கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.12.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.12.2023 - School Morning Prayer Activities...

    


திருக்குறள்: 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : இன்னாசெய்யாமை


குறள்:318


தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்.



விளக்கம்:


பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?.



பழமொழி :

Honesty is the best policy


நேர்மையே சிறந்த கொள்கை.



இரண்டொழுக்க பண்புகள் :


1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கு துன்பம் தரமாட்டேன்.


2.  துன்பப் படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் .



பொன்மொழி :


நீண்ட நாள் வாழ்வதற்கு கதகதப்பான உடை அணியவும்; மிதமாக உண்ணவும்; நிறைய நீர் பருகவும் – இங்கிலாந்து



பொது அறிவு :


1. இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி யார்?


விடை: கிரண் பேடி


2. ரப்பர், ஸ்டாம்பு, மை, தயாரிக்க பயன்படும் சேர்மம்


விடை: கிளிசரால்



English words & meanings :


 overcome - win a victory over தடைகளைக் கடந்து வருதல். 

ovation - enthusiastic recognition மகிழ்ச்சியில் கரகோஷம் எழுப்புதல்



ஆரோக்ய வாழ்வு : 


ஆவாரம் பூ :வெதுவெதுப்பான நீரில் பொடியை சேர்த்து தேனுடன் கலந்து மூலிகை தேநீராக்கி குடிக்கலாம். இது நல்ல மலமிளக்கியாக செயல்படும். ஆவாரம் பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலுக்கு தீர்வாகிறது.



நீதிக்கதை


 தவறுக்குத் தண்டனை உண்டு


குரங்கு ஒன்று மரக் கிளைகளில் தாவியபடியே ஏரிக்கரைக்கு வந்தது. ஏரிக்கரை ஓரம் இருந்த மா மரத்தில் தாவி விளையாடிக் கொண்டு இருந்தது. சற்று நேரம் மீன் பிடிப்பவர்கள், மீன் பிடிவலையுடன் வருவதைப் பார்த்தது. அவர்கள் கரைக்கு வந்ததும், தாங்கள் கொண்டு வந்திருந்த வலையை, ஏரியில் வீசினார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் வலையை கரைக்கு இழுத்தார்கள்.


வலையில் நிறைய மீன்கள் சிக்கி இருந்தன. வலையில் சிக்கிய மீன்களையெல்லாம் சேகரித்துக் கொண்டனர். மீண்டும் வலையை ஏரியில் வீசினார்கள். சிறிது நேரத்தில் மறுபடியும் சிக்கிய மீன்களை, கரைக்குக் கொண்டு வந்து சேகரித்தார்கள். இப்பொழுது மீனவர்கள் கொண்டு வந்த கூடை நிறைய மீன்கள் இருந்தன. இவை எல்லாவற்றையும் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது குரங்கு.


பிடித்த மீனை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாரானார்கள். அதற்கு முன்பாக மீன் பிடி வலையை ஏரிக் கரையோரம் வெயிலில் காயப் போட்டனர். பிறகு மீன்களை எடுத்துச் சென்றனர்.


அவர்கள் சென்றதும் குரங்குக்கு மீன் பிடிக்க ஆசை வந்து விட்டது. மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தது. மீன் வலையை எடுத்து ஏரியில் வீச முயன்றது. மீனவர்கள் வலையை வீசியதைப் பார்த்து குரங்கும் வீசியது. வலை ஏரியில் விழுகாமல், குரங்கு தலையில் விழுந்து சிக்கிக் கொண்டது. வலையில் இருந்து விடுபடப் போராடிப் பார்த்த குரங்கு, குதித்துத் தாவிய பொழுது ஏரிக்குள் விழுந்து விட்டது.


குரங்கு வலைக்குள் சிக்கிக் கொண்டதால், அதனால் தப்பிக்க முடியவில்லை. எவ்வளவு முயற்சித்தும் வலை மேலும் சிக்கலாகியது. ஏரியில் தண்ணீரும் அதிகம் இருந்தபடியால், குரங்கினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியே தண்ணீரில் தத்தளித்து மூழ்கி இறந்தது. பாவம் தவறு செய்ததற்குத் தண்டனை அனுபவித்தது.


