கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.06.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.06.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பயனில சொல்லாமை

குறள் : 194


நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லா ரகத்து.


விளக்கம்:


பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.


பழமொழி :

Penury pinches all.


பசிவந்தால் பத்தும் பறந்து போகும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 


2.  என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். எனவே அதை நான் பாதுகாப்பேன்.


பொன்மொழி :


இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. நெல்சன் மண்டேலா


பொது அறிவு :


1. சூரியனைச் சுற்றி வருவதற்கு அதிக நேரம் எடுக்கும் கிரகம் எது?


நெப்டியூன்


2. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் என்ன?


150 மில்லியன் கிலோமீட்டர்கள் (93 மில்லியன் மைல்கள்)


English words & meanings :


 Donate - give money to charity or poor people, 


deposit - a sum of money people put in their bank account


ஆரோக்ய வாழ்வு :


அசைவ உணவை இரவில் தவிர்ப்பது உடல் செரிமானத்திற்கு நல்லது. தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை உட்கொள்ள வேண்டும்.


ஜூன் 15


உலகக் காற்று நாள் (World Wind Day) ஆண்டுதோறும் சூன் 15 ஆம் நாள் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது.. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.


நீதிக்கதை


அவன் சரியான வால் பையன். பள்ளியில் எப்போதும் சேட்டைகள்தாம். அன்று அவனுக்கு பயமாக இருந்தது. காரணம், ஆசிரியைகளுடன் பெற்றோர் சந்தித்துப் பேசும் தினம் அது. பள்ளிக்கு வரும் அம்மாவிடம் 'மிஸ்' புகார் சொல்லி விட்டால்... பயந்து கொண்டே இருந்தான்.


எல்லா பெற்றோரும் ஆசிரியையுடன் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். இவனது தாயாரின் முறை வந்தது.


"பள்ளியில் பையன் எப்படி?" என்று கேட்டாள் தாய்.


"அவனுக்கென்ன சமத்துப் பையன்" என்று மாணவனைப் பார்த்தவாறே சொன்னார் ஆசிரியை.


பையனுக்கு ஆச்சர்யம். தாய்க்கும் ஆச்சரியம்.


“அப்படியா? அவன் ரொம்ப வால் ஆச்சே, நிறைய குறும்பு பண்ணுவானே" என்று விடாமல் கேட்டாள் தாய்.


"அதெல்லாம் சின்னப் பசங்க பண்றதுதானே. மத்தபடி ரொம்ப நல்ல பையன்" என்று, மீண்டும் சொன்னார் ஆசிரியை.


இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மாணவனின் நடவடிக்கைகள் மாறிவிட்டன. தன்னைப் பற்றி நல்லவிதமாக சொன்ன ஆசிரியையிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்றே தன்னுடைய 'வால்' தனத்தைக் குறைத்துக் கொண்டான். •


இன்றைய செய்திகள்


15.06. 2023


* பிபோர்ஜாய் புயல் - குஜராத் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம்.


*பிபோர்ஜாய் புயலை கருத்தில் கொண்டு 63 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


*பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் புத்தாக்க நிறுவனங்களின் கண்காட்சியில் 70 இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு.


*கேரளத்தில் தொடங்கியுள்ள தென்மேற்குப் பருவமழை ஜூன் 18 ல் இருந்து கிழக்கு இந்திய பகுதிக்கு பரவும் என அறிவிப்பு.


*தூத்துக்குடியைச் சேர்ந்த ஹர்சன் என்ற சிறுவன் தொடர்ந்து 7.30 மணி நேரம் நீரில் மிதந்து உலக சாதனை படைத்தான்.


Today's Headlines


* Piborjoy Cyclone - Gujarat State Government Intensifies Precautionary Measures


 *63 trains have been canceled due to  Cyclone Piborjoy.


 *70 Indian companies will participate in the exhibition of innovative companies in Paris, the capital of France.


 * It is Announced that the Southwest Monsoon which has started in Kerala will spread to East India from June 18.


 *A boy named Harsan from Thoothukudi set a world record by floating continuously for 7.30 hours.


+2 மறுகூட்டல் / மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு (+2 Release of Re-Totaling / Revaluation Results)...


>>> +2 மறுகூட்டல் / மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு (+2 Release of Re-Totaling / Revaluation Results)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

6-10ஆம் வகுப்புகள் - சமூக அறிவியல் - கற்றல் விளைவுகள் எண்களுடன் - தமிழ் & ஆங்கில வழி (6th-10th Standard - Social Science - Learning Outcomes with numbers - Tamil & English Medium)...

