கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் பட்டியலின பெண் சமைக்கக் கூடாது என அங்குள்ள பெற்றோர் சிலர் எதிர்ப்பு - "பள்ளிகளில் எவ்வித பாகுபாடும் காட்டக் கூடாது" ஆய்வுக்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை (Some of the parents protested that Scheduled Caste Woman should not cook in the breakfast scheme at Velanchettiuyur Panchayat Union Primary School near Aravakurichi, Karur District - "There should be no discrimination in schools", the district collector advised after the inspection)...

 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் பட்டியலின பெண் சமைக்கக் கூடாது என அங்குள்ள பெற்றோர் சிலர் எதிர்ப்பு - "பள்ளிகளில் எவ்வித பாகுபாடும் காட்டக் கூடாது" ஆய்வுக்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை (Some of the parents protested that Scheduled Caste Woman should not cook in the breakfast scheme at Velanchettiuyur Panchayat Union Primary School near Aravakurichi, Karur District - "There should be no discrimination in schools", the district collector advised after the inspection)...



தமிழ்நாடு முழுக்க உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே மதிய உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், காலை உணவுத்திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் 25 - ம் தேதி தொடங்கி வைத்தார். அந்த வகையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பள்ளியில் சமையல் செய்ய, மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண் பணியமர்த்தப்பட்டுள்ளார்.



இந்த பெண் பட்டியலின சமூகத்தை சேந்தவர் என்பதால், 'பள்ளியில் சமையல் பணி செய்யக்கூடாது. அப்படி செய்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்' என்று ஊர் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. சில தினங்களாகவே இந்த பிரச்சனை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியரிடம், சமூக ஆர்வலர் ராஜகோபால் மற்றும் தோழர் களம் அமைப்பைச் சேர்ந்தவர்களும் புகார் அளித்துள்ளனர்.


அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அப்பெண் சமைத்த உணவை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் சாப்பிட்டு பார்த்த பின்னர் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடைய பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடமும், 'பட்டியலினப் பெண் சமைத்தால், எங்கள் குழந்தை சாப்பிட முடியாது' என ஒருவர் கூறியுள்ளார்.



இதையடுத்து கோபமடைந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், 'அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்' என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். 



இந்நிலையில், கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம், வேலன் செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 25.08.2023 அன்று துவங்கப்பட்டது. இப்பள்ளியில், 30 மாணவர்கள் படித்து வருகிறார்கள். மகளிர் சுய உதவி குழு உறுப்பினரால் காலை உணவு சமைக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பிற பிரிவினரைச் சேர்ந்த பதினைந்து குழந்தைகள் காலை உணவை புறக்கணித்து வந்ததால், இது தொடர்பாக 29.08.2023 அன்று திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் அவர்களால் குழந்தைகளின் பெற்றோரை அழைத்து, 'பள்ளியில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைத்து குழந்தைகளும் உணவு உண்ண வேண்டும்' என்று தெரிவித்ததை தொடர்ந்து, 30.08.2023 அன்று இதர பிரிவிலிருந்து இரண்டு குழந்தைகள் மட்டுமே காலை உணவை உட்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, 05.09.2023 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர், பள்ளிக்கு திடீர் ஆய்வு செய்து உணவின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.



மேலும். காலை உணவை உண்ணாத 15 குழந்தைகளின் 10 பெற்றோர்களை விசாரணை செய்தபோது, பாலசுப்பிரமணியன் என்பவர் அருந்ததியர் பிரிவு பெண் சமைத்தால் தம்முடைய குழந்தை உணவு உண்ணாது என்றும் வேண்டுமென்றால் குழந்தையின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்ததையொட்டி, அவர்மீது மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பாலசுப்பிரமணியன் தனது குழந்தையும் காலை உணவை உண்ண சம்மதிக்கிறேன் என மன்னிப்பு கோரியதின் அடிப்படையில், அவர்மீது வழக்கு தொடுக்கப்படாமல் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். மேலும், மீதமுள்ள அனைத்து பெற்றோரும் தங்களது பிள்ளைகளை தொடர்ந்து காலை உணவு உண்ண ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து, "பள்ளிகளில் எவ்வித பாகுபாடும் காட்டக் கூடாது. இது தொடர்ந்து கண்காணிக்கப்படும்" என்று அனைவருக்கும் அறிவுரையையும், எச்சரிக்கையையும் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி : விகடன்




இனி EMISல் Attendance தவிர வேறு பணிகள் ஆசிரியர்களுக்கு இருக்காது - டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அளிக்கும் மேடையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் (In EMIS, Teachers will no longer have other duties except Attendance - Minister Anbil Mahesh said on the stage of Dr.Radhakrishnan Award Ceremony)...



 இனி EMISல் Attendance தவிர வேறு பணிகள் ஆசிரியர்களுக்கு இருக்காது - டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அளிக்கும் மேடையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் (In EMIS, Teachers will no longer have other duties except Attendance - Minister Anbil Mahesh said on the stage of Dr.Radhakrishnan Award Ceremony)...


>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.09.2023 - School Morning Prayer Activities...

அனைத்து ஆசிரிய சகோதர சகோதரிகளுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் (Happy Teacher's Day to all the Teachers)...



 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.09.2023 - School Morning Prayer Activities...



திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : புலால் மறுத்தல்


குறள் :254


அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்

பொருளல்ல தவ்வூன் தினல்.


விளக்கம்:


கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது.


பழமொழி :

Calm before storm


புயலுக்கு முன் அமைதி.


இரண்டொழுக்க பண்புகள் :


1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.


2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.



