கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Avoidance & Effective handling of contempt of court petitions - Procedures to be followed - Government Secretary of Letter



நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை தவிர்த்தல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை திறம்பட கையாளுதல் - பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசுச் செயலாளரின் கடிதம்


Avoidance & effective handling of contempt of court petitions - Procedures to be followed - Government Secretary of Letter



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Procedures to be followed on RTI Act petitions and appeals



தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்கள் மற்றும் மேல் முறையீட்டு மனுக்களின் மீது பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் வெளியீடு


Promulgation of procedures to be followed by Public Information Officers and Appellate Officers on Right to Information Act petitions and appeals



தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் புறப்படும் மனுக்கள் மீது பொது தகவல் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Prevention of Child Sexual Abuse – ​​An Awareness Manual for Teachers



 குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் - ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கையேடு


Prevention of Child Sexual Harassment – ​​An Awareness Manual for Teachers



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


29-01-2025 - School Morning Prayer Activities

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-01-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: குடிமை

குறள் எண் :958

நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

பொருள்:
குடிநலனில் விருப்பமில்லாதிருப்பின், அவன் குலப் பிறப்பைப் பற்றி உலகத்தார் ஐயப்படுவார்.


பழமொழி :
சென்ற காரியத்தைப் பார்த்து வரும் காரியத்தை அறி. 

Learning the future by looking at things past.


இரண்டொழுக்க பண்புகள் :  

*எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன்.

*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள் - சுபாஷ் சந்திரபோஸ்


பொது அறிவு :

1. முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைபெற்றது?

விடை : உருகுவே        

  2. மனித உடலில் வியர்க்காத பகுதி எது?

விடை : உதடு


English words & meanings :

Field.    -     வயல்

Forest.   -     காடு


வேளாண்மையும் வாழ்வும் :

  நீர் பற்றாக்குறை தீர நீர் வளங்கள் மற்றும் பயன்பாடுகளின் அடிப்படையில் முறையான நீர் மேலாண்மை, முக்கியமாக அனைத்து பயன்பாடுகளுக்கும் நீர் பாதுகாப்பை உறுதி செய்கிறது.


நீதிக்கதை

அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும்.பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்துகொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்றுகட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப்புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குபின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.


இன்றைய செய்திகள்

29.01.2025

* பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் ஜனவரி 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

* இஸ்ரோ , ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100வது ராக்கெட்டை செலுத்த தயாராக இருக்கிறது. இது மேப் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் NavIC-ன் 2வது தலைமுறை செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும், முக்கியத்துவமான பணியை நாளை மேற்கொள்ள உள்ளது.

* இந்திய அயலகப் பணி அலுவலர்கள் ஏழு பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு வந்து கீழடி முதலான தொல்லியல் அகாழய்வு மையங்கள் எனப் பல்வேறு பெருமைக்குரிய சின்னங்களை பார்வையிட உள்ளனர்.

* ஊட்டி: பாரம்பரிய படுகர் இன மக்களின் வண்ணக் குடை ஊர்வலத்துடன்களைகட்டிய ஈஸ்வரன் கோவில் திருவிழா. 600 படிக்கட்டுகள் நடந்து பக்தர்கள் திருவிழா கொண்டாடினர்

* நம் நாட்டின் மின்சார வாகனங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய, வின்ஃபாஸ்ட் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட கார் தொழிற்சாலையை தூத்துக்குடியில் நிர்மாணிக்க வருகிறது.

* மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சதம் விளாசி வரலாறு படைத்த கொங்கடி த்ரிஷா.


Today's Headlines

* The Tamil Nadu government has announced that the law providing strict punishment for crimes against women will come into effect from January 25.

* ISRO is ready to launch its 100th rocket from Sriharikota in Andhra Pradesh. It will carry out the important mission of launching NavIC's 2nd generation satellite, which will provide services including maps, tomorrow.

* A seven-member team of Indian Foreign Service officers will visit Tamil Nadu and visit various landmarks including archaeological sites and archaeological sites.

* Ooty: The traditional Padukar people's colorful umbrella procession during the Easwaran temple festival. Devotees celebrated the festival by walking 600 steps

* To meet the demand for electric vehicles in our country, Winfast is building a state-of-the-art car factory in Thoothukudi.

* India beat Scotland by 150 runs in Women's T20 World Cup. Trisha creates history with century


Covai women ICT_போதிமரம்


Petition for Resisting Appeal to Supreme Court against High Court Order Allowing Incentive Pay Hike for M.Phil., Higher Education - Department of School Education Reply

 

M.Phil., ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கும் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதை தவிர்க்கக் கோரிய மனு - நிராகரிப்பு செய்து முதலமைச்சர் தனிப்பரிவிற்கு பள்ளிக் கல்வித் துறை பதில்


Petition for Resisting Appeal to Supreme Court against High Court Order Allowing Incentive Pay Hike for M.Phil., Higher Education - Department of School Education Reply



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TET compulsory for promotion case - Video of today's hearing in Supreme Court


பதவி உயர்வுக்கு TET தேவை வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் காணொளி


TET compulsory for promotion case - Video of today's hearing in Supreme Court





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



இன்று 28.01.2025 நடைபெற்ற விவாதத்தில் NCTE ஆசிரியர் தகுதி தேர்வு (பதவி உயர்வு) சார்ந்த முக்கிய விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என தகவல்.


அடுத்து பிப்ரவரி 06-02-2025 அன்று விசாரணைக்கு வரும் என்று (TENTATIVE) எதிர்பார்க்கப்படுகிறது


Amendment to increase punishment for crimes against women released in Gazette


பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை விதிக்கும் சட்ட திருத்தம் அரசிதழில் வெளியீடு Gazette issue No. 40, Date : 25-01-2025


HOME DEPARTMENT (Police-XII)--Date of Come Into Force of the Tamil Nadu Prohibition of Harassment of Woman (Amendment) Act, 2025 (Tamil Nadu Act 5 of 2025) - Notification No. II(2)/HO/69(b)/2025.--G.O. Ms. No. 36, Home (Police-XII), 25th January 2025.


Amendment to increase punishment for crimes against women released in Gazette


பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை விதிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்ட திருத்தம், ஆளுநரின் ஒப்புதலை அடுத்து அரசிதழில் வெளியானது.


கடந்த 25ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அன்றைய தேதியில் இருந்து அமலுக்கு வந்ததாக தெரிவிப்பு.

 




TAMIL NADU

GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY

PUBLISHED BY AUTHORITY

No. 40, CHENNAI, SATURDAY, JANUARY 25, 2025

Thai 12, Kurothi, Thiruvalluvar Aandu-2056

Part Il—Section 2

Notifications or Orders of interest to a Section of the public issued Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

HOME DEPARTMENT

Pollce-XII)

DATE OF COME INTO FORCE OF THE TAMIL NADU PROHIBITION OF HARASSMENT OF WOMAN (AMENDMENT) ACT, 2025 (TAMIL NADU ACT 5 OF 2025)

[G.O. Ms. No. 36. Home (Police-XI. 25th Januarv 2025

No.I({2y/HO/69(b2025.

In exercise of the powers conferred by sub-section (2) of Section 1 of the Tamil Nadu Prohibition of Harassment of Woman (Amendment) Act, 2025 (Tamil Nadu Act 5 of 2025), the Governor of Tamil Nadu hereby appoints the 25th day of January, 2025 as the date on which the said Act shall come into force.

DHEERAJ KUMAR.

Additional Chief Secretary to Government.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

04-02-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-02-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மானம் குறள்...