கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.2023 - School Morning Prayer Activities...

     


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம்:அருளுடைமை


குறள் :248


பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

அற்றார்மற் றாதல் அரிது.


விளக்கம்:


பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.



பழமொழி :

Bitter is patience but sweet is its fruit


பொறுமை கசப்பானது அதன் பலன் இனிப்பு



இரண்டொழுக்க பண்புகள் :


1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.


2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.


பொன்மொழி :


தயங்குகிறவன் கை தட்டுகிறான் துணிந்தவன்

கை தட்டல் பெறுகிறான்

- ஜான் கென்னடி



பொது அறிவு :


1. தமிழ்நாட்டின் எஃகு தலைநகரம் என்று அழைக்கப்படுவது எது?


விடை: சேலம்


2. கலாச்சாரத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படுவது எது?


விடை: தஞ்சாவூர்


English words & meanings :


 bedraggled - wet or drenched and untidy. Adjective. மிகுதியான ஈரத்தோய்வுடன் மாசு படிந்த. பெயரளபடை 


ஆரோக்ய வாழ்வு : 


உளுத்தம் பருப்பு: கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 


ஆகஸ்ட்30


வாரன் எட்வர்ட் பஃபெட் அவர்களின் பிறந்தநாள் 


வாரன் எட்வர்ட் பஃபெட் (Warren Edward Buffett, பிறப்பு: ஆகஸ்ட் 30. 1930) ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரும், தொழிலதிபரும், பொதுக் கொடையாளரும் ஆவார். உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்க்சயர் ஹாதவே"[4] என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இவர் 2008 ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் மிகப் பெரிய பணக்காரராய் இடம்பெற்றார். அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு $62 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது


நீதிக்கதை


பீர்பாலின் புத்திசாலித்தனம்


 காபூல் அரசருக்கு, பீர்பாலின்


அறிவாற்றலையும்,


புத்திசாலித்தனத்தையும் கேள்விப்பட்ட


அவர், பீர்பாலின் அறிவை ஆராய்ந்து


அறிய ஆவல் ஏற்பட்டது.


 அதனால், காபூல் அரசர், ஒரு கடிதம்


எழுதினார். அதில் மேன்மை தாங்கிய


அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு,


ஆண்டவன் தங்களுக்கு நலன்கள்


பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக.


தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம்


அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்னு


எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன்


மூலமா அக்பருக்கு அனுப்பினாரு காபூல்


அரசர்.


 கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைச்சு, ஒரு


குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே


புரியவில்லையேன்னு குழம்பி,


பீர்பால்கிட்ட கடிதத்தை காட்டினாரு.பீர்பால் சிறிது நேரம் யோசிச்சாரு.


அப்புறம், அக்பரிடம் மூன்று மாதத்தில்


அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதி


அனுப்புங்கள் என்றார். அக்பரும்


அதேபோல் தபால் எழுதி அனுப்பினார்.


 பிறகு அக்பர், பீர்பாலிடம், ஒரு குடம்


அதிசயம் எப்படி அனுப்புவீர்? என்று


கேட்டார்.


 அதற்கு பீர்பால், மூன்று மாதம் கழித்து


அந்த அதிசயத்தைப் பாருங்கள் மன்னா


என்றார்.


 பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்து


ஒரு பூசணிக்கொடியில் காச்சிருந்த


பூசணிப்பிஞ்சு ஒன்றைக் கொடியுடன்


மண் குடத்திற்குள் வைத்து


வைக்கோலால் குடத்ததை மூடினார்.


 சிறிது நாட்களான பிறகு பூசணிப் பிஞ்சு


குடம் நிறையுமளவிற்கு


குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து


பெருத்திருந்தது. குடத்துக்குள் இருக்கும்


பூசணிக்காயை மட்டும்


வைத்துக்கொண்டு மற்றதை நீக்கி


விட்டார் பீர்பால்.


பிறகு அந்தக் குடத்தை அக்பரிடம்


காட்டினார் பீர்பால். அக்பருக்கு


ஆச்சரியம். குடத்தின் வாய் பகுதி உள்ளே


இருக்கும் பூசணிக்காயைவிட மிக


சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய


பூசணிக்காயை எப்படி நுழைத்தீர்கள்


எனக் கேட்டார். 


 பீர்பால் அதைப்பற்றி மன்னருக்கு


விளக்கிக் கூறினார். அந்தப்


பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல்


அரசருக்கு அதிசயம் என்று அனுப்பி


வைக்குமாறு கூறினார்.