பொன்மொழி :


ஆசிரியரின் பெருமைகள் அனைத்தும் மாணவர்களிடமும், அவர் விதைத்த விதைகளின் வளர்ச்சியிலும் உள்ளன. – டிமிட்ரி மெண்டலீவ்


பொது அறிவு :


1.ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?



விடை: 1919


2. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?


விடை: கங்கை



English words & meanings :


 Greffier - பதிவாளர் 

fricassee - பறவை அல்லது சிறு விலங்கின் சுவையூட்டப்பட்ட பொரித்த இறைச்சி


ஆரோக்ய வாழ்வு : 


 சோம்பு: சோம்பு கசாயம் செஞ்சு குடிச்சு வந்தா வறட்டு இருமல், மூக்குல நீர் வடியுறதெல்லாம் சரியாகும்.”


செப்டம்பர் 05


வ.உ.சி. அவர்களின் பிறந்தநாள்


வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை[2](V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)[3] ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். கோயம்புத்தூர் சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைகளைச் செய்தார். சணல் நூற்றார். அப்பொழுது அவரது உள்ளங்கைகளில் இருந்து ரத்தம் கசிந்தது. கல் உடைத்தார். மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார்.


இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள்


சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ( 5 செப்டம்பர் 1888 – 17 ஏப்ரல் 1975[1]) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


மு. மேத்தா அவர்களின் பிறந்தநாள்


மு. மேத்தா (Mu. Metha) (முகமது மேத்தா, பிறப்பு: செப்டம்பர் 5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.இவர் எழுதிய நூலான ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்..


அன்னை தெரசா அவர்களின் நினைவுநாள்


அன்னை தெரேசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும்[1] இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார். இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். 


நீதிக்கதை


ஊருக்கு ஒதுக்குப் புறமான ஒரு வீட்டில், எலிகள்  மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வந்தன. வீட்டின் அருகில் இருந்த நிலங்களில் உள்ள தானியங்களை சாப்பிட்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்து வாழ்ந்தன. ஒருநாள் அந்த வீட்டிற்கு அழையாத விருந்தாளியாக கொழுத்த பூனை வந்து சேர்ந்தது. அதன் இஷ்டப்படி எலிகளை வேட்டையாடிக் கொன்று தின்றது.


எலிகள் உயிர் பிழைப்பதற்காகத் தப்பி ஓடின. வீட்டின் ஒரு மூலையில் அனைத்தும் ஒன்று சேர்ந்தன. அவை கூட்டம் போட்டுத் தங்கள் குறைகளைக் கூறின.


வயதான எலி, பிள்ளைகளே, கவலைப்படாதீர்கள், இப்பொழுது நாம் இங்கு கூடியுள்ள, பொந்து (வளை) தான் நமக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும். எனவே, முடிந்த வரை நாம் வெளியே செல்லாமல் இங்கேயே இருந்து விடுவோம் என ஆலோசனை வழங்கியது.


அத்திட்டம் நல்லதாக இருப்பதால், அதனை அனைத்து எலிகளும் ஏற்றுக் கொண்டன. எலிகள் யாவும் வளைக்குள்ளேயே இருந்தன. எலிகளின் நடமாட்டம் குறைந்ததால், பூனைக்கு இரை கிடைக்காமல் போனது.


எனவே மயங்கியது போல் நடித்தது. பூனை இறந்து விட்டது என நினைத்து, எலிகள் வெளியே நடமாட ஆரம்பிக்கும். அப்பொழுது எலிகளைப் பிடித்து விடலாம் என தனக்குள் கணக்குப் போட்டது.


மயங்கியது போல் நடித்த பூனை, அப்படியே தூங்கியும் விட்டது. எவ்வளவு நேரம் தூங்கியதோ பாவம், பசிக் களைப்பில் அதிக நேரம் தான் தூங்கி விட்டது.


அதிகப் பசியுடன் கண்விழித்துப் பார்த்தது. சற்று தூரத்தில் எலிகள் இஷ்டம் போல் விளையாடிக்கொண்டிருந்தன. 'ஆகா, எவ்வளவு தைரியமாக விளையாடுகின்றன. இவைகளை விட்டேனா பார், இன்று இவை நமக்கு நல்ல இரை தான்” என மகிழ்ந்து பூனை தாவிக் குதித்து ஓடியது.


திடீரென வந்த மணியோசையைக் கேட்ட எலிகள் தலை தெறிக்க ஓடித் தப்பியது. பூனைக்கும் ஒரே ஆச்சரியமாகி விட்டது. மீண்டும் ஓடியது மணியோசை எழுந்தது. இந்த மணியோசை எங்கிருந்து வந்ததென ஆராய்ச்சி செய்தது. பூனை தூங்கும் பொழுது அதன் கழுத்தில் மணியைக் கட்டி விட்டன கெட்டிக்கார எலிகள்.


நீதி : வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. யானைக்கும் அடி சறுக்கும்.


இன்றைய செய்திகள்


05.09.2023


*40 செ.மீ. உயர்ந்து 40 செ.மீ. பறந்த விக்ரம் லேண்டர் -  இஸ்ரோ தகவல்.


*தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.


* அணை பகுதிகளில் தொடர் மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்வு.


*பள்ளிக்கல்வித்துறை சார்பில் 386 பேருக்கு நல்லாசிரியர் விருது நாளை வழங்கப்படுகிறது.


*அமெரிக்க ஓபன் டென்னிஸ் : டியாபோ, கோகோ காப்  காலிறுதிக்கு முன்னேற்றம்.


*மூன்றாவது டி20 போட்டி - 74 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி.


