கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விண்ணப்பிக்கும் முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விண்ணப்பிக்கும் முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் (NMMS) தேர்வு - பிப்ரவரி 2024 - மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 019567/ டி(3)/ 2023, நாள் : 07.12.2023 (National Means and Merit Scholarship Scheme (NMMS) Examination – February 2024 – Proceedings of Director of Government Examinations regarding online uploading of student details Rc.No: 019567/ T(3)/ 2023, Dated : 07.12.2023)...

 

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் (NMMS) தேர்வு - பிப்ரவரி 2024 - மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் முறை தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:  019567/ டி(3)/ 2023, நாள் : 07.12.2023 (National Means and Merit Scholarship Scheme (NMMS) Examination – February 2024 – Proceedings of Director of Government Examinations regarding online uploading of student details Rc.No: 019567/ T(3)/ 2023, Dated : 07.12.2023)...



>>> அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:  019567/ டி(3)/ 2023, நாள் : 07.12.2023 & மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் முறை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2023-2024ஆம் ஆண்டு - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட (NMMS Exam) தேர்வு - விண்ணப்பிக்க தகுதியுடையோர் - விண்ணப்பிக்கும் முறை (2023-2024 - National Means cum Merit Scholarship Scheme Examination - Eligibility to Apply – How to Apply)...

 

2023-2024ஆம் ஆண்டு - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட (NMMS Exam) தேர்வு - விண்ணப்பிக்க தகுதியுடையோர் - விண்ணப்பிக்கும் முறை (2023-2024 - National Means cum Merit Scholarship Scheme Examination - Eligibility to Apply – How to Apply)...



>>> NMMS தேர்வு - விண்ணப்பிக்க தகுதியுடையோர் - விண்ணப்பிக்கும் முறை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளம் கல்வியியல் (பி.எட்.,) பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை-2023 அறிவிப்பு & பதிவு செய்யும் முறை வெளியீடு (Tamil Nadu Government and Government Aided Colleges of Education for Bachelor of Education (B.Ed.) Degree Courses Admission-2023 Notification & Registration Procedure Released)...

 


தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளம் கல்வியியல் (பி.எட்.,) பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை-2023 அறிவிப்பு & பதிவு செய்யும் முறை வெளியீடு (Tamil Nadu Government and Government Aided Colleges of Education for Bachelor of Education (B.Ed.) Degree Courses Admission-2023 Notification & Registration Procedure Released)...



>>> இளம் கல்வியியல் (பி.எட்.,) பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை-2023 அறிவிப்பு...



>>>  பதிவு செய்யும் முறை (Procedure to Apply)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு (TCMTSE) விண்ணப்பிக்கும் வழிமுறைகள் (How to Apply for Tamil Nadu Chief Minister Talent Search Examination)...


>>> தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு (TCMTSE) விண்ணப்பிக்கும் வழிமுறைகள் (How to Apply for Tamil Nadu Chief Minister Talent Search Examination)...



>>> தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு - விண்ணப்பித்த பள்ளி மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆகஸ்ட் 4 முதல் CAT தேர்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம் – விண்ணப்பிக்கும் வழிமுறைகள்...

 


CAT 2021க்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. விண்ணப்ப செயல்முறை மற்றும் பிற விவரங்களை குறித்து பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


CAT 2021:

ஐஐஎம்-களின் பல்வேறு முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு CAT தேர்வு ஒரு நுழைவு தேர்வாக உள்ளது. ஐஐஎம் உறுப்பினர் அல்லாத நிறுவனங்களும் CAT தேர்வு மதிப்பெண் பட்டியலை பயன்படுத்துகிறது.


அத்தகைய நிறுவனங்களின் பட்டியல் CAT இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐஐஎம் அல்லாத நிறுவனங்களின் தேர்வு செயல்பாட்டில் ஐஐஎம்களுக்கு எந்தப் சம்பந்தமும் இல்லை.


