கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.11.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.11.2023 - School Morning Prayer Activities...


  

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வாய்மை

குறள் :295

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

விளக்கம்:

உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.



பழமொழி :
Do in Rome as Romans do.

ஊரோடு ஒத்து வாழ்



இரண்டொழுக்க பண்புகள் :

1)  நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.
2)  துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.


பொன்மொழி :

மனிதன் தனது அன்றாடக் கடன்களை முறையாக நிறைவேற்ற வேண்டும். விழித்திருக்கும் வேளையில் உறங்குவதோ, உறங்கும் வேளையில் விழித்திருப்பதோ முறையான செயல் அல்ல.



பொது அறிவு :

1. 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் எது?

விடை: மூங்கில்

2. வருமான வரி என்பது

விடை: ஒரு நேர்முக வரி



English words & meanings :

unanimous (யுனானிமஸ்)- a complete agreement ஒரே கருத்துள்ள, ஒப்புமை உடையது.

unassailable(அன்அஸ்ஸைலபில்)- impossible to attack தாக்க முடியாதது



ஆரோக்ய வாழ்வு :

அகத்தி பூ:இந்தப் பூவை சமைத்துச் சாப்பிட்டு வந்தால், அவர்கள் உடம்பில் உள்ள விஷம் மலத்துடன் வெளியேறும். அதுமட்டுமல்ல புகைப்பிடிப்பதில் உள்ள ஆர்வமும் குறையும். அகத்திப்பூவுடன் மிளகு, சீரகம், ஓமம், பூண்டு, வெங்காயம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு, இதய வீக்கம், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்றவை கட்டுக்குள் வரும்



நீதிக்கதை

ஒரு குட்டி கதை..

கடவுள் வந்தார்...!

"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..

அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..

முதல் மனிதன் :

“எனக்கு கணக்கிலடங்கா காசும்,

பெரிய பிஸினஸும் வேண்டும்..!”

இரண்டாம் மனிதன்:

“நான் உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!”

மூன்றாம் மனிதன் :

“உலப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”

நான்காம் மனுஷி:

“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..!

உலகமே அதில் மயங்க வேண்டும்..!”

இப்படி..

இன்னும் ஐந்து பேரும்

தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!

கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!

பத்தாவது மனிதன் கேட்டான்:

“உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”

ஒன்பது பேரும்

அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!

*"மனநிம்மதி, மன நிறைவு..."*

நாங்களும் அதுக்கு தானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால் மனநிறைவு கிடைத்து விடுமே..?”

கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் :

“நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..!

நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு,

பத்தாவது மனிதனைப் பார்த்து :

"நீ இரு..! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..சிறிது நேரம் கழித்து வருகிறேன்..”

என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!

இப்போது,அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..!

கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்; என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..!

துடித்தது..!

அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..!

நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..!

தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..!

அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே, அந்த இடத்திலேயே, அவர்கள் நிம்மதி குலைந்தது..!

மனநிறைவு இல்லாமல் போனது..!

பத்தாவது மனிதன், கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..!

கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!

நாம்

*பத்தாவது* மனிதனா..?

இல்லை

*பத்தாது* என்கிற மனிதனா..?

முடிவு எடுங்கள்..

*எண்ணும் எண்ணங்களே..*

*உங்களைத் தீர்மானிக்கும்..!!*

*இனிமையான எண்ணங்களுடன் இவ்வுலகில் மகிழ்ச்சியுற்று வாழ பேராசை என்பதை ஒழித்து மனநிம்மதி என்ற விலைமதிப்பற்ற செல்வம் பெற முயலுங்கள்



இன்றைய செய்திகள்

10.11.2023

*பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடக்கம்.

*டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர்; ராஜ்நாத் சிங் வரவேற்றார்.

* பாராளுமன்றத்திற்கு ஏப்ரலில் தேர்தல்; தமிழகத்தில் ஓட்டுப்பதிவை ஒரே கட்டமாக நடத்த முடிவு.

*டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழைக்கு திட்டம்.

*டபிள்யூபிஎல் 2024  ஏல தேதியை அறிவித்தது பிசிசிஐ.

Today's Headlines

*Winter Session of Parliament begins on 4th December.

* US Defense Secretary arrives in Delhi;  Welcomed by Rajnath Singh.

* Elections to Parliament in April;  It has been decided to conduct the polling in Tamil Nadu in a single phase.

* Plan for artificial rain to reduce air pollution in Delhi.

*BCCI announced WBL 2024 auction date.


ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கான குறைதீர் புலம் - உயர் அலுவலர்கள் கையாளும் வழிமுறைகள் - PDF (Grievance Redressal Field for Teachers and Non-Teaching Staff - Guidelines for Handling Procedure by Higher Officials)...


 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கான குறைதீர் புலம் - உயர் அலுவலர்கள் கையாளும் வழிமுறைகள் - PDF (Online Petition - Grievance Redressal Field for Teachers and Non-Teaching Staff - Guidelines for Handling Procedure by Higher Officers)...



>>> PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கான குறைதீர் புலம் - விண்ணப்பிக்கும் வழிமுறைகள் - PDF (Grievance Redressal Field for Teachers and Non-Teaching Staff - Application Instructions)...



 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கான குறைதீர் புலம் - விண்ணப்பிக்கும் வழிமுறைகள் - PDF (Online Petition - Grievance Redressal Field for Teachers and Non-Teaching Staff - Application Instructions)...



>>> PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

கனமழை காரணமாக 09-11-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 09-11-2023 due to heavy rain) விவரம்...

  

 

கனமழை காரணமாக 09-11-2023 அன்று பள்ளிககளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools  on 09-11-2023 due to heavy rain) விவரம்...



கனமழை காரணமாக 09.11.2023 இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்..


*மதுரை


*கோவை


*திண்டுக்கல்


*நீலகிரி (உதகை,குன்னூர்,குந்தா, கோத்தகிரி தாலுகா மட்டும்)


*தேனி


*திருப்பூர் 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.11.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.11.2023 - School Morning Prayer Activities...

 


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : வாய்மை


குறள் :294


உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்.


விளக்கம்:


உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.



பழமொழி :

Beauty is a short-lived reign.


அழகின் ஆட்சி அற்ப காலமே.



இரண்டொழுக்க பண்புகள் :


1)  நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.


2)  துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.



பொன்மொழி :


1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.

2) நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.

3) இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.

4) தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும்.

- சீனப் பழமொழி



பொது அறிவு :


1. என் கடன் பணி செய்து கிடப்பதே – என்று கூறியவர்


விடை: திருநாவுக்கரசர்


2. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம்


விடை: கன்னியாகுமரி



English words & meanings :


 termination - the act of ending something இறுதி நிலை,முடிவு . 

terminology - a system of words குறிப்பிட்ட துறைக்குரிய சொற்கள்


ஆரோக்ய வாழ்வு : 


அகத்தி பூ:

அகத்திக்கீரையைப்போல பூவும் மருத்துவ குணம் நிறைந்தது. பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கண் எரிச்சல், தலைசுற்றல், சிறுநீர் மஞ்சளாகப்போவது போன்ற பிரச்னைகள் சரியாகும்.


நவம்பர் 09


கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் பிறந்தநாள் 


அப்துல் ரகுமான் (S. Abdul Rahman, நவம்பர் 9, 1937 - சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர்.[ 1960 இக்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.


கே. ஆர். நாராயணன் அவர்களின் நினைவுநாள்


கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளி ஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்.


நீதிக்கதை


 ஒரு நாள் எறும்பும் பறவையும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டன. யார் முதலில் சென்று அந்த வான்உயர்ந்த மலையை தொடுவது என்பது தான் இருவரின் பந்தயம்.


