>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - கல்வி சாரா செயல்பாடுகள் - 2022-2023 - மாநில அளவிலான "கலைத் திருவிழா போட்டிகள்" (Kalai Thiruvizha) 27.12.2022 முதல் 30.12.2022க்குள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 3195/ ஆ7/ கலை/ ஒபக/ 2022, நாள்: 22-12-2022 (Samagra Shiksha - Extra Curricular Activities - Conduct of State Level "Art Festival Competitions" in Government Schools during the Academic Year 2022-2023 from 27.12.2022 to 30.12.2022 - Guidelines - Regarding - State Project Director's Proceedings)...
இன்றைய (26-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
இன்றைய (26-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
டிசம்பர் 26, 2022
மனதில் புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். குடும்பத்தின் சூழ்நிலைகளை அறிந்து பிள்ளைகள் செயல்படுவார்கள். வியாபார பணிகளில் உள்ள சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். அரசு தொடர்பான உதவி சாதகமாக அமையும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பின் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கேளிக்கை சார்ந்த விஷயங்களின் மூலம் சேமிப்பு குறையும். சிரமம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : இலக்குகள் பிறக்கும்.
பரணி : மேன்மை ஏற்படும்.
கிருத்திகை : சேமிப்பு குறையும்.
---------------------------------------
ரிஷபம்
டிசம்பர் 26, 2022
உறவினர்களின் எண்ணங்களை பற்றி அறிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வீடு மற்றும் வாகனத்தை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சமூகம் தொடர்பான சிந்தனைகளின் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். வியாபார பணிகளில் உள்ள நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான மதிப்பு அதிகரிக்கும். சிக்கல்கள் நீங்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : உதவி கிடைக்கும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : மதிப்பு அதிகரிக்கும்.
---------------------------------------
மிதுனம்
டிசம்பர் 26, 2022
இனம்புரியாத சில நினைவுகளின் மூலம் மனதில் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். உதவியாக இருந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் சோர்வின்றி செயல்படவும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : கவலைகள் நீங்கும்.
திருவாதிரை : பொறுமையுடன் செயல்படவும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
கடகம்
டிசம்பர் 26, 2022
வியாபார பணிகளில் முக்கியமான சில பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த பொருளாதார பிரச்சனைகள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
பூசம் : பிரச்சனைகள் குறையும்.
ஆயில்யம் : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்
டிசம்பர் 26, 2022
நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். சக ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். மாற்றம் உண்டாகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
பூரம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
கன்னி
டிசம்பர் 26, 2022
நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வியில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் தொடர்பான வியாபாரத்தில் உள்ள சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். குழந்தைகளின் வழியில் எதிர்பாராத அலைச்சல்களும், விரயங்களும் உண்டாகும். சமூகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உலகியல் நிகழ்வுகளின் மூலம் சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். கவலைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : குழப்பம் நீங்கும்.
அஸ்தம் : புரிதல் உண்டாகும்.
சித்திரை : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
துலாம்
டிசம்பர் 26, 2022
தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். புதிய வேலை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோக பணிகளில் தடைபட்ட சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொள்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.
சுவாதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
விசாகம் : வெற்றிகரமான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
டிசம்பர் 26, 2022
பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் தீர்வு காண்பீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோக பணிகளில் உங்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதையும் முன் நின்று செய்யும் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : தீர்வு காண்பீர்கள்.
அனுஷம் : முக்கியத்துவம் அதிகரிக்கும்.
கேட்டை : தைரியம் மேம்படும்.
---------------------------------------
தனுசு
டிசம்பர் 26, 2022
குடும்ப உறுப்பினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். பாகப்பிரிவினைகளில் பொறுமையுடன் செயல்படவும். வியாபார பணிகளில் மந்தமான சூழல் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தனவரவில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : ஆதரவான நாள்.
பூராடம் : பொறுமையுடன் செயல்படவும்.
உத்திராடம் : திருப்பம் உண்டாகும்.
---------------------------------------
மகரம்
டிசம்பர் 26, 2022
பயனற்ற சிந்தனைகளை குறைத்து கொள்வதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். புதிய நபர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் தாழ்வு மனப்பான்மையுடன் செயல்படுவதை தவிர்க்கவும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் புரிதலின்மை உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
உத்திராடம் : நிம்மதியான நாள்.
திருவோணம் : மதிப்பளித்து செயல்படவும்.
அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------
கும்பம்
டிசம்பர் 26, 2022
கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். இன்பச் சுற்றுலா தொடர்பான சிந்தனைகள் மேம்படும். துரித உணவினை தவிர்ப்பது நல்லது. வர்த்தக பணிகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். உறவினர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வருத்தம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.
சதயம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.
---------------------------------------
மீனம்
டிசம்பர் 26, 2022
உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் ஆதரவு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். கடனை அடைப்பதற்கான புதிய திட்டங்களை உருவாக்குவீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். செல்ல பிராணிகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வித்தியாசமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
பூரட்டாதி : பொறுப்புகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : மாற்றம் ஏற்படும்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்
திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் தற்காலிக தினக்கூலிப் பணியாளர்களுக்கு 2022-2023ஆம் ஆண்டிற்கு தினக்கூலி நிர்ணயம் செய்தல் - மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள் (Fixation of daily wages for the year 2022-2023 for temporary daily wage workers (Unskilled, Semi-Skilled, Skilled) working in Tirupur District - Proceedings of the District Collector)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Manarkeni App Download - DEE Proceedings - Key Considerations
மணற்கேணி செயலி பதிறக்கம் செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள் - முக்கியக் கருததுகள் Manarkeni App Download - DEE Proceedings - Important Thi...