 குடத்திற்குள் இருக்கும் பூசணியைப்


பார்த்த காபூல் அரசர், பீர்பாலோட புத்திக்


கூர்மையை எண்ணி வியப்பில்


ஆழ்ந்தார்.




நீதி :


புத்திசாலியாக இருந்தால் முடியாது என்பது கூட முடியும்.


இன்றைய செய்திகள்


30.08.2023


*சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைப்பு- மத்திய அரசு அதிரடி.


*காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும்- காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.


*சிறுநீரக செயல் இழப்பை கண்டுபிடிக்கும் 'ஸ்டிப்'  -சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் அறிமுகம்.


* வானில் இன்று நீல நிற முழு நிலவை பார்க்கலாம் - மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய நிகழ்வு.


*உலக பேட்மிட்டன் தரவரிசை: ஆறாவது இடத்திற்கு முன்னேறினார் எச்.எஸ். பிரனாய்.


*ஆசிய கோப்பை தொடரில் முக்கிய வீரர்கள் இல்லாத இலங்கை அணி அறிவிப்பு.


Today's Headlines


*Cooking gas cylinder price reduced by Rs 200- central government action.


 * Cauvery Management Authority orders to release water at the rate of 5000 cubic feet per second for 15 days.


 * Chennai Government Hospitals

Introduce 'STIP' to detect kidney failure 


 * A blue full moon can be seen in the sky today - a rare event that only happens once in three years.


 *World Badminton Rankings: H.S.Pranai advances to sixth position.  


 *Sri Lankan team announced  the list without key players for Asia Cup series.

 

திருச்சி, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வழங்கும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான பயிற்சிக் கையேடு - பணிப் பதிவேடு பராமரிப்பு, ஊதிய நிர்ணயம் மற்றும் விடுப்பு விதிகளின் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது (Training Manual for Headmasters of Higher Secondary Schools by Anna Administrative Staff College, Trichy - Service Record Maintenance, Pay Fixation and Leave Rules Enclosed)...


திருச்சி, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வழங்கும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான பயிற்சிக் கையேடு - பணிப் பதிவேடு பராமரிப்பு, ஊதிய நிர்ணயம் மற்றும் விடுப்பு விதிகளின் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது (Training Module for Headmasters of Higher Secondary Schools by Anna Administrative Staff College, Trichy - Service Record Maintenance, Pay Fixation and Leave Rules Enclosed)...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்று (29-08-2023) பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களுடனான சந்திப்புக்குப் பின் டிட்டோஜாக் இயக்கப் பொறுப்பாளர்கள் செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டி (Today (29-08-2023) after a meeting with the Directors of School Education and Elementary Education, TETOJAC Bearers gave an interview to the media)...


 இன்று (29-08-2023) பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களுடனான சந்திப்புக்குப் பின் டிட்டோஜாக் இயக்கப் பொறுப்பாளர்கள் செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டி (Today (29-08-2023) after a meeting with the Directors of School Education and Elementary Education, TETOJAC Bearers gave an interview to the media)...



>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும் (Click Here to See the Video)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.08.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.08.2023 - School Morning Prayer Activities...

    

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம்:அருளுடைமை


குறள் :248


பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

அற்றார்மற் றாதல் அரிது.


விளக்கம்:


பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.


பழமொழி :

Better later than never


காலம் தாழ்த்தினாலும் கருமத்தை முடிப்பது நல்லது



இரண்டொழுக்க பண்புகள் :


1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.


2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.


பொன்மொழி :


நான் மெதுவாக நடப்பவன் தான்


ஆனால் ஒருபோதும் நடப்பதை நிறுத்தப்போவது இல்லை


– ஆப்ரஹாம் லிங்கன்



பொது அறிவு :


1. தமிழ்நாட்டின் கதர் நகரம் என்று அழைக்கப்படுவது எது?


விடை: திருப்பூர்


2. தமிழ்நாட்டின் புனித பூமி என்று அழைக்கப்படுவது எது?