பறவை எறும்பை பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு மலையை நோக்கி பறந்தது. வெகு சீக்கிரத்திலேயே பறவை மலையின் உச்சியை தொட்டது.


மலை உச்சிக்கு சென்ற பறவை மேலிருந்து கீழே இருக்கும் எறும்பை தேடியது. அப்போது எறும்பு மலை அடிவாரத்தில் இருந்து பாதி தூரத்தை கூட தொடவில்லை.


எறும்பை பார்த்து பறவை கூறியது எனக்கு முதலிலேயே தெரியும் வெற்றி எனக்குதான் என்று.


பறவையிடம் ஒரு சிறு எறும்பு போட்டியிடலாமா? எறும்பை பார்த்து கேலி செய்து பறவை நகைத்தது.


வெகு நாட்கள் கழித்து எறும்பின் விடாமுற்ச்சியால் ஒரு நாள் எறும்பு அந்த மலையின் உச்சியை சென்றடைந்தது. அப்போது அந்த பக்கமாக மலையை கடந்து சென்ற பறவை மலை உச்சியில் இருக்கும் எறும்பை ஆச்சரியமாக பார்த்தது.


அப்போது பறவையை பார்த்து எறும்பு கூறியது, “வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானது. சிலருக்கு வெற்றி சீக்கிரமாகவே கிடைத்துவிடும். சிலருக்கோ தாமதமாகவும் கிடைக்கும். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும், வெற்றி ஒரு நாள் எல்லோருக்கும் நிச்சயம்”, என்றது எறும்பு


இன்றைய செய்திகள்


09.11.2023


*இரயில்களில் பட்டாசு கொண்டு செல்லக்கூடாது மீறினால் ரூ.5000 அபராதம்.


*கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.


*தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


*சீன தயாரிப்பு பட்டாசுகளை விற்க, வெடிக்க தடை; பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள்: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை.


*ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: பேட்டிங்கில் ஷுப்மன் கில், பவுலிங்கில் சிராஜ் முதலிடம்.


*உலகக்கோப்பை 20203 நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இங்கிலாந்து.


Today's Headlines


Firecrackers should not be carried in trains, fine of Rs.5000 if violated.


* Orange warning for very heavy rain has been issued for Coimbatore, Nilgiris, Tenkasi, Tirunelveli and Kanyakumari districts.


* Southern Railway has announced that a special train will be run between Chennai and Tuticorin on the occasion of Diwali.


*Prohibition on sale and bursting of Chinese-made firecrackers; Fireworks restrictions: Chennai Police Commissioner warns.


*ICC oneday cricket Rankings: Shubman Gill tops batting, Siraj tops bowling.


*World Cup 2023: England beat Netherlands with a consolation victory.

 

தலைமை ஆசிரியர் கண்டிப்பு - பள்ளியில் தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர் (Headmaster's reprimand - Teacher who tried to commit suicide in school)...

 


தலைமை ஆசிரியர் கண்டிப்பு - பள்ளியில் தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர் (Headmaster's reprimand - Teacher who tried to commit suicide in school)...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.11.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.11.2023 - School Morning Prayer Activities...

   


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : வாய்மை


குறள் :293


தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.


விளக்கம்:


மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.


பழமொழி :

Put a beggar on horseback 


அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பான்.


இரண்டொழுக்க பண்புகள் :


1)  நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.


2)  துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.


பொன்மொழி :


கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!


- சுபாஷ் சந்திரபோஸ்


பொது அறிவு :


1. வாழ்வியல் உரிமை பாதுகாப்புச் சட்டம் -1955


2. 1997 ல் பெண்களை கேலி செய்வதை தடுக்க சட்டம் இயற்றியது - தமிழக அரசு


English words & meanings :


 scenic(adj)(சீனிக் )- having beautiful views அழகான இயற்கைக்காட்சி, 

serene - calm, untroubled.


