கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Corporations லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Corporations லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

All leaves like CL, RL, EL, ML should be taken with the permission of the Corporation Commissioner - Coimbatore Corporation Education Officer Circular


CL, RL, EL, ML என அனைத்து விடுப்புகளையும் மாநகராட்சி ஆணையர் அனுமதி பெற்று தான் எடுக்க வேண்டும் - கோயம்புத்தூர் மாநகராட்சி கல்வி அலுவலர் சுற்றறிக்கை 


All leaves like CL, RL, EL, ML should be taken with the permission of the Corporation Commissioner - Coimbatore Corporation Education Officer Circular


தற்செயல்‌ விடுப்பு மற்றும்‌ வரையறுக்கப்பட்ட விடுப்பு Casual Leave & Restricted Leave மருத்துவ விடுப்பு மற்றும்‌ ஈட்டிய விடுப்பு Earn Leave & Medical Leave மாநகராட்சி ஆணையர் அனுமதி பெற்று தான் எடுக்க வேண்டும் என கோவை மாநகராட்சி கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




மாநகராட்சி அலுவலகம்‌,

கோயம்புத்தூர்‌.

ந.க.எண்‌. 3914/2024/கே-9 நாள்‌. 12,2024

சுற்றறிக்கை

பொருள்‌ - நாவாகம்‌ - கல்வி -' கோயம்புத்தூர்‌ மாநகராட்சி - மாநகராட்சி ஆரம்ப, நடுநிலை, உயாறநிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகள்‌ - தலைமை ஆசிரியா்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ விடுப்பு துய்பபது - ஆணையர்‌ அவர்களது முன்‌ அனுமதி பெற அறிவித்தல்‌ - சார்பு.


பார்வை- ஆணையர் அவாகளின்‌ 05.12.2024 நாளது நேரடி உத்தரவு.


பார்வையில்‌ காண்‌ ஆணையர்‌ அவர்களின்‌ உத்தரவின்படி, அனைத்துப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியாகள்‌ மற்றும்‌ ஆசிரியாகள்‌ (பள்ளி மேலாண்மைக்குழு மூலம்‌ நியமனம்‌ செய்யப்பட்ட ஆசிரியர்கள்‌ தவிர) விடுப்புக்‌ கோருதலுக்கான “CCMC ALL SCHOOL TEACHERS வாட்ஸ்‌ ஆப்‌” (Whatsapp) குழுவில்‌ சிறுவிடுப்புகள்‌ (தற்செயல்‌ விடுப்பு மற்றும்‌ வரையறுக்கப்பட்ட விடுப்பு) ஆகியவற்றை முன்னதாக தெரிவித்து, ஆணையா்‌ அவர்களால்‌ விடுப்பு அனுமதிக்கப்பட்ட பின்னரே விடுப்பு மேற்கொள்ள வேண்டும்‌ எனவும்‌, இதர விடுப்புகள்‌ (மருத்துவ விடுப்பு மற்றும்‌ ஈட்டிய விடுப்பு) ஆணையா்‌ அவர்களிடம்‌ சம்பந்தப்பட்ட ஆசிரியாகளே நேரடியாக அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.


மேற்குறிப்பிட்ட வாட்ஸ்‌ ஆப்‌ (Whatsapp) குழுவில்‌ தமது பள்ளி ஆசிரியாகள்‌ அனைவரும்‌ (பள்ளி மேலாண்மைக்குழு மூலம்‌ நியமனம்‌ செய்யப்பட்ட ஆசிரியாகள்‌ தவிர) இணைக்கப்பட்டுள்ளதை பள்ளித்‌ தலைமை ஆசிரியாகள்‌ உறுதி செய்திட வேண்டும்‌. இந்த சுற்றறிக்கையினை பள்ளியின்‌ அனைத்து ஆசிரியாகளுக்கும்‌ சுற்றுக்கு விட்டு கோப்பில்‌ பராமரிக்க தெரிவிக்கப்படுகிறது. 


மாநகராட்சி கல்வி அலுவலா்‌

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி.

