கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திட்டமிட்டபடி தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் - செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் பத்திரிகை செய்தி...

 திட்டமிட்டபடி தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் - செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் பத்திரிகை செய்தி...



தபால் வாக்கு - தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான தகவல்...


தபால் வாக்கு - தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான தகவல்...



>>>தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 தபால் வாக்கு குறித்த தகவல் - நாளை 24.3.2024 ஞாயிறு அன்று தேர்தல் வகுப்பிற்கு செல்லும் அனைத்து ஆசிரிய பெருமக்களின் கவனத்திற்கும் உரிய செயல்பாட்டிற்கும்...



*தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கனிவான கவனத்திற்கு...



24.03.2024, ஞாயிற்றுக்கிழமை  அன்று நடைபெறும் முதல் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லும்போதே கட்டாயமாக  உங்களின் வாக்காளர் அடையாள அட்டை நகல், தேர்தல் ஆணை நகல் எடுத்துச் சென்று அத்துடன் Form 12 or Form 12A பூர்த்தி செய்து வழங்கிவிடவும். ஏனெனில் இரண்டாவது வகுப்பிலேயே நமக்கு வாக்குச் சீட்டு அல்லது EDC வழங்கப்படும். 


*இந்த வருடம் வாக்குச் சீட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது.  மேலும் நாம் வாக்குச்சீட்டை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.


அங்கேயே தங்களுக்கு வாக்குச் சாவடி அமைத்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


*அதனால் கட்டாயமாக ஆணை நகல், வாக்காளர் அடையாள நகல் எடுத்துச் செல்லவும்...



தேர்தல் பயிற்சி வகுப்பு தேதியினை மாற்ற ஜாக்டோ ஜியோ கோரிக்கை...

 தேர்தல் பயிற்சி வகுப்பு தேதியினை மாற்ற ஜாக்டோ ஜியோ கோரிக்கை...


ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO)


தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு


நாள்: 22.03.2024


பெறுநர்

தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர். 

பொது (தேர்தல்கள்) துறை, 

தலைமைச் செயலகம், சென்னை -600 009.


அய்யா,


பொருள் : 2024 பாராளுமன்றத் தேர்தல் 24.03.2024 அலுவலர்களுக்கான முதல் பயிற்சி வகுப்பு கிருத்துவர்கள் பண்டிகையான குருத்தோலை ஞாயிறு தேர்தல் வகுப்பினை 23.03.2024 அன்று மாற்றி நடத்துவது குறித்து.



2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எதிர்வரும் 19.04.2024 அன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் வாக்குப் பதிவு பணிகளில் ஈடுபடவுள்ள தேர்தல் அலுவலர்களான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான முதலாவது பயிற்சி வகுப்பானது 24.03.2024 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வரும் 24.03.2024 அன்று தமிழகத்திலுள்ள சிறுபான்மை சமூகத்தினரான கிருத்துவர்கள் தங்களது மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டின் அடிப்படையில் புனித குருத்தோலை ஞாயிறு பண்டிகையினைக் கொண்டாட உள்ளனர். கடந்த ஆறு வாரங்களாக தபசு காலத்தை கடைபிடிக்கும் கிருத்துவர்கள், *குருத்தோலை ஞாயிறன்று குருத்தோலைகளுடன் புனிதமாக வீதிகளில்* ஊர்வலமாக வந்து ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபடுகின்றனர். அன்றைய தினத்தில், தேர்தல் வகுப்பானது நடைபெற்றால், சிறுபான்மையின கிருத்துவர்களுக்கு தங்களது புனிதப் பண்டிகையான குருத்தோலை ஞாயிறைக் கொண்டாட பெரும் இடையூறாக இருக்கும் என்பதால், தேர்தல் பணியாளர்களுக்கான *முதலாவது வகுப்பினை 23.03.2024 சனிக்கிழமை* மாற்றியமைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


தங்கள் நம்பிக்கையுள்ள,

மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

ஜாக்டோ-ஜியோ





தேர்தல் பணி பயிற்சி வகுப்பு, அஞ்சல் வாக்கு / தேர்தல் பணிச்சான்று குறித்த தேர்தல் பிரிவு தகவல்கள்...

 

தேர்தல் பணி பயிற்சி வகுப்பு, அஞ்சல் வாக்கு  / தேர்தல் பணிச்சான்று குறித்த தேர்தல் பிரிவு தகவல்கள்...



தகவலுக்காக,


தேர்தல் பணி பயிற்சி வகுப்பு  குறித்து - 22.03.2024 வெள்ளி மாலை 3.30 மணிக்கு நடைப்பெற்ற தேர்தல் பிரிவு காணொளி ஆய்வு கூட்ட தகவல்கள்...


1. எதிர் வரும் 24.03.2024 ஞாயிற்று கிழமை அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி நடைபெற உள்ளது.


2. இப்பயிற்சியில் காலை 9.30 மணிக்கு வருகை பதிவினை துவங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.


3. பயிற்சிக்கு வருகை தராமல் இருக்கும் அலுவலர்களது விபரம் சேகரிக்கப்பட்டு, துறை தலைமைக்கு தகவல் வழங்கப்பட்டு, பயிற்சியில் கலந்து கொண்டிட துறை தலைமை மூலம்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.


3. வாக்குச்சாவடிகளில் பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் தங்கள் வாக்குகளை செலுத்திடுவதற்காக கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றிட தெரிவிக்கப்பட்டுள்ளது.