ஆரோக்ய வாழ்வு : 


அகத்தி பூ: அகத்தியில் வெள்ளை, சிகப்பு,சாழை என்று மூன்றுவகை உண்டு மூன்றையுமே உண்ணலாம், இவற்றில் சிகப்பு அகத்தியின் பூக்கள்தான் சுவையானது.சுவை மட்டுமல்ல அகத்திபூ மருத்துவ குணம் மிக்கது.


நவம்பர் 08


வீரமாமுனிவர் அவர்களின் பிறந்தநாள்


வீரமாமுனிவர் (ஆங்கிலம்: Constanzo Beschi, நவம்பர் 8, 1680 – பெப்ரவரி 4, 1747)[1] என்று அழைக்கப்படும் கான்சுடான்சோ பெசுக்கி என்பவர் இத்தாலிய நாட்டு கிறித்தவ மத போதகர் ஆவார். இவர் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களை 370 நூற்பாக்களில் எடுத்துரைத்தார்

திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர்.

காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். 


நீதிக்கதை


 தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக்  கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர். சந்திப்பில் சுவாரஸ்யமாக  சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது.


வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி விலை கோப்பையென சில உயர்ந்தவைகளாகவும், வேலைப்பாடுகளுடனும் சில சாதாரணமாகவும் பலவிதங்களில் இருந்தன. பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார்.எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார், நண்பர்களே கவனியுங்கள்


"நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை எடுத்திருக்கிறீர்கள். மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள். உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவைப்படுகின்றன. அதைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சினனகளுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்.


"உண்மையில் நம் அனைவருக்கும் வேண்டியது காப்பி, கோப்பையல்ல. ஆனால் நீங்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த கோப்பையை தான் எடுக்க முயற்சித்தீர்கள், மேலும் அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை எடுத்திருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டீர்கள்."இப்பொழுது வாழ்க்கை என்பதை காப்பி என்று வைத்துக்கொண்டால் வேலை, பணம், சமூகத்தில் பொறுப்பு, அந்தஸ்து நமக்குள்ள பொறுப்பு, ஆகியவை கோப்பைகள். இவையெல்லாம் வாழ்க்கையை வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள். இவற்றால் எல்லாம் வாழ்க்கையின் தரம் மாறாது."


"பொதுவாக நாம் கோப்பையின் மீதே கவனம் வைப்பதால் காப்பியின் சுவையை அறியாமல் போய்விடுகிறோம்.


"ஆகவே நண்பர்களே கோப்பையில் உங்கள் கவனத்தை சிதறவிடாமல் காப்பியின் சுவை அனுபவியுங்கள்.


இன்றைய செய்திகள்


08.11.2023


*சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் முதல் கட்டமாக 70.87 % வாக்குகள் பதிவானது.


*சூரியனில் இருந்து வெளிவரும் x கதிர்களை படம் எடுத்து அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம்.


* கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 10% போனஸ்- தமிழக அரசு அறிவிப்பு.


*தீபாவளி பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகள் சென்னை மாநகர காவல் துறை அறிவிப்பு.


*விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விடிய விடிய மழை நீர்நிலைகள் நிரம்பின.


*உலக தரவரிசை இந்திய மகளிர் ஹாக்கி அணி 6வது இடத்திற்கு முன்னேறியது.


Today's Headlines


*70.87% votes were recorded in the first phase of Chhattisgarh assembly elections.


*The Aditya L1 spacecraft took pictures of x-rays from the Sun.


* 10% Bonus for Co-operative Society Employees- Tamil Nadu Govt Notification.


*Chennai Metropolitan Police Department announces 19 restrictions on bursting Diwali crackers.


*Dawn rains in Virudunagar, Ramanathapuram and Sivagangai districts filled water bodies.


*Indian women's hockey team moved up to the 6th position in the world rankings.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The matter of locking the student in the classroom - order for investigation

வகுப்பறையினுள் வைத்து மாணவனை பூட்டி சென்ற விவகாரம் - விசாரணைக்கு உத்தரவு The matter of locking the student in the classroom - order for inve...