  

>>> 6-10ஆம் வகுப்புகள் - சமூக அறிவியல் - கற்றல் விளைவுகள் எண்களுடன் - தமிழ் & ஆங்கில வழி (6th-10th Standard - Social Science - Learning Outcomes with numbers - Tamil & English Medium)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கனவு ஆசிரியர் - ஜூன் 2023 - ஆசிரியர்களுக்கான மாத இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Kanavu Aasiriyar - June 2023 Monthly Magazine for Teachers - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> கனவு ஆசிரியர் - ஜூன் 2023 - ஆசிரியர்களுக்கான மாத இதழ் -  பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Kanavu Aasiriyar - June 2023 Monthly Magazine for Teachers - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மே 2023ல் நடைபெற்ற 122 துறைத் தேர்வுகளின் உத்தேச விடைகள் வெளியீடு - TNPSC செய்தி வெளியீடு எண்: 47, நாள்: 13-06-2023 (Publication of Tentative Answer Keys of 122 Departmental Exams Held May 2023 - TNPSC News Release No: 47, Date: 13-06-2023)...


>>> மே 2023ல் நடைபெற்ற 122 துறைத் தேர்வுகளின் உத்தேச விடைகள் வெளியீடு - TNPSC செய்தி வெளியீடு எண்: 47, நாள்: 13-06-2023 (Publication of Tentative Answer Keys of 122 Departmental Exams Held May 2023 - TNPSC News Release No: 47, Date: 13-06-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.06.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.06.2023 - School Morning Prayer Activities...

 

திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பயனில சொல்லாமை

குறள் : 193


நயனிலன் என்பது சொல்லும் பயனில

பாரித் துரைக்கும் உரை.


விளக்கம்:


பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.


பழமொழி :

சொல்வதை விட செய்வதே மேல். 


Example is better than precept


இரண்டொழுக்க பண்புகள் :


1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 


2.  என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். எனவே அதை நான் பாதுகாப்பேன்.


பொன்மொழி :


கல்வியின் நோக்கம் வெறுமையான மனதைத் திறந்த மனதாக மாற்றுவதாகும்.


 - மால்கம் ஃபோர்ப்ஸ்


பொது அறிவு :


1. கடல்களின் எஜமானி என்று அழைக்கப்படும் நாடு எது? 


இங்கிலாந்து. 


 2. காவல்துறையில் முதன் முதலில் பெண்களை சேர்த்த நாடு எது? 


பிரிட்டன்


English words & meanings :


 Ability - talent திறமை.


 Abode - a living place வசிக்கும் இடம்


ஆரோக்ய வாழ்வு :


தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் உறுப்புகளுக்கு நல்ல செயல்பாடு  ஏற்பட்டு மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சி கிடைப்பதோடு நல்ல ஆரோகியம் கூடும்.


ஜூன் 14



சே குவேரா அவர்களின் பிறந்தநாள்


        சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர்         1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.


June 14 - World Blood donor day


ஜூன் 14 - உலக ரத்ததானம் அளிப்பவர் தினம்


உலக சுகாதார நிறுவனம், இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும்.



நீதிக்கதை


பதினைந்து வயது சிறுவன் அவன். ஒரு மோசமான விபத்தில் தனது இடது கையை இழந்துவிட்டான். ஆனாலும் ஊனத்தை மீறி, எதை யாவது சாதிக்கவேண்டும் என்ற தாகம் அவனுக்குள் எழுந்தது. அந்தப்பகுதியில் புகழ்பெற்ற ஒரு ஜூடோ குரு இருந்தார். அவரிடம் போய் விஷயத்தைச் சொன்னான். அவரும் புன்சிரிப்போடு அவனைப் பயிற்சியில் சேர்த்துக்கொண்டார். "இதுதான் உன்னுடைய முதல் பாடம்' என்று சொல்லி, ஒரு தாக்குதல் முறையைச் சொல்லிக் கொடுத்தார். மூன்று மாதங்கள் கடந்தன. அடுத்து..? குருவிடமே கேட்டான். “இந்த ஒரே வித் தையை முழுசாகக் கற்றுக்கொள்!" என்றார் குரு.


சில மாதங்களில் குரு இவனை ஒரு போட்டிக்கு அழைத்துச் சென்றார். முதல் இரண்டு ரவுண்டுகளில் எதிராளிகளை சுலபமாக வீழ்த்தினான் சிறு வன். அவனுக்கே பிரமிப்பாக இருந்தது. மூன்றாவது சுற்றில் புகழ்பெற்ற இன்னொரு வீரனோடு அவன் மோத நேர்ந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் அடி வாங்கினாலும், அவன்தான் ஜெயித்தான்.