இத்தேர்வுக்கு விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான CGPA- யுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்களின் சதவீதம் அந்தந்த பல்கலைக்கழகம் / நிறுவனம் பின்பற்றும் நடைமுறையின் அடிப்படையில் கணக்கிடப்படும். இளங்கலை /சமமான தகுதித் தேர்வின் இறுதி ஆண்டு தேர்வர்கள் மற்றும் பட்டப் படிப்பை முடித்து முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். CAT 2021 தேர்வின் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஆகஸ்ட் 4ம் தேதியான நாளை காலை 10 மணி முதல் தொடங்கப்படுகிறது. அனைத்து வேட்பாளர்களும் iimcat.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் CAT 2021க்கு விண்ணப்பிக்கலாம்.


CAT தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 15, மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


மேலும், தேர்வுகள் நவம்பர் 28 அன்று மூன்று அமர்வுகளில் நடைபெறும். நடப்பாண்டில் தேர்வு மொத்தம் 158 நகரங்களில் நடத்தப்பட இருக்கிறது.


விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ தளத்தில் முதலில் தனிப்பட்ட பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க பதிவு செய்ய வேண்டும்.


விண்ணப்பப் படிவத்தை நிரப்ப உருவாக்கப்பட்ட பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைய வேண்டும்.


பதிவு மற்றும் விண்ணப்ப செயல்முறையை முடிக்க தேவையான விவரங்களை உள்ளிட்டு ஆன்லைனில் பணம் செலுத்திய பின் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.


CAT 2021 தேர்வு முறை:

தேர்வு 120 நிமிடங்களில் மூன்று பிரிவாக நடத்தப்படும்.


பிரிவு I: வாய்மொழி திறன் மற்றும் வாசிப்பு புரிதல்

பிரிவு II: தரவு விளக்கம் மற்றும் தருக்க பகுத்தறிவு

பிரிவு III: அளவு திறன்


ஒவ்வொரு பிரிவிலும் கேள்விகளுக்கு பதிலளிக்க சரியாக 40 நிமிடங்கள் ஒதுக்கப்படும் மேலும் ஒரு பிரிவில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர்கள் ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு மாற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



INSPIRE Awardக்கு விண்ணப்பிக்கும் பொழுது ஏற்படும் இடர்பாடுகளும், அவற்றிற்கான தீர்வுகளும்(Problems encountered while applying for the INSPIRE Award and their solutions)...

 


INSPIRE AWARD - Last date to Apply - அக்டோபர் 15

INSPIRE Awardக்கு விண்ணப்பிக்கும் பொழுது ஏற்படும் இடர்பாடுகளும், அவற்றிற்கான தீர்வுகளும்...

 1. School New Register உடனே செய்ய வேண்டாம்

உங்கள் பள்ளி ஏற்கனவே apply செய்யப்பட்டுள்ளதா? என தெரிந்து கொண்டு அதில் பயன்படுத்திய User ID, Password கொண்டு   மாணவர்கள் விவரங்களை பதிவு செய்யவும்


2. புதிதாக முதல் முறை உங்கள் பள்ளியை பதிவு செய்யும் போது (மாணவர்களை அல்ல) உங்கள் பள்ளியின் UDISE NUMBER ஐ தான் முதலில் பதிவு செய்ய முடியும். அவ்வாறு செய்யும் போதோ ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தால் already exist this school என்று வரும்.

அதற்கு உங்கள் பள்ளியின் U DISE NUMBER ஐ சென்ற வருடங்களில் பதிவு செய்திருக்க வேண்டும்.


3. உங்கள் பள்ளியை New Register செய்து District Approvalக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்பிய உடன் Acknowledgement Download செய்து கொள்ளவேண்டும்

Approval ஆகிவிட்டதா என்பதை உங்கள் பள்ளியின் email Check செய்ய வேண்டும்.

(உடனே approval ஆகாது)

District approval ஆன உடன் User ID,  Password உங்கள் பள்ளியின் mailக்கு வரும்.


4. விண்ணப்பிக்க மாணவர்களின் வங்கி கணக்கு புத்தகம், Project போதுமானது மற்ற விவரங்களை பள்ளியின் EMIS தளத்திலிருந்து எடுத்து கொள்ளலாம். 


5. மாணவர்களின் Photo Upload செய்யும் போது Invalid Format என்று வந்தால் Onlineல் Image convert to JPG செய்து சரியான Formatக்கு கொண்டு வந்துவிடலாம்.

