கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு ஊழியர் நடத்தை விதிகள் - சொத்துகள் - மருத்துவ உதவிகள் - இடமாற்றப் பயணப்படி (TTA) - ஈடுசெய் விடுப்பு - ஈட்டிய விடுப்பு - ஊதிய உயர்வு - ஊதிய நிர்ணயம் - ஒழுங்கு நடவடிக்கை விதிகள் - கடன் மற்றும் முன்பணம் - கூடுதல் பொறுப்பு - விடுப்புகள் - தற்காலிக பணிநீக்கம் - படிகள் - பணியமர்வு விதிகள் - பணியேற்பிடைக் காலம் - பயணப்படி விதிகள் - பல்வகை விவரங்கள் - பொது வருங்கால வைப்பு நிதி - குடும்ப ஓய்வூதியம் - ஓய்வூதியம் தொகுத்துப் பெறுதல் - பணிக்கொடை - குறித்த தகவல்கள், அரசாணைகள் - 167 பக்கங்களில் ல் (Tamilnadu Government Servant Code of Conduct - Property - Medical Allowances - Transfer Travel Act (TTA) - Compensatory Leave - Earned Leave - Increment (Increase in Pay) - Fixation of Pay - Disciplinary Action Rules - Loans and Advances - Additional Incharge - Leaves - Suspension - Allowances - Rules of Appointment and Promotion - Joining Period - Travel Allowance Rules - Miscellaneous Details - General Provident Fund - Family Pension - Commutation of Pension - Gratuity - Informations - G.O.s - 167 Pages)...

 



>>> தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் - சொத்துகள் - மருத்துவ உதவிகள் - இடமாற்றப் பயணப்படி (TTA) - ஈடுசெய் விடுப்பு - ஈட்டிய விடுப்பு - ஊதிய உயர்வு - ஊதிய நிர்ணயம் - ஒழுங்கு நடவடிக்கை விதிகள் - கடன் மற்றும் முன்பணம் - கூடுதல் பொறுப்பு - விடுப்புகள் - தற்காலிக பணிநீக்கம் - படிகள் - பணியமர்வு விதிகள் - பணியேற்பிடைக் காலம் - பயணப்படி விதிகள் - பல்வகை விவரங்கள் - பொது வருங்கால வைப்பு நிதி - குடும்ப ஓய்வூதியம் - ஓய்வூதியம் தொகுத்துப் பெறுதல் - பணிக்கொடை - குறித்த தகவல்கள், அரசாணைகள் - 167 பக்கங்களில் ல் (Tamilnadu Government Servant Code of Conduct - Property - Medical Allowances - Transfer Travel Act (TTA) - Compensatory Leave - Earned Leave - Increment (Increase in Pay) - Fixation of Pay - Disciplinary Action Rules -  Loans and Advances - Additional Incharge - Leaves - Suspension - Allowances - Rules of Appointment and Promotion - Joining Period - Travel Allowance Rules - Miscellaneous Details - General Provident Fund - Family Pension - Commutation of Pension - Gratuity - Informations - G.O.s - 167 Pages)...



பாடக்குறிப்பில் (Lesson Plan) எழுத வேண்டியவை, நூலகம் மற்றும் ஆய்வகம் பயன்பாடு, குறைதீர் கற்பித்தல் பதிவேடு மாதிரி - ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை (Notes of Lesson, Library and Laboratory Use, Remedial Teaching Record Model - Ramanathapuram District School Education Department)...

 



>>> பாடக்குறிப்பில் எழுத வேண்டியவை, நூலகம் மற்றும் ஆய்வகம் பயன்பாடு, குறைதீர் கற்பித்தல் பதிவேடு மாதிரி - ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை (Notes of Lesson, Library and Laboratory Use, Remedial Teaching Record Model - Ramanathapuram District School Education Department)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




1 முதல் 3ஆம் வகுப்பு, 4 மற்றும் 5ஆம் வகுப்பு எண்ணும் எழுத்தும் (Phonetics) மற்றும் Spoken English குறுவளமைய பயிற்சி - முதன்மை ஏதுவாளர்களுக்கான பயிற்சி 21 & 22-11-2022-ம் தேதிகளில் நடைபெறுதல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள் (1st to 3rd Standard, 4th and 5th Standard Phonetics and Spoken English CRC Training for Chief Facilitators to be held on 21 & 22-11-22 - SCERT Director's Proceedings) ந.க.எண்: 01625/ ஊ1/ 2022, நாள் :15-11-2022...