இறுதிப் போட்டியில் புகழ்பெற்ற ஒரு வீரனை சிறுவன் எதிர்கொள்ள நேர்ந்தது. மோசமாக அடி வாங்கி சிறுவன் செத்துவிடுவானோ' என்ற பயத்தில் நடுவரே சிறுவனை விலகிவிடுமாறு வற்புறுத்தினார். ஆனால் குரு, 'விடுங்கள்... அவன் ஜெயிப்பான்" என்றார். போட்டி ஆரம்பித்தது. ஒரு கையில்லாத சிறுவன்தானே என்று அந்த புகழ்பெற்ற வீரன் அலட்சியம் காட்ட, தன் வழக்கமான தாக்குதலில் அவனையும் வீழ்த்தினான் சிறுவன்.


கோப்பையோடு திரும்பும்போது சிறுவன் கேட்டாள்... "ஒரே ஒரு தாக் குதலை மட்டும் கற்றுவைத்திருக்கும் நான் எப்படி ஜெயித்தேன்?"


குரு சிரித்தபடி சொன்னார். “இரண்டு காரணங்கள்... ஒன்று, ஜூடோ விலேயே மிகக் கஷ்டமான ஒரு தாக்குதலை நீ நன்றாகக் கற்றிருந்தாய். இன்னொன்று, இப்படி நீ தாக்கினால் எதிராளி உன்னை மடக்க, உன் இடது கையைத்தான் வளைக்க வேண்டும்: அது உனக்கு இல்லை!"


பலவீனங்களையே பலமாக்கிக் கொண்டால், வெற்றி நிச்சயம்.


இன்றைய செய்திகள்


14.06. 2023


* விழுப்புரம் மாவட்டம் மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் திரு ஜெகதீஷ் அவர்களின் புதல்வன் திரு பிரபஞ்சன் அவர்கள் இன்று வெளிவந்த NEET தேர்வு  முடிவில் 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.


*தேசிய மருத்துவ தகுதி தேர்வு கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கோரிக்கை


*சீன எல்லைக்கு அருகே 2.6 பில்லியன் மதிப்பில் சுபன்சிரி நீர்மின்  திட்டப் பணியை இந்தியா தொடங்குகிறது.


*மாநில தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் நியமனம் - 

தமிழ்நாடு அரசு 


*வடசென்னை, வல்லூர் அனல் மின் நிலையங்களில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் 1100 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்.


*இந்தோனேசியா ஓப்பன் பேட்மிட்டன் பி.வி. சிந்து பிரனோய் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்.


*TNPL நடப்பு சீசனின் முதல் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.


Today's Headlines




* Mr. Prbanjan, son of Mr. Jegadish, who is working as a social science teacher in Mel Olakur Government Higher Secondary School, Villupuram district, has secured 720/720 marks in the NEET exam results released today and topped the all India level.


*Chief Minister M.K.Stalin requested our Prime Minister Modi to quit the National Medical Eligibility Test


 *India starts work on the Subansiri hydropower project worth 2.6 billion near the China border.


 * Retired IPS officer Shakeel Akhtar appointed as State Chief Information Commissioner - Tamil Nadu Govt


 * Vadachennai and Vallur thermal power stations have been repaired and 1100 MW power generation has started again.     


*  In Indonesian Open Badminton, P.V.  Sindhu and Pranoi advanced to the second round.


 * Coimbatore Kings beat Tirupur Tamilians by 70 runs in the first match of the current TNPL season.

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தொடக்கக் கல்வி - 2023-2024ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் - மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் (Mutual Transfer applications) பெறுதல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 6413/ டி1/ 2023, நாள்: 12-06-2023 (Elementary Education - General Transfer Counseling for Teachers for the academic year 2023-2024 - All categories of Teachers working in Panchayat Union / Municipal / Government Primary and Middle School - Receipt of Mutual Transfer applications - Issuance of instructions - Regarding - Proceedings of Director of Elementary Education Rc.No: 6413/ D1 / 2023, Dated: 12-06-2023)...


>>> தொடக்கக் கல்வி - 2023-2024ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் - மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் (Mutual Transfer applications) பெறுதல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 6413/ டி1/ 2023, நாள்: 12-06-2023 (Elementary Education - General Transfer Counseling for Teachers for the academic year 2023-2024 - All categories of Teachers working in Panchayat Union / Municipal / Government Primary and Middle School - Receipt of Mutual Transfer applications - Issuance of instructions - Regarding - Proceedings of Director of Elementary Education Rc.No: 6413/ D1 / 2023, Dated: 12-06-2023)...


♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️

பள்ளிக்கல்வி - அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் மன மொத்த மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 13-06-2023 முதல் 19-06-2023 வரை பெறுதல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...