கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட 139 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் பணிபுரிய விரும்புகிறார்களா அல்லது தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணிபுரிய விரும்புகிறார்களா என்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது (A consultation meeting will be held on whether the teachers working in 139 schools handed over to the Chennai Municipal Corporation want to work under the Municipal Corporation or under the Elementary Education Department)...

 சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட 139 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் பணிபுரிய விரும்புகிறார்களா அல்லது தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணிபுரிய விரும்புகிறார்களா என்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது (A consultation meeting will be held on whether the teachers working in 139 schools handed over to the Chennai Municipal Corporation want to work under the Municipal Corporation or under the Elementary Education Department)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


13-03-2023 அன்று பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்ட மாணவர்கள் எண்ணிக்கை - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு (Number of students who did not write public examination, students involved in irregular activities on 13-03-2023 - Directorate of Government Examinations released)...

 13-03-2023 அன்று பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்ட மாணவர்கள் எண்ணிக்கை - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு (Number of students who did not write public examination, students involved in irregular activities on 13-03-2023 - Directorate of Government Examinations released)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஹஜ் புனித பயணம் செய்ய, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதி வரும் 20ம் தேதி (20.03.2023) வரை நீட்டிப்பு (Last date for online application for Haj pilgrimage has been extended till 20th (20.03.2023))...



ஹஜ் புனித பயணம் செய்ய, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதி வரும் 20ம் தேதி (20.03.2023) வரை நீட்டிப்பு (Last date for online application for Haj pilgrimage has been extended till 20th (20.03.2023))...


 இந்திய ஹஜ் குழுவானது, புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை 20.03.2023 வரை நீட்டித்துள்ளது. 


ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) மும்பை இந்திய ஹஜ் குழுவின் 'HCol' செயலியினை கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்றைய (14-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 


இன்றைய (14-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 14, 2023



புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களில் கவனம் வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அஸ்வினி : சிந்தித்து செயல்படவும்.


பரணி : தாமதம் உண்டாகும். 


கிருத்திகை : கவனம் வேண்டும்.

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 14, 2023



சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தனவரவை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




கிருத்திகை : புத்துணர்ச்சியான நாள்.


ரோகிணி : நம்பிக்கை மேம்படும்.


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



மிதுனம்

மார்ச் 14, 2023



நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். சமூக பணிகளில் மேன்மை ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். செலவு உண்டாகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 


திருவாதிரை : மதிப்பு அதிகரிக்கும். 


புனர்பூசம் : தெளிவு பிறக்கும். 

---------------------------------------



கடகம்

மார்ச் 14, 2023



தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். 


ஆயில்யம் : சிந்தனைகள் மேம்படும். 

---------------------------------------



சிம்மம்

மார்ச் 14, 2023



விவசாய பணிகளில் பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். மனதில் புதிய துறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் பிறக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் 




மகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


பூரம் : வாய்ப்புகள் கைகூடும். 


உத்திரம் : அறிமுகம் கிடைக்கும். 

---------------------------------------



கன்னி

மார்ச் 14, 2023



எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய தன்னம்பிக்கை உண்டாகும். வியாபாரத்தில் புதுவிதமான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். புதிய முயற்சிகளில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உலகியல் அனுபவத்தின் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


அஸ்தம் : எண்ணங்கள் ஈடேறும். 


சித்திரை : மாற்றங்கள் பிறக்கும். 

---------------------------------------



துலாம்

மார்ச் 14, 2023



உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான வெளிவட்டார நட்புகள் அதிகரிக்கும். வாக்கு சாதுரியத்தின் மூலம் மேன்மையான வாய்ப்புகளை அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும். 


சுவாதி : நட்புகள் அதிகரிக்கும். 


விசாகம் : கருத்து வேறுபாடுகள் மறையும். 

