கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01.08.2024 இல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


நிகழ் கல்வி ஆண்டுக்கான தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 01-08-2024 உள்ள ஆசிரியர்-மாணவர் விகிதாச்சார அடிப்படையில் பணியிட நிர்ணயம் செய்தல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு...



01.08.2024 இல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் Post Fixation செய்ய தொடக்க கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தேசிய அளவிலான பொறியியல் கல்லூரி தர வரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்...

 தேசிய அளவிலான பொறியியல் கல்லூரி தர வரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம், திருச்சி என்ஐடி 9 ஆவது இடம்...


இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனம் - தொடர்ந்து 6வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம்...


மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பின் பட்டியலில், இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம்.


சென்னை ஐஐடி ஒட்டுமொத்த பிரிவில் சிறந்த பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற்றதோடு இன்ஜினீயரிங் பல்கலைக்கழகங்களில் முதலிடத்தையும், தொடர்ந்து 6வது முறையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது.



>>> NIRF - தேசிய அளவிலான மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உட்பட அனைத்து வகை கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு - இந்திய தரவரிசை 2024 - வெளியீடு : உயர் கல்வித் துறை - கல்வி அமைச்சகம் - இந்திய அரசு...


NIRF தரவரிசை - மாநில பல்கலை.களில் சென்னை அண்ணா பல்கலை. நாட்டிலேயே முதலிடம்...

 அண்ணா பல்கலை. முதலிடம்...


NIRF தரவரிசை - மாநில பல்கலை.களில் சென்னை அண்ணா பல்கலை. நாட்டிலேயே முதலிடம்...


NIRF தரவரிசை - கலைக்கல்லூரிகள் பட்டியலில் டெல்லி ஹிந்து கல்லூரி முதலிடம்.


கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரி 7வது இடமும், சென்னை லயோலா கல்லூரி 8வது இடமும் பிடித்துள்ளன.



>>> NIRF - தேசிய அளவிலான மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உட்பட அனைத்து வகை கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு - இந்திய தரவரிசை 2024 - வெளியீடு : உயர் கல்வித் துறை - கல்வி அமைச்சகம் - இந்திய அரசு...


சிறந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான பட்டியலில் வேலூர் சிஎம்சி கல்லூரி 3 ஆம் இடம்...

 சிறந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான பட்டியலில் வேலூர் சிஎம்சி கல்லூரி 3 ஆம் இடம்...


NIRF தரவரிசை - மருத்துவ கல்வி நிறுவனங்களில் நாட்டிலேயே டெல்லி எய்ம்ஸ் முதலிடம். வேலூர் சி.எம்.சி. கல்லூரி 3ம் இடம்.


பல் மருத்துவக் கல்லூரி தரவரிசையில் சென்னை சவீதா கல்லூரி முதலிடம்.




>>> NIRF - தேசிய அளவிலான மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உட்பட அனைத்து வகை கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு - இந்திய தரவரிசை 2024 - வெளியீடு : உயர் கல்வித் துறை - கல்வி அமைச்சகம் - இந்திய அரசு...


4 புதிய மாநகராட்சிகள் தொடக்கம்...

 4 புதிய மாநகராட்சிகள் தொடக்கம்...


புதிய மாநகராட்சிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.


திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.


4 நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.


பெருநகரங்களுக்கு இணையான சாலை, குடிநீர், பாதாள சாக்கடை வசதிகளை செய்ய மாநகராட்சியாக தரம் உயர்வு.



கலைஞர் நூற்றாண்டு நினைவு ₹100 நாணயம் வெளியீட்டு விழா...

கலைஞர் நூற்றாண்டு நினைவு ₹100 நாணயம் வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்க உள்ளது...


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார்.


எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




ஆகஸ்ட் மாதம் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு...


 ஆகஸ்ட் மாதம் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு...


2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் அன்று பள்ளியில் விழா முடித்து அன்று விடுமுறை ஆகும். அடுத்த நாள் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் வரையறுக்க பட்ட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆகஸ்ட் மாதத்திற்கான புதிய நாட்காட்டியில் 17 மற்றும் 18ஆம் தேதி சனி ஞாயிறு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது 


அடுத்ததாக 19.08.2024 திங்களன்று ரிக் உபகர்மா வரையறுக்க பட்ட விடுமுறை வருகிறது. மேலும் 20.08.2024 செவ்வாய் அன்று காயத்ரி ஜெபம் வரையறுக்கப்பட்ட விடுமுறை வருகிறது.


ஆகவே தொடர்ச்சியாக ஆறு நாட்கள் விடுமுறை பெற ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கின்றது. இந்த விடுப்பானது இதுவரை வரையறுக்கப்பட்ட விடுமுறை ஒன்று கூட எடுக்காத ஆசிரியர்களுக்கு பயன்படலாம். எனவே ஆசிரியர்கள் தங்களின் பள்ளியின் பிற ஆசிரியர்கள் விடுப்பு மற்றும் தங்களின் பயணங்களை விடுமுறை நாட்களைக் கொண்டு அமைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது


RL leave in August 2024 - ஆகஸ்ட்


03.08.2024, சனி - ஆடி பெருக்கு


16.08.2024, வெள்ளி - வரலட்சுமி விரதம்


19.08.2024, திங்கள் -  ரிக் உபகர்மா/யஜுர் உபகர்மா/ஆவனி அவிட்டம்


20.08.2024, செவ்வாய் -  காயத்ரி ஜெபம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...