Today's Headlines


*40 cm.  40 cm high.  Vikram Lander flew - ISRO information.


 * Chance of rain for five days in Tamil Nadu 9 districts including Tiruvallur will receive heavy rain.


 * Continuous rain in dam areas: Chervalar dam water level rises by 11 feet in a single day.


 * 386 people will be given Best Teacher Award tomorrow by the Department of Education.


 *US Open Tennis: Diabo, Coco Cope advance to quarterfinals.


 *3rd T20I - New Zealand win by 74 runs.

 

29.08.2023, 30.08.2023, 31.08.2023 மற்றும் 01.09.2023 ஆகிய நாட்களில் நடந்த 6, 7, 8 & 9ஆம் வகுப்புகளுக்கான கற்றல் விளைவுகள் மற்றும் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு விடைக்குறிப்புகள் (Answer Keys of Learning Outcomes and Aptitude Merit Based Assessment Exam for Class 6, 7, 8 & 9 held on 29.08.2023, 30.08.2023, 31.08.2023 and 01.09.2023)...



 29.08.2023, 30.08.2023, 31.08.2023 மற்றும் 01.09.2023 ஆகிய நாட்களில் நடந்த 6, 7, 8 & 9ஆம் வகுப்புகளுக்கான கற்றல் விளைவுகள் மற்றும் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு விடைக்குறிப்புகள் (Answer Keys of Learning Outcomes and LOs & Competency Based  Assessment Exam for Class 6, 7, 8 & 9 held on 29.08.2023, 30.08.2023, 31.08.2023 and 01.09.2023)...



>>> 6th Std - Answer Key - LOs & Competency Based  Assessment Exam...



>>> 7th Std - Answer Key - LOs & Competency Based  Assessment Exam...



>>> 8th Std - Answer Key - LOs & Competency Based  Assessment Exam...



>>> 9th Std - Answer Key - LOs & Competency Based  Assessment Exam...



>>> 7th Std - LOs & Competency Based  Assessment Exam - Science - Changed Question...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.09.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.09.2023 - School Morning Prayer Activities...



திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : புலால் மறுத்தல்


குறள் :253


படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்

உடல்சுவை உண்டார் மனம்.


விளக்கம்:


படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல


பழமொழி :

Brids of same feather flock together


இனம் இனத்தோடு சேரும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.


2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.



பொன்மொழி :


நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக்

கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்

பட்டிருக்கிறேன். – மாவீரன் அலெக்ஸôண்டர்


பொது அறிவு :


1 ஈராக் நாட்டின் தலைநகரம்

விடை: பாக்தாத்

2. இந்திய அறிவியல் கழகம் Indian Institute of Science (IISC) அமைதுள்ள நகரம்?

விடை: பெங்களூர்


English words & meanings :


 ideal - உயர்ந்த சிந்தனையுள்ள

 inoculate- நோய்த்தடுப்பு ஊசி


ஆரோக்ய வாழ்வு : 


சோம்பு: சாப்பிட்டதக்கு அப்புறம் தினமும் கொஞ்சம் சோம்ப எடுத்து வாயில போட்டு மென்னு, சாற கொஞ்சம் கொஞ்சமா விழுங்கி வந்தா உணவு சீக்கிரமா ஜீரணமாகும். அதோட வாயுத் தொல்லையும் சரியாகும்.


நீதிக்கதை


உண்மையே உயர்வு.


மருதமலை நாட்டை நேர்மையான அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் ஒருநாள் மாறுவேடத்தில் நகரத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்.


இரவு நேரம், இளைஞன் ஒருவன் அரண்மனையை நோக்கி வருவதைப் பார்த்தார்.


“தம்பி! நீ யார்? இந்த நள்ளிரவு நேரத்தில் அரண்மனைக்கு எதற்காகச் செல்கிறாய்?” என்று கேட்டார்.


“திருடச் செல்கிறேன்” என்றான் அவன்.


“திருடுபவன் எவனாவது உண்மையைச் சொல்வானா? அப்படிச் சொன்னால் சிக்கிக் கொள்ள மாட்டானா” என்று கேட்டார் அரசர்.


“திருடனான என்னிடம் எல்லாத் தீய பழக்கங்களும் இருந்தன. என் தாய் என்னைத் திருத்த முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை. சாகும் நிலையில் இருந்த அவர் என்னை அழைத்தார். எப்போதும் உண்மையே பேச வேண்டும் என்று என்னிடம் வாக்குறுதி வாங்கினார். அவரின் நினைவாக, அந்த வாக்குறுதியைக் காப்பாற்றி வருகிறேன்” என்றான் திருடன்.


“தம்பி! நீ அரண்மனையில் திருட நான் உதவி செய்கிறேன். கிடைப்பதில் பாதிப் பங்கு எனக்கு தர வேண்டும்” என்றார் அரசர்.


திருடனும் ஒப்புக் கொண்டான். அரண்மனைக் கருவூலத்திற்குள் எப்படி நுழைவது என்று சொல்லித் தந்தார் அவர்.


கருவூலத்திற்குள் சென்ற அவன் இரண்டு வைரங்களுடன் வந்தான்.


“கருவூலத்தில் மூன்று வைரங்கள் இருந்தன. மூன்றையும் இழந்தால் அரசர் வருந்துவார். அதனால் ஒன்றை அங்கேயே வைத்துவிட்டு இரண்டை எடுத்து வந்தேன். உம் பங்கிற்கு ஒன்று” என்று ஒரு வைரத்தை அரசரிடம் தந்தான்.