 


>>> 1 முதல் 3ஆம் வகுப்பு, 4 மற்றும் 5ஆம் வகுப்பு எண்ணும் எழுத்தும் (Phonetics) மற்றும் Spoken English குறுவளமைய பயிற்சி - முதன்மை ஏதுவாளர்களுக்கான பயிற்சி 21 & 22-11-2022-ம் தேதிகளில் நடைபெறுதல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள் (1st to 3rd Standard, 4th and 5th Standard Phonetics and Spoken English CRC Training for Chief Facilitators to be held on 21 & 22-11-22 - SCERT Director's Proceedings) ந.க.எண்: 01625/ ஊ1/ 2022, நாள் : 15-11-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கற்றல் செயல்பாடுகளை ஆய்வுக்குழு பார்வையிடும்பொழுது முன்னிலைப்படுத்த வேண்டிய பதிவேடுகள் - காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Records to be highlighted when inspection committee inspects learning activities in all schools in the district - Proceedings of Kanchipuram Chief Educational Officer) ந.க.எண்: 4452/ ஆ2/ 2022, நாள்:15-11-2022...


>>> மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கற்றல் செயல்பாடுகளை ஆய்வுக்குழு பார்வையிடும்பொழுது முன்னிலைப்படுத்த வேண்டிய பதிவேடுகள் - காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Records to be highlighted when inspection committee inspects learning activities in all schools in the district - Proceedings of Kanchipuram Chief Educational Officer) ந.க.எண்: 4452/ ஆ2/ 2022, நாள்:15-11-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.11.2022 - School Morning Prayer Activities...


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.11.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் : அறத்து பால்: 


அதிகாரம் - இல்வாழ்க்கை, 


குறள் -41 


இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.


விளக்கம்:

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.


பழமொழி :

Crosses are ladders to heaven.


தடைகள் தான் சொர்க்கத்தின் ஏணிப்படிகள்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. எ‌ந்த காரியம் எ‌ன்றாலு‌ம் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன்.


 2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன்.


பொன்மொழி :


ஒரு நிமிடம் தாமதமாகச் செல்வதை விட மூன்று மணிநேரம் முன்கூட்டியே செல்வது சிறந்தது. --வில்லியம் ஷேக்ஸ்பியர்



பொது அறிவு :


1. வீடுகளுக்கு நம்பர் கொடுக்கும் முறை எப்போது உருவானது?


 1463ஆம் ஆண்டு.


 2. கைபர் கணவாயின் நீளம் என்ன ? 


 33 மைல்கள்.


English words & meanings :


Homographs - same spelling with different meanings. ஒப்பெழுத்து. பல்பொருள் ஒரு மொழி 


ஆரோக்ய வாழ்வு :


உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நாவல் பழ விதைகளில் காணப்படுகின்றன. இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. 


NMMS Q


விஜயநகர கட்டிடத் தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது? 


விடை : குதிரை


நீதிக்கதை


உழைப்பின் பயன்


ஒரு விவசாயிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். விவசாயிக்கு வயது அதிகமானதால் இறந்து போகும் நிலையில் இருந்தபோது, தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளுக்கு தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக்கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களிலும் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். 


பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் சொல்லிய புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. 


எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே! மூவரும் சேர்ந்து தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்து நீர் பாய்ச்சி உரம் போட்டார்கள். ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள். 


நீதி :

உழைப்பினால் வரும் பணம் அதிஷ்டம் தரும்.


இன்றைய செய்திகள்


16.11.22


* வாக்காளர் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 7.10 லட்சம் பேர் விண்ணப்பம்.


* பாலாற்றில் 1,460 கனஅடிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆற்றில் குளிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை.


* தமிழகத்தில் தினசரி மின்தேவை சராசரியாக 2,000 மெகாவாட் குறைந்தது.


* ஆக்கிரமிப்பு கோயில் நிலங்களை மீட்க ஒத்துழைக்காத அதிகாரிகளுக்கு சிறை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.


* காஷ்மீரில் கடும் பனிப் பொழிவு - நெடுஞ்சாலைகள், கிராமங்கள்  மாவட்டத் தலைநகரங்களில் இருந்து  துண்டிக்கப்பட்டுள்ளன.


* உலக மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


* 2011-ஆம் ஆண்டு சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். அதேபோன்ற வறட்சி நிலையை சோமாலியா இந்த ஆண்டும் எதிர்கொண்டுள்ளது. வரும் மாதங்களில் சோமாலியாவின் நிலைமை மேலும் மோசமாகலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.


* இந்தியாவுக்கு எதிரான தொடர்; கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு.