பெறுநர்‌ : மாநகராட்சி அனைத்து பள்ளித்‌ தலைமை ஆசிரியாகள்‌ 

நகல்‌ : பள்ளி மேற்பார்வையாளாகள்‌

(நடுநிலைப்‌ பள்ளிகள்‌ / ஆரம்பப்‌ பள்ளிகள்‌),


Withdrawn of order requiring teachers to obtain permission before taking leave - Education Officer circular

 


கோவை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க முன் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவு வாபஸ்


Withdrawn of order requiring teachers to obtain permission before taking leave - Coimbatore Corporation Education Officer circular issued


தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு துய்ப்பது சார்ந்து பிறப்பிக்கப்பட்ட கோவை மாநகராட்சி ஆணையர் சுற்றறிக்கை திரும்ப பெறப்படுவதாக கோவை மாநகராட்சி கல்வி அலுவலர் சுற்றறிக்கை வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


District wise list of local bodies to be merged with Corporations and Municipalities in Tamil Nadu...



 தமிழ்நாட்டில் மாவட்டங்கள் வாரியாக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைக்கப்படவுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல்...



District wise list of local bodies to be merged with Corporations and Municipalities in Tamil Nadu...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


4 புதிய மாநகராட்சிகள் தொடக்கம்...

 4 புதிய மாநகராட்சிகள் தொடக்கம்...


புதிய மாநகராட்சிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.


திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.


4 நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.


பெருநகரங்களுக்கு இணையான சாலை, குடிநீர், பாதாள சாக்கடை வசதிகளை செய்ய மாநகராட்சியாக தரம் உயர்வு.



கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல் வெளியீடு...

கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல் வெளியீடு...


01. *வெள்ளமடை*

02. *அக்ரஹாரசாமக்குளம்*

03. *கொண்டையம்பாளையம்*

04. *சர்க்கார்சாமக்குளம்*

05. *காளிபாளையம்*

06. *வெள்ளானைப்பட்டி*

07. *கீரணத்தம்*

08. *குருடம்பாளையம்*

09. *பன்னிமடை*

10. *நீலம்பூர்*

11. *இருகூர்*

12. *மயிலம்பட்டி*

13. *பட்டணம்*

14. *கலிக்கநாயக்கன்பாளையம்*

15. *வேடபட்டி*

16. *சோமையம்பாளையம்*

17. *தீத்திபாளையம்*

18. *பேரூர் செட்டிபாளையம்*

19. *மலுமிச்சம்பட்டி*

20. *சீரபாளையம்*



4 நகராட்சிகள் மாநகராட்சியாகின்றன - பேரவையில் மசோதா தாக்கல்...


 புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சியாகின்றன - பேரவையில் மசோதா தாக்கல்...



மாநகராட்சிகளுடன் இணையும் பகுதிகள் எவை எவை? அரசிதழில் வெளியீடு...



 புதிய நான்கு மாநகராட்சிகளுடன் இணையும் பகுதிகள் எவை எவை? அரசிதழில் வெளியீடு...


புதிதாக உருவாக்கப்பட உள்ள காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல் மாநகராட்சிகளில் சேர்க்கப்பட உள்ள கிராம ஊராட்சிகளின் விவரம், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.



அதன் விவரம்:


காரைக்குடி மாநகராட்சி:


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியுடன், கண்டனுார், கோட்டையூர் பேரூராட்சிகளும், சங்கராபுரம், கோவிலுார், இலுப்பக்குடி, அரியக்குடி, தளக்காவூர் ஆகிய கிராம ஊராட்சிகளையும் இணைத்து, மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.




திருவண்ணாமலை மாநகராட்சி:


திருவண்ணாமலை நகராட்சியுடன், வேங்கிக்கால், சின்னகாங்கேயனுார், கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, ஏந்தல், தென்மாத்துார், கீழ்கச்சராப்பட்டு, மேலதிக்கான், சாவல்பூண்டி, நல்லவன்பாளையம், கனந்தம்பூண்டி, ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், அடி அண்ணாமலை, தேவனந்தல், ஆடையூர், துர்க்கை நம்மியந்தல், மலப்பாம்பாடி ஆகிய ஊராட்சிகளும், அடி அண்ணாமலை பாதுகாக்கப்பட்ட காடுகள் பகுதிகளையும் இணைத்து, மாநகராட்சி ஏற்படுத்தப்பட உள்ளது.