மறுநாள் அரியணையில் வீற்றிருந்தார் அரசர். பரபரப்புடன் அங்கே வந்த அமைச்சர்,அரசே! கருவூலத்தில் இருந்த வைரங்கள் மூன்றும் திருடு போய்விட்டன” என்றார்.


“மூன்று வைரங்களுமா திருடு போய் விட்டன?” என்று கேட்டார் அரசர்.


“ஆம் அரசே” என்றார் அமைச்சர்.


“திருடன் பொய் சொல்லி இருக்க மாட்டான். எஞ்சிய ஒரு வைரத்தை இவர்தான் திருடி இருக்க வேண்டும்” என்று நினைத்தார் அரசர்.


வீரர்களை அழைத்த அவர், “அமைச்சரைச் சோதனை இடுங்கள்” என்று கட்டளை இட்டார்.


வீரர்கள் அவர் இடுப்பில் ஒளித்து வைத்திருந்த வைரத்தை எடுத்தனர்.


“வீரர்களே! இன்ன இடத்தில் இன்ன பெயருடைய இளைஞன் இருப்பான் அவனை அழைத்து வாருங்கள்” என்று கட்டளை இட்டார்.


அவர்களும் அவனை அழைத்து  வீற்றிருந்தவரைப் பார்த்தான் திருடன். நேற்றிரவு தன்னைச் சந்தித்தவர் அவர் என்பதை அறிந்தான்.


என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ என்று நடுங்கினான்.


“அமைச்சரே! இவன் திருடனாக இருந்தும் உண்மை பேசினான். நேர்மையாக நடந்தும்s கொண்டான். நீர் அமைச்சராக இருந்தும் திருடினீர். பொய் சொன்னீர். அதற்காக உம்மைச் சிறையில் அடைக்கிறேன்.


“இளைஞனே! திருட மாட்டேன் என்று வாக்குறுதி கொடு உன்னை அமைச்சராக நியமிக்கிறேன்” என்றார் அவர்.


“அரசே! வறுமையில் வாடியதால் திருடினேன். இனி திருட மாட்டேன்” என்றான் திருடன்.


அவனைப் பாராட்டி அந்நாட்டின் அமைச்சராக நியமித்தார் அரசர்.


உண்மையே என்றும் உயர்வு தரும்.


இன்றைய செய்திகள்


04.09.2023


*சென்னையின் பல இடங்களில் கனமழை - மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு.

தமிழகம் புதுச்சேரியில் ஆறு நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு.


*வாணியம்பாடியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு.


*' ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆய்வு பணி தொடக்கம் விரைவில் அறிக்கை தாக்கல்.


*காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்.


* ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது - இஸ்ரோ தகவல்.


*ஜிம்பாவே முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழப்பு - பிரபலங்கள் இரங்கல்.


 *ஆசிய ஆண்கள் 5 பேர் ஹாக்கி - பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.


Today's Headlines


*Heavy rain in many parts of Chennai - City Commissioner Radhakrishnan survey.

 Tamil Nadu Puducherry is likely to receive six days of light rain.


 * One person died due to swine flu in Vaniyambadi.


 * 'One country, one election' survey work to start, report to be submitted soon.


 *Karnataka government filed a review petition in the Cauvery Management Authority.


 * Aditya L-1 spacecraft successfully lifted into orbit - ISRO informs.


 *Zimbabwe Star cricketer Heath Streak passed away   - Celebrities mourn.


  *Asian  5 men's hockey - India beat Pakistan and won the title.

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.09.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.09.2023 - School Morning Prayer Activities...

        


திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : புலால் மறுத்தல்


குறள் :252


பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி

ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.


விளக்கம்:


பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.


பழமொழி :

Blue are the hills that are far away


இக்கரைக்கு அக்கரை பச்சை.


இரண்டொழுக்க பண்புகள் :


1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.


2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.


பொன்மொழி :


காலையில் கண் விழித்ததும், எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நினைத்தால் அது பிரகாசமான நாள். இல்லை என்றால், இல்லை.

எலன் மாஸ்க்.


பொது அறிவு 


1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?


விடை: வேளாண்மை


2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?


விடை: ஆந்திரப்பிரதேசம்

English words & meanings :


 longing - a yearning desire. ஏக்கம்.mediocre-not very good,சாதாரண

ஆரோக்ய வாழ்வு : 


உளுத்தம் பருப்பு தோலில் ஏற்படும் தழும்புகள், ஆதீத சூரிய ஒளியால் தோல் கருத்துப் போதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை கருப்பு உளுந்து அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் தீர்கிறது.


செப்டம்பர் 02




உலகத் தேங்காய் நாள் (world coconut day) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.[1] 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது.[2]


வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது


நீதிக்கதை


நமக்கு வரும் கஷ்டமே நமக்கு அளிக்கப்பட்ட உதவி..!! அவன் மிகவும் இளகிய மனம் படைத்தவன். யாருக்கும் உதவும் உள்ளம் கொண்டவன். அன்று வீட்டின் முற்றத்தில் மறந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். வீட்டு முன் தோட்டத்தில் உள்ள ரோஜா செடிகளை எதேச்சையாகப் பார்த்த போது, ஒரு குட்டி வண்ணத்து பூச்சி அவன் கண்ணில் பட்டது . மகரயாழ் அந்த வண்ணத்து பூச்சி தனது கூட்டுப்புழு கூட்டிலிருந்து வெளி வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இந்த சின்ன வண்ணத்து பூச்சிக்கு பறந்து வர எவ்வளவு ஆசை இருக்கும் என்று நினைத்த மாத்திரத்தில் அதற்கு உதவ நினைத்தான் . ஒரு கத்தரிக்கோலை எடுத்து வந்தான், வண்ணத்து பூச்சிக்கு சுற்றி உள்ள கூட்டை ஆங்காங்கே வெட்டி விட்டான் . அவன் மனதில் ஒரு பரம ஆனந்தம், வண்ணத்து பூச்சிக்கு விடுதலை அளித்ததற்காக ! நேரம் கடந்தது, ஆனால் மகரயாழ் வண்ணத்துப்பூச்சி வெளியே வந்தபாடில்லை ! சிறிது நேரத்தில் எறும்புகள் அதை மொற்றியது . வண்ணத்துப் பூச்சி இறந்து விட்டிருந்தது ! அவன் திகைத்து நின்றான். கூட்டுப்புழு கூட்டை உடைத்து வெளிவரும் போது வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளுக்கு பறப்பதற்குத் தேவையான சக்தியும் சில சுரப்பிகளும் சுரக்கும். அதற்கு உதவும் நோக்கத்தில் வெட்டி விடப்பட்ட கூடு, அதற்கு எமனாகி விட்டது | நமக்கு வரும் கஷ்டங்கள், நம்மை வாழ்விப்பதற்காக கொடுக்கப்படும் பயிற்சி . அதனால் அதை ஏற்றுக் கொண்டு பயிலுவோம், எனக்கு உதவ யாரும் இல்லை என்று நினைக்காதே, அந்த கஷ்டமே உனக்கு இறைவனால் அளிக்கப்பட்ட உதவி.


இன்றைய செய்திகள்


02.09. 2023


* ஆதித்யா எல் -1 கவுண்ட்டவுன் தொடங்கியது.


*அடுத்த இலக்கு ககன்யான் திட்டம் - இஸ்ரோ தலைவர் தகவல்.


* "சந்திராயன் 3" வெற்றி பாடத்திட்டத்தில் இடம் பெறும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 


*சென்னை மெட்ரோ ரயிலில் ஆகஸ்ட் மாதம் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் பயணம்.


*சர்வதேச அளவில் 8வது இடம்: இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் ஆனார் குகேஷ். இந்திய செஸ் தரவரிசையில் முதல் 3 இடங்களில் தமிழக வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


* சர்வதேச கிரிக்கெட்டில் முதல் திருநங்கை - சாதனை படைக்கும் கனடா அணி.


Today's Headlines


* Aditya L-1 countdown begins.


 *Next target Suganyaan project - ISRO chief informs.


 * "Chandrayaan 3's success landing will be featured in the  syllabus: Minister Anbil Mahesh Poiyamozhi


 *85.89 lakh passengers traveled in Chennai Metro train in August alone.


 *Internationally ranked 8th: Gukesh became India's number one chess player.  It is noteworthy that there are players from Tamil Nadu in the top 3 positions in the Indian chess rankings.


 * First transgender team in international cricket - record-breaking Canada team.

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது! குழந்தைகளை ஒப்பிடுவதால் எந்த நன்மையும் ஏற்படாது - சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர், பேராசிரியர். வி.காமகோடி (Every child is unique! No good can result from comparing children! - Director, @iitmadras, Prof. V. Kamakoti)...

 ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது! குழந்தைகளை ஒப்பிடுவதால் எந்த நன்மையும் ஏற்படாது - சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர், பேராசிரியர். வி.காமகோடி (Every child is unique! No good can result from comparing children! - Director, @iitmadras, Prof. V. Kamakoti)...


ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது! குழந்தைகளை ஒப்பிடுவதால் எந்த நன்மையும் ஏற்படாது! வாழ்வின் எல்லாத் துறைகளிலும் வெற்றியும் முக்கியத்துவமும் சாத்தியம்! உணரப்பட்ட தோல்விகளால் ஏற்படும் ஏமாற்றங்களுக்கு நாம் பலியாகக்கூடாது! சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர், பேராசிரியர். வி. காமகோடி, ஒவ்வொரு துறையிலும் உள்ள மகத்தான சாத்தியக்கூறுகள் மற்றும் குழந்தைகளின் லட்சியங்கள், திறமைகள் மற்றும் திறன்களை கணக்கில் எடுத்துக்கொண்டு மாணவர்களை தொழில்முறை சிறப்பிற்கு வழிநடத்தும் வித்தியாசமான கண்ணோட்டத்தை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து எழுதுகிறார். பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை!


Every child is unique!


No good can result from comparing children!


Success and significance are possible in all walks of life!


We should not fall prey to disappointments caused by perceived failures! 


Director, @iitmadras, Prof. V. Kamakoti writes on immense possibilities in every field and the need to apply a different lens in guiding students to professional excellence which takes into account the child’s ambitions, aptitudes, and abilities.


A must read for all parents, students and teachers!








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஐஐடி-மெட்ராஸ் இயக்குநர் தனது நுழைவுத் தேர்வில் மோசமாக மதிப்பெண் பெற்றதிலிருந்து ஜேஇஇ தலைவராவதற்குப் பயணத்தில் இருக்கிறார். 

‘சாதனை மதிப்பெண்களுடன் இணைக்கப்படவில்லை’: 

நுழைவுத் தேர்வில் மோசமாக மதிப்பெண் பெற்றதிலிருந்து ஜேஇஇ தலைவராவதற்குப் பயணத்தில் ஐஐடி-மெட்ராஸ் இயக்குநர் "வாழ்க்கை கல்வியாளர்களுக்கு அப்பாற்பட்டது. இதை உணர்ந்துகொள்வது நம் குழந்தைகளை உணர்ச்சி ரீதியாக வலுவாகவும் நேர்மறையாகவும் இருக்க வழிகாட்ட உதவும். நமது மதிப்புமிக்க குழந்தைகள் உணரப்பட்ட தோல்விகளால் ஏற்படும் ஏமாற்றங்களுக்கு இரையாவதைத் தடுக்க, வலிமையும் நேர்மறையும் நம் நாட்டிற்கு அவசியம்" என்று எழுதுகிறார். 

