கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

20,678 அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு "எக்கோ இந்தியா" இலிருந்து " பயிற்சியின் மூலம் தரமான கல்வியை மேம்படுத்துதல் - புகையிலையை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்துதல்"- நம்ம பள்ளி - நம்ம ஊரு பள்ளி - உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள்...

 

 

 

20,678 அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு "எக்கோ இந்தியா" இலிருந்து " பயிற்சியின் மூலம் தரமான கல்வியை மேம்படுத்துதல் - புகையிலையை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்துதல்"- நம்ம பள்ளி - நம்ம ஊரு பள்ளி - உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Proceedings of the Member Secretary, Namma School Namma Ooru Palli

Perasiriyar Anbazhagan Kalvi Valagam, PTA Building

Chennai -600 006.

Present: Thiru.R. Sudhan, I.A.S., (Retd.),

Member Secretary

Dear Sir/Madam,

RoC. No. 1020/J1 /NSNOP/2024/, Dated: 31·07.2024.

Sub:

Namma School -Namma Ooru Palli - Expression of interest in "School Engagement category from "ECHO India" - permission to implement "Enhancing Quality Education Through Training Of Trainers Focusing On Curing Health And Combating Tobacco With Use Of TOFIE Guidelines And COTPA"- 20,678 Government Schools- reg.


Ref:

Proposal submitted by “ECHO India"- as the implementation partner of "The Regents of University of New Mexico, Co-Impact, Give2Asia, Overseas Polymers Private Limited,Ford Foundation, The Union (International Union against Tuberculosis and Lung Disease)"- Dated: 27.06.2024.


The Namma School Foundation is a Section 8 Company registered under the Ministry of Corporate Affairs, New Delhi on 14.10.2022 to garner individual, alumni, business, NPOs & Corporate Social Responsibility (CSR) funds, for the overall development of the 37,558 Goverment Schools across Tamil Nadu.

With reference to the proposal letter submitted:

Implementation partner and Donor Name : ECHO India

Project Budget : Rs.10,00,000/-

Project Name : Enhancing Quality Education Through Training of Trainers Focusing on Curing Health and Combating Tobacco with use of TOFIE Guidelines And COTPA

Project Duration : July 2024- March 2025

Total Number of Schools : 20,678


Detailed break up of service:

The project details are furnished below:

Districts:

No. of Schools:20,678

Project Timeline: July 2024 - March 2025

Project Budget: 10,00,000



கலைத்திருவிழா - 2024-2025 போட்டிகளின் முக்கிய அம்சங்கள்...

 

கலைத்திருவிழா 2024-25


பள்ளி அளவிலான போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...


கலைத்திருவிழா - 2024-2025 போட்டிகளின் "மையக்கருத்து"...


 *"சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ".* 


இந்த மையக் கருத்தின் அடிப்படையிலேயே போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.


 *போட்டி நடைபெறும் நாட்கள்* 


 *22.08.2024 முதல் 30.08.2024 வரை* 


அரசுப் பள்ளிகளில் 1 - 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் மற்றும்

அரசு உதவி பெறும் பள்ளிகளில்  1 - 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும்.


கலைத் திருவிழா *போட்டிகள் ஐந்து பிரிவுகளில்* நடைபெறும்.


பிரிவு 1️⃣

1 மற்றும் 2ஆம் வகுப்பு

பிரிவு 2️⃣

3 முதல் 5 ஆம் வகுப்பு வரை 

பிரிவு 3️⃣ 

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 

பிரிவு 4️⃣ 

9 மற்றும் 10 ஆம் வகுப்பு 

பிரிவு 5️⃣ 

11 மற்றும் 12 ஆம் வகுப்பு


 *சில வழிகாட்டுதல்கள்* :


🔵 அனைத்து பள்ளிகளும் கலைத்திருவிழா போட்டிகளில் பெரும்பான்மையான மாணவர்களை பங்கு பெறச் செய்தல் வேண்டும்.


🔵 போட்டிகளை நடத்துவதற்கு பள்ளி அளவில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கலை ஆர்வலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அமைப்பு குழுவினை உருவாக்க வேண்டும்.


🔵 பள்ளி அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், SMC உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் முழு ஈடுபட்டையும் ஒத்துழைப்பையும் பெறுதல் மிகவும் முக்கியம்.