நீதி: இது தவறு எனத் தெரிந்தே செய்பவர்கள் தண்டனை பெறுவது நிச்சயம். புகைப்பழக்கமும், போதைப் பழக்கமும் உள்ளவர்கள் தவறு எனத் தெரிந்தே செய்கிறார்கள். இதன் தீயபலனை இவர்கள் நிச்சயம் ஒருநாள் அனுபவிப்பார்கள்.



இன்றைய செய்திகள்


12.12.2023


*மிச்சாங் புயல் பாதிப்பு இதுவரை 17 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது; தமிழக அரசு.


*ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.


*முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது.

இடுக்கி மாவட்டத்திற்கு எச்சரிக்கை.


*புதுச்சேரியில் மீண்டும் கொரோனா பரவல் பொதுமக்கள் அச்சம்.


*இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: இந்திய பெண்கள் அணிக்கு ஆறுதல் வெற்றி.


Today's Headlines


* Relief goods worth 17 crores have been provided so far for the rest of the storm damage;  Tamil Nadu Govt.


 * Chance of heavy rain in six districts.


 *The water level of Mullai Periyar dam reached 136 feet.

 Alert for Idukki District.


 *People fear the spread of corona again in Puducherry.


 *Series vs England: Consolation win for Indian Women's team.

 

மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு (The Tamil Nadu government has released toll-free phone numbers for repairing vehicles damaged by rain and floods)...

 மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு (The Tamil Nadu government has released toll-free phone numbers for repairing vehicles damaged by rain and floods)...



எண்ணும் எழுத்தும் - 1-5ஆம் வகுப்பு FA(a) & FA(b) முடிக்க கால அவகாசம் 22.12.2023 வரை நீட்டிப்பு (Ennum Ezhuthum - 1st-5th class FA(a) & FA(b) deadline extended till 22.12.2023)...

 எண்ணும் எழுத்தும் - 1-5ஆம் வகுப்பு FA(a) & FA(b) முடிக்க கால அவகாசம் 22.12.2023 வரை நீட்டிப்பு (Ennum Ezhuthum - 1st-5th class FA(a) & FA(b) deadline extended till 22.12.2023)...



எண்ணும் எழுத்தும் - Term 2 FA (a) Assessment இன்னும் முடிக்கவில்லையா? - உங்களுக்கான கடைசி வாய்ப்பு



எண்ணும் எழுத்தும் - Term 2 FA (a)  Assessment -  இரண்டாம் பருவத்தின் தேர்வு காரணமாக அசெஸ்மென்ட் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தற்போது  தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 


ஆசிரியர்களுக்கு கடைசி வாய்ப்பாக மீண்டும் எண்ணும் எழுத்தும் - Term 2 FA (a)  Assessment  செயல்பட துவங்கி உள்ளது. எனவே ஆசிரியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி  எண்ணும் எழுத்தும் - Term 2 FA (a)  Assessment -  விரைவாக முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இதனை மேற்கொள்ள அனைவரும் TNSED App Logout செய்து Login  செய்யவும்


புது ஊஞ்சல் - 16-31 அக்டோபர் 2023 இதழ் (Puthu Oonjal - 16-31 October 2023 Magazine)...



 புது ஊஞ்சல் - 16-31 அக்டோபர் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Pudhu Oonjal - 16-31 October 2023 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> புது ஊஞ்சல் - 16-31 அக்டோபர் 2023 இதழ் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


புது ஊஞ்சல் - 01-15 அக்டோபர் 2023 இதழ் (Puthu Oonjal - 01-15 October 2023 Magazine)...



 புது ஊஞ்சல் - 01-15 அக்டோபர் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Pudhu Oonjal - 01-15 October 2023 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> புது ஊஞ்சல் - 01-15 அக்டோபர் 2023 இதழ் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


புது ஊஞ்சல் - 16-30 செப்டம்பர் 2023 இதழ் (Puthu Oonjal - 16-30 September 2023 Magazine)...