வி. காமகோடி, இயக்குனர் ஐஐடி மெட்ராஸ். 

குழந்தைகளை ஒப்பிடுவதால் எந்த நன்மையும் ஏற்படாது என்கிறார் ஐஐடி-மெட்ராஸ் இயக்குநர்.  "தோல்வி" என்று எதுவும் இல்லை. காலங்காலமாக அறிவாளிகள் இப்படிச் சொல்லி இருக்கிறார்கள். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள், “தோல்வி = கற்றலில் முதல் முயற்சி” என்றார்.


டாக்டர் கலாமின் வரையறையை என்னை விட எந்த ஒரு தனிமனிதனும் பொருத்தமாக இருக்க முடியாது. 1985-ல் இளம் JEE ஆர்வலராக, நான் வேதியியலில் 100க்கு ஒற்றை இலக்க மதிப்பெண் எடுத்தேன். அந்த குறிப்பிட்ட தேர்வு நாள் எனக்கு சாதகமாக இல்லை. இன்னும், பல தசாப்தங்களுக்குப் பிறகு, நான் JEE தலைவராக ஆனேன், இதன் மூலம் சாதனை என்பது மதிப்பெண்கள், மதிப்பெண்கள் மற்றும் கிரேடுகளுடன் இணைக்கப்படவில்லை என்பதை நிரூபித்தேன். எதிர்பாராத அல்லது சாதகமற்ற முடிவுகளின் விரக்தியை எதிர்கொள்ளும் ஒரு இளைஞருக்கு, தோல்வி உண்மையானதாகவும் வாழ்க்கையை விட பெரியதாகவும் தோன்றலாம். இந்த ஏமாற்றம் பெரும்பாலும் நம்பத்தகாத எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்களின் திறன்கள் அல்லது திறமைகள் மற்றும் அவர்கள் உந்தப்பட்ட துறை ஆகியவற்றுக்கு இடையே உள்ள பொருத்தமின்மை காரணமாக எழுகிறது. இந்த விரக்தியைச் சமாளிப்பதற்கு, மாணவர்களாலும் அவர்களின் பராமரிப்பாளர்களாலும், கண்ணோட்டத்தில் கடுமையான மாற்றம் தேவைப்படுகிறது. "தோல்வி" என்பது எவ்வாறு நம்மால் உணரப்படுகிறது என்பது செயல்பாடு நமக்கு என்ன அர்த்தம் என்பதன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் அனுபவிக்கும் ஒரு செயலில் ஈடுபட்டு,  தடையை எதிர்கொண்டால், அதை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக உணர்கிறோம். எனக்கு பாட்டு பிடிக்கும். நான் பார்வையாளர்களுக்கு முன்னால் வயலின் வாசித்து, ஒரு குறிப்பைத் தவறவிட்டால், என் விரல் கச்சிதமாகச் செய்ய நான் விடாமுயற்சியுடன் வேலை செய்கிறேன். எவ்வாறாயினும், நாம் அனுபவிக்காத ஒன்றைச் செய்ய நிர்பந்திக்கப்படும்போது, ​​​​தோல்வி ஒரு சுமையாக மாறி, அனுபவத்தைப் பற்றிய நமது விரக்தியையும் எதிர்மறையையும் அதிகரிக்கிறது.


பெற்றோர்களாகிய நாம் இதைப் புரிந்துகொள்வது முக்கியம். நம் பிள்ளைகள் தங்கள் செயல்பாடுகளில் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் இருந்தால், அவர்கள் கஷ்டங்களை சிறப்பாக கையாள முடியும். பெரும்பாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான ஒரு பார்வையைக் கொண்டுள்ளனர், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆனால் குழந்தைகளின் நலன்களுடன் ஒத்துப்போகாத தரிசனங்கள். கடுமையான பயிற்சி மையங்களில் குழந்தைகளைச் சேர்ப்பது நினைவுக்கு வருகிறது. தனிப்பட்ட லட்சியங்கள் மற்றும் அபிலாஷைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு, முதன்மையான நிறுவனங்களில் சேர, இந்தப் பயிற்சி மையங்கள் மிகப்பெரிய மதிப்புடையதாக இருக்கும். ஆனால் பெற்றோர்கள் குழந்தைகளை இந்த நிறுவனங்களுக்கு அனுப்புவது அவர்களின் குழந்தைகளின் பார்வை மற்றும் குழந்தைகளின் திறமை அல்ல என்பதற்காகவா? பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வழிநடத்தக்கூடாது என்று நான் பரிந்துரைக்கவில்லை. நமது கலாச்சாரம் மாதா-பிதா-குரு-தெய்வம் - தாய், தந்தை, ஆசிரியர் மற்றும் பின்னர் கடவுள் ஆகியவற்றின் படிநிலையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, மேலும் வளர்ந்து வரும் சிக்கல்களில் குழந்தைகளுக்கு உதவுவதற்கு பெற்றோரின் ஆதரவு முக்கியமானது. 


