கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CRC / CPD Training Facilitator Module...

 


>>> CRC / CPD Training Facilitator Module...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பயிற்சி பார்வை - பதிவு செய்யும் முறை - காணொளி (Training Visit - Registration Method - Video)...



>>> பயிற்சி பார்வை - பதிவு செய்யும் முறை - காணொளி (Training Visit - Registration Method - Video)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆதார் - பான் இணைக்காதோர் சந்திக்கும் 15 சிக்கல்கள் (15 problems faced by those who do not link Aadhar-PAN)...

 


ஆதார் - பான் இணைக்காதோர் சந்திக்கும் 15 சிக்கல்கள் (15 problems faced by those who do not link Aadhar-PAN)...


ரூ.1,000 அபராதத்துடன் ஆதார் - பான் இணைப்பிற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30ம் தேதி முடிவடைந்து விட்டது.


இதுவரை இணைக்காதவர்களின் பான் கார்டு ஜூலை 1 முதல் செயலிழந்து விடுமென மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ளது.


செயலிழந்த பான் அட்டைதாரர்கள், கீழ்க்காணும் 15 வகையான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது.


அவை என்னென்ன என்று அறிந்து கொள்வோம்.


1.வங்கிகளில் புதிதாக கணக்கு துவங்க முடியாது.


2.கிரெடிட் ,டெபிட் கார்டு கேட்டு விண்ணப்பிக்க இயலாது.


3.புதிதாக டீமேட் கணக்கு துவங்க விண்ணப்பிக்க முடியாது.


4.ஹோட்டல் அல்லது உணவகங்களில் வழங்கப்படும் பில் தொகைக்கு, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் செலுத்த முடியாது.


5.ஒரே நேரத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது ரூ.50ஆயிரத்துக்கு மேல் செலுத்த முடியாது.


6.மியூச்சுவல் பண்ட்களில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் முதலீடு செய்ய இயலாது.


7.ரூ.50 ஆயிரத்திற்கு மேல் நிறுவனங்களின் பங்குகளை வாங்க முடியாது.


8.ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரிசர்வ் வங்கியின் பத்திரங்களை வாங்க முடியாது.


9.வங்கிகளில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் டெபாசிட் செய்ய முடியாது.


10. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் வங்கிகளுக்கு காசோலை அளிக்க முடியாது.


11. ஒரு நிதியாண்டில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் காப்பீட்டு பிரீமியமாக செலுத்த முடியாது.


12. பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் பங்குகள், பத்திரங்களை ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்திற்கு மேல் வாங்கவோ, விற்கவோ முடியாது.


13.செயலிழந்த பான் எண்ணுக்கு எதிராக ரீபண்டு கோர முடியாது.


14. செயலிழந்த பான் எண்ணை வங்கியில் இணைத்திருப்போருக்கு, அவர்களது வங்கி கணக்கில் வட்டி அளிக்கப்பட்ட மாட்டாது.


15.பான் எண் குறிப்பிடாமல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் போது அதிகபட்ச டி.டி.எஸ் மற்றும் டி.சி.எஸ் வரி பிடித்தம் செய்யப்படும்.வாகனங்கள், ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட அசையா சொத்துக்கள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வாங்கும் போதும், விற்கும் போதும் அதிக வரி விதிக்கப்படும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

குறுவளமையம் (CRC / CPD) பயிற்சி பின்னூட்டம் பதிவு செய்யும் முறை (Training Feedback Module)...



>>> குறுவளமையம் (CRC / CPD) பயிற்சி பின்னூட்டம் பதிவு செய்யும் முறை (Training Feedback Module)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் (Kalaignar Magalir Urimai Thogai Scheme) பயன்பெற தகுதி உடையவர்கள், தகுதி இல்லாதவர்கள், விதிவிலக்குகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் (Eligibility, Ineligibility, Exceptions and Application Procedure for Kalaignar Women Entitlement Scheme)...



>>> கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் (Kalaignar Magalir Urimai Thogai Scheme) பயன்பெற தகுதி உடையவர்கள், தகுதி இல்லாதவர்கள், விதிவிலக்குகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் (Eligibility, Ineligibility, Exceptions and Application Procedure for Kalaignar Women Entitlement Scheme)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


யாருக்கெல்லாம் ₹1000 கிடையாது? - மகளிர் உரிமைத் தொகைக்கான வழிகாட்டு நெறிமுறையில் இடம்பெற்றுள்ளது.





ரூ.1000 உரிமைத்தொகை – விண்ணப்பிக்கும் நடைமுறைகள்:

i) குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ii) இத்திட்டதிற்கு பொது விநியோக நியாயவிலைக் கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

iii) ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.

குடும்பத்தலைவி வரையறை: 

i) குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.

ii) ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

iii) குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.

iv) குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவியாகக் கருதப்படுவார்.

v) திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.

vi) ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.

பொருளாதாரத் தகுதிகள்:

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்க்காணும் மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.

i) ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.

ii) ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.

iii) ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.

பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத்தகுதி இல்லாதவர்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும், கீழ்க்காணும் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர், மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதி இல்லாதவர் ஆவர்.

i) ரூபாய் 2.5 இலட்சத்திற்குமேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.

ii) குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.

iii) ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்குமேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.

iv) மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.

v) தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர). அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.

vi) சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.

vii) ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும்மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.
viii) ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.

மேற்கண்ட ஏதாவது ஒரு தகுதியின்மை வகைப்பாட்டில் வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி இல்லை.

விதிவிலக்குகள்

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. 

இவ்வகைப்பாட்டினர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களின் வழியாக வளரறி மதிப்பீடுகள் (FA) - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு (Formative Assessments through High Tech Labs - Release of Guidelines)...


>>> உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களின் வழியாக வளரறி மதிப்பீடுகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு (Formative Assessments through High Tech Labs - Release of Guidelines)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

புது ஊஞ்சல் - 01-15 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Puthu Oonjal - 01-15 July 2023 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> புது ஊஞ்சல் - 01-15 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Puthu Oonjal - 01-15 July 2023 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Why does heel pain occur?

குதிகால் வலி ஏற்படுவது ஏன்? - கு.கணேசன், மருத்துவர் Why does heel pain occur? தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சி...