * 01.01.1996-ல் 3.5 லட்சம்; 

01.01.2006-ல் 10 லட்சம்: 

01.01.2016-ல் 20 லட்சம்; 

தற்போதைய 38% அகவிலைப்படி 50% என்ற அளவை எட்டிவிட்டால் அதிகபட்ச பணிக்கொடை ரூ.25 லட்சமாகும்.


பழைய பென்ஷன் வருமா? 

பழைய பென்ஷனைக் கொண்டுவருவதில் இத்தனை பிரச்னைகள் இருக்கின்றன. இதை எல்லாம் தாண்டி, மீண்டும் பழைய பென்ஷன் வருமா என்று கேட்டால், அதற்கும் கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதாவது, 2019-20 பட்ஜெட் அறிக்கையின்படி, தமிழக அரசு பென்ஷன் பெற்றவர் எண்ணிக்கை 7,37,699. தற்போதைய 2022-23 பட்ஜெட் அறிக்கையின் படி பென்ஷன் பெறுபவர்களின் எண்ணிக்கை 7,15,761 மட்டுமே. அதாவது, வயது மூப்பு காரணமாக இறப்பு ஏற்படுவதால், எண்ணிக்கை குறைகிறது. மேலும், 01.04.2003 முதல் சி.பி.எஸ் திட்டத்தின்கீழ் பணிக்கு வந்து தற்போது வரை ஓய்வு (மற்றும் இறப்பு) எண்ணிக்கை வெறும் 24,719 மட்டுமே. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் சார்ந்தோர் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 20,000 பேர் ஓய்வுபெறுவதாகச் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். இதனால் இளம் வயதில் உள்ள சி.பி.எஸ் ஊழியர்கள் பழைய பென்ஷன் பெற வாய்ப்பு உண்டு. மேலும், சி.பி.எஸ். திட்டம் தொடங்கப்பட்ட 2002-03 நிதியாண்டில் பழைய பென்ஷனுக்கான செலவு அப்போதைய அரசின் வருவாயில் ரூ.3,488.20 கோடி இது அரசின் வருவாயில் 16.86%.தற்போதைய 2022-23 பட்ஜெட்டின்படி, பழைய பென்ஷனுக்கான செலவு ரூ.39,508.37 கோடி என்றாலும், இது நமது வருவாயில் 17.07% மட்டுமே. அதாவது, 2002-03 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் பழைய பென்ஷனுக்கான கூடுதல் செலவு 0.21 சதவிகிதம்தான். இந்தக் கணக்கை எல்லாம் தெரிந்துகொண்டுதான் 'பழைய பென்ஷனைக் கொண்டு வருவோம்' என தமிழக முதல்வர் சொன்னாரா? பழைய பென்ஷன் திட்டத்தை எப்படிக் கொண்டுவருவோம் என அவர் எடுத்துச் சொன்னால், அரசு ஊழியர்கள், ஆசிரியர் நிம்மதிப் பெருமூச்சுவிடுவார்கள்!



தவறான தகவல்..! 

தமிழக அரசு ஊழியர்களில் ஒரு சிலர், தமிழக அரசு ஊழியர்கள் என்.பி.எஸ்ஸில் உள்ளதாக தவறாக நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல. தமிழக அரசு ஊழியர்கள் சி.பி.எஸ் திட்டத்தில்தான் உள்ளனர். இதற்கான கணக்கை பராமரிப்பது  தமிழ்நாடு அரசு டாடா சென்டர். நமது சி.பி.எஸ் தொகை பி.எஃப்.ஆர்.டி.ஏ-யில் உள்ளது என்பதும் தவறான தகவல். மத்திய அரசு ஊழியர்களுக்கான என்.பி.எஸ்ஸை பராமரிப்பதுதான் ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA).


நன்றி விகடன்




தொடக்கப் பள்ளிகளில் எந்தெந்த வகுப்புகளை இணைத்து நடத்தலாம் - வகுப்புகளைப் பிரிக்கும் முறை (Which classes can be combined in Elementary Schools - Methods of Separating Classes)...


>>> தொடக்கப் பள்ளிகளில் எந்தெந்த வகுப்புகளை இணைத்து நடத்தலாம் -  வகுப்புகளைப் பிரிக்கும் முறை (Which classes can be combined in Elementary Schools - Methods of Separating Classes)...