நம் குழந்தைகளுக்கு நாம் கற்பிக்கக்கூடிய மிக மதிப்புமிக்க பாடம் என்னவென்றால், வெற்றியும் முக்கியத்துவமும் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஆர்வம், விடாமுயற்சி மற்றும் விஷயங்களைக் காணும் விருப்பத்தின் மூலம் சாத்தியமாகும். எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் வழங்கும் வேறு எந்த வழிகாட்டுதலும் குழந்தையின் லட்சியங்கள், திறமைகள் மற்றும் திறன்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது பொறியியல் மற்றும் மருத்துவம் அல்ல என்பதை பெற்றோர்களாகிய நாம் உணர வேண்டும். நவீன உலகம் நமது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு களங்களில் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. ஆம், ஐஐடிகள் விதிவிலக்கான கல்வி நிறுவனங்கள், ஆனால் இந்திய இளைஞர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மட்டும் அல்ல. 'சாம்பியன்ஸ் ஆஃப் சென்னை' விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு சமீபத்தில் கிடைத்தது, அங்கு விருது பெற்றவர்கள், அறிவார்ந்த மற்றும் கடின உழைப்பாளி இளைஞர்கள் அனைவரும் ஐ.ஐ.டி. சுயபரிசோதனைக்கு உத்தரவாதம் அளிக்கும் மற்றொரு அம்சம் இது. குழந்தைகளை ஒப்பிடுவதால் எந்த நன்மையும் ஏற்படாது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது, மேலும் இதுபோன்ற ஒப்பீடுகள் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தலாம், குறிப்பாக குழந்தைகள் பெற்றோரின் ஒப்புதல் மற்றும் ஊக்கத்தை நாடும் வயதில். எந்தவொரு தேர்விலும் மதிப்பெண்கள், ரேங்க்கள் மற்றும் மதிப்பெண்கள் ஆகியவை எண்ணியல் பிரதிநிதித்துவங்கள் மற்றும் மாணவர்களின் ஒட்டுமொத்த புத்திசாலித்தனத்தை பிரதிபலிக்காது என்பதை பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் புரிந்துகொள்வது அவசியம். விடாமுயற்சி வெற்றிக்கு சந்தேகத்திற்கு இடமின்றி அவசியம் என்றாலும், எண்களை நிர்ணயிப்பது தேவையற்ற மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். அதிகப்படியான அழுத்தம் காரணமாக மாணவர்களின் உணர்ச்சிகள் எதிர்பாராத விதமாகவும் திடீரெனவும் மகிழ்ச்சியிலிருந்து சோகத்திற்கு மாறும் நிகழ்வுகள் உள்ளன, சில சமயங்களில் துரதிர்ஷ்டவசமான மற்றும் சோகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.


கணினி அறிவியல் போன்ற சில துறைகளைத் தொடர குழந்தைகள் மீது அதிக அழுத்தம் உள்ளது, இருப்பினும், எந்த ஒன்றும் மற்றொன்றை விட தாழ்ந்ததல்ல. சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களும் செய்துள்ளனர். ஐஐடி மெட்ராஸில் தொழில் ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி மூலம் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் துறை ஓஷன் இன்ஜினியரிங் ஆகும். நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை நாம் பெற்றுள்ள நிலையில், விண்வெளிப் பொறியாளர்களின் பங்களிப்பை நாம் புறக்கணிக்கலாமா? 


உயிரியல் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் இல்லாமல் உலகம் COVID-19 இல் இருந்து தப்பித்திருக்க முடியுமா? குழந்தை எதிர்கொள்ளும் சவால்கள் எப்போதும் கல்விக் காரணங்களால் ஏற்படாது. எந்த குடும்பமும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை, மேலும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள், மோதல்கள் மற்றும் நிதி சிக்கல்கள் போன்றவற்றால் குழந்தை பாதிக்கப்படலாம். குழந்தையின் உணர்ச்சி நிலையை மோசமாக பாதிக்காத வகையில் பிரச்சினைகளை கையாள்வது பெரியவர்களின் பொறுப்பாகும். அந்த வயதில் தனிப்பட்ட உறவுகளை நிர்வகிப்பது கடினமாக இருக்கும். கடினமான காலங்களில் குழந்தைகளுடன் இருப்பது முக்கியம். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மாணவர்களின் நலன் குறித்து கவலை தெரிவிக்கும் போது, ​​பெற்றோர்கள் உடனடியாக பதிலளிக்க வேண்டும். தொடர்ந்து இணைந்திருப்பது மற்றும் அசைக்க முடியாத உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குவது, கல்வி மற்றும் தனிப்பட்ட சவால்களை குழந்தைகள் சமாளிக்க உதவும். 


இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஆசிரியராக இருந்த எனது தனிப்பட்ட அவதானிப்பு என்னவென்றால், கூட்டுக் குடும்பத்தில் வளர்க்கப்படும் ஒரு குழந்தை, கூட்டுக்குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு குழந்தையை விட உணர்ச்சி ரீதியாக மிகவும் நிலையானது. தாத்தா பாட்டி மற்றும் நீண்ட உறவினர்களின் ஆதரவும் பாசமும் குழந்தைகளில் நேர்மறையை வளர்க்கும். சமீப காலங்களில் தனி குடும்பங்கள் வழக்கமாகிவிட்டாலும், தாத்தா, பாட்டி மற்றும் பிற உறவினர்களுடன் சுறுசுறுப்பாக தொடர்பு கொள்ள குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். வாழ்க்கை கல்விக்கு அப்பாற்பட்டது. இதை உணர்ந்துகொள்வது நம் குழந்தைகளை உணர்ச்சி ரீதியாக வலுவாகவும் நேர்மறையாகவும் இருக்க வழிகாட்ட உதவும். உணரப்பட்ட தோல்விகளால் ஏற்படும் ஏமாற்றங்களுக்கு நமது மதிப்புமிக்க குழந்தைகள் இரையாவதைத் தடுக்க, வலிமையும் நேர்மறையும் நம் நாட்டிற்கு அவசியம். மகிழ்ச்சி என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு. (ஆசிரியர் ஐஐடி மெட்ராஸில் இயக்குனர்)


