கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) பிப்ரவரி 2023 - MAT & SAT - இறுதி விடைக் குறியீடு (Final Answer Key) - அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியீடு (National Means cum Merit Scholarship Scheme (NMMS) Examination February 2023 - Final Answer Key - Directorate of Government Examinations Released)...

 

 அரசு தேர்வுகள் இயக்ககம், சென்னை 

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) பிப்ரவரி 2023 

இறுதி விடைக் குறியீடு (Final Answer Key) வெளியிடுதல்

செய்திக் குறிப்பு


25-02-2023 அன்று நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) தேர்வின் இறுதி விடைக் குறியீடு (Final Answer Key) www.dge.tn.gov.in என்ற அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.


- இயக்குநர்


நாள்: 20-03-2023

இடம் : சென்னை-6


>>> NMMS பிப்ரவரி 2023 - மனத்திறன் தேர்வு (MAT) - இறுதி விடைக் குறியீடு (Final Answer Key)...



>>> NMMS பிப்ரவரி 2023 - படிப்பறிவுத் திறன் தேர்வு (SAT) - இறுதி விடைக் குறியீடு (Final Answer Key)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மார்ச் 4வது வாரம் - 4 & 5ஆம் வகுப்புகள் பாடக்குறிப்பு (March 4th Week - 4th & 5th Standard - Lesson Plan)...


>>> மார்ச் 4வது வாரம் - 4 & 5ஆம் வகுப்புகள் பாடக்குறிப்பு (March 4th Week - IV & V Standard - Lesson Plan)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.03.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.03.2023 - School Morning Prayer Activities...

 

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பொறை உடைமை


குறள் எண் : 160

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொ னோற்பாரிற் பின்.


பொருள்:

பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.


பழமொழி :

Never blow hot and cold in the same breath


முன்னுக்குப்பின் முரணாய்ப் பேசாதே. 


இரண்டொழுக்க பண்புகள் :


1. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.


 2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்


பொன்மொழி :


வெற்றி பெற்றபின் அமைதியாக இருப்பவன், பலமுறை வென்ற மனிதன் ஆகிறான்.


பொது அறிவு :


1. தமிழ் மகள் என்று அழைக்கப்படுபவர் யார்?


 ஔவையார்.


 2. 'முர்ரா 'என்பது என்ன?


 எருமையின் உயர் ரக இனம். 


English words & meanings :


 impassable – impossible to travel through or go through.the narrow channels are impassable to ocean-going ships. adjective. 

1. கடந்து செல்ல முடியாத

2. ஊடுருவிச் செல்ல முடியாத. பெயரடை 

ஆரோக்ய வாழ்வு :


கோடையில் விலைக் குறைவில் கிடைக்கும் மற்றொரு ஒரு உணவுப் பொருள் தான் தக்காளி. என்ன தான் தக்காளி அனைத்து பருவ காலங்களில் கிடைத்தாலும், கோடைக்காலத்தில் விலைக் குறைவாக கிடைக்கும். தக்காளியில் மற்ற உணவுகளை விட அதிகளவில் வைட்டமின் சி உள்ளன. இந்த வைட்டமின் சி, நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகின்றன. தக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை புற்றுநோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகின்றன. முக்கியமாக தக்காளியை ஒருவர் சமையலில் சேர்ப்பது மட்டுமின்றி, அவற்றை பச்சையாகவும் சாப்பிடலாம், ஜூஸ் வடிவிலும் உட்கொள்ளலாம்.


கணினி யுகம்


F2


Rename the selected item.


F3


Search for a file or folder in File Explorer.


மார்ச் 21


பன்னாட்டு வன நாள் (International Day of Forests) 







பன்னாட்டு வன நாள் (International Day of Forests) எனப்படும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் சர்வதேசம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2012, நவம்பர் 28 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் நிறுவப்பட்ட இந்நாளை, பல நாடுகள் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறது.



உலகக் கவிதை நாள் (World Poetry Day) 


உலகக் கவிதை நாள் (World Poetry Day) என்பது ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது, உலகம் முழுவதும் கவிதை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் மற்றும் போதனை செய்யவும், ஊக்குவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ எனும் ஐக்கிய பண்பாட்டு நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.


உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) 



உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) ஆண்டு தோறும் மார்ச் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம், பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலையாகும். இது 'கூத்து' வகையை சேர்ந்தது. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. நாட்டுப்புற மரபுரிமைகளிடையில் ஒரு தனிப்புகழை கொண்டுள்ள தொடர்பாடல் ஊடகமாகவே இப் பொம்மலாட்டத்தை அறிமுகப்படுக்கலாம். இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிற திரைப்படத்தின் மூதாதையாகவும் இந்த கலை கருதப்படுகின்றது.


இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Racial Discrimination) 


இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Racial Discrimination) ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைபிடிக்கப்படுகின்றது. 1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாளில் தென்னாப்பிரிக்காவின் ஷாடெங்கிலுள்ள ஷார்ப்வில் நகர்ப்புறத்தில் நிகழ்ந்த, இனவொதுக்கலுக்கு எதிரான அமைதிப்பேரணியின்போது அந்நாட்டுக் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டனர்.


எல்லா வகை இனப்பாகுபாட்டையும் ஒழிக்க முயற்சிசெய்யுமாறு பன்னாட்டுச் சமூகத்தை வேண்டிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1966 ஆம் ஆண்டில் மார்ச் 21-ஐ இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாளாக அறிவித்தது.


நீதிக்கதை :


ஒரு ஒட்டகம் காட்டில் தவம் மேற்கொண்டிருந்தது. அந்தத் தவத்தின் பெருமையை உணர்த்த பிரம்ம தேவர் ஒட்டகத்திற்குக் காட்சியளித்தார். என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். 


இருந்த இடத்தில் இருந்த படியே உணவைப் பெரும் வகையில் என் கழுத்து நீண்டதாக இருக்க வேண்டும். அந்த நீளமான கழுத்தோடு நான் காட்டில் உலா வர வேண்டும் என்று கேட்டது. அவ்வாறே பிரம்ம தேவர் வரமளித்தார். அந்த வரத்தைப் பெற்ற பின் ஒட்டகம் உணவிற்காக அதிகம் முயற்சிக்கவில்லை. நீண்ட கழுத்துடன் எங்கும் திரிந்தது. உணவு எளிதாகக் கிடைத்தது. இதனால் சோம்பல் உற்றது ஒட்டகம். 


ஒருநாள் ஒட்டகம் அப்படி உலவிக் கொண்டிருந்த போது பெருங்காற்று வீசியது. மழை பெய்தது. அறிவற்ற அந்த ஒட்டகம் தன் தலையை ஒரு குகையில் நீட்டிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மழைக்குப் பயந்து தன் மனைவியுடன் ஒரு நரி அந்தக் குகைக்குள் நுழைந்தது. 


குளிராலும் பசியாலும் வாடிய நரித் தம்பதியர்க்கு மிகப் பெரிய வாய்ப்பாக ஒட்டகத்தின் கழுத்து உணவாக அமைந்தது. ஒட்டகத்தின் இருபுறமும் இருந்துக் கொண்டு நரிகள் ஒட்டகத்தின் கழுத்தைக் கடித்து வேண்டிய அளவு மாமிசத்தைப் ருசித்தன. 


தனக்கு நேர்ந்த ஆபத்தை உணர்ந்த ஒட்டகம் தனது கழுத்தை சுருக்க முயற்சித்தது. நீண்ட கழுத்தைச் சுருக்க அரும்பாடுபட்டது. அதற்குள் நரிகள் ஒட்டகத்தின் கழுத்துப் பகுதி முழுதும் சாப்பிட்டு விட்டன. ஒட்டகம் மாண்டு போயிற்று. 


நீதி :



சோம்பல் சில சமயம் உயிருக்கு ஆபத்தாக மாறி விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.


இன்றைய செய்திகள்


21.03. 2023


* தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.


* ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வட்டங்களில் உள்ள 80,567 ஹெக்டேர் வனப்பரப்பில் “தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்” என்னும் புதிய சரணாலயத்தை அரசு ஏற்படுத்தும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.