4 மற்றும் 5ஆம் வகுப்பு வினாத்தாள்கள் வழங்குவது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் - ஆடியோ (The Director of Elementary Education instructs the Chief Education Officers regarding the distribution of class 4 and 5 question papers - Audio)...



>>> 4 மற்றும் 5ஆம் வகுப்பு வினாத்தாள்கள் வழங்குவது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் - ஆடியோ (The Director of Elementary Education instructs the Chief Education Officers regarding the distribution of class 4 and 5 question papers - Audio)...





செப்டம்பர் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் (School Management Committee meeting for the month of September - Samagra Shiksha Karur District Chief Education Officer's Proceedings)...



>>> செப்டம்பர் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் சார்ந்து  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் (School Management Committee meeting for the month of September - Samagra Shiksha Karur District Chief Education Officer's Proceedings)...



>>> செப்டம்பர் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 30-09-2022 அன்று நடத்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல் செயல்முறைகள்...





Today's (24-09-2022) Wordle Answer...

                                                                              

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (24-09-2022) Wordle Answer: GRATE










 

இன்றைய (24-09-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

செப்டம்பர் 24, 2022



எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்




அஸ்வினி : சுறுசுறுப்பான நாள்.


பரணி : நெருக்கடிகள் நீங்கும்.


கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 24, 2022



மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு ஏற்படும். பிள்ளைகளால் எதிர்பாராத சுபச்செலவுகள் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த காலதாமதம் குறையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உறவினர்களின் வழியில் உதவி கிடைக்கும். முயற்சிகள் ஈடேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 




கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும். 


ரோகிணி : காலதாமதம் குறையும். 


மிருகசீரிஷம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 24, 2022



பிள்ளைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உத்தியோக பணிகளில் சோர்வின்றி செயல்படவும். தடைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : ஒற்றுமை உண்டாகும். 


திருவாதிரை : இன்னல்கள் குறையும். 


புனர்பூசம் : சோர்வின்றி செயல்படவும். 

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 24, 2022



எதிர்பாராத தனவரவு உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த உணவினை உண்டு மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சாதகமான சூழல் அமையும். முன்னேற்றமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூசம் : மகிழ்ச்சி உண்டாகும். 


ஆயில்யம் : சாதகமான நாள்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 24, 2022



தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அனுபவம் மேம்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மகம் : மாற்றம் ஏற்படும்.


பூரம் : அனுபவம் மேம்படும். 


உத்திரம் : தன்னம்பிக்கை உண்டாகும்.

---------------------------------------


 


கன்னி

செப்டம்பர் 24, 2022



நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த மனவருத்தம் நீங்கி ஒற்றுமை உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு மேம்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்




உத்திரம் : ஒற்றுமை உண்டாகும். 


அஸ்தம் : அறிமுகம் கிடைக்கும். 


சித்திரை : நெருக்கடிகள் நீங்கும். 

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 24, 2022



கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பிடிவாதத்தை குறைத்து கொள்வது நல்லது. மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாட்களாக தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




சித்திரை : சிந்தித்து செயல்படவும். 


சுவாதி : அனுபவம் உண்டாகும்.


விசாகம் : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 24, 2022



தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் புதுவிதமான நம்பிக்கையை உருவாக்கும். வீடு மற்றும் வாகனத்தை சீர் செய்வதற்கான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு




விசாகம் : புதுவிதமான நாள்.


அனுஷம் : சோர்வு நீங்கும்.


கேட்டை : அறிமுகம் கிடைக்கும். 

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 24, 2022



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பணிகளில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




மூலம் : நெருக்கம் அதிகரிக்கும்.


பூராடம் : மகிழ்ச்சியான நாள்.


உத்திராடம் : வெற்றி பெறுவீர்கள்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 24, 2022



எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எந்தவொரு செயல்பாடுகளிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




உத்திராடம் : காலதாமதமான நாள்.


திருவோணம் : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.


அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 24, 2022



பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத வாய்ப்புகள் சாதகமாக அமையும். பெருமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : ஆர்வம் ஏற்படும்.


சதயம் : ஒற்றுமை அதிகரிக்கும். 


பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 24, 2022



நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடித்து மனம் மகிழ்வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். புதிய பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உள்ள சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குழப்பம் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்




பூரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.


உத்திரட்டாதி : வெற்றி கிடைக்கும். 


ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...