கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக "கடவூர் தேவாங்கு சரணாலயம்" அமைத்து தமிழ்நாடு அரசு அறிவிக்கை - .செய்தி வெளியீடு எண்: 1779, நாள்: 12-10-2022 (Government of Tamil Nadu Notification to set up "Kadavur Slender Loris (Devangu) Sanctuary" as India's first Slender Loris Sanctuary - .News Release No: 1779, Date: 12-10-2022)...



>>> இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக "கடவூர் தேவாங்கு சரணாலயம்" அமைத்து தமிழ்நாடு அரசு அறிவிக்கை - செய்தி வெளியீடு எண்: 1779, நாள்: 12-10-2022 (Government of Tamil Nadu Notification to set up "Kadavur Slender Loris (Devangu) Sanctuary" as India's first Slender Loris Sanctuary - News Release No: 1779, Date: 12-10-2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அக்டோபர் மூன்றாவது வாரம் - 2022 (Ennum Ezhuthum Lesson Plan - October 3rd Week)...

       



>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அக்டோபர் மூன்றாவது வாரம் - 2022 (Ennum Ezhuthum Lesson Plan - October 3rd Week)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.10.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.10.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் : அறத்துப்பால்


இயல்: பாயிரவியல்


அதிகாரம்: வான் சிறப்பு


குறள் : 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.


பொருள்:

கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.


பழமொழி :

Quality is more important than quantity.


அளவைவிட தரமே அதிமுக்கியம்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன். 


2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன்.


பொன்மொழி :


ஊக்கத்தை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு - அறிஞர் அண்ணா


பொது அறிவு :


1. இந்தியாவில் விமான தொழிற்சாலை எங்கு உள்ளது? 


பெங்களூரில் உள்ளது.


 2.இந்தியாவில் தோல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? 


உத்திரபிரதேசம்.


ஆரோக்ய வாழ்வு :


கேரட் வைட்டமின் ஏ இன் சிறந்த மூலமாகும், ஒருவேளை கேரட் சாப்பிடுவது உங்கள் தினசரி ஊட்டச்சத்து மதிப்பில் 184% வழங்குகிறது. U.S. உணவு மற்றும் மருந்து நிர்வாகம், பெரியவர்கள் மற்றும் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 700 முதல் 900 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ பரிந்துரைக்கிறது. ஒரு முழு பச்சைக் கேரட்டில் FDA பரிந்துரையைப் பூர்த்தி செய்ய போதுமான வைட்டமின் A உள்ளது.


NMMS Q 74 :


விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 5, 4, 9, 13, 22, _________ 


விடை : 35. விளக்கம்: 5+4 = 9; 4+9 = 13; 9+ 13 = 22; 13 + 22= 35;


நீதிக்கதை


சொந்த இடம்


அயோத்தியா நகரத்தில் சித்திராங்கன் என்ற ஒரு நாய் வாழ்ந்து வந்தது. நாள் தோறும் பசியில் வாடி, அலைந்து கொண்டிருந்தது. 


ஒரு நாள் அந்த நாய், நாம் ஏன் உணவு கிடைக்காத இந்த நகரத்தில் அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்து, நாம் வேறு ஒரு நகரத்திற்குச் சென்றுவிடலாமே! என்று நினைத்தது. தன்னுடைய சக நண்பர்களிடம் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள வேறொரு நகரத்திற்குச் சென்றது. 


அங்கு ஒரு வீட்டில் சென்று தஞ்சம் புகுந்தது. அந்த வீட்டிலிருந்த எஜமானி அம்மா இந்த நாயைத் தன் வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொண்டு, அதனைத் தன் பிள்ளைபோல வளர்த்து வந்தாள். அந்த நாய்க்கு நல்ல உணவும் மதிப்பும் இருந்து வந்தது. 


ஒரு நாள் அந்த நாய் தன் எஜமானி அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியே வந்து, தெருவில் நின்றது. 


அந்தத் தெருவில் வாழும் பிற நாய்கள் அந்த நாயைக் கண்டதும் விரட்டிக் கடிக்கத் தொடங்கின. இரத்தக் காயங்களோடு அந்த நாய் மீண்டும் அயோத்தியா நகருக்கே திரும்பி வந்தது. 


அந்த நாயின் நண்பர்கள், என்ன நண்பா! புதிய நகரம் எப்படி இருந்தது? என்று விசாரித்தன. 


அதற்கு அந்த நாய், அந்த நகரம் செழிப்பாக இருக்கிறது. அந்த நகரத்துப் பெண்கள் இரக்க குணமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அங்கிருக்கும் நம் இனத்தவர்கள்தான் சரியில்லை. அதனால் தான் நான் திரும்ப இங்கேயே வந்துவிட்டேன் என்றது. 


ஆதலால், எப்போதும் சொந்த இடத்தில் இருப்பதுதான் சுகம் என்றது அந்த நாய்.


இன்றைய செய்திகள்


13.10.22


* மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக அமைகிறது ‘கடவூர் தேவாங்கு சரணாலயம்’ - தமிழக அரசு அறிவிக்கை.


* தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு எம்பிபிஎஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


* மாதவரத்தில் மெட்ரோ ரயில் இயக்கத்துக்காக சுரங்க கட்டுமானப் பணிகள் தீவிரம்: 52 அடி ஆழம், 492 அடி நீளத்தில் ரயில் நிலையம் அமைய உள்ளது.


* ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு.


* பூமியை தாக்க வந்த விண்கல் ஒன்றை நாசா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக திசைத் திருப்பி வரலாற்று சாதனை படைத்துள்ளது.


* சர்வதேச அணுசக்தி முகமையில் சீன தீர்மானத்தை முறியடித்த இந்தியா - மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்.


* தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சென்னை பள்ளி மாணவி 3 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.


* தேசிய விளையாட்டில் டிரையத்லான் அணிகள் பிரிவில் தமிழகம் தங்கம் வென்றது.


* செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கி குஜராத்தில் நடைபெற்று வந்த தேசிய விளையாட்டு போட்டி நேற்று நிறைவடைந்தது.



Today's Headlines


* The Madras High Court has ordered the Tamil Nadu government to respond in a case seeking to provide free laptops to differently-abled students.


*  'Kadavur Devangu Sanctuary' to be India's first Devangu Sanctuary - Tamil Nadu Govt.


*  MBBS graduates can apply for 1,021 Assistant Doctor vacancies in government hospitals in Tamil Nadu, Medical Staff Selection Board has announced.


 * The intensity of tunnel construction work for metro rail operation at Madhavaram: 52 feet deep, 492 feet long railway station.


 * Diwali Bonus for Railway Employees: Central Government Notification


*  A spaceship sent by NASA has successfully deflected an asteroid that was coming to hit the Earth and created a historic record.


 * India overturned China's resolution at the International Atomic Energy Agency - Union External Affairs Minister Jaishankar Information.


*  A Chennai school girl won 3 bronze medals in the national gymnastics competition.


*  Tamil Nadu won gold in the triathlon team category in the national games.


* The national sports competition which started on September 29 in Gujarat ended yesterday.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



Today's (13-10-2022) Wordle Answer...

                                                                                                 

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (13-10-2022) Wordle Answer: EQUAL





 

இன்றைய (13-10-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

அக்டோபர் 13, 2022



குடும்ப உறுப்பினர்களுடன் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : உதவி கிடைக்கும்.


கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 

---------------------------------------




ரிஷபம்

அக்டோபர் 13, 2022



கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கற்றலில் புதுவிதமான மாற்றம் ஏற்படும். மனதில் வாகனம் மற்றும் வீடு வாங்குவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




கிருத்திகை : லாபம் மேம்படும்.


ரோகிணி : மாற்றம் ஏற்படும்.


மிருகசீரிஷம் : கவனத்துடன் செயல்படவும்.

---------------------------------------




மிதுனம்

அக்டோபர் 13, 2022



பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.


திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.


புனர்பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

அக்டோபர் 13, 2022



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். காது தொடர்பான இன்னல்கள் குறையும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் லாபம் மேம்படும். ஊக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.


பூசம் : அறிமுகம் கிடைக்கும்.


ஆயில்யம் : லாபம் மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

அக்டோபர் 13, 2022



மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுவன்மையின் மூலம் காரியசித்தி உண்டாகும். விருத்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




மகம் : ஆசைகள் உண்டாகும்.


பூரம் : அனுகூலமான நாள்.


உத்திரம் : காரியசித்தி உண்டாகும்.

---------------------------------------




கன்னி

அக்டோபர் 13, 2022



உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


அஸ்தம் : சோர்வு ஏற்படும்.


சித்திரை : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

அக்டோபர் 13, 2022



கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில அனுபவத்தின் மூலம் புதுமையான சூழல் அமையும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




சித்திரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.


சுவாதி : விவாதங்களை தவிர்க்கவும்.


விசாகம் : புதுமையான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

அக்டோபர் 13, 2022



உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மூத்த சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




விசாகம் : முயற்சிகள் அதிகரிக்கும்.


அனுஷம் : அங்கீகாரம் கிடைக்கும்.


கேட்டை : இலக்குகள் பிறக்கும்.

---------------------------------------




தனுசு

அக்டோபர் 13, 2022



நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். நெருக்கமானவர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். எதிர்பாராத உதவி கிடைக்கப் பெறுவீர்கள். விரயம் நிறைந்த நாள். 




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மூலம் : ஆதரவு கிடைக்கும்.


பூராடம் : போட்டிகள் குறையும்.


உத்திராடம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

அக்டோபர் 13, 2022



மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மாற்றம் ஏற்படும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். மனதில் ஏற்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




உத்திராடம் : ஆர்வம் உண்டாகும். 


திருவோணம் : குழப்பம் நீங்கும்.


அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------




கும்பம்

அக்டோபர் 13, 2022



வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அரசு தொடர்பாக எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். மனதில் ஏற்பட்ட இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


சதயம் : சாதகமான நாள்.


பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




மீனம்

அக்டோபர் 13, 2022



நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதில் வெற்றி கிடைக்கும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




பூரட்டாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


ரேவதி : உதவி கிடைக்கும்.

---------------------------------------






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கனவு ஆசிரியர் - ஆசிரியர்களுக்கான மாத இதழ்-01 PDF - வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு அரசு (Kanavu Aasiriyar (Dream Teacher) - Monthly Magazine for Teachers-01 PDF - Published by: School Education Department, Govt of Tamil Nadu)...



>>> கனவு ஆசிரியர் - ஆசிரியர்களுக்கான மாத இதழ்-01 PDF - வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு அரசு (Kanavu Aasiriyar (Dream Teacher) - Monthly Magazine for Teachers-01 PDF - Published by: School Education Department, Govt of Tamil Nadu)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேன் சிட்டு திங்கள் விட்டு திங்கள் இதழ்-01 PDF - வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு அரசு (ThenChittu Monthly Magazine-01 PDF for Class VI to IX Students - Published by: School Education Department, Government of Tamil Nadu)...



>>> ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேன் சிட்டு திங்கள் விட்டு திங்கள் இதழ்-01 PDF - வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு அரசு (ThenChittu Monthly Magazine-01 PDF for Class VI to IX Students - Published by: School Education Department, Government of Tamil Nadu)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...