🔵 பள்ளி அளவிலான போட்டிகளில் நடுவர்களாக பணிபுரிய வல்லுநர்களை கண்டறிந்து அமைப்பு குழுவினரிடம் கலந்து ஆலோசித்து நடுவர் பட்டியலை தயார் செய்ய வேண்டும். அதற்கான முன் அனுமதியை வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து பள்ளித் தலைமை ஆசிரியர் பெற வேண்டும். இந்த பட்டியலில் இருந்து தான் நடுவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.


🔵 பள்ளி அளவிலான அனைத்து போட்டிகளும் "சுழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு " என்ற மையக் கருத்தின் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.


🔵 ஒருவர் எவையேனும் மூன்று தனிப் போட்டிகள் மற்றும் இரண்டு குழுப்போட்டிகளில் மட்டுமே பங்கு பெற முடியும்.



 *EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல்* 


🔴 போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து பள்ளி அளவில் போட்டி வாரியாக போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பாகவே EMIS - ல் பதிவு செய்ய வேண்டும்


🔴 ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை போட்டி வாரியாக EMIS -ல் பதிவு செய்ய வேண்டும்.


🔴 பள்ளி அளவில் முதலிடத்தில் வெற்றி பெறும் தனிநபர்/ குழு மட்டுமே வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற 

தகுதி பெறுவர்.



🟢 *சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களை (CWSN)* பெரும்பான்மையான அளவில் போட்டிகளில் பங்கு பெறுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.


🟢 சில வகை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு ( *ID, ASD, CP)* மட்டும் ஒரு சில போட்டிகள் தனியாக நடைபெறும். 


🟢 இந்த போட்டிகளை சார்ந்த பள்ளிக்கான சிறப்பு பயிற்றுநர்களுடன் இணைந்து நடத்த வேண்டும்.


 🟢 அட்டவணையில் குறிப்பிடப்படாத குறைபாடு உள்ள மாணவர்களை ஊக்குவித்து மற்ற மாணவர்களுடன் இணைந்து அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற செய்ய வேண்டும்.


🟢 போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் படைப்புகளின் புகைப்படம் மற்றும் காணொளி சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் EMIS -ல் கட்டாயமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


🟦 இந்த நல்லதொரு வாய்ப்பினை பயன்படுத்தி அந்த பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களையும் அனைத்து போட்டிகளிலும் பங்கு பெறச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

  


>>> 2024-2025 - அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-12 ஆம் வகுப்பு வரை "கலைத்திருவிழா" போட்டிகள் நடத்துதல் - கால அட்டவணை & வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் & மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.08.2024...

 

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.08.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்: காலம் அறிதல்

குறள் எண்:481

பகல் வெல்லும் கூகையைக் காக்கை; இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

பொருள் :காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும்; அதுபோல பகையை வெல்லக் கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.


பழமொழி :
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்ரியில் குடை பிடிப்பான்

Beggars mounted run their horses to death


இரண்டொழுக்க பண்புகள் : 

*இறைவனின் படைப்பில் அற்புதமானது மனித வாழ்க்கை .எனவே, என் உடலுக்கும், உயிருக்கும் தீங்கு விளைவிக்கும்  எந்த ஒரு பொருளையும் பயன்படுத்த மாட்டேன். ‌‌

*குழந்தைகளை வழிதவறச் செய்யும் பாக்கு, புகையிலை போன்றவற்றை பயன்படுத்த மாட்டேன்.


பொன்மொழி :

திட்டமிடாத செயல் துடுப்பில்லாத படகுக்கு ஒப்பானது.--- ஜவஹர்லால் நேரு


பொது அறிவு :

1. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் உபகரணங்களில் உள்ள சுற்றுக்கள்________

விடை :இணைச்சுற்று.

2. ஒரு நொடியில் பொருள் கடக்கும் தொலைவு___________

விடை: வேகம்


English words & meanings :

fragment - a small part broken off or separated from something. noun.துண்டுகள். பெயர்ச் சொல்.garment -an item of clothing. noun. ஆடை. பெயர்ச் சொல்


வேளாண்மையும் வாழ்வும் :

மிதமான மழைக்காலங்களில் விதைக்கப்படும் விதையில், மண்ணில் இருக்கும், மண்ணை வளப்படுத்தும் பூச்சிகளும் நிறைந்திருக்கும். வயல்களை நாசம் செய்யும் எலிகளை பிடிக்க, இந்தக் காலத்தில் பாம்புகள் வயலுக்குள் நுழைந்து, எலிகளை பிடிக்கும்.


ஆகஸ்ட் 13

பிடல் காஸ்ட்ரோ அவர்களின் பிறந்தநாள்

பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார். கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.


பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் (International Lefthanders Day) என்பது இடது கை பழக்கம் உள்ளவர்களின் தனித்துவம் மற்றும் வேறுபாடுகளைக் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 அன்று அனுசரிக்கப்படும் பன்னாட்டு தினமாகும். 1976 முதல் "பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனத்தின்" நிறுவனர் ஆர். கேம்ப்பெல் என்பவரால் கொண்டாடப்பட்டது.


நீதிக்கதை

செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது சிறந்தது

ஒரு ஊரில் மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வேட்டையாடுவதில் அதிக இன்பம். அவர் தமது ஆயுதங்களுடன் காட்டில் கொடிய மிருகங்களை வேட்டையாடி விட்டு நகருக்கு எல்லையில் உள்ள கோயில் மரத்தின் நிழலில் சிறிது நேரம் ஓய்வாக உறங்கிக் கொண்டிருந்தார்.

திடீரென்று எங்கிருந்தோ ஒரு கல் வந்து மன்னரை காயப்படுத்தி, அவர் தூக்கத்தை கலைத்தது. சுற்றி இருந்த காவலர்கள் நாலா பக்கமும் சென்று, ஒரு நடுத்தர வயது பெண்ணை பிடித்து, அழைத்து வந்து மன்னர் முன் நிறுத்தினார்கள்.

மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “ஏனம்மா என் மீது கல்லை எறிந்தாய்? அது என் தூக்கத்தை கலைத்ததுடன் என்னையும் காயப்படுத்தி விட்டது” என்றார்.

அதற்கு அந்த பெண் அரசரை பார்த்து, “மன்னர் பெருமகனே, நான் காட்டில் விறகு வெட்டியும், அவைகளை பொறுக்கியும், நாட்டில் விலைக்கு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் என் குழந்தைகளுக்கு உணவு அளிக்கிறேன்.

வரும் வழியில் மரத்தில் பழங்கள் இருப்பதை பார்த்தேன். என் குழந்தைகளின் நினைவு வந்தது. பிள்ளைகளின் பசியை போக்குவது பெற்றவள் கடமை அல்லவா?.

அந்த பழங்களை பறிப்பதற்காக ஒரு கல்லை எடுத்து மரத்தில் எறிந்தேன். தாங்கள் மர நிழலில் உறங்கிக் கொண்டிருந்தது தூரத்தில் இருந்து எனக்கு தெரியவில்லை.

நான்  எறிந்த அந்த கல்லானது உங்கள் மீது பட்டு உங்கள் தூக்கத்தை கலைத்ததுடன், உங்களையும் காயப்படுத்தி விட்டது. இந்த தவறுக்கு நான் தான் காரணம் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று வேண்டி நின்றாள்.

மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “பெண்ணே, நீ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கின்றாய். அது உன் சிறந்த பண்பு. உன்னை மன்னித்து விட்டேன்”, என்று கூறியதோட அப்பெண்ணுக்கு இரண்டு பசுக்களையும், கை செலவுக்கு பணத்தையும் கொடுக்க ஆணையிட்டார்.

சுற்றி இருந்த காவலர்கள் மன்னரை நோக்கி, “அரசே, தங்களை கல்லால் அடித்தவளை மன்னித்ததுடன் அவளுக்கு பரிசும் தருகிறீர்கள் இச்செயல் எங்களுக்கு வியப்பு அளிக்கிறது” என்றனர்.

காவலர்களை பார்த்து மன்னர், “காவலர்களே, அறிவற்ற மரம் கல்லால் அடித்தால் பழம் தருகிறது. அவ்வாறு இருக்க அறிவுள்ள நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?. மேலும் அவள் வேண்டுமென்று என்னை கல்லால் அடிக்கவில்லை.

பழங்களை உதிர்க்கவே கல்லால் அடித்தால் அது தவறுதலாக என் மீது பட்டு என்னை காயப்படுத்தியது. அவள் தான் செய்த தவறுக்கு வருந்தி என்னிடம் மன்னிப்பு கேட்டாள்.

அது மட்டுமல்ல அவள் தன் பிள்ளைகளின் பசியை போக்கவே மரத்தின் மீது கல் எறிந்தாள். அது தாயாகிய அவள் கடமை அல்லவா?. அவள் அவளுடைய பிள்ளைகளுக்காக அவ்வாறு செய்தாள்.

