கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சாலையில் ஒளிரும் விளக்குகளுக்கு மின்சக்தி எப்படி வருகிறது?



சாலையில் ஒளிரும் சிக்னல் விளக்குகளுக்கு மின்சக்தி எப்படி கிடைக்கிறது?


அதன் பெயர் ரோடு ஸ்டட் என்பார்கள். அது இருவகையில் வேலை செய்யும்.


இரவில் வரும் வாகனங்களின் முகப்பு வெளிச்சங்களை வாங்கி எதிரொளிக்கும் வகையில் ரிஃப்ளெக்டர் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருக்கும்.


அதே சமயத்தில் பகல் நேரங்களில் சூரிய வெளிச்சத்தினை கிரகித்து அதனுள் பொதியப்பட்டுள்ள சிறு சோலார் செல்களில் சக்தியை வாங்கி லித்தியம் வகை பேட்டரியில் மின்சாரத்தை சேகரித்துக் கொள்ளும்.


இருள் கவிய துவங்கியதும் அதில் இருக்கும் லைட் டிபண்டிங் ரெசிஸ்டர் (LIGHT DEPENDING RESISTOR) என்ற வெளிச்சத்தை உணரும் சென்சார் வேலை செய்து மிகக் குறைந்த மின்சாரத்தை உபயோகித்து அதிக வெளிச்சத்தை வெளியே விடும் லைட் எமிட்டிங் டயோடு (LIGHT EMITTING DIODE) எனப்படும் LED (எல்இடி) விளக்குகளின் மூலமாக விளக்குகளை ஒளிரச் செய்கின்றது.


அதனால் இரவு 12 மணி நேரம்கூட எல்.இ.டி. பல்புகள் ஒளிரும் அளவிற்கு சக்தியை கிரகித்து வைத்துக் கொள்ள முடிகிறது.


Karur District Elementary School HM Vacancies



தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் : கரூர் மாவட்டம் 


கரூர் மாவட்டத்திலுள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வுக்கு பின் காலிப்பணியிடங்கள் விவரம் பின்வருமாறு


 கரூர் ஒன்றியம்

1. சேமங்கி 

2. ஒரம்புப்பாளையம்

3. சிந்தாயூர்

4. பெரிய காளிபாளையம்

5. முஸ்லீம் உருது


 தாந்தோணி ஒன்றியம்

1. சின்ன குளத்துப்பட்டி 

2. உ.காளியப்ப கவுண்டனூர் 

3. வீரணம்பாளையம் 

4. வெங்கடாபுரம்

5. வடக்கு மேட்டுப்பட்டி 

6. கா.குள்ளம்பட்டி

7.  வாசுகுமரன்பட்டி


 க.பரமத்தி  ஒன்றியம்

1. இச்சிக்காட்டூர்.

2. ப.காளிபாளையம்.

3. குஞ்சாம்பட்டி.

4. ஊத்துப்பட்டி.

5. குளத்துப்பாளையம்.

6. கருநெல்லிவலசு.

7. ஆதிரெட்டிபாளையம்.


 கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்

1. பாம்பன்பட்டி

2. நாதிப்பட்டி

3. குள்ளம்பட்டி

4. தேசியமங்கலம் 

5. செம்பாறைப்பட்டி

6. அய்யம்பாளையம் 

7. கணக்கம்பட்டி

8. தாசில்நாயக்கனூர்

9. அக்கரக்காம்பட்டி 

10. பூவம்பாடி

 