புதுக்கோட்டை மாநகராட்சி:


புதுக்கோட்டை நகராட்சியுடன், திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, தேக்காட்டூர், 9ஏ நத்தம்பண்ணை, 9பி நத்தம்பண்ணை, வெள்ளனுார், திருவேங்கைவாசல், வாகவாசல், முள்ளூர் கிராம ஊராட்சிகள், கஸ்பா காடுகள் மேற்கு பகுதி ஆகியவற்றை இணைத்து, புதுக்கோட்டை மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.




நாமக்கல் மாநகராட்சி:


நாமக்கல் நகராட்சியுடன், வகுரம்பட்டி, வள்ளிப்புரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து, நாமக்கல் மாநகராட்சி அமைக்கப்படும்.


இவ்விபரம், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டின் 25 மாநகராட்சிகள்...

 


தமிழ்நாட்டின் 25 மாநகராட்சிகள்...


 உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள இருபத்து ஒன்று மாநகராட்சிகளில், முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி சென்னை ஆகும். இரண்டாவது கோயம்புத்தூர் மாநகராட்சியும், மூன்றாவது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும் முறையே நான்காவது மதுரை மாநகராட்சியும் அடுத்த படியாக சேலம் மாநகராட்சியும் திருப்பூர் மாநகராட்சியும் உள்ளது. இந்த மாநகராட்சிகளின் தரவரிசை என்பது மக்கள் தொகை அடிப்படையிலும், மாநகராட்சி வருவாய் அடிப்படையிலும், மாநகராட்சி மண்டலங்கள் மற்றும் வார்டுகள் அடிப்படையிலும் வரிசைப்படுத்தப்படுகிறது


தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்  

1. சென்னை

2. கோயம்புத்தூர்

3. மதுரை

4. திருச்சி

5. திருப்பூர்

6. சேலம்

7. ஈரோடு

8. திருநெல்வேலி

9. வேலூர்

10. தூத்துக்குடி  

11. திண்டுக்கல்

12. தஞ்சாவூர் 

13. சிவகாசி 

14. கரூர் 

15. ஓசூர் 

16. நாகர்கோவில் 

17. காஞ்சிபுரம் 

18. காரைக்குடி 

19. கடலூர் 

20. கும்பகோணம் 

21. திருவண்ணாமலை 

22. புதுக்கோட்டை 

23. தாம்பரம்

24. ஆவடி

25. நாமக்கல்

ஆகியவை தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் ஆகும்.


தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. இம்மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


25 Municipal Corporations of Tamil Nadu 

1. Chennai 

2. Coimbatore 

3. Madurai 

4. Trichy 

5. Tirupur 

6. Salem 

7. Erode 

8. Tirunelveli 

9. Vellore 

10. Tuticorin 

11. Dindigul 

12. Thanjavur 

13. Sivakasi 

14. Karur 

15. Hosur 

16. Nagercoil 

17. Kanchipuram 

18. Karaikudi 

19. Cuddalore 

20. Kumbakonam 

21. Thiruvannamalai 

22. Pudukottai 

23. Tambaram 

24. Avadi 

25. Namakkal 

are Municipal Corporations in Tamil Nadu.

தமிழ்நாட்டில் புதிதாக 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்வு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 569, நாள்: 15-03-2024...



 புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய நகராட்சிகள்  மாநகராட்சிகளாக தரம் உயர்வு...


தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சி...


தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் அறிவிப்பு...


🛑புதுக்கோட்டை

🛑நாமக்கல்

🛑திருவண்ணாமலை

🛑காரைக்குடி


4 நகராட்சிகள், அவற்றிற்கு அருகே உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக்குவதற்கான நடைமுறைகளை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு



>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 569, நாள்: 15-03-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அவற்றுக்கு அருகில் அமைந்துள்ள வேகமாக நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து 4 புதிய மாநகராட்சிகளை அமைத்து உருவாக்கவும், அது தொடர்பான நடைமுறைகளை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.




இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:


நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


விரைவான நகரமயமாக்கல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் உருவாக்கப்பட வேண்டிய அடிப்படை உட்கட்டமைப்புகளையும், குடிமைச் சேவைகளையும் மேலும் சிறப்பாக வழங்குவதற்கான எண்ணற்ற சவால்களை உருவாக்கியுள்ளது. மாநிலத்தின் நகர்ப்புற பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க, இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என அரசு கருதுகிறது.



இதனடிப்படையில், அரசு, பெருநகரங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள நகர்ப்புறத் தன்மை கொண்ட, விரைந்து நகரமயமாகி வரும் பகுதிகளிலும் நகரங்களுக்கு இணையான தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆற்றல்மிகு மின்விளக்குகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதரும் நோக்கோடு, விரைவாக நகரமயமாகி வரும் பகுதிகளை அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள நகரங்களோடு இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சிகளாக அமைத்து உருவாக்கி வருகிறது.


இதன்படி, இவ்வரசு கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.



இந்நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோயில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 30.03.2023 அன்று அறிவித்தார்.


இந்த அறிவிப்பினை செயல்படுத்துவது தொடர்பான உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், 4 புதிய மாநகராட்சிகளை அமைத்து உருவாக்குதற்கான நடைமுறைகளை தொடங்கிட தற்போது ஆணையிடப்பட்டிருக்கிறது.


இதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி, நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது தொடர்பான அரசின் உத்தேச முடிவினை அறிவித்து இன்று (15.3.2024) ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.


1998-ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படியான உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநகராட்சிகள் அமைத்து உருவாக்கப்படும். இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேலும் சிறப்பாக ஏற்படுத்தவும் மற்றும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பாகவும் அமையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100% தேர்ச்சியை ஊக்கப்படுத்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு (Incentives for teachers, students to encourage 100% pass: Coimbatore Corporation budget announcement)...



 100% தேர்ச்சியை ஊக்கப்படுத்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு (Incentives for teachers, students to encourage 100% pass: Coimbatore Corporation budget announcement)...


கோவை மாநகராட்சிப் பள்ளிகளில், பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஆரம்பப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 84 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 24,771 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 1,417 ஆசிரியர்கள், 92 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.


மாநகராட்சி கல்வித் துறையின் சார்பில், மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுத்தேர்வுகளில் சிறப்பாக செயல்படும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: 2021-22-ம் கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி மாணவர்களின் தேர்ச்சி 87.77 சதவீதமாகவும், பிளஸ் 1 மாணவர்களின் தேர்ச்சி 87.57 சதவீதமாகவும், பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி 92.17 சதவீதமாகவும் உள்ளது.


இந்நிலையில், மாநகராட்சிப் பள்ளிகளில் பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுமென மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநகராட்சிப் பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீத மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்யும் வகுப்பு ஆசிரியர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஊக்கத் தொகை அறிவிப்பு மாணவ, மாணவிகள் மேலும் சிறப்பாக படித்து தேர்ச்சி பெறவும், ஆசிரியர்கள் கற்பித்தல் முறையை தீவிரப் படுத்தவும் உந்து கோலாக இருக்கும், என்றனர்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு தனி இலச்சினை (Logo) வெளியீடு (Release of separate Logo for Chennai Municipal Corporation Schools)...



>>> பள்ளிக்கல்வித்துறையின் செய்தி வெளியீடுகள்...


 சென்னை பள்ளிகளுக்கான இலச்சினை (லோகோ) மற்றும் குறும்படம் வெளியிடுதல் நிகழ்ச்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் இலச்சினை, குறும்படத்தை இணைந்து வெளியிட்டு ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னை மேயர் பிரியா, "மாணவரின் வாழ்க்கையில் ஒவ்வொரு ஆசிரியரும் ரோல் மாடலாக இருப்பார். சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வி வழங்குகிறோம் என்ற நோக்கில் இலச்சினை மற்றும் குறும்படம் வெளியிட்டுள்ளோம் என கூறினார்."


