கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரயிலை நிறுத்திய நெய் !! - இன்று ஒரு சிறு கதை...



 ரயிலை நிறுத்திய நெய் !! - இன்றைய சிறுகதை - Today's Short Story...


ஒரு கிராமத்தான். அவனுக்குப் பட்டணத்தில் வேலை கிடைத்திருந்தது. ரயிலில் பயணம் புறப்பட்டான்.அந்தக் கிராமத்தானுடைய பாட்டிக்கு அவன்மீது பாசம் அதிகம். ஒரு பெரிய டின் நிறைய நெய் கொடுத்தனுப்பினார்.


‘இது எதுக்கு பாட்டி?’ என்று கேட்டான் அவன்.


"தினமும் நல்லா நெய் ஊத்திச் சாப்பிட்டா தான் நீ பலமா வளரமுடியும்’ என்றார் பாட்டி. இதை எப்பவும் மறந்துடாதே!"


அவனுக்குப் பாட்டி சொல்வதைக் கேட்டு சிரிப்புதான் வந்தது. "நெய் சாப்பிட்டா பலமாயிட முடியுமா? இதெல்லாம் சும்மா ஏமாத்து வேலை" என்று நினைத்தான்.


ஆனாலும் பாட்டி மனம் கோணக் கூடாதே என்பதற்காக வாங்கிக் கொண்டான். ஒரு கையில் பெட்டி, இன்னொரு கையில் நெய் டின் சகிதம் ரயிலில் ஏறினான்.


அன்றைக்கு ரயிலில் பயங்கரக் கூட்டம். அவன் எப்படியோ அடித்துப் பிடித்து ஒரு மூலையில் இடம் பிடித்துக்கொண்டான். பெட்டியை ஓரமாக வைத்தான். நெய் டின்னை வைக்க தான் இடமே இல்லை. சுற்றும்முற்றும் பார்த்தான். 'சிவப்புக் கலரில்' ஏதோ தொங்கிக்கொண்டிருந்தது. அங்கே நெய் டின்னைத் தொங்கவிட்டான்.


அந்தப் பட்டிக்காட்டானுக்குத் தெரியாது, அவன் நெய் டின்னை மாட்டியது அபாயச் சங்கிலியில் என்று. டின்னின் கனம் சங்கிலியைப் பிடித்து இழுக்க, ரயில் நின்று போனது.


சிறிது நேரத்தில் அதிகாரிகள் வந்தார்கள். "யாருய்யா இங்கே இந்த டின்னை மாட்டினது?"


"நான் தான்ங்க. ஏன்?" அப்பாவியாக விசாரித்தான் இவன்.


"யோவ், முதல்ல டின்னை எடுய்யா. அது ரயிலையே நிறுத்திடுச்சு!"


அதிகாரிகள் இப்படிச் சொன்னதும் இவன் கண்களில் நீர் வழிந்தது. 


"எங்க பாட்டி சொன்னது சரிதான். இந்த டின்னுக்குள்ளே இருக்கிற நெய் எவ்ளோ பலசாலி. இத்தனை பெரிய ரயிலையே இழுத்துப் பிடிச்சு நிறுத்திடுச்சே!" என்று நெகிழ்ந்தான்.



திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு & விண்ணப்பப் படிவம்...


Job Opportunities...


திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு & விண்ணப்பப் படிவம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



திருச்சிராப்பள்ளி அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் - வேலைவாய்ப்பு அறிவிப்பு...

 

Job Notification...


திருச்சிராப்பள்ளி அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் - வேலைவாய்ப்பு அறிவிப்பு & விண்ணப்பப் படிவம்...



>>> அறிவிப்பு & விண்ணப்பப் படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் சென்னை மாவட்ட திவ்ய தேசம் பெருமாள் கோவில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக சுற்றுலா...

 தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் சென்னை மாவட்ட திவ்ய தேசம் பெருமாள் கோவில்களுக்கு ஒரு நாள் சுற்றுலா...









>>> விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மூத்த குடிமக்களுக்கு புரட்டாசி மாத கட்டணமில்லா ஆன்மீகப் பயணம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...

 மூத்த குடிமக்களுக்கு புரட்டாசி மாத கட்டணமில்லா ஆன்மீகப் பயணம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...



புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவம்...



>>> விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TETOJAC மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் இன்று (08.09.2024) தீர்மானிக்கப்பட்ட முடிவுகள்...

 டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் இன்று (08.09.2024) தீர்மானிக்கப்பட்ட முடிவுகள்...


"தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் 08.09.2024 அன்று காணொளி வழியே நடைபெற்றது. கூட்டத்திற்கு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ( பொறுப்பு ) திரு.ஈ.ராஜேந்திரன் அவர்கள் தலைமை வகித்தார் . கூட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கே.பி.ரக்ஷக்ஷித் , ஆவின்சென்ட் பால்ராஜ் , ச.மயில் , இரா.தாஸ் , சி.சேகர் , இல.தியோடர் ராபின்சன் , மன்றம் நா.சண்முகநாதன் , வி.எஸ்.முத்துராமசாமி , கோ.காமராஜ் . சி.ஜெகநாதன் , டி.ஆர்.ஜான் வெஸ்லி ஆகியோர் பங்கேற்றனர் . இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது . தீர்மானம் : 1 தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பு 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தவுள்ள 10.09.2024 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் 29.09.2024,30.09.2024 , 01.10.2024 ஆகிய மூன்று நாட்கள் தொடர் கோட்டை முற்றுகைப் போராட்டம் ஆகிய போராட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து டிட்டோஜாக் பேரமைப்பை 08.09.2024 அன்று மதிப்புமிகு . பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்களும் மதிப்புமிகு . தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் அழைத்து கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர் . பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்ற நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண் : 1387 , நாள் : 07.09.2024 வெளியிடப்பட்டுள்ளது . அந்த செய்திக்குறிப்பை முழுமையாக ஆய்வு செய்த டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு , டிட்டோஜாக்கின் 31 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பாலான முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சாதகமான எவ்வித அறிவிப்புகளும் 4 பக்க செய்திக்குறிப்பில் இடம் பெறாததால் திட்டமிட்டவாறு 10.09.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தையும் , 28.09.2024 , 30.09.2024 மற்றும் 01.10.2024 ஆகிய மூன்று நாட்கள் கோட்டை முற்றுகைப் போராட்டத்தையும் திட்டமிட்டபடி வலிமையுடன் நடத்துவதென ஏகமனதாகத் தீர்மானிக்கிறது ."


திட்டமிட்டபடி வரும் 10ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் - டிட்டோஜாக் அறிவிப்பு...

 


அரசியல் ஓய்வூதியம் - விடுதலைப் போராட்ட வீரர்கள், இந்திய தேசிய இராணுவ படையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் அவர்களின் தகுதியான வாரிசுதாரர்கள் - ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தி அரசாணை (நிலை) எண். 603, நாள்: 02-09-2024 வெளியீடு...



அரசாணை (நிலை) எண். 603, நாள்: 02-09-2024  -  அரசியல் ஓய்வூதியம் - விடுதலைப் போராட்ட வீரர்கள், இந்திய தேசிய இராணுவ படையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் அவர்களின் தகுதியான வாரிசுதாரர்கள் - ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.


G.O. (Ms) No. 603, Dated: September 02, 2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025

  உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025 ஞாயிறு நாளை 07.07.2025 தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் +2 மதிப்பெண் அடிப்படையில் BSC Nurs...