விடை: ராமநாதபுரம்



English words & meanings :


 an·ti·par·a·sit·ic - Destroying or inhibiting the growth and reproduction of parasites. Adjective. ஒட்டுண்ணியை அழிக்கும் எதிர்உயிரி. பெயரளபடை



ஆரோக்ய வாழ்வு : 


உளுத்தம் பருப்பு: கொழுப்பின் அளவைப் பராமரிப்பதன் மூலமும், பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியைத் தடுப்பதன் மூலமும் நமது இதய அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது



ஆகஸ்ட்29


தியான் சந்த் அவர்களின் பிறந்தநாள்


தியான் சந்த் (Dhyan Chand, இந்தி: ध्यान चंद); பிறப்பு: அலகாபாத்தில் ஆகத்து 29, 1905 – இறப்பு:திசம்பர் 3, 1979), என்பவர் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். வளைதடிப்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார் [1] 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் [2] 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் [3] தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். [4] 1928 முதல் 1964 வரையிலான காலங்களில் நடந்த எட்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இடம்பெற்றிருந்த ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்தில் ஏழு போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.



நீதிக்கதை


கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர்.


இரத்தினசாமி தனது வறுமையின் காரணமாக மகன்கள் இருவரையும் அழைத்து, நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா? என்று கேட்டார்.


கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், அப்பா, நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றான். இளையவன் முத்து, எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன் என்றான். இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான்.


ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், தம்பி கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது.


ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல, பணம் எனும் செல்வம் நிலையற்றது என்று கல்வியின் பெரும்மையை உணர்த்தினார்.


நீதி:


கல்வி யாராலும் அழிக்க முடியாத செல்வம.



இன்றைய செய்திகள்


29.08.2023


*இந்த மாதம் சந்திரன், அடுத்த மாதம் சூரியன் -அடுத்த அதிரடிக்கு தயாரான இஸ்ரோ!


*கனமழைக்கு வாய்ப்புள்ள ஐந்து மாவட்டங்களை எச்சரிக்கிறது வானிலை ஆய்வு மையம்.


*நான்கு மாநில அதிகாரிகள் இன்று ஆலோசனை. காவிரியில் தண்ணீர் திறக்க தமிழகம் மீண்டும் வலியுறுத்தல்.


*6 முதல் +2 வகுப்பு மாணவர்களுக்கு நடப்புக் கல்வி ஆண்டிலிருந்து பொது வினாத்தாள் முறை அமல்.


*நான்கு வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது டிராகன் விண்கலம் - நாசா தகவல்.


*19ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.


*மகளிர் ஸ்டீப்பிள் சேஸ் - தேசிய சாதனை படைத்த இந்திய வீராங்கனை - பாரு சவுத்ரி.


Today's Headlines


* This month the moon, next month the sun - Isro ready for the next action!


 *Meteorological Center warns of heavy rains in five districts.


 *Four state officials consult today.  Tamil Nadu once again urged the release of  Cauvery water.


 *For the students of class 6 to +2, common question paper system will be implemented from the current academic year.


 *Dragon spacecraft reaches International Space Station with four astronauts - NASA .


 *In the 19th World Athletics Championships, India's Neeraj Chopra threw the javelin with a maximum distance of 88.17 meters and won the gold medal.


 *Women's Steeplechase - National record holder by Indian athlete - Baru Chaudhary.

 

வகுப்பு 2 - ஆகஸ்ட் மாதாந்திர தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் - பருவம் 1 - அனைத்து பாடங்கள் (Class 2 - August Monthly Summative Assessment Question Papers - Term 1 - All Subjects)...

 

  வகுப்பு 2 - ஆகஸ்ட் மாதாந்திர தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் - பருவம் 1 - அனைத்து பாடங்கள் (Class 2 - August Monthly Summative Assessment Question Papers - Term 1 - All Subjects)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வகுப்பு 3 - ஆகஸ்ட் மாதாந்திர தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் - பருவம் 1 - அனைத்து பாடங்கள் (Class 3 - August Monthly Summative Assessment Question Papers - Term 1 - All Subjects)...

 

 

 வகுப்பு 3 - ஆகஸ்ட் மாதாந்திர தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் - பருவம் 1 - அனைத்து பாடங்கள் (Class 3 - August Monthly Summative Assessment Question Papers - Term 1 - All Subjects)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வகுப்பு 1 - ஆகஸ்ட் மாதாந்திர தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் - பருவம் 1 - அனைத்து பாடங்கள் (Class 1 - August Monthly Summative Assessment Question Papers - Term 1 - All Subjects)...

 

வகுப்பு 1 - ஆகஸ்ட் மாதாந்திர தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் - பருவம் 1 - அனைத்து பாடங்கள் (Class 1 - August Monthly Summative Assessment Question Papers - Term 1 - All Subjects)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers suffer as online training links are not available - Daily News

 இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காதால் ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி  Teachers suffer as online training links are not available - Dail...