மாணவர்களின் புகைப்படத்தையும் EMIS தளத்தில் அந்த மாணவனை Right Click செய்து Save செய்து Upload செய்யலாம்.


6. சென்ற வருடம் Upload செய்த Project மீண்டும் பதிவேற்றினால் உங்கள் Application Rejected என்று email வரும்.


7.அவ்வாறு வந்தால் அந்த Application Numberஐ குறித்துக் கொண்டு உங்கள் பள்ளியின் INSPIRE Award Pageல் Login செய்து Edit and Modify செய்து மீண்டும் Forward செய்யவும்.






INSPIRE Awardக்கு விண்ணப்பிக்க தேவையானவை...



 INSPIRE Awardக்கு விண்ணப்பிக்க தேவையானவை...


1. முதலில் பள்ளியின் U DISE NUMBER யை update செய்யவும்.                   


 2. 6 முதல் 10 வகுப்பு வரை அதிகபட்சமாக 5 மாணவர்களை தேர்வு செய்யவும். தேர்வு செய்யும் போது ஒரே வகுப்பிலிருந்தும் 5 மாணவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.(5 க்கும் குறைவான மாணவர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்)                


3. மாணவர்கள் விவரங்கள்

*பெயர்

*பெற்றோர் பெயர்

*வகுப்பு

*ஆதார் எண்

*கைபேசி எண்

*இனம்

*புகைப்படம்(JPG,PNG FORMAT FILE SIZE 2MB)

*வங்கி கணக்கு புத்தகம். 


 4.PROJECT விவரங்கள்

*Project Topic (ஒவ்வொரு மாணவர்களுக்கும்)


*JPG,PNG ,WORD ,PDF FORMAT FILE SIZE 2MB A4 SHEET கையால் எழுதியும் Upload செய்து கொள்ளலாம்


தமிழ் மொழி உட்பல பல மொழிகளில் Project Upload செய்து கொள்ளலாம்.


*Project photo copy upload (Additional) - No mandatory.


*Project Audio, Video Upload FILE SIZE 5MB (No mandatory)


5.Guide Teacher Name and Phone Number   


6.HM Name and Phone Number


7. இந்த 5 மாணவர்களை தேர்வு செய்ய காரணம்

 இதுபோன்ற தகவல்களை தயார்  நிலையில் வைத்துக்கொண்டு விண்ணப்பிக்கவும்


>>> இந்த தகவலை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



+2 தனித்தேர்வர்கள் - பொதுத்தேர்வுக்கான அறிவுரைகள் மற்றும் பழைய பாடத்திட்டத்துக்கு இணையான புதிய பாடத்திட்ட பகுதிகள்...



 மே 2021 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத ஆன் - லைன் வழியாக விண்ணப்பிப்பதற்கு 


26.02.2021 பிற்பகல் முதல் 06.03.2021 வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு ( Service centres ) நேரில் சென்று விண்ணப்பிக்கவேண்டும் எனவும் , மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள் , சிறப்பு அனுமதித் திட்டத்தில் 08.03.2021 மற்றும் 09.03.2021 ஆகிய தேதிகளில் ஆன் - லைனில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தனித்தேர்வர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் சேவை மையங்களுக்கு 26.02.2021 முதல் வருகைபுரிவார்கள். அவ்வாறு வருகைபுரிவோருக்கு கீழ்க்கண்டவாறு ஆன் - லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தங்களது ஆளுகைக்குட்பட்ட சேவை மையங்களின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தி , பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க ( Service Centres ) அறிவுறுத்துமாறு அனைத்து தன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

1. 26.02.2021 முதல் தேர்வர்கள் சேவை மையங்களுக்கு வருகைபுரிவார்கள். அவ்வாறு வருகைபுரிவோரிடம் உரிய ஆவணங்களைப் பெற்று சேவை மையங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password- ஐ கொண்டு ஆன் - லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


2. www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று , Click here to access Online Portal for School and Educational Offices என்ற வாசகத்தினை click செய்த பின்னர் திரையில் தோன்றும் HSE PRIVATE APPLICATION என்ற தலைப்பின் கீழ் இடம் பெற்றிருக்கும் சேவை மையங்கள் எவ்வாறு விண்ணப்பங்களைப் பெற வேண்டுமென்பதற்கான அறிவுரைகள் மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள் ஆகியவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

>>> +2 தனித்தேர்வர்கள் - பொதுத்தேர்வுக்கான அறிவுரைகள் மற்றும் பழைய பாடத்திட்டத்துக்கு இணையான புதிய பாடத்திட்ட பகுதிகள்...