---------------------------------------



விருச்சிகம்

மார்ச் 14, 2023



சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். மனதில் தோன்றிய இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




விசாகம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


அனுஷம் : ஏற்ற, இறக்கமான நாள்.


கேட்டை : குழப்பம் நீங்கும்.

---------------------------------------



தனுசு

மார்ச் 14, 2023



வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மூலம் : கவனம் வேண்டும்.


பூராடம் : நம்பிக்கை உண்டாகும்.


உத்திராடம் : அலைச்சல்கள் மேம்படும்.

---------------------------------------



மகரம்

மார்ச் 14, 2023



உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். விவேகமான செயல்பாடுகள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




உத்திராடம் : புரிதல் மேம்படும்.


திருவோணம் : உதவிகள் சாதகமாகும்.


அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------



கும்பம்

மார்ச் 14, 2023



குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் தெளிவினை ஏற்படுத்தும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். திருப்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்




அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


சதயம் : மாற்றம் பிறக்கும்.


பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும். 

---------------------------------------



மீனம்

மார்ச் 14, 2023



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளியூர் தொடர்பான பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்புகள் கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.03.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.03.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பொறை உடைமை


குறள் : 154

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை

போற்றி யொழுகப் படும்.


பொருள்:

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்


பழமொழி :

Fortune favors the brave


வீரனை அதிர்ஷ்டம் விரும்பிச் சேர்ந்திடும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. கண் எனது உடம்புக்கும் மனதிற்கும் வெளிச்சம். 


2. எனவே என் கண் தெளிவானவைகளையும் சரியானவைகளையும் பார்க்க முயற்சிப்பேன்


பொன்மொழி :


எல்லோருமே வெற்றியை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர்


பொது அறிவு :


1. காப்பியை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது? 


பிரேசில். 


2. வடகிழக்குப் பருவக்காற்று வீசும் மாதங்கள் எவை ? 


அக்டோபர் - டிசம்பர்.


English words & meanings :


glazing – glass work in the frames especially windows. noun and verb. All this old church windows are renovated with glzing. சட்டத்தில் கண்ணாடி பொருத்துதல். பெயர்ச் சொல், வினைச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


கொத்தமல்லி தண்ணீர் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளது. இதில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே இதனை உட்கொள்வது சருமம் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குகிறது. மேலும் சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் மாற்றுகிறது.


மார்ச் 14


கார்ல் மார்க்சு அவர்களின் நினைவுநாள்


கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 5, 1818, செருமனி–மார்ச் 14, 1883, இலண்டன்) செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்சு ஆவார்.


ஐரோம் சானு சர்மிளா அவர்களின் பிறந்தநாள்


ஐரோம் சானு சர்மிளா (Irom Chanu Sharmila, பிறப்பு: மார்ச் 14, 1972) என்பவர் மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர். மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்றிலிருந்து இவர் உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவந்தார். இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்.


ஆகஸ்ட் 9, 2016 அன்று தனது 16 ஆண்டுகால உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டார். 



நீதிக்கதை


தங்க மஞ்சள் குருவி!


விஜயநகர் விழா கோலம் பூண்டிருந்தது! அரச உற்சவம்! அதில் கலந்துகொள்ள அண்டை நாட்டு அரசன் விஜயவர்தனர் வந்தார். விழா முடிந்த பிறகும் சில தினங்கள் விஜயநகரில் தங்கினார். ஒருநாள் அரசர் அவரிடம், அரசே நான் கேள்விப்பட்டேனே...? தங்கள் அவைப் புலவர் தெனாலிராமன் மிகவும் சாதுரியசாலியாமே! அவரிடம் சொல்லி, எனக்குக் காலையில் தங்கமஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்பு நிறத்திலும், இரவில் ஏழு வர்ணங்களிலுமாக உருமாறும் அற்புதக் குருவி ஒன்றைக் கொண்டு வந்து தரச் சொல்லுங்களேன்... என்றார்.


