கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Transfer Counseling for BEOs held on today

 


வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு மே 16-ல் மாறுதல் கலந்தாய்வு


Transfer Counseling for Block Education Officers held today, May 16th


வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.


இந்தக் கலந்தாய்வில்... தற்போது பணியாற்றும் ஒன்றியத்தில், 30.04.2025 தேதியில், 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும். அதேவேளையில் 30.06.2025 தேதிவரை ஓய்வு பெறவுள்ள வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. கலந்தாய்வில் கலந்து கொள்வோா் தற்போது பணிபுரியும் ஒன்றியம் மற்றும் அதற்கு முன்னா் பணிபுரிந்த ஒன்றியத்துக்கு மீண்டும் மாறுதல் கோரக் கூடாது. நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியராக கடைசியாகப் பணிபுரிந்த ஒன்றியத்துக்கு மாறுதல் கோரக் கூடாது. 


மாறுதல் முன்னுரிமைப் பட்டியல், தகுதி வாய்ந்தோா் பட்டியல் மற்றும் காலிப் பணியிடங்கள் விவரம் மே 15-ஆம் தேதி வெளியிடப்படும்.


இதற்கு முந்தைய பொது மாறுதல் கலந்தாய்வில் முதலில் மாவட்டத்துக்குள்ளும், பின்னா் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வும் நடத்தப்பட்டது. அதே முறை இந்த ஆண்டும் பின்பற்றப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


List of 452 BEOs who have completed 3 years of service

 

 இன்று 16.05.2025 நடைபெறவிருக்கும்  பொதுமாறுதல் கலந்தாய்வில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய மூன்றாண்டுகள் பணிமுடித்த  452 வட்டாரக் கல்வி அலுவலர்களின் பட்டியல்


List of 452 Block Education Officers who have completed three years of service and are required to attend the general transfer counselling to be held today, 16.05.2025



மூன்றாண்டு பணிமுடித்த  இணைப்பில் கண்டுள்ள 452 வட்டாரக்கல்வி அலுவலர்களும்,  இன்று 16.05.2025 -ல்   இணையவழியில்   நடைபெறவிருக்கும்   பொதுமாறுதல் கலந்தாய்வில்  (EMIS) கட்டாயம் கலந்து கொள்ளுவதை  உறுதி செய்யுமாறு   அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களும் (தொடக்கக்கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


Block wise BEOs List



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு சுற்றறிக்கை - தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியீடு...



BEOs Transfer Counselling Circular - DEE


வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு சுற்றறிக்கை - தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியீடு


Transfer Counselling Circular for Block Education Officers - Directorate of Elementary Education



>>> இன்று 16.05.2025 நடைபெறவிருக்கும்  பொதுமாறுதல் கலந்தாய்வில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய மூன்றாண்டுகள் பணிமுடித்த  452 வட்டாரக் கல்வி அலுவலர்களின் பட்டியல்...


MADRAS UNIVERSITY FREE EDUCATION SCHEME 2025-2026

 


சென்னை பல்கலைக்கழகத்தில் இலவசமாக பட்டப்படிப்பு பயில வாய்ப்பு  


Opportunity to study for free degree courses at Madras University


சென்னை பல்கலைக்கழக மாணவர் இலவச கல்வி திட்டம் 2025-2026


 12ஆம் வகுப்பு படித்தவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் டிகிரி இலவசமாக படிக்க விண்ணப்பிக்கலாம் 


MADRAS UNIVERSITY FREE EDUCATION SCHEME 2025-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாட்டில் 10, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன






 தமிழ்நாட்டில் 10, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (16-05-2025) வெளியாகின்றன


தேர்வு முடிவுகளை,

🔗 https://results.digilocker.gov.in,

🔗 www.tnresults.nic.in 

இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்!




                                

⭕ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 16.05.2025 வெள்ளிக்கிழமை காலை 9.10 மணிக்கு வெளியீடு

* உங்கள் மொபைலில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பார்க்க Mobile App &Result Link

 * மாணவர்கள்  தங்களுடைய பதிவெண் மற்றும்  பிறந்த தேதி  ஆகியவற்றை  பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி சார்பில்  இணையத்தளத்தில் பதிவு செய்த தொலைப்பேசி எண்ணிற்கு மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக(SMS) அனுப்பப்படும்.
             
  

Mobile App Link
👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾


💐💐💐💐💐💐💐💐💐

NBEMS - Applications invited for DNB Final Examination June 2025

NBEMS - Applications invited for DNB Final Examination June 2025



TNPSC Group 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

 




TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு


TNPSC Group 2 Exam Results Released


TNPSC: குருப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு! - GROUP 2 RESULT 2025


குருப் 2 பணிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (மே 15) வெளியிட்டுள்ளது.


TNPSC Group 2 Result வெளியானது


Link: https://tnpsc.gov.in/results/grp2int/index.aspx?key=Ikwowr$wko032Awd1F32s2


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வின் மூலம் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள 2,540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. இதன் மூலம் உதவி ஆய்வாளர், வணிக வரி துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், வனவர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


அதன்படி, கொள்குறி வகையிலான முதல் நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 2,763 தேர்வு மையங்களில் 7,93,966 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டதில், 5,83,467 பேர் தேர்வினை எழுதினர்.


முதல் நிலைத் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 82 மையங்களில் நடைபெற்ற தேர்வுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.


குருப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு


இந்த நிலையில் குருப் 2 பணிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று (மே 15) வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2ஏ பதவிகளில் 1,936 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு பிப்ரவரி 8ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பிற விதிகளின் அடிப்படையில் இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.


முதன்மைத் தேர்வு எழுதியவர்களில் 20,033 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என ஏற்கனவே தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் அறிவித்திருந்தார்.


இந்த நிலையில் குருப் 2 நிலையில் 15 பதவிகளில் காலியாக உள்ள 537 இடங்களில் நியமனம் செய்வதற்கான தகுதிப் பெற்றவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு  மாண்புமிகு ம...