1-3ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 02.12.2023 அன்று நடைபெற உள்ள CRC பயிற்சிக்கான கையேடு (Manual for CRC training to be held on 02.12.2023 for Class 1-3 teachers)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
1-3ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 02.12.2023 அன்று நடைபெற உள்ள CRC பயிற்சிக்கான கையேடு (Manual for CRC training to be held on 02.12.2023 for Class 1-3 teachers)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
4, 5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 02.12.2023 அன்று நடைபெற உள்ள CRC பயிற்சிக்கான கையேடு (Manual for CRC training to be held on 02.12.2023 for Class 4 and 5 teachers)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2023-2024ஆம் ஆண்டு - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட (NMMS Exam) தேர்வு - விண்ணப்பிக்க தகுதியுடையோர் - விண்ணப்பிக்கும் முறை (2023-2024 - National Means cum Merit Scholarship Scheme Examination - Eligibility to Apply – How to Apply)...
2023-2024ஆம் ஆண்டு - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட (NMMS Exam) தேர்வு - அரசு தேர்வுகள் இயக்குனரின் கடிதம் ந.க.எண்.019567 /டி3/2023, நாள் : 01.12.2023 (2023-2024 - National Means cum Merit Scholarship Scheme Examination - Director of Government Examinations Letter Rc.No.019567 /T3/2023, Dated : 01.12.2023)...
NMMS EXAM 03-02-2024 அன்று நடைபெறும்.
04-12-2023 முதல் 19-12-2023 வரை விண்ணப்பிக்கலாம்...
>>> NMMS தேர்வு (Notification) - விண்ணப்பிக்க தகுதியுடையோர் - விண்ணப்பிக்கும் முறை...
*NMMS NEWS
*தேர்வு நடைபெறும் நாள் 03/02/2024
*விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய (www.dge.tn.gov.in) வேண்டிய நாள் 04/12/2023 to 19/12/2023
*விண்ணப்பங்களை Online ல் பதிவேற்றம் செய்திட தகவல் பின்னர் தெரிவிக்கப்படும்
*தேர்வுக்கான கட்டணம் Rs 50
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.12.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : இன்னாசெய்யாமை
குறள்:311
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார்
விளக்கம்:
சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.
பழமொழி :
Smile costs nothing
புன்னகைக்க பணம் தேவை இல்லை
இரண்டொழுக்க பண்புகள் :
1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.
2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.
பொன்மொழி :
முகமலர்ச்சி, நிதானமான வாழ்க்கை, அமைதி இவை உள்ள இடத்தில் வைத்தியருக்கு வேலையில்லை – ஜெர்மனி
பொது அறிவு :
1. வெள்ளையனே வெளியேறு” இயக்கம் ________ ஆண்டு நடைபெற்றது.
விடை: 1919
2. பிரிட்டனின் தேசிய மலர்.
விடை: ரோஜா
English words & meanings :
haematology (n) - scientific study of the blood and its diseases. இரத்தம் மற்றும் அது சார்ந்த நோய்கள் பற்றிய அறிவியல் படிப்பு.
haill(n)- greeting, a shower of frozen drops , வாழ்த்து, ஆலங்கட்டி மழை.
ஆரோக்ய வாழ்வு :
சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.
டிசம்பர் 01
உலக எய்ட்ஸ் நாள்
உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. 1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல்.[1] மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது.
நீதிக்கதை
முயற்சி திருவினை ஆக்கும்.
ஒரு வண்டியோட்டி தனது வண்டியைக் கிராமப் புறத்தில் ஓட்டிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, ஓரிடத்தில் அதன் சக்கரங்கள் ஆழப் புதைந்து கொண்டன.
என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போன அந்த வண்டியோட்டி கடவுளைக் கூவி அழைத்தான். கடவுள் அவன் முன்னே வந்தார். வண்டியோட்டியே... சக்கரங்களை உனது தோள்களால் தூக்கு. மாடுகளைத் தார்க்குச்சியை வைத்துத் தூண்டு. வண்டி ஓட ஆரம்பித்து விடும்.
உன்னால் எப்போது ஒரு காரியம் முடியாதோ அப்போது மட்டும் என்னை அழை. முயற்சியே செய்யாமல் என்னை அழைப்பவர்க்கு நான் உதவி புரிய வர மாட்டேன். முயற்சி திருவினையாக்கும் என்பதைப் புரிந்து கொள் என்று சொல்லி விட்டு கடவுள் மறைந்தார்.
நீதி : முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
இன்றைய செய்திகள்
01.12.2023
* இந்தியப் படைக்காக மேலும் 97 தேஜஸ் விமானங்கள்.
* அடையாறில் தூர் வாரியதால் குடிசை பகுதிகளில் நீர் தேங்கவில்லை –அமைச்சர் மா. சுப்ரமணியம்.
* சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26 செ.மீ. மழைப் பதிவு - வானிலை ஆய்வு மையம்.
* வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.
* இந்திய ஹாக்கி வியாழன் அன்று 24 வீரர்கள் அடங்கிய ஆண்கள் ஹாக்கி குழுவை வரக்கூடிய ஐந்து நாடுகளின் வலேன்சியா போட்டிக்காக அறிக்கை வெளியிட்டது. இந்த போட்டி டிசம்பர் 15 முதல் 22 வரை ஸ்பெயினில் உள்ள வலேன்சியா வில் நடைபெற உள்ளது.
Today's Headlines
* 97 more Tejas aircraft for the Indian Army
* Water does not stagnate in slum areas as there was a dredge in Adyar - Minister Ma. Subramaniam
* In Chennai, the maximum rainfall is in Meenambakkam it is recorded as 26 cm in the last 24 hours - Meteorological Centre
* A depression forms in the Bay of Bengal within 12 hours
* Hockey India on Thursday announced a 24-player men's hockey squad for the upcoming five-nation Valencia tournament. The tournament will be held from December 15 to 22 in Valencia, Spain.
நீட் (இளநிலை) - 2024 தேர்வுக்கான மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் (Updated Syllabus for NEET (UG)-2024 Exam)...
அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - 25.11.2024க்குள் வெளிப்படைத் தன்மையுடன் நடத்த முதலமைச்சர் உத...