கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க சிறப்பு குழுக்கள் அமைப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு...

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க சிறப்பு குழுக்கள் அமைப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு (Formation of special teams to provide food and relief items to flood affected Thoothukudi and Tirunelveli districts – Tamil Nadu Government Announcement)...


 தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள் கவனத்திற்கு - அரசு வெளியிட்ட அறிவிப்பு


கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கும், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சிறப்பு அலுவலர்களை நியமிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.


இதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு திரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப, அவர்கள், ஒருங்கிணைப்பு அலுவலராக தூத்துக்குடியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி எண். 7397770020. பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்படும். தூத்துக்குடியில் உள்ள இந்தக் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர்கள் பின்வருமாறு;


1. செல்வி. இரா. ஐஸ்வர்யா, இ.ஆ.ப, கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தூத்துக்குடி, தொலைபேசி எண். 8973743830


2. திரு. ஓ. ராஜாராம், துணை ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி, தொலைபேசி எண். 9943744803


3. திருமதி. எஸ். அமுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), தூத்துக்குடி, தொலைபேசி எண். 9445008155


இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் இப்பணிகளை ஒருங்கிணைக்க திருநெல்வேலி மாவட்ட நகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் திரு. தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இ.ஆ.ப., தொலைபேசி எண். 9442218000. அங்கு கூடுதலாக பின்வரும் அலுவலர்கள் இப்பணியினை ஒருங்கிணைப்பார்கள்.


1. திரு. சீ. கிஷன் குமார், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி), திருநெல்வேலி, தொலைபேசி எண். 9123575120


2. திருமதி. ரேவதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், திருநெல்வேலி, தொலைபேசி எண். 9940440659


இப்பணிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மைச் செயலாளர், திருமதி. பெ. அமுதா, இ.ஆ.ப., அவர்கள் செயல்படுவார்.


நிவாரணப் பொருள்கள் வழங்க விரும்புவோர் மற்றும் தன்னார்வலர்கள் மேற்காணும் அலுவலர்களை தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.12.2023...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.12.2023 - School Morning Prayer Activities...

  


திருக்குறள்: 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : கொல்லாமை


குறள்:323


.ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்

பின்சாரப் பொய்யாமை நன்று.


விளக்கம்:


 உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.



பழமொழி :

It is easier to destroy than to create


அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்



இரண்டொழுக்க பண்புகள் :


1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.


2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்



பொன்மொழி :


ஒரு கதவு மூடப்படும்

போது இன்னொரு

கதவு திறக்கிறது.

ஆனால் பல நேரங்களில்

நாம் மூடிய கதவின்

நினைவிலேயே

இருப்பதனால்..

திறந்த கதவுகள் நம்

கண்களுக்கு தெரிவதில்லை.



பொது அறிவு :


1. உலகின் மிகச் சிறிய பறவை எது?


விடை: ஹம்மிங் பறவை


2. மனிதனின் இதயம் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது?


விடை: கார்டியாக் தசை



English words & meanings :


 disaster- a sudden accident that causes great damage or lot of loss in life பேரழிவு. 

flood - an overflow of large amount of water பெருவெள்ளம்


ஆரோக்ய வாழ்வு : 


இலுப்பை பூ : தலைமுறைகளை கடந்தும் இலுப்பை மரங்கள் பயன்தரக்கூடியது. இலுப்பை எண்ணெய், பூக்கள் கொட்டைகள் மரபட்டைகள் என இம்மரத்தின் ஒவ்வொரு பாகமுமே, பெறும் பயன் தரக்கூடியது.



டிசம்பர் 19


கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் நினைவுநாள்


கி. ஆ. பெ. விசுவநாதம் (10 நவம்பர் 1899 - 19 திசம்பர் 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, என அழைக்கப்படுபவர், தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர். இவர் எழுதியுள்ள நூல்கள் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. 


2000ஆம் ஆண்டிலிருந்து கி. ஆ. பெ. விசுவநாதம் விருது அவர்களின் பெயரில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்நெறியில் தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இவரது நினைவில் ஐந்து ரூபாய் தபால் தலை இந்திய தபால் துறை சார்பில் வெளியிடப்பட்டது.[6]

1997ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி திருச்சியில் துவக்கிய மருத்துவக் கல்லூரிக்கு கி. ஆ. பெ.யின் பெயர் சூட்டப்பட்டது.



நீதிக்கதை


 கரடி சொன்ன ரகசியம்


இரண்டு நண்பர்கள் காட்டு வழியே சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிரே ஒரு கரடி வந்தது. இரண்டு நண்பர்களில் ஒருவனுக்கு மரம் ஏறத் தெரியும். மற்றவனுக்குத் தெரியாது.