தலைமை பொறுப்பு, முடிவு எடுத்தல் உள்ளிட்டவற்றை மாணவர்களிடம் வளர்க்க பள்ளிகளில் மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் எண்ணங்களை வண்ணம் ஆக்கும் வகையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சிறந்த திட்டங்கள் கொண்டு வரப்படும்" என்றார்.


அமைச்சர் மா. சுப்ரமணியன், ’’பள்ளிகளுக்கு விடுமுறை கொடுங்கள் என 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை மூலம் வலியுறுத்துகிறார்கள். 3 நாட்களில் சரி ஆகிவிடும் காய்ச்சல் காரணமாக எப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடியும்."


 

குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தால் முதலில் அரசு தான் நிற்கும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை இல்லை. மேலும் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதற்ற நிலையை உருவாக்க வேண்டாம்" என்றார். அமைச்சர் கே.என் நேரு  ஆசிரியர்களுக்கு போட்டி வைப்பது போல தமிழ்நாடு அமைச்சர்களுக்குள் பெரிய போட்டி நடைபெற்று வருகிறது. அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கோவில்களில் எல்லாம் ஆய்வு நடத்துகிறார். சுகாதார துறை அமைச்சரின் பணியை கண்டு வியப்படைந்தது உண்டு. சேகர் பாபு எவ்வளவு சாமி கும்பிட்டாலும்,  மா.சுப்பிரமணியன் என்ன ஊசி போட்டாலும் மாநகராட்சி நல்லா வேலை செய்தால் தான் மீண்டும் அமைச்சர் ஆக முடியும் என பழமொழி கூறி கிண்டல் செய்தார். 


119 தொடக்கப்பள்ளி, 92 நடுநிலை பள்ளிகள், 38 உயர்நிலை என மொத்தம் 281 பள்ளிகளில் ஒரு லட்சத்து நான்காயிரத்து 743 மாணவர்கள் படித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி பள்ளி ஏழை எளிய நடுத்தர மக்களின் குழந்தைகளுக்கு உதவிகரமாக உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களை நன்கு தயார் செய்யுங்கள், உங்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நாங்கள் தயார் செய்து தருகிறோம். 


மாநகராட்சிக்கு கலை அறிவியல், பொறியியல் மருத்துவ கல்லூரி வேண்டும் என அதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தென் சென்னையில் மருத்துவக்கல்லூரி அமைக்க திட்டமிட்டு வருகிறோம். அதற்கு முதல்வர் இசைவு தெரிவித்துள்ளார். மாநகராட்சியில் 50 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு மாநகராட்சி கல்லூரியில் 32% இடஒதுக்கீடு கிடைக்கும். அதன் மூலம் மாநகராட்சி மேலும் உத்வேகத்துடன் செயல்படும். 


மாநகராட்சி ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றுங்கள், உங்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு சட்டப்படி உரிய முறையில் மாநகராட்சி செய்து தரும். சென்னை மாநகராட்சி மற்ற மாநகராட்சிக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். முன்னோடி மாநிலமான மஹாராஷ்டிரா மாநகராட்சிக்கு இணையாக நாம் செயல்பட வேண்டும். அரசிற்கு இணையாக ஒரு தனி அரசாங்கம் போல் மாநகராட்சி செயல்படுகிறது. அதனை மேலும் சிறப்புடன் செயல்பட அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். சென்னையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள குழிகளை பருவமழைக்குள் மூட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என அமைச்சர் நேரு தெரிவித்தார்.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Our next calender year 2025 is a mathematical wonder

 நமது அடுத்த நாட்காட்டி ஆண்டு 2025 ஒரு கணித அதிசயம் சுவாரஸ்யமான 2025  1) 2025, ஒரு முழு வர்க்க எண்  2) இது இரண்டு வர்க்கங்களின் பெருக்கற்பலன...