  புது ஊஞ்சல் - 16-30 செப்டம்பர் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Pudhu Oonjal - 16-30 September 2023 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> புது ஊஞ்சல் - 16-30 செப்டம்பர் 2023 இதழ் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.12.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.12.2023 - School Morning Prayer Activities...

    

திருக்குறள்: 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : இன்னாசெய்யாமை


குறள்:317


எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.


விளக்கம்:


எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.



பழமொழி :

Hoist your sail when the wind is fair


கற்றுள்ள போதே தூற்றிக் கொள்



இரண்டொழுக்க பண்புகள் :1


1.நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கு துன்பம் தரமாட்டேன்.


2.  துன்ப படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளச் செய்வேன் .



பொன்மொழி :


உணவு, அமைதி, முகமலர்ச்சி ஆகிய மூவருமே உலகில் தலைசிறந்த மருத்துவர்கள் – இங்கிலாந்து


பொது அறிவு :


1. எந்த ஆண்டு ஜன-கன-மன முதலில் பாடப்பட்டது?


விடை: 1911


2. இந்திய கடற்படை தினத்தை நாம் எப்போது கொண்டாடுகிறோம்?


விடை: டிசம்பர் 4 -ம் தேதி



English words & meanings :


 Native (n) - someone born in a particular region பூர்வீகம், பிறந்த இடம் அல்லது ஊர். 

Nifty (adj) - something that is good or great புதுமையான, மிகச் சிறந்த.



ஆரோக்ய வாழ்வு : 


ஆவாரம் பூ: ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாவர மூலிகைகள் எல்லாம் நமக்கு எளிமையாக கிடைக்க கூடியவை. அதில் ஒன்று ஆவாரம்பூ.

ஆவாரம்பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்து சாப்பிடலாம். இந்த பூவை கொதிக்க வைத்து தேநீராக்கி குடிக்கலாம்.



டிசம்பர் 11


சுப்பிரமணிய பாரதி  அவர்களின் பிறந்தநாள்


சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.


பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.[2] தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.[3] இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.


பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.




பிரணப் குமார் முகர்ஜி அவர்களின் பிறந்தநாள்


பிரணப் குமார் முகர்ஜி (Pranab Mukherjee, வங்காள: প্রণব কুমার মুখার্জী, 11 திசம்பர் 1935 - 31 ஆகத்து 2020) (சுருக்கமாக பிரணாப் முகர்ஜி), இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5] சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.




பன்னாட்டு மலை நாள்


பன்னாட்டு மலை நாள் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது.[1]


மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது.[2]



நீதிக்கதை


 சேந்தங்குடியில் டேவிட் என்ற சிறுவன் இருந்தான். குறி தவறாமல், கவண் கல் எறிவதில் வல்லவன். இருட்டுக்கும் பேய்க்கும் பயப்படாதவன்.


ஆனாலும், அவனைப் பாராட்டுவோரும் இல்லை. நட்புடன் விளையாடவும் யாரும் இல்லை.


அவனது பரிகாசப் பேச்சு மற்றவர்களைத் தொல்லைக் குள்ளாக்கும். அவனது சில்மிஷ விளையாட்டுகளும் தான் அதற்குக் காரணம்.


டேவிட்டுக்கோ, ஜெனி தான் இதற்கெல்லாம் காரணம் என்று ஒரு எண்ணம்.


ஜெனியும் சேந்தங்குடியில் தான் வசித்து வந்தாள். அன்பும் அறிவும் ஒருசேரப் பெற்ற அவளுக்கு ஊர்க்குழந்தைகள் அனைவரும் நண்பர்கள்தான்.


எப்போதும் ஏதாவது புத்திசாலித்தனமாகச் செய்து பெயர் வாங்கி விடுகிறாள் ஜெனி. அவளுக்குத் தான் எவ்வளவு நண்பர்கள் … டேவிட் எரிச்சலுற்றான்.