மேலும், அது சில சமயம் மூன்று காலாலும், சில சமயம் இரட்டைக் காலாலும், பிறகு ஏழு இறக்கை கொண்டு வானில் பறக்கவும் வேண்டும் என்றார். அரசர் உடனே தெனாலியை அழைத்து, விரைவில் அத்தகைய குருவியைக் கொண்டு வா... என்று உத்தரவிட்டார். அதைக் கேட்டுத் தெனாலிராமனுக்குத் தலை சுற்றியது. அத்தகைய பறவை பற்றி அவர் ஒரு போதும் கேள்விப்பட்டது கூட இல்லை. ஆனால் சிரித்தவாறே, சரி.... அரசே! நாளைக்கு நான் அத்தகைய பறவையோடு வருகிறேன் என்றார்.


மறுநாள் தெனாலி, சபைக்குத் தாமதமாக வந்தார். அவர் நிலைமை மிக மோசமாக இருந்தது. கிழிந்த உடைகள். அதில் புற்களும், முட்களும், மண்ணும் ஒட்டியிருந்தன. கையில் குருவி எதுவும் இல்லாத ஒரு பறவைக் கூண்டு இருந்தது. அவர் அரசரிடம், என்ன சொல்வேன் அரசே! அதிசயமான கதை நடந்து விட்டது. அந்தக் குருவி கையில் கிடைத்து விட்டது. நானும் அதைக் கூண்டில் அடைத்து விட்டேன். அதை இங்கு எடுத்து வரும்போது, அது தனது மாயமான ஏழு இறக்கைகளை விரித்துப் பறந்து சென்று விட்டது. காட்டில் அதைத் துரத்திக் கொண்டு வெகுதூரம் சென்று விட்டேன். அது மீண்டும் என் கையில் சிக்கவில்லை என்றார்.


தொடர்ந்து, சற்று தூரத்தில் பறந்து சென்றவாறே அது என்னிடம் சொல்லிற்று, அரசரிடம் போய்ச் சொல்... காலையாகிற போதோ அல்லது இரவாகிறபோதோ அல்லது நடுப்பகல் ஆகிறபோதோ, வெளிச்சமோ இருட்டோ இல்லாத போது, நானே எனது ஏழு இறக்கைகளால் பறந்து, திரும்ப வந்து விடுகிறேன்... என்றது என்றார். அதைக் கேட்டதும் அரசருக்கு மட்டுமல்ல, அண்டை நாட்டு மன்னர் விஜயவர்தனருக்கும் தலை சுற்றியது. அப்படிப்பட்ட சமயம் எங்கு உண்டாகும்? காலை ஆகாமல், நடுப்பகல் ஆகாமல், இரவு ஆகாமல் வெளிச்சம், இருட்டு ஆகும் சமயம் எது? என்று அனைவரும் வியப்படைந்தனர். அதைக் கேட்டு விஜயவர்தனர், அரசர் இருவரும் சிரித்து விட்டனர். விஜயவர்தனர் சொன்னார், தெனாலியின் சாதுர்யம் பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டுள்ளேனே தவிர, இப்போது தான் நேரில் பார்த்தேன்... என்று புகழ்ந்தார்.


இன்றைய செய்திகள்


14.03. 2023


* தமிழகத்தில் இன்ஃப்ளூயன்சா தொற்று பரவலை தடுக்க தொடர்ந்து காயச்சல் முகாம் நடத்தப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


* திருவிழாக்களில் குறவன், குறத்தி ஆட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


* புதுச்சேரி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.


* இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் வரை இன்ஃப்ளூயன்சா எச்1என்1 பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.


* தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. இந்த ஆவணப் படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


* நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு - இஸ்ரேலில் வரலாறு காணாத போராட்டம்.


* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.


* புரோ ஆக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவை அடக்கி இந்திய அணி 'திரில்' வெற்றி.


Today's Headlines


* Medical Minister M. Subramanian has said that fever camps will be conducted continuously to prevent the spread of influenza infection in Tamil Nadu.


 * The Tamil Nadu government has issued an order banning Kuravan and Kurathi games during festivals.


 * Puducherry Chief Minister Rangaswamy has announced that the CBSE syllabus will be introduced from 6th to 12th standard in government schools to improve the educational quality of Puducherry students.


* Till last February, Tamil Nadu has been at the top of the states with the highest number of cases of H1N1 influenza in India.


 * According to the Met Office, there is a chance of rain at a couple of places in Tamil Nadu and Puducherry for 3 days from tomorrow.


*  India's documentary 'The Elephant Whisperers' has won an Oscar in the Best Documentary Short Film category at the 95th Academy Awards ceremony.  It is noteworthy that this documentary was shot in Tamil Nadu.


 * Protest against the decision to reduce the power of the judiciary - an unprecedented protest in Israel.


*  India has qualified for the final of the World Test Championship series.


 * The Indian team defeated Australia in the Pro Hockey League with a 'thrilling' win.

 


பள்ளிக்கல்வி - 2022-2023-ஆம்‌ கல்வியாண்டில்‌ கல்வி இணை /கல்விசாரா மன்றச்‌ செயல்பாடுகள்‌ - இலக்கிய மன்றம்‌ - போட்டிகள்‌ நடத்துதல்‌ - பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ - முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்குதல்‌ -தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌. 019528/எம்‌/இ1/2022, நாள்‌.13-03-2023 (School Education - Co-curricular / Extra-curricular Forum Activities in the Academic Year 2022-2023 - Literary Forum - Conduct of Competitions - Procedures to be followed - Instructions to Chief Educational Officers - Regarding - Proceedings of Tamil Nadu Commissioner of School Education, No. 019528/M/E1/2022, dt.13-03-2023)...

 

>>> பள்ளிக்கல்வி - 2022-2023-ஆம்‌ கல்வியாண்டில்‌ கல்வி இணை /கல்விசாரா மன்றச்‌ செயல்பாடுகள்‌ - இலக்கிய மன்றம்‌ - போட்டிகள்‌ நடத்துதல்‌ - பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ - முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்குதல்‌ -தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌. 019528/எம்‌/இ1/2022, நாள்‌.13-03-2023 (School Education - Co-curricular / Extra-curricular Forum Activities in the Academic Year 2022-2023 - Literary Forum - Conduct of Competitions - Procedures to be followed - Instructions to Chief Educational Officers - Regarding - Proceedings of Tamil Nadu Commissioner of School Education, No. 019528/M/E1/2022, dt.13-03-2023)...



 தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌, சென்னை -6.

ந.க.எண்‌. 019528/எம்‌/இ1/2022, நாள்‌.13 .03.2023


பொருள்‌: பள்ளிக்கல்வி - 2022-2023-ஆம்‌ கல்வியாண்டில்‌ கல்வி இணை /கல்விசாரா மன்றச்‌ செயல்பாடுகள்‌ - இலக்கிய மன்றம்‌ - போட்டிகள்‌ நடத்துதல்‌ - பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ - முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்குதல்‌ -தொடர்பாக.


பார்வை: 

1. தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்கக்கல்வி இயக்குநரின்‌ இணைச்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌. 19528/எம்‌/இ1/2022, நாள்‌. 11.06.2022.


2. தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்கக்கல்வி இயக்குநரின்‌ இணை செயல்முறைகள்‌, ந.க.எண்‌.019528/எம்‌/இ1/2022, நாள்‌. 22.08.2022.


3. தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌. 019528/எம்‌/இ1/2022, நாள்‌. 10.01.2023 மற்றும்‌ 06.02.2023.