NMMS – 2021 தேர்வுக்கு பதிவு செய்வதற்கான வழிமுறைகள் (STEP BY STEP)...

 


2021-ம் ஆண்டு பிப்ரவரி 21 -ல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவங்களை 28.12.2020 முதல் 08.01.2021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது


பதிவேற்றம் செய்தல் தொடர்பான விவரங்கள்

எட்டாம் வகுப்பு பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை சம்பந்தப்பட்ட www.dge.tn.gov.in என்னும் இணையதளம் மூலமாக 05.01.2021 முதல் 12.01.2021 வரை பதிவு செய்யலாம் என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

தற்போது 20-01-2021 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


1. மேற்குறிப்பிட்ட தேர்விற்கு எட்டாம் வகுப்பு மாணவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுரைகள் :

கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் EMIS- ன் அடிப்படையில் மாணவர்களின் பதிவு நடைபெறவுள்ளது. எனவே, பள்ளிகளுக்கான USER ID, PASSWORD ஐ பயன்படுத்தி மாணவர்களின் EMIS எண்ணினை பதிவு செய்தவுடன் பெரும்பாலான விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும். அதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திருத்தங்களை மேற்கொள்ளவும் விடுபட்டுள்ள விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும். புதியதாக பள்ளிகள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி பதிவு (Register) செய்த பின் புதிய USER ID, PASSWORD – ஐ பயன்படுத்தி மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்


2. பதிவேற்றம் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய விவரங்கள்:

தேர்வர்கள் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்துள்ள விவரங்கள் சரிதானா என்பதனைப் பள்ளி ஆவணங்களை ஒப்பிட்டு சரிபார்த்த பின்னர் பதிவேற்றம் செய்ய வேண்டும்


3. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் மாணவர்களிடமிருந்து பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


4. பள்ளி முகவரி என்ற கலத்தில் பள்ளியின் பெயர், முகவரியினை அஞ்சல் குறியீட்டுடன் (Pin Code) பதிவு செய்யப்படவேண்டும்.


5. வீட்டு முகவரி என்ற கலத்தில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரியினை பதியக்கூடாது. தேர்வரின் வீட்டு முகவரி மட்டுமே பதியப்படவேண்டும்.


6. பெற்றோரின் தொலைபேசி/கைப்பேசி என்ற கலத்திலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தொலைபேசி கைபேசி எண்ணையே பதிய வேண்டும். பள்ளியின் தொலைபேசி என்ற கலத்தில் மட்டும் பள்ளியின் தொலைபேசி எண்ணினை பதிந்தால் போதுமானது


பதிவு செய்த விவரங்களை Declaration form Print out கொண்டு சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளவும்.


8. 05.01.2021 பிற்பகல் முதல் 20.01.2021 வரை பதிவேற்றம் செய்த விவரங்களில் மாற்றம் ஏதேனும் இருப்பின் 20.01.2021-க்குள் சரி செய்து கொள்ளலாம். அதன் பின் எந்த பதிவுகளும் கண்டிப்பாக மாற்ற இயலாது,


பதிவேற்றம் முடிந்தவுடன் Summary Report மற்றும் தேர்வர்களின் விவரத்தினை (ஒரு தேர்வருக்கு ரூ.50/- வீதம்) சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களிடம் 20.012021-க்குள் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளிடமிருந்து பெறும் தொகையை ரொக்கமாக சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 25.01.2021 அன்று சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலரிடமிருந்து விண்ணப்பித்த அனைத்துத் தேர்வர்களின் தேர்வுக் கட்டணத் தொகை பெறப்பட்டுள்ளதா என்பதை உதவி இயக்குநர்கள் உறுதி செய்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...