* இந்தியாவில் ஒரே நாளில் 918 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


* ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்பிகளின் தொடர் அமளியால் இன்றும் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் தொடர்ந்து 6-வது நாளாக எந்த அலுவல்களும் நடைபெறாமல் நாடாளுமன்றம் முடங்கியது.


* நெருக்கம் காட்டும் சவுதி - ஈரான்; பின்னணியில் சீனா - ‘கவனிக்கும்’ உலக நாடுகள்.


* பெண்கள் உலக குத்துச்சண்டை: 2-வது சுற்றில் இந்தியாவின் நிகாத் ஜரீன், மனிஷா வெற்றி.


* இந்திய நடைபந்தய வீரர்கள் விகாஷ், பரம்ஜீத் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி.


Today's Headlines


* An allocation of Rs.40,299 crore has been made for the school education department in the Tamil Nadu budget.


* The budget announced that all schools functioning under various departments like Adi Dravidian and Tribal Welfare Department, Backward, Most Backward and Minority Welfare Department, Hindu Religion and Charitable Institutions Department, and Forest Department will be brought under the School Education Department.


 * An announcement in the budget that the government will set up a new sanctuary called "Father Periyar Wildlife Sanctuary" on 80,567 hectares of forest land in Andhiyur and Kopichettipalayam circles in Erode district.


 * According to the Union Ministry of Health, 918 people have been infected with corona infection in a single day in India.


 * Both Houses of Parliament were adjourned for the whole day today due to continuous violence by the ruling and opposition MPs.  As a result, the Parliament was paralyzed for the 6th consecutive day without any business taking place.


 * Saudi-Iran rapprochement;  China in the background - the 'watching' nations of the world.


 * Women's World Boxing: India's Nikath Zareen beat Manisha in Round 2


 * Indian runners Vikash, and Paramjeet qualify for the Olympics

 

2023-2024ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை உட்பட அனைத்துத்துறை மானியக் கோரிக்கை விவாதம் - நடைபெறும் தேதிகள் அறிவிப்பு - 31-03-2023 அன்று கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதம் (2023-2024 All Department Grant Demand Discussion including School Education Department - Notification of Dates - Education Department Grant Demand Discussion on 31-03-2023)...



>>> 2023-2024ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை உட்பட அனைத்துத்துறை மானியக் கோரிக்கை விவாதம் - தேதிகள் அறிவிப்பு - 31-03-2023 அன்று கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதம் (2023-2024 All Department Grant Demand Discussion including School Education Department - Notification of Dates - Education Department Grant Demand Discussion on 31-03-2023)...




தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2023 - 2024 முழு விபரம்(PDF) - Tamil Nadu Budget 2023 - 2024 Full Details - Tamil PDF - Download here...



>>> தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2023 - 2024 முழு விபரம் (PDF) - Tamil Nadu Budget 2023 - 2024 Full Details - Tamil PDF - Download here...



>>> தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2023 - 2024 முக்கிய அம்சங்கள் & அறிவிப்புகள் புகைப்படங்களாக (PDF) - Tamil Nadu Budget 2023 - 2024 Important Details & Announcements - Picture Cards - Download here...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ₹9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்


மதுரையில் ₹8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் - நிதியமைச்சர்


பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் ரயில்வே போக்குவரத்து பங்களிப்பு குறைவாக உள்ளது.


இதை சரி செய்ய, ரயில்வே அமைச்சகம் உடன் இணைந்து புதிய வழித்தடங்களை உருவாக்க புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும் - நிதியமைச்சர்


வட சென்னை வளர்ச்சித்திட்டம் ₹1000 கோடி செலவில் அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.


அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.


சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் நகர்ப்புற பொதுச்சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் ஆகிய நவீன வசதிகள் அமைத்திட ரூ.50 கோடி ஒதுக்கீடு.


விருதுநகரில் ₹1,800 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா ஒன்றிய, மாநில அரசுகள் நிதி பங்களிப்புடன் அமைக்கப்படும் - நிதியமைச்சர்.




சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் 4 வழி சாலையாக மேம்பாலம் கட்டப்படும்


சர்வதேச நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, நவீன அம்சங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்படும்.


சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் ₹20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.


சென்னையில் ₹320 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு, நீர் வழித்தட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.


தெரு நாய்களுக்கு கட்டுப்பாட்டு மையம் - ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.


கோவையில் செம்மொழி பூங்கா 172 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.


ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரூ.7145 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.


பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மானியத்திற்காக ₹10,500 கோடி ஒதுக்கீடு 


மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க ₹320 கோடி ஒதுக்கீடு 


புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ₹1000 வழங்குவதால் உயர்கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 29% அதிகரிப்பு.


கடல் அரிப்பை தடுக்க, கடல் மாசுபாட்டை குறைக்க ₹2000 கோடி மதிப்பீட்டில் ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சித்திட்டம்’ உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.


மாவட்டத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் புதியதாக அமைக்கப்படும்; இது மாநிலத்தின் 18வது சரணாலயமாக இருக்கும்.


5145 கி.மீ கிராமப்புற சாலைகள் ₹2000 கோடி மதிப்பீட்டில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் - நிதியமைச்சர்.


அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.


மரக்காணத்தில் ₹25 கோடி மதிப்பில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.


கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும்  - நிதியமைச்சர்.


தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் 10,000 குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.


முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம். 5,145 கிலோ மீட்டர் ரூ.2000 கோடி ஒதுக்கீடு.


ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர்களுக்கான நவீன விடுதிகள் மதுரை, கோவை, திருச்சி மற்றும் நீலகிரி ஆகிய 4 இடங்களில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்படும்.


NILP - 19-03-2023 அன்று நடைபெற்ற அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டுத் தேர்வு குறித்து முறைசாரா & வயது வந்தோர் கல்வி இயக்குனரின் கடிதம் (NILP - Letter from Director of Non-formal & Adult Education regarding Basic Literacy Assessment Test held on 19-03-2023)...


 NILP - 19-03-2023 அன்று நடைபெற்ற அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டுத் தேர்வு குறித்து முறைசாரா & வயது வந்தோர் கல்வி இயக்குனரின் கடிதம் (NILP - Letter from Director of Non-formal & Adult Education regarding Basic Literacy Assessment Test held on 19-03-2023)...


அன்புள்ள அனைவருக்கும், 

மாலை வணக்கம். 

இன்று, மாநிலம் முழுவதும் 28848 மையங்களில் அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட்டது. 

4.80 லட்சம் கற்பவர்களின் இலக்கு இருந்தபோதிலும், 5.28 லட்சம் மாணவர்களை சேர்க்க முடிந்தது. அவர்களில், 5.274 லட்சம் மாணவர்கள் அந்தந்த மையங்களில் தங்கள் மதிப்பீட்டுத் தேர்வை எழுதினர். கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 587 கற்பவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை. 

இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் அளித்த தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக உங்களுக்கும், DEO, APO, BEOக்கள், தலைமையாசிரியர்கள், DCகள், BRTEகள் மற்றும் ஆசிரியர்களின் குழுவிற்கும் எனது தனிப்பட்ட மற்றும் உண்மையான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பின்தங்கிய/ குரலற்ற வயது வந்த எழுத்தறிவு இல்லாதவர்களுக்காக தங்கள் உன்னத சேவையை ஆற்றிய தன்னார்வலர்களுக்கு நான் ஒரு சிறப்புக் குறிப்பு/ நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் ஆதரவு இல்லாமல், இது நடந்திருக்காது. 

அட்டவணை வடிவில் மாவட்ட வாரியான செயல்திறனை இங்கே இணைத்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. 

அன்புடன்,

டாக்டர் பி.குப்புசாமி 

இயக்குனர், 

முறைசாரா & வயது வந்தோர் கல்வி 

சென்னை-6.



Dear all, 

Good evening. 


Today, the Basic Literacy Assessment Test conducted in 28848 Centers across the state. 