* இந்திய தேக்வாண்டோ (தற்காப்பு கலை) சம்மேளன தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு.


* 2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வரும் நவம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது.


Today's Headlines


* 7.10 lakh people applied for addition of their names and correction.


* Water flow rises to 1,460 cubic feet in Balaru: Public were warned to avoid bathing in river


 * Average daily power demand in Tamil Nadu fell by 2,000 MW.


* Jail for non-cooperative officials to recover encroached temple lands: High Court warns.


* Heavy snowfall in Kashmir - highways, villages cut off from district capitals.


 * According to the United Nations, the world population has increased to 8 billion.


 * In 2011 famine in Somalia killed up to 10 lakh people.  Somalia is  facing a similar drought this year also.  The situation in Somalia could worsen in the coming months, the UN warner.


*  Series against India;  New Zealand team announced their team headed by Kane Williamson.


* Aysari Ganesh elected as president of Indian Taekwondo (Martial Art)


* The FIFA World Cup 2022 will be held in Qatar from November 20 to December 18.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இன்றைய (16-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 16, 2022



மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் தீர்வு காண்பீர்கள். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அஸ்வினி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


பரணி : முன்னேற்றம் ஏற்படும்.


கிருத்திகை : வித்தியாசமான நாள்.

---------------------------------------



ரிஷபம்

நவம்பர் 16, 2022



குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பொன், பொருள் சேர்க்கை மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




கிருத்திகை : புரிதல் உண்டாகும். 


ரோகிணி : முயற்சிகள் கைகூடும்.


மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

---------------------------------------



மிதுனம்

நவம்பர் 16, 2022



மனதில் நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மனை மீதான கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


திருவாதிரை : கவனம் வேண்டும்.


புனர்பூசம் : கலகலப்பான நாள்.

---------------------------------------



கடகம்

நவம்பர் 16, 2022



உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




புனர்பூசம் : அனுசரித்து செல்லவும். 


பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். 


ஆயில்யம் : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------



சிம்மம்

நவம்பர் 16, 2022



வாக்கு சாதுர்யத்தின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு வெளிப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




மகம் : இழுபறிகள் குறையும். 


பூரம் : சேமிப்பு அதிகரிக்கும். 


உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------



கன்னி

நவம்பர் 16, 2022



மனதில் தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவுபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மறதி குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திரம் : ஆதரவு கிடைக்கும். 


அஸ்தம் : புதுமையான நாள். 


சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------



துலாம்

நவம்பர் 16, 2022



ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மனதிற்கு விரும்பிய உணவினை உண்டு மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். சிக்கல்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




சித்திரை : முன்னேற்றமான நாள்.


சுவாதி : புரிதல் உண்டாகும்.


விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------



விருச்சிகம்

நவம்பர் 16, 2022



உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். இணையம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.


அனுஷம் : புதுமையான நாள்.


கேட்டை : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

---------------------------------------



தனுசு

நவம்பர் 16, 2022



வாழ்க்கை துணைவருடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சமூக பணிகளில் விவேகத்துடன் செயல்பட்டால் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். தொழில் சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் புதிய முதலீடுகள் மேம்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மூலம் : அனுசரித்து செல்லவும். 


பூராடம் : நம்பிக்கை மேம்படும்.


உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

---------------------------------------



மகரம்

நவம்பர் 16, 2022



பணிபுரியும் இடத்தில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். இன்னல்கள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


திருவோணம் : மாற்றம் ஏற்படும்.


அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------



கும்பம்

நவம்பர் 16, 2022



நுட்பமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை குறைத்து கொள்ளவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சலும், ஒருவிதமான சோர்வும் உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




அவிட்டம் : குழப்பம் நீங்கும்.


சதயம் : அலைச்சல்கள் உண்டாகும்.


பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------



மீனம்

நவம்பர் 16, 2022



உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


ரேவதி : நெருக்கம் உண்டாகும்.

---------------------------------------


கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுத்தல் தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநரின் (DGP) சுற்றறிக்கை குறிப்பாணை, நாள்: 15-11-2022 (Circular Memorandum of Director General of Police regarding Prevention of Ragging of Students in Educational Institutions, Dated: 15-11-2022)...



>>> கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுத்தல் தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநரின் (DGP) சுற்றறிக்கை குறிப்பாணை, நாள்: 15-11-2022 (Circular Memorandum of Director General of Police regarding Prevention of Ragging of Students in Educational Institutions, Dated: 15-11-2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings

  2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ...