கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

E-Pattaவில் Photo பதிவு விரைவில் நடைமுறைக்கு வருகிறது - மோசடிகளுக்கு வருகிறது முற்றுப்புள்ளி



 இ-பட்டாவில் போட்டோ பதிவு விரைவில் நடைமுறைக்கு வருகிறது - மோசடிகளுக்கு வருகிறது முற்றுப்புள்ளி


 இ- பட்டாக்களுடன், ஆதார் எண்ணையும், போட்டோவையும் இணைத்து, ஆன்லைனில் வழங்கும் நடைமுறை, விரைவில் அமலுக்கு வருகிறது. இதன் வாயிலாக, மோசடிகளுக்கும், ஆள்மாறாட்டத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்கின்றனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.


பட்டா என்பது, ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு உள்ளது என்பதைக் காட்டும் ஆவணம். 'இ--பட்டா' என்பது மின்னணு முறையில் வழங்கப்படும் பட்டா.


அதிகாரப்பூர்வ இணையதளமான, eservices.tn.gov.in வாயிலாக, பட்டா பெற விண்ணப்பிக்கலாம். நிலம் அமைந்துள்ள மாவட்டம், வட்டம், கிராமம் போன்ற விவரங்களை குறிப்பிட்டால், இ- பட்டாவை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.


நில உரிமையாளர் மாறும் போது பட்டாவையும் மாற்றிக்கொள்ளலாம். இதற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்


ஆன்லைனில் விண்ணப்பிக்க, tamilnilam.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம். இதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள், ரேஷன்கார்டு, ஆதார்கார்டு உள்ளிட்ட விபரங்களை கேட்டு பெறுவர்.


இந்நிலையில், இ- பட்டாவில் புகைப்படம் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.


 தாசில்தார் ரமேஷ்குமார் கூறியதாவது:


பட்டா வழங்குவதற்கு முன்பு அதாவது 2021 லிருந்து, தற்போது வரை உள்ள எச்.எஸ்.டி.,பட்டா, இ-பட்டா, அரசாணை 97ன் படியான நத்தம் பட்டா, இவை மூன்றும் கூகுள் ஷீட்டில் தான் தயார் செய்யப்படுகிறது. அப்போது பட்டாதாரரின் ஆதார் எண், மொபைல் எண், போட்டோ ஆகியவை சரிபார்த்து பதிவு செய்யப்படுகிறது. பட்டா பெறுபவரிடமிருந்து ஆதார் கார்டு, ரேஷன்கார்டு, மின்இணைப்பு எண் பெற்று பிரத்யேக மாஸ்டர் ஷீட்டில் பதிவு செய்து வருவாய்த்துறை சர்வரில், 'அப்லோடு' செய்து விடுகிறோம். அவை தான் இ- பட்டாவாக மறுவடிவம் பெறுகிறது. அதில் போட்டோ மற்றும் ஆதார் எண் இடம் பெறுவதில்லை. அவற்றை இடம் பெறச் செய்வதற்கான முயற்சிகளை, தற்போது வருவாய்த்துறை மேற்கொண்டு வருகிறது. இதன் வாயிலாக ஆள்மாறாட்டங்களையும், மோசடிகளையும் தடுக்கலாம்,'' என்றார்.


THIRUKKURAL - Treasure Of Universal Wisdom நூல் வெளியீடு - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு



“உலகப் பொதுமறை திருக்குறள்” (THIRUKKURAL - Treasure Of Universal Wisdom) நூல் வெளியீடு - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு


 “உலகப் பொதுமறை திருக்குறள்” (THIRUKKURAL - Treasure Of Universal Wisdom) நூலை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்


உலகின் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அய்யன் திருவள்ளுவரின் திருக்குறள் இனி பெரும்பான்மையானோர் கைகளுக்கும் செல்லவுள்ளது! 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ், சிகாகோ உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையுடன் இணைந்து பதிப்பித்துள்ள “உலகப் பொதுமறை திருக்குறள்” (THIRUKKURAL - Treasure Of Universal Wisdom) நூலை, மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டுச் சிறப்பித்தார். 


கையடக்க வடிவில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல் உலகெங்கும் அனைவரின் இல்லங்களுக்கும், உள்ளங்களுக்கும் சென்று சேரும்!


Magizh Mutram தொடர்பான தகவல்



மகிழ் முற்றம் தொடர்பான தகவல்


▪️House captain தேர்வு செய்யும்போது பள்ளியின் உயர் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும்.


(Primary - 5 ஆம் வகுப்பு

Middle - 8 ஆம் வகுப்பு

HSC -10 ஆம் வகுப்பு)


▪️உயர் வகுப்பில் மாணவர்கள் இல்லை எனில் கீழ் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்யும் வசதி தற்போது EMIS-யில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


5 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் ஒரு குழுவிற்கு 1 மாணவன் வீதம் தேர்வு செய்யப்படும்.


4 மாணவர்உள்ள பள்ளிகளில் 5வது குழுவில் மாணவர் இருக்க மாட்டார்.


➡️House head teacher தேர்வு செய்யும் போது ஒவ்வொரு house-க்கும் ஒரு ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும்.


5 ஆசிரியர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் அல்லது ஒரே ஆசிரியர் உள்ள பள்ளிகள் அவரையே அனைத்து house-க்கும் head teacher-ஆக நியமனம் செய்து கொள்ளலாம்.



403 புதிய வகுப்பறைகள் திறப்பு - மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு



  403 புதிய வகுப்பறைகள் திறப்பு - மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 72 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 99 கோடியே 35 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 

🏤403 வகுப்பறைகள்

🚻54 கழிவறைகள்

🧪13 ஆய்வகங்கள்

🚰2 குடிநீர் வசதிகள் 

என மொத்தம் 472 முடிவுற்ற பணிகளை மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் முன்னிலையில் திறந்து வைத்து சிறப்பித்தார். 


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர்களின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


14-07-2025 அன்று திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு Local Holiday


 14-07-2025 திங்கட்கிழமை அன்று  திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை


திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 


14/07/2025 திங்கட்கிழமை அன்று  திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் Local Holiday - மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



TETOJAC உயர்மட்டக்குழு கூட்டம் தொடங்கியது

இன்று (12-07-2025) டிட்டோ ஜாக் உயர்மட்டக்குழு கூட்டம் தொடங்கியது



👍👍👍👍👍👍👍

இன்று ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் திருச்சியில் நடைபெற உள்ள டிட்டோஜாக் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், இணைப்பு சங்கங்களின் மாநில துணைப் பொறுப்பாளர்கள் , மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கும் போராட்ட ஆயத்த மாநாட்டு அழைப்பிதழ்..









Hi-tech labs in 6,990 middle schools to become operational on July 15


தமிழ்நாட்டில் 6,990 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஜூலை 15-ல் செயல்பாட்டுக்கு வருகின்றன


தமிழ்நாட்டில் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் 'உயர் தொழில்நுட்ப' ஆய்வகங்களை, காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.


தமிழ்நாடு முழுவதும் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 'உயர் தொழில்நுட்ப' ஆய்வகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வகத்தில் தலா 10 கணினிகள், எல்சிடி புரஜெக்டர், கேமரா, தொடுதிரை, மும்முனை மின்சாரம், தடையில்லா மின்சாரம் வழங்க பேட்டரியில் இயங்கும் மின்கலம், 100 எம்பிஎஸ் வேகம் கொண்ட இணையதள வசதி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த ஆய்வகங்கள் அமைய உள்ளன.


இந்த ஆய்வகத்துக்கென்று பொறுப்பாசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டு, அவருக்கான பணிகள் பட்டியலிட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என பொறுப்பாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகத்தில் உள்ள ஒவ்வொரு கணிணிக்கும் அடையாள எண் கொடுக்கப்பட்டு, அந்த கணினியின் செயல்பாட்டை சென்னையிலிருந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சென்னையிலிருந்து ஆசிரியர் ஒருவர் கற்பிக்கும் பாடத்தை இணையதள வசதி மூலம் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவர்கள் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் இருந்து கேட்டு புரிந்துகொள்ள முடியும். மாணவர் கணினி வழியே சந்தேகங்களையும் கேட்கலாம். இது தவிர இணையம் மூலம் அந்தந்த வகுப்புக்குரிய பாடங்களை கற்றுக்கொள்ளலாம்.


இவ்வாறு பல்வேறு வசதிகள் கொண்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று சென்னையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்து மாணவர்களிடம் உரையாட உள்ளார். இதையடுத்து, ஆய்வகப் பணிகளை விரைந்து முடிக்க பள்ளிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC Group 4 - Answer Key - Part B & Part C

        TNPSC குரூப் 4 - விடைக் குறிப்புகள் - பகுதி ஆ - பொது அறிவு மற்றும் பகுதி இ - திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவுத் தேர்வு - 12-07-...