 அரவக்குறிச்சி ஒன்றியம்

1.PUPS பெரியமஞ்சுவளி 

2.PUPS நாச்சிபாளையம்புதூர்

4.PUPS செங்காளிவலசு

5.PUPS குரும்பப்பட்டி


குளித்தலை ஒன்றியம்

1. ஊ.ஒ.தொ.பள்ளி, மேல்நங்கவரம்

2.ஊ.ஒ.தொ.பள்ளி, எரமநாயக்கன்பட்டி


தோகைமலை ஒன்றியம்

1. ராக்கம்பட்டி

2. கள்ளை

3. மேல கம்பேஸ்வரம்

4. மேல மேட்டுப்பட்டி

5. வருந்திப்பட்டி 

6. நாகனூர் 

7. முனையம்பட்டி

8. செம்பாறை கல்லுப்பட்டி 


கடவூர் ஒன்றியம்

1.சி.புதூர்

2.மஞ்ச புளியம்பட்டி

3.நரியம்பட்டி

4.கொட்டாம்பட்டி 

5.கோடங்கிபட்டி 

6.கருணாபுறம்

7. மண்பத்தையூர்


பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) முக்கிய நகர்வுகள்


பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) முக்கிய நகர்வுகள்


2022 – 2024 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தற்போதைய நிலை,  மேம்படுத்தப்பட்ட புதிய பெற்றோர் செயலியின் சிறப்பு அம்சங்கள் மற்றும் புதிய செயலியில் தீர்மானங்களை பதிவிடுவதற்கான வழிகாட்டுதல்கள்:


குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (2009) கீழ் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டு கூட்டமானது மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. 

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 2022 – 24 ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெற்றது.  பள்ளி மேம்பாடு சார்ந்து நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் TNSED Parent App வழியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மைக் குழுத் தீர்மானங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள பெற்றோர் செயலி முக்கியப் பங்காற்றுகிறது.  

பள்ளி மேலாண்மைக் குழுவின்  தீர்மானங்களை பதிவு செய்யும் பெற்றோர் செயலியின் பயன்பாடு மற்றும் உள்ளீடு செய்வது குறித்து, பள்ளி மேலாண்மைக் குழு மாநில  ஒருங்கிணைப்புக் குழுவால் மாவட்டம் , வட்டாரம் மற்றும் பள்ளி அளவில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. 


பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கிய நகர்வுகள்:

2022-ஆம் ஆண்டு நடைபெற்ற SMC மறுகட்டமைப்புக்கான பெற்றோர் விழிப்புணர்வு கூட்டங்களில் 23.2 லட்சம் பெற்றோர் பங்கேற்றனர்.

மொத்தம் 37,519 அரசுப் பள்ளிகளில் SMC குழுக்கள் மறுக்கட்டமைக்கப்பட்டன.

ஆகஸ்ட் 2022 முதல் அக்டோபர் 2024 வரை மொத்தம் 19 முறை SMC கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டங்களில் சராசரியாக 70% உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

35,735 பள்ளிகள், SMC பெற்றோர் செயலியின் மூலம் தீர்மானங்களைப்  பதிவு செய்துள்ளனர் 

பள்ளிகளில் இருந்து 2022- ஆம்  ஆண்டிலிருந்து இருந்து செயலி வழியாக நமக்குக் கிடைத்த  தீர்மானங்களின் மொத்த எண்ணிக்கை  3 லட்சத்திற்கும் மேல் ஆகும். 

பதிவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது சார்ந்து துறைகள் நடவடிக்கை எடுப்பதற்காக கல்வித்துறைச் செயலரிடமிருந்து  மாவட்ட ஆட்சியருக்கு  கடிதம் அனுப்பப்பட்டது  

தீர்மானங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து முறையாக தகவல் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தீர்மானங்கள் மீதான நடவடிக்கைளை கண்காணிக்க , மாநில அளவிலான கண்காணிப்பு  குழு (SLMC) மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு  குழு (DLMC) போன்ற குழுக்கள்  அமைக்கப்பட்டது .அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது 

மேலும், மாவட்ட கல்வி மீளாய்வு(DER) கூட்டங்களில், பள்ளி மேலாண்மை குழுவின்   தீர்மானங்கள்  ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியரால் துறைவாரியாக ஆய்வு செய்யப்பட்டு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பள்ளியின்  தேவைகள் அனைத்தும் மாவட்ட கல்வி மீளாய்வு கூட்டங்களில் விவாதிக்கப்படுகிறது. 

2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக்கான பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம்  ஆகஸ்ட் 2, 2024 அன்று தொடங்கி , ஆகஸ்ட் 31, 2024 வரை  அனைத்து பள்ளிகளில் மறுகட்டமைப்பு நிறைவடைந்தது.  இதில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 18.9 லட்சம் பெற்றோர் பங்கேற்றனர்

புதிய பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபட்ட பின்னர் , 2024 அக்டோபர் மாதம், இது வரை பதிவு செய்யப்பட்டிருந்த  3 லட்சம் தீர்மானங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதன்  முன்னேற்றத்தையும்  மற்றும் பள்ளியின் அன்றைய தேவைகளையும்  அனைத்து பள்ளி மேலாண்மைக் குழுக்களும் TNSED பெற்றோர் செயலியில் பதிவேற்றம்(status update) செய்தனர்.

தீர்மானங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்ற நிலையை (Status Update) TNSED பெற்றோர் செயலியில் பதிவு செய்யும் செயல்பாட்டுக்கு பின்பு  1,92,543 (24.06.2025 இந்த தேதி வரை ) தீர்மானங்கள் நமக்கு கிடைத்தன. இந்தத் தீர்மானங்களில் 1,50,421 தீர்வுகள் காணப்பட்டுள்ளன. இது மொத்தத் தீர்மானங்களில் 78% ஆகும்.

தீர்மானங்கள் / தேவைகள் மூன்று நிலைகளில் பிரிக்கப்படுகின்றன: பள்ளி அளவில் தீர்வு காணப்பட  வேண்டியவை,  மாவட்ட அளவில் தீர்வு காணப்பட   வேண்டியவை, மாநில அளவில் தீர்வு காணப்பட  வேண்டியவை என்று பிரிக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டன. 

நிலை தீர்மானங்களின் எண்ணிக்கை சதவீதம் 

Resolved 150421 78%

Unresolved 42122 22%



  தீர்மானங்களின்  எண்ணிக்கை சதவீதம்

பள்ளி அளவில் 60,754 91%

மாவட்ட அளவில் 88,694 71%

மாநில அளவில் 973 71%


அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மூலம் 71% தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் உதாரணத்திற்கு வேலை செய்து முடிக்கபட்ட/ தீர்வு கண்டு நிறைவு செய்யப்பட்ட சில முக்கியமான  தீர்மானங்களின் தொகுப்பு இது  