Though, the target was 4.80 lakh learners, we were able to enroll as many as 5.28 lakh learners. Among them, 5.274 lakh learners took their assessment test in their respective centers. A total of 587 learners were unable to attend this test in Coimbatore, Dindigul and Vellore District. 


I would like to convey my personal and sincere thanks to you and your team of DEO's, APO, BEOs, Headmasters, DCs, BRTEs and Teachers for your continous support and co-operation you have extended all through these period. And I want to make a Special mention/ thanks to the volunteers who have rendered their noble service for the down-trodden/ voiceless adult Illiterates. Without your/ their support, this would not have happened. 


I have attached here, District wise performance in the tabular format. 


Thank you all. 


With Regards.

Dr. P. Kuppusamy

Director, 

Non-Formal& Adult Edn

Chennai-6.


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.03.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.03.23 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பொறை உடைமை


குறள் எண்: 159

துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்கிற் பவர்.


பொருள்:

எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.


பழமொழி :

Brevity is the soul of wit


சுருங்கக் கூறலே அறிவின் ஆன்மா. 


இரண்டொழுக்க பண்புகள் :


1. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.


 2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்


பொன்மொழி :


மனிதன் எப்பொழுது ஆர்வத்திலிருந்து செயல்படுகிறானோ அப்பொழுது மட்டுமே அவன் சிறந்தவனாகிறான்.


பொது அறிவு :


1. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் எது?


 கோலாலம்பூர் (மலேசியா ). 


 2. யூதர்களின் புனித நூல் எது? 


 டோராஹ்.


English words & meanings :


Illustrates - to give examples in order to understand easier. verb. எடுத்துக் காட்டுகள் உடன் உள்ள எளிய விளக்கங்கள். வினைச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


கோடைக்காலத்தில் கிடைக்கும் தர்பூசணி ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுவையான பழம். இதில் ஏராளமான ஊட்டச்ச்ததுக்கள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலைத் தாக்கும் ப்ரீ ராடிக்கல்களிடம் இருந்து உடலை பாதுகாப்பதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. கூடுதலாக, தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது கோடையில் உடல் வறட்சியடைவதைத் தடுக்கும்.


கணினி யுகம்


Ctrl + X


Cut the selected item.


Ctrl + C (or Ctrl + Insert)


Copy the selected item.



மார்ச் 13


உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.




நீதிக்கதை


கதை :

ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது. 


அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது. 


சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். 


ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது. 


அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது. 


முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான். 


இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர். 


சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான். 


இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான். 


நீதி :

ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.


இன்றைய செய்திகள்


13.03. 2023


* 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.


* மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பெரியகட்டளை கிராமத்தில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால பாண்டியர் கால வட்டெழுத்துடைய கற்செக்கு கண்டறியப்பட்டுள்ளது.


* ஓசூர் வனக்கோட்டத்தில் வனக்குற்றங்களைத் தடுக்க மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.


* தமிழகத்தில் 4 நாள் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்.


* எல்லையில் சீன அச்சுறுத்தல் நீடிக்கிறது - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து.


* தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர்.


* பெண்கள் உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் நிது காங்ஹாஸ், பிரீத்தி, மஞ்சு ஆகியோர் வெற்றி.


* உலக ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி 4-வது இடத்துக்கு முன்னேற்றம்.


* இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ரைபகினா, சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Finance Minister PDR Palanivel Thiagarajan is scheduled to present the financial statement for the financial year 2023-24 in the Legislative Assembly today at 10 am.


 * An early Pandyan era stone inscription dating back to the 9th century has been found in Periyakatlai village near Beraiyur in Madurai district.


 * A sniffer unit has been started in Hosur Forest Reserve to prevent forest crimes.


 * Tamil Nadu rains for 4 days - Meteorological Department Information.


*  Chinese threat persists at border - External Affairs Minister Jaishankar comments.


*  So far 13 people have been died in a powerful earthquake in the South American country of Ecuador.


 * Indian players Nitu Kanghas, Preeti, Manju won in the women's world boxing.


 * Indian team has moved up to 4th place in the world hockey rankings.


 * Indian Wells Tennis: Rybakina, Sabalenka advance to finals

 

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: புல்...