ஜெனியின் நண்பர்களைப் பிரித்து அவளை வெற்றி கொள்ள வேண்டும் என நினைத்தான்.


ஜெனியின் நண்பர்களான வரதனிடமும் சிவாவிடமும் சென்று, “நீங்கள் ஏன் ஜெனியுடன் மட்டும் நட்பாக உள்ளீர்கள் ? நானும் திறமையானவன் தான் “ என்றான்.


இதோ பாருங்கள் என் திறமையை எனச் சொல்லியபடி, தூரத்தில் வந்து கொண்டு இருந்த ஒரு மூதாட்டியின் பானை மீது கவண்கல் எறிந்து, பானையை உடைத்தான்.


ஜெனி அங்கு வந்தாள்.டேவிட் ஏன் பானையை உடைத்தாய் ? பாட்டி தயிர் வியாபாரம் செய்ய இருந்த ஒரு பானையையும் உடைத்துவிட்டாயே ?


“திறமையை நற்செயல்களுக்குப் பயன்படுத்த வேண்டும், டேவிட் என்றாள்.


“ஜெனி அங்கே பார், அச்சிறுமியின் கையில் இருக்கும் பட்சணத்தை அந்த வெறிபிடித்த நாய் பிடுங்க வருகிறது. “வரதன் சொல்லி முடிக்கும் முன், ஜெனி ஒரு கல் எடுத்து அந்த நாயின் அருகே வீசினாள்.


நாய் வேகமாய் நகர்ந்து ஓடியது.


சிறுமி சந்தோஷமாக துள்ளிக் குதித்துச் சென்றாள்.


”யாரடா என் பானையை உடைத்தவன்?” என கர்ஜித்தபடி வந்தாள் மூதாட்டி.


“பாட்டி, தெரியாமல் கல் தங்கள் பானை மேல் பட்டுவிட்டது. மன்னியுங்கள். ஒரு நல்ல பானை காலையில் உங்கள் வீட்டுக்கு வந்து விடும்” என்றாள் ஜெனி.


“மகராசி, நீ நல்லா இரும்மா” என வாழ்த்தினார் பாட்டி.


“டேவிட் நம் திறமை மற்றவர் நம்மை போற்றும்படி இருக்க வேண்டும்… தூற்றும்படி அல்ல…”


“புரிந்து கொண்டேன் , ஜெனி"


“நாம் எல்லோரும் ஒன்றாக நண்பர்களாக இருப்போமே ? நமக்குள் என்ன பகை ?” என்றாள் ஜெனி.


“வா, டேவிட் நாவல் மரத்தடிக்குச் சென்று விளையாடலாம்” என சிவாவும் வரதனும் சொன்னார்கள்.


அக்கணம் முதல் டேவிட்டும் ஜெனியின் நண்பர்கள் குழுவில் ஐக்கியமானான்.



இன்றைய செய்திகள்


11.12.2023


*குறையும் வேலை வாய்ப்புகள் தவிக்கும் இந்திய பட்டதாரிகள்


* கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.


* அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு; மாணவர்களின் தேவையை அறிந்து 12ஆம் தேதி பாட புத்தகம் வழங்கவும் உத்தரவு.


* நான்கு மாவட்டங்களில் ஒரு வார விடுமுறைக்கு பிறகு பள்ளி கல்லூரிகள் இன்று திறப்பு.


* இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடர் : மூன்றாவது போட்டியில் வென்று ஒரு நாள் தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்.


Today's Headlines


*Decreasing job opportunities and disturbed youth graduates of India 


 * Chance of rain in eight districts of Tamil Nadu due to low layer air circulation - Meteorological Department.


 * New schedule for half-yearly examination is Published by education department; as per  the need of the students, order to provide textbooks on 12th.


 * Schools and colleges open today after a week's holiday in four districts.


 * England West Indies One Day Cricket Series: West Indies won the third match and won the one day series.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...