கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Local Holiday லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Local Holiday லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மே 28ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


 மே 28ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


Local holiday in Karur district on May 28th - District Collector's announcement


கரூர் - உள்ளூர் விடுமுறை


கரூர் மகா மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியை ஒட்டி வரும் 28ம் தேதி, மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!


இதனை ஈடு செய்ய வரும் ஜூன் 14ம் தேதி அரசு வேலைநாளாக அறிவிப்பு



உள்ளூர் விடுமுறை ஈடு செய் வேலை நாள் மாற்றம்


உள்ளூர் விடுமுறை ஈடு செய் வேலை நாள் மாற்றம்


Local holiday compensation working day change


 நார்த்தாமலை தேர் விடுமுறை ஈடு செய் வேலை நாள் 26-04-2025 ஆம் தேதிக்கு மாற்றம்



உள்ளூர் விடுமுறை காரணமாக தேர்வு தேதிகள் மாற்றம் - மாற்று வினாத்தாள்கள் மூலம் தேர்வு

 

உள்ளூர் விடுமுறை காரணமாக தேர்வு தேதிகள் மாற்றம் - மாற்று வினாத்தாள்கள் மூலம் தேர்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 07-04-2025


Change of Examination Dates Due to Local Holidays - Examination through Alternative Question Papers - Proceedings of the Director of Elementary Education, Date: 07-04-2025


உள்ளூர் விடுமுறை காரணமாக தேர்வு நாட்கள் மாற்றம் செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - புதிய வினாத்தாள் படி தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


புதுக்கோட்டை மாவட்டத்தில் 07-04-2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


புதுக்கோட்டை மாவட்டத்தில் 07-04-2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


Local holiday announcement on 07-04-2025 in Pudukkottai district


புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு (ஏப்ரல் 07) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.


இந்த விடுமுறையை ஈடுகட்ட வருகின்ற 19ஆம் தேதி (சனிக் கிழமை) வேலை நாள் என்றும் சனிக் கிழமையை வேலை நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 20ஆம் தேதியான ஞாயிற்றுக் கிழமை வேலை நாள் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.


ஏப்ரல் 4 அன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


ஏப்ரல் 4 அன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


Local holiday declared for Ramanathapuram district on April 4


 ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கை ஒட்டி, ஏப்ரல் 04 அன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு



திருவாரூர் மாவட்டத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - தேர்வு தேதி மாற்றம்



திருவாரூர் மாவட்டத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - தேர்வு தேதி மாற்றம்


திருவாரூர் மாவட்டத்தில் வரும் 7ம் தேதி உலகப் பிரசித்தி பெற்ற ஆழித்தேரோட்டம் நடக்க உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


கோடை வெயில் தாக்கத்தால் 1 - 5 வகுப்புகளுக்கு தேர்வு அட்டவணை மாற்றப்பட்ட நிலையில், 7ம் தேதி நடக்க இருக்கும் தேர்வுகள் மட்டும் அம்மாவட்டத்தில் 8ம் தேதி நடக்கும் என அறிவிப்பு.



12.03.2025 - Wednesday - Masimagam Festival - Local Holiday in Thanjavur District



12.03.2025 - புதன் - மாசிமகம் திருவிழா - தஞ்சாவூர் மாவட்டம் உள்ளூர் விடுமுறை


12.03.2025 - Wednesday - Masimagam Festival - Local Holiday in Thanjavur District


இவ்விடுமுறை ஈடு செய்ய  எதிர்வரும் 29.03.2025 - சனி அன்று வேலை நாள்


Local holiday declared for Pudukkottai district on March 10


புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 10 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


Local holiday declared for Pudukkottai district on March 10.


புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா வரும் 10ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.


இந்நிலையில், முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 10ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அருணா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.


10ம் தேதி விடுமுறையை ஈடுகட்ட 15ம் தேதி சனிக்கிழமை பணி நாள் என்றும், சனிக்கிழமையை பணி நாளாக கொண்டுள்ள நிறுவனங்களுக்கு 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணிநாள் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Local holiday notification for Nagapattinam district on Thursday 12th December


 நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு டிசம்பர் 12 வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


நாகை மாவட்டம் நாகூரில் நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹூல் அமீது பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இங்கு 468-வது ஆண்டு கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி வருகிற 12-ந் தேதி(வியாழக்கிழமை) அதிகாலை நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.


இந்த நிலையில், நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக 21-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Local Holiday in Kanyakumari on 03.12.2024 - Notification of District Collector


03.12.2024 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2024 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரியில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை.


 கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு டிசம்பர் 3 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவிப்பு


விடுமுறைக்கு ஈடாக 14.12.2024 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்.


Local Holiday on 15-11-2024 for Mayiladuthurai District - District Collector

 


மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 15-11-2024 அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



Local Holiday on 15-11-2024 for Mayiladuthurai District - District Collector





நவம்பர் 15ல் மயிலாடுதுறைக்கு உள்ளூர் விடுமுறை


காவிரி துலா உற்சவ விழாவின் முக்கிய திருவிழாவான கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.


 விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவ. 23ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது- மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி.

Local Holiday for Tiruvarur District on 13-11-2024 - District Collector


13-11-2024  அன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் செயல்முறைகள்


Local Holiday for Tiruvarur District on 13-11-2024 - District Collector


முத்துப்பேட்டை கந்தூரி 13-11-2024  அன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அந்த விடுமுறை ஈடு செய்திட 07-12-2024 வேலை நாள் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஆகஸ்ட் 23ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...


 ஆகஸ்ட் 23ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...


சங்கரநாராயணசாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு ஆக.23ல் தென்காசியில் மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை


உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்.21 வேலைநாளாக செயல்படும் - மாவட்ட ஆட்சியர்...


தென்காசி மாவட்டத்திற்கு சங்கர நாராயணசாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு வருகிற 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சங்கரன் கோவிலில் அமைந்துள்ள  "சங்கர நாராயணசாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு ஆகஸ்ட் 23ல் தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலங்கள் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.


இந்த நாளில் அரசு தேர்வுகள் இருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 21 வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


நாளை (12-07-2024) குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...


 குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாளை (12-07-2024) குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது...



மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...


 விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் வரும் மார்ச் 14ஆம் தேதி அன்று  நடைபெற உள்ளது. இதன் காரணமாக மார்ச் 14ஆம் தேதி அன்று ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவுலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு செயல்படும்.


மார்ச் 14ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு முன்னதாக தேர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தால் திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும் என்றும், மார்ச் 23ஆம் தேதி அன்று இதனை ஈடு செய்யும் விதமாக பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - பிப்ரவரி 3ஆம் தேதி பணி நாள் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...

 


அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு - திருப்பூர் மாவட்டத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - பிப்ரவரி 3ஆம் தேதி பணி நாள் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...






மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு வரும் 16-11-2023 அன்று உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - விடுமுறையை ஈடுகட்ட நவம்பர் 25ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது (Mayiladuthurai district announced that a local holiday will be observed on 16-11-2023 on the occasion of Kadaimuka Theerthavari festival - 25th November has been declared as working day to cover the holiday)...



 மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு வரும் 16-11-2023 அன்று உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு -  விடுமுறையை ஈடுகட்ட நவம்பர் 25ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது (Mayiladuthurai district announced that a local holiday will be observed on 16-11-2023 on the occasion of Kadaimuka Theerthavari festival - 25th November has been declared as working day to cover the holiday)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

 தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Supreme Co...