IIT-Madras director on his journey from scoring poorly in his entrance test to becoming JEE chairperson

‘Achievement is not linked to marks’: IIT-Madras director on his journey from scoring poorly in his entrance test to becoming JEE chairperson

"Life extends beyond academics. Just realising this can help us guide our children to be emotionally strong and positive. Strength and positivity are essential for our country, if we are to stop our valuable children from falling prey to disappointments caused by perceived failures" writes V Kamakoti, director IIT Madras.


No good can result from comparing children, says IIT-Madras director.


(A Lesson from IIT is a weekly column by an IIT faculty member on learning, science and technology on campus and beyond. The column appears every Friday)


There is nothing called “failure”. Wise people through the ages have said so. The honourable former President of India, Bharat Ratna Dr APJ Abdul Kalam said, “FAIL = First Attempt In Learning.”


No individual can embody Dr Kalam’s definition more aptly than myself. As a young JEE aspirant in 1985, I scored a single-digit mark out of 100 in Chemistry. That particular day of the examination was unfavourable to me. And yet, decades later, I became the JEE Chairman, thereby proving that achievement is not linked to scores, marks and grades.


For a youngster faced with the frustration of unexpected or unfavourable results, failure may appear real and larger than life. This frustration often arises because of unrealistic expectations and the mismatch between their capabilities or aptitudes and the field they are thrust into. Dealing with this frustration requires a drastic change in perspective, both by the student and by us, their caretakers.


How “failure” is perceived by us is shaped by what the activity means to us. If we are engaged in something we enjoy and encounter a roadblock, we perceive it as an opportunity to improve. I love music. When I play the violin in front of an audience and miss a note, I diligently work towards perfecting my fingering and bowing. However, when we are forced to do something that we do not enjoy and perform sub-par, the perceived failure becomes a burden, amplifying our frustration and negativity towards the experience.


It is important for us as parents to understand this. Our children can handle adversities better if they are interested in and excited about their activities. Oftentimes, parents have a vision for their children, well-meant no doubt, but visions that may not align with the interests of the children themselves. Enrolling children in rigorous coaching centres comes to mind. For children with personal ambitions and aspirations to get into premier institutions, these coaching centres can be of tremendous value. But is the parent sending the child to these institutes because it is their vision for their children and not the aptitude of the children themselves?


I’m not suggesting that parents should not guide their children. Our culture is built on the hierarchy of Mata-Pita-Guru-Deivam – the mother, the father, the teacher and then God, and parental support is pivotal in helping children navigate the complexities of growing up. The most valuable lesson we can teach our children is that success and significance are possible in all walks of life through passion, perseverance and the will to see things through. Any other guidance we provide to our children must necessarily take into account the child’s ambitions, aptitudes, and abilities.


As parents, we must realise that life is not all about engineering and medicine. The modern world offers abundant opportunities across various domains for our children and youth. Yes, the IITs are exceptional education institutions, but they are not the only educational institutions that provide quality education to the Indian youth. I recently had the privilege of attending the ‘Champions of Chennai’ awards event, where the awardees, intelligent and hardworking youngsters, were not all IITians.


Another aspect that warrants introspection is this. No good can result from comparing children. Each child is unique, and such comparisons can have detrimental effects, particularly at an age in which children seek parental approval and encouragement. It is important for both parents and children to understand that marks, ranks and scores in any exam are numerical representations and do not reflect the overall intelligence of the student. While diligent effort is undoubtedly necessary for success, fixating on numbers can lead to undue stress. There have been cases where students’ emotions shift unexpectedly and suddenly from happiness to sadness due to excessive pressure, sometimes resulting in unfortunate and tragic outcomes.


There is also much pressure on children to pursue certain fields such as computer science, and yet, no discipline is inferior to another. Remarkable contributions to society have been made by people from all disciplines. The largest revenue-earning department through Industry Consultancy and Sponsored Research at IIT Madras is Ocean Engineering. As we become the first country to land on the South Pole of the Moon, can we ignore the contributions of aerospace engineers? Could the world have survived COVID-19 without the vaccines developed by biological scientists?


The challenges that the child faces may not always be due to academic reasons. No family is without problems, and the child may be affected by issues within the family, like conflicts and financial issues. It is the responsibility of the adults to manage issues in a way that does not seriously damage the child’s emotional state. Interpersonal relationships can also be difficult to manage at that age. Being there for children during tough times is crucial. When schools and colleges express concerns about a student’s well-being, parents should respond immediately. Staying connected and offering unwavering emotional support can help children overcome academic and personal challenges.


My personal observation over more than two decades as a teacher is that a kid who is raised in a joint family is more emotionally stable than one who has been isolated from the extended family. The support and affection of grandparents and extended relatives can foster positivity in children. Although nuclear families have become the norm in recent times, children must be encouraged to communicate actively with grandparents and other relatives.


Life extends beyond academics. Just realising this can help us guide our children to be emotionally strong and positive. Strength and positivity are essential for our country if we are to stop our valuable children from falling prey to disappointments caused by perceived failures.


Happiness is a collective responsibility.


(The author is the Director at IIT Madras)






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers suffer as online training links are not available - Daily News

 இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காதால் ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி  Teachers suffer as online training links are not available - Dail...