தமிழ்நாடு சட்டப்‌ பேரவையில்‌ 2022-2023 ஆம்‌ ஆண்டிற்கான மானியக்‌ கோரிக்கையின்‌ போது மாண்புமிகு பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களிடையே கல்வி இணைச்‌ செயல்பாடுகளை ஊக்குவிக்க வெவ்வேறு காலகட்டங்களில்‌ இலக்கியம்‌, கவின்கலை, சூழலியல்‌ உள்ளிட்ட மாணவர்‌ மன்றங்கள்‌ தொடங்கப்பட்டு நடைமுறையில்‌ இருந்தன. கொரோணா பெருந்தொற்றால்‌ கடந்த சில ஆண்டுகளாக இம்மன்றங்கள்‌ செயல்படாத நிலையில்‌ அவற்றைப்‌ புதுப்பித்து சிறப்பாகச்‌ செயல்பட வழிவகை செய்யப்படும்‌ என்ற அறிவிப்பினை வெளியிட்டார்‌.


பார்வை (3)-இல்‌ காணும்‌ செயல்முறையில்‌, 2022-2023-ஆம்‌  கல்வியாண்டில்‌ அனைத்து அரசு மற்றும்‌ அரசு நிதியுதவி பெறும்‌ நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ ஒவ்வொரு வாரமும்‌ நடைபெறும்‌. மன்றச்‌ செயல்பாடுகளில்‌ 6 முதல்‌ 9 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அனைத்து  மாணவர்களும்‌ ஆர்வத்துடன்‌ பங்கேற்க வேண்டும்‌ என்ற நோக்கில்‌ இலக்கிய மன்றம்‌.  (தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலம்‌) ஒவ்வொரு பள்ளியிலும்‌ நிறுவி ஒவ்வொரு மாதமும்‌ நிகழ்ச்சிகளும்‌ போட்டிகளும்‌ நடத்தவேண்டும்‌ எனத்‌ தெரிவிக்கப்பட்டி ருந்தது.


மார்ச்‌ மாதத்திற்கான இலக்கிய மன்ற போட்டிகள்‌ பள்ளி அளவில்‌ மார்ச்‌ 6 முதல்‌ 10 வரை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது, வட்டார அளவில்‌ மார்ச்‌ 13 முதல்‌ 15 முடியவும்‌ மாவட்ட அளவில்‌ மார்ச்‌ 20-21 நடத்திட தெரிவிக்கப்பட்டது,


வட்டார அளவில்‌ கீழ்க்கண்ட கருப்பொருளின்‌ அடிப்படையில்‌ போட்டிகளை நடத்த தெரிவிக்கப்படுகிறது.


கருப்பொருள்‌:


1. என்‌ வாழ்வின்‌ இலட்சியம்‌:


2. அறிவியலின்‌ அற்புதங்கள்‌


மாவட்ட அளவில்‌ கீழ்க்கண்ட கருப்பொருளின்‌ அடிப்படையில்‌ போட்டிகளை நடத்த தெரிவிக்கப்படுகிறது.


கருப்பொருள்‌: 


1. பெண்மையை போற்றுவோம்‌


2. தமிழ்‌ எந்தன்‌ உயிருக்கு நேர்‌






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மார்ச் மாத சிறார் திரைப்படம் ("101 சோத்தியங்கள் - 101 Chodyangal") Children Movie - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (101 Chodyangal - Juvenile Film of March - Proceedings of the Commissioner of School Education regarding procedures to be followed while screening in schools)...



>>> மார்ச் மாத சிறார் திரைப்படம் ("101 சோத்தியங்கள் - 101 Chodyangal") Children Movie - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (101 Chodyangal - Juvenile Film of March - Proceedings of the Commissioner of School Education regarding procedures to be followed while screening in schools)...


படம் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி...

https://rb.gy/dwwpjt







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Voter's Day Pledge (January 25) - CEO Proceedings

 தேசிய வாக்காளர் தின உறுதிமொழி (ஜனவரி 25) - CEO Proceedings  Voter's Day Pledge (January 25) - CEO Proceedings  >>> தரவிறக்கம் ...