கரடியைப் பார்த்தவுடன் மரம் ஏறத் தெரிந்தவன் மரத்தில் வேகமாக ஏறி ஒளிந்து கொண்டான். ஏறத் தெரியாதவன் கரடி தன்னைக் கொன்று விடும் என்று பயந்து தரையில் விழுந்து விட்டான்.


கரடி அவனருகே வந்து அவனை முகர்ந்து பார்த்தது. அவன் தன் சுவாசத்தை நிறுத்தி விட்டு பிணம் போல கிடந்தான். பிணத்தைத் தின்னும் பழக்கமில்லாத கரடி அவனை விட்டு விட்டு வேறு பக்கம் திரும்பிப் போனது.


கண் பார்வையில் இருந்து கரடி மறைந்ததும் மரத்தில் இருந்தவன் இறங்கிக் கீழே வந்தான். நண்பனிடம் சென்று "அந்தக் கரடி உன் காதில் என்னவோ சொன்னதே, என்ன சொன்னது ?" என்று கேட்டான்.


அதற்குக் கீழே கிடந்தவன், 'ஆபத்து வரும் போது , தான் மட்டும் தப்பித்தால் போதும் என்று உன்னை விட்டு விட்டு ஓடிப் போகும் நண்பனோடு ஒரு போதும் பயணம் செய்யாதே!' என்று அந்தக் கரடி எனக்குப் புத்தி சொன்னது என்றான்.


நீதி : ஆபத்தில் உதவும் நண்பனே நல்ல நண்பன். அப்படி இல்லாத சுய நலமான நட்பை, நாம் விட்டு விட வேண்டும்.



இன்றைய செய்திகள்


19.12.2023


*வெள்ள நிவாரண நிதியை அதிகரித்து வழங்க வேண்டி பிரதமரைச் சந்திக்க டெல்லிக்கு புறப்பட்டார்- முதலமைச்சர் மு க ஸ்டாலின்.


* தென் தமிழக 4 மாவட்டங்களில் - நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை. அநேக அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப் பட்டதால் எங்கும் வெள்ளம்.


* விசா பெற இனி புதிய கட்டுப்பாடுகள்; தொழிலாளர் துறை அதிரடி.


* தென் தமிழக மழை பாதிப்பு-  கூடுதல் அமைச்சர்கள் நியமனம். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அங்கு முகாம். ஹெலிகாப்டர் மூலம் மக்களுக்கு உணவு வழங்கப் படுகிறது 


* தமிழ்நாடு பிரீமியர் லீக்: அறிமுக போட்டியிலேயே அரை சதம் சாய் சுதர்சன் பெருமிதம்.


Today's Headlines


*Chief Minister M. K. Stalin left for Delhi to meet the Prime Minister to request an increase in the flood relief funds.


 * In 4 districts of South Tamil Nadu - Nellai, Thoothukudi, Thenkasi and Kanyakumari districts experienced unprecedented rainfall.  Many dams were full and excess water was released causing flooding everywhere.


 * New restrictions on getting visas;  Labor Department action.


 * South Tamil Nadu rain affected areas Appointment of additional ministers.  Minister Udayanidhi Stalin and others camped there.  People are being given food by helicopter


 * Tamil Nadu Premier League: Sai Sudarshan scores half-century in debut match.

 

அந்தரத்தில் தொங்கும் ரயில் தண்டவாளம்...

தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரயில் தண்டவாளத்தின் அடித்தளம்.


திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் இப்பாதையில் வழக்கமாக செல்லும்...






வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...




தொடர்மழை காரணமாக சதுரகிரி மலை சுந்தர மகாலிங்கம் கோயிலில் சிக்கித் தவித்த 16 பக்தர்கள் மீட்பு...

 தொடர் மழை காரணமாக சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலில் சிக்கித் தவித்த 16 பக்தர்களை வனத்துறை மற்றும் தீயணைப்புதுறையினர் பத்திரமாக மீட்டு மலையடிவாரத்துக்குக் கொண்டு வந்தனர்...



கன்னியாகுமரி: கனமழையால் வெள்ளக்காடான திற்பரப்பு அருவி...

 கன்னியாகுமரி: கனமழையால் வெள்ளக்காடான திற்பரப்பு அருவி...




நெல்லை சந்திப்பு பகுதியில் கான்கிரீட் வீடு மழை வெள்ளத்தால் இடிந்து விழுந்தது...



நெல்லை சந்திப்பு பகுதியில் கான்கிரீட் வீடு மழை வெள்ளத்தால் இடிந்து விழுந்தது...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Part-time teachers transfer counselling - Date of joining service on revised transfer priority norms - SPD's letter, Dated : 24-12-2024

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி த...