4. நாமக்கல் பாரளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள அலுவலர்கள் , தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடியினிலேயே தேர்தல் பணிச்சான்று மூலம் வாக்கினை செலுத்திட  படிவம் 12A யும்,


5. நாமக்கல் பாராளுமன்ற தொகுதியினை தவிர்த்து வேறு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள அலுவலர்கள் , தபால் வாக்கு செலுத்திட படிவம் 12-ம்  பயிற்சி வகுப்பில் வழங்கப்படும்.


6. நேர்வுக்கு ஏற்ப மேற்படி படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிட, தொடர்புடைய அலுவலர்கள், தங்களது ,

 

1. தேர்தல் பணிநியமன கடித நகல்.


2. வாக்காளர் அடையாள அட்டை நகல்.


ஆகியவற்றை தவறாமல் எடுத்து வந்திட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


3. தேர்தல் அலுவலர்கள் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ள  வாக்காளர் பட்டியலின் பாகம் மற்றும் வரிசை எண் விவரம் குறித்து வைத்திருக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (இவ்விவரம் தெரியாத நிகழ்வில் பயிற்சி நடைபெறும் இடத்தினிலே பாகம் எண் மற்றும் வரிசை எண் தெரியப்படுத்திட தேர்தல் பிரிவு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது)


4. வாக்காளர் அடையாள அட்டை எண் பதிவிட்டு 1950 எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியும்  பாகம் எண் , வரிசை எண் எளிமையாக தெரிந்து கொள்ளலாம் எனவும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.


7. மேற்படி அலுவலர்களிடமிருந்து  நேர்வுக்கு ஏற்ப பூர்த்தி செய்யப்பட்ட படிவம்12 (அல்லது) 12A   விண்ணப்பங்கள் அன்று மாலை பயிற்சி வகுப்பிலே பெற்றுக்கொள்ளப்படும்.


8. இதன் பிறகு தொடர் நடவடிக்கையாக உரியவாறு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்கு  / தேர்தல் பணிச்சான்று வழங்கிட தேர்தல் பிரிவு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


9. தேர்தல் பணிச் சான்று பெறுவதற்காக படிவம் 12A வழங்கப்பட்ட பின்னர், நாமக்கல் பாரளுமன்ற தொகுதி தவிர்த்து வேறு தொகுதியில் பணி ஒதுக்கீடு கிடைக்கப்பெறும் அலுவலர்களுக்கு தபால் வாக்கு கிடைத்திட இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் சிறப்பு ஏற்படாக படிவம் 12 பூர்த்தி செய்து பெற்றிட தேர்தல் பிரிவு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. 


10. பயிற்சி வகுப்பில்  வாக்குப் பதிவு இயந்திரங்கள் கையாளும் முறை, தேர்தல் படிவங்கள் பூர்த்தி செய்தல் ஆகிய இனங்களில் கூடுதல் பயிற்சி அளித்திட தெரிவிக்கப்பட்டது.


11. எதிர்வரும் பயிற்சி வகுப்புகளில் அலுவலர்கள் தங்களது  தபால் வாக்குகளை செலுத்திட தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளின் படி பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது என்ற தகவலும் வழங்கப்பட்டுள்ளது.


12. தேர்தல் பணி புரியும் அலுவலர்கள் தங்களது வாக்குகளை உரியவாறு செலுத்திட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் பயிற்சி வகுப்பில் தெரிவித்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.


- தேர்தல் பிரிவு தகவல்.


    - நன்றி.


நாகை மாவட்டம் - முதல் தேர்தல் பயிற்சி வகுப்பு தேதி 27.03.2024...

 

 நாகை மாவட்டம் - முதல் தேர்தல் பயிற்சி வகுப்பு தேதி 27.03.2024...



தேர்தல் பணிச் சான்றிதழ் - EDC - Election Duty Certificate - குறித்த தகவல்கள்...



தேர்தல் பணிச் சான்றிதழ் - EDC - Election Duty Certificate - குறித்த தகவல்கள்...


தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு  தபால் ஓட்டு வழங்குவது வழக்கம்...


-  தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தனது சொந்த சட்டமன்ற தொகுதியிலிருந்து வேறு சட்டமன்ற தொகுதிக்கு பணியமத்தப்படுவர்.


-  அவ்வாறு பணியமர்த்தப்படும் போது சட்டமன்றத் தேர்தலில் அனைவருக்கும் தபால் ஒட்டு பெறவேண்டிய சூழல் ஏற்படும் ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி என்பதால் வேறு சட்டமன்ற தொகுதியில் பணியமர்த்தப்பட்டாலும் தாங்கள் பணிபுரிவது தங்களது சொந்த நாடாளுமன்ற தொகுதியாக இருந்தால் EDC CERTIFICATE பெற்றுக் கொண்டு நேரடியாகவே தாங்கள் தேர்தல்  பணிபுரியும் இடத்தில் `EVM மிஷினில் வாக்களிக்கலாம்`.


-  ஆனால் வேறு நாடாளுமன்ற தொகுதி அல்லது வேறு மாவட்டத்தில் பணி புரியும் தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டுக்கள் மூலமே வாக்களிக்க முடியும்.



தபால் வாக்குகளை இனி அஞ்சலில் செலுத்த முடியாது. அந்தந்த தொகுதிகளின் வாக்காளர் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகளில் வாக்குகளைச் செலுத்தலாம். - தமிழ்நாடு தேர்தல் ஆணையம்...


 தபால் வாக்குகளை இனி அஞ்சலில் செலுத்த முடியாது. அந்தந்த தொகுதிகளின் வாக்காளர் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகளில் வாக்குகளைச் செலுத்தலாம். - தமிழ்நாடு தேர்தல் ஆணையம்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...