நான் என் குடிமக்களுக்காக அவளுக்கு பரிசு வழங்கினேன்” என்றார். காவலர்கள் மன்னரின் விளக்கம் கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

நீதி : செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பது சிறந்த குணமாகும். எனவே, நாம் தெரியாமல் தவறு செய்திருந்தால் உரியவரிடம் மன்னிப்பு கேட்டு பழக வேண்டும்.


இன்றைய செய்திகள்

13.08.2024

* சுதந்திர தின விழா: சென்னையில் பாதுகாப்பு பணியில் 9,000 போலீஸ்; கோட்டையை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு வளையம்.

* அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பாதிப்பு குறித்த பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

* புதுச்சேரியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.

* ஆகஸ்டு 13 முதல் 15 வரை வீடுகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட வேண்டும்: மாணவர்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்.

* இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்: ஐஎன்எஸ் ‘அரிகாட்’ கடற்படையில் விரைவில் சேர்ப்பு.

* ஒலிம்பிக்  போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதல் இடமும்,  சீனா 2வது இடமும், ஜப்பான் 3வது இடமும் பிடித்துள்ளது.

* நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்: ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* Independence Day celebrations: 9,000 police on security duty in Chennai;   5-layer security ring around the fort.

* Examination of cancer prevalence in all districts: Minister M. Subramanian.

* Medical insurance up to Rs 5 lakh per year for ration card holders in Puducherry: Chief Minister Rangaswamy announced.

*  From August 13 to 15 have to celebrate by hoisting National Flag at homes: UGC instructed the students

*  Second Nuclear Submarine: INS 'Arrigat' will be Inducted into Navy Soon

* With the Olympics over, the United States is at the top of the medal tally, followed by China at the 2nd place and Japan at the 3rd place.

*  National Bank Open Tennis: Russia's Andrei Rublev advances to final.



Prepared by

Covai women ICT_போதிமரம்


TNPSC - ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிக்கான அறிவிப்பு வெளியீடு - டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...

 TNPSC - ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிக்கான அறிவிப்பு வெளியீடு - டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...



பள்ளிகளில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்தான் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் - ஊராட்சி மன்ற தலைவர்கள் பள்ளிகளில் கொடி ஏற்ற முனைப்பு காட்டக் கூடாது - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக ஆணையர் அவர்களின் கடிதம், நாள்: 01-03-2023...



 பள்ளிகளில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்தான் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் - ஊராட்சி மன்ற தலைவர்கள் பள்ளிகளில் கொடி ஏற்ற முனைப்பு காட்டக் கூடாது - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக ஆணையர் அவர்களின் கடிதம், நாள்: 01-03-2023...


School HeadMasters should hoist the national flag in schools - Panchayat Presidents should not be inclined to hoist the flag in schools - Letter from the Commissioner, Directorate of Rural Development and Panchayats, Dated: 01-03-2023...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் - அனைத்து வீடுகளிலும் மூவர்ணக்கொடி ஏற்றுதல் பிரச்சாரம் - Har Ghar Tiranga 2024 - பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்கமைத்தல் ஊக்குவித்தல் - தொடர்பாக - தலைமைச் செயலாளர் மற்றும் கலை பண்பாட்டுத் துறை இயக்குநரின் கடிதம்...



இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் - அனைத்து வீடுகளிலும் மூவர்ணக்கொடி ஏற்றுதல் பிரச்சாரம் - Har Ghar Tiranga 2024 - பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்கமைத்தல் ஊக்குவித்தல் - தொடர்பாக - தலைமைச் செயலாளர் மற்றும் கலை பண்பாட்டுத் துறை இயக்குநரின் கடிதம்...



Ministry of Culture, Government of India - Hoisting of Tricolor at All Homes Campaign - Har Ghar Tiranga 2024 - Organizing Various Events and Activities - Promotion - Letter from Chief Secretary and Director, Department of Arts and Culture...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பி.எட் கற்பித்தல் பயிற்சியை அதே பள்ளியில் மேற்கொள்ளலாம் என்பதற்கான திருவள்ளூர் & திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள்...


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பி.எட் கற்பித்தல் பயிற்சியை அதே பள்ளியில் மேற்கொள்ளலாம் என்பதற்கான திருவள்ளூர் & திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள்...



Proceedings of Tiruvallur & Tirupur District Elementary Education Officers for Secondary Grade Teachers working in Primary and Middle Schools to undertake B.Ed Teaching Training in the same school...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Part-time teachers transfer counselling - Date of joining service on revised transfer priority norms - SPD's letter, Dated : 24-12-2024

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி த...