 முக்கியமான  தீர்மானங்களின் தொகுப்பு நிறைவு

உயர் மின்னழுத்தக் கம்பிகளை அகற்றுதல் 562

பழுதடைந்த கட்டடத்தை அகற்றுதல் 3269

பழுதடைந்த சுற்றுச்சுவரை அகற்றுதல் 185

புதிய இயற்பியல் ஆய்வகம் 14

புதிய உயர்-தொழிநுட்ப ஆய்வகம் 125

புதிய உயிரியல் ஆய்வகம் 14

புதிய ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம் 39

புதிய கணித ஆய்வகம் 14

புதிய கணினி ஆய்வகம் 121

புதிய கலை ஆய்வகம் 16

புதிய கழிப்பறை 143

புதிய கழிவுநீர்த் தேக்கத் தொட்டி 237

புதிய குடிநீர் இணைப்பு 55

புதிய குடிநீர் இணைப்பு - ஊராட்சி 594

புதிய குடிநீர் இணைப்பு - போர்வெல் 197

புதிய சுற்றுச் சுவர் 2675

புதிய நீர் இணைப்பு 196

புதிய நீர் இணைப்பு - ஊராட்சி 1074

புதிய நீர் இணைப்பு - போர்வெல் 572

புதிய மின் இணைப்பு 120

புதிய மின்சார இணைப்பு 612

புதிய வகுப்பறை 1603

புதிய வேதியியல் ஆய்வகம் 12

போக்குவரத்து வசதிகளை உருவாக்குதல் 294

மாணவர்களுக்கான புதிய கழிப்பறை 2009

மாணவிகளுக்கான புதிய கழிப்பறை 1416

மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கான புதிய கழிப்பறை 109

மாற்றுத் திறன் கொண்ட மாணவிகளுக்கான புதிய கழிப்பறை 46

மொத்தம் 16323





TNSED புதிய பெற்றோர் செயலியின் சிறப்பம்சங்கள்


TNSED புதிய பெற்றோர் செயலியின் சிறப்பம்சங்கள்


Highlights of TNSED Parents New App


 TNSED புதிய பெற்றோர் செயலி

கடந்த இரண்டு ஆண்டுகளில் SMC கூட்டத்தில்  விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்தும், பதிவேட்டில் பதிவான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டும் நமக்குக் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், அரசின் துறைகள்  பள்ளியின் தேவைகளான தீர்மானங்களை எடுத்து உடனே வேலையைத்  தொடங்க , தகவல்களை தெளிவாகப் பெறும் மேம்பட்ட வசதிகளோடு புதிய செயலி தேவை அறியப்பட்டது.  

தலைவர் , HM  மற்றும் உறுப்பினர்களின் கருத்துக்களை பரவலாக அறிந்தபோது , பள்ளியின் தேவைகளை செயலி வழியாக பதிவு செய்யும்போது செயலியில் மேம்படுத்த வேண்டியவை பற்றிய கருத்துக்கள் சேகரிகக்கப்பட்டது. 


இந்தச் செயலி 

o SMC தலைவர் ,  HM இருவரும் இணைந்து தீர்மானங்களை செயலியில் பதிய வேண்டுமென்பதால், செயலி  பெற்றோர், SMC தலைவர், HM ஆகியோருக்கு எளிதில் புரியும் வகையிலும்,

o பள்ளியின் அனைத்து தேவைகளையும் ஒரு தொகுப்பாகக் காணும் வகையிலும்,

o தீர்மானங்கள் மீது துறைகள் நடவடிக்கை எடுக்க ஏதுவான வகையிலும்,

இந்த புதிய பெற்றோர் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.


TNSED புதிய பெற்றோர் செயலி மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள்

புதிய செயலியில் பள்ளியின் தீர்மானங்களைப்  பதிவிட, பள்ளியின் தேவைகள் 6 தலைப்புகளாக பிரிக்கப்பட்டது. 

1. Emergency (அவசரத்தேவை)

2. மாணவர்கள்

3. கற்றல்

4. நலத்திட்டங்கள், உதவித்தொகைகள்

5. பள்ளி வளாகம்

6. ஆசிரியர்கள், பணியாளர்கள்


o Emergency தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல் 

உயர் மின்னழுத்தக் கம்பிகள் (HT Line)

குறைந்த மின்னழுத்தக் கம்பிகள் (LT Line)

டிரான்ஸ்பார்மர்

மின்கம்பம்

மின் இணைப்பு

மின் கசிவு - ஷாக் அடிக்கிறது 

எர்த் கம்பி  ( Earth wire )

கட்டிடங்கள் - இடிக்க வேண்டியது

அறுவை சிகிச்சையை உறுதிசெய்தல்

பள்ளிச்சூழல் பாதுகாப்பு 

கற்பித்தலுக்கு இடையூறு 

பள்ளி செயல்பட கட்டிடம் இல்லை.

பள்ளி வளாகத்தை சேதப்படுத்துதல்

கிணறு குழிகள் - ( மூடி போடுதல் )

பாம்புகள் நடமாட்டம் 

வனவிலங்கு நடமாட்டம்

திறந்தநிலை சாக்கடை - பள்ளிக்கு அருகில் 

திறந்தநிலை சாக்கடை - பள்ளிக்கு உள்ளே 

திறந்தநிலை கழிவுநீர்த் தொட்டி - பள்ளிக்கு அருகில்  

திறந்தநிலை கழிவுநீர்த் தொட்டி - பள்ளிக்கு உள்ளே 

திறந்தநிலை ஆழ்துளைக் கிணறு -  ( மூடி போடுதல் )

மழைத்தண்ணீர் தேங்கியுள்ளது 

அருகில் குளம் ,கண்மாய் ( தடுப்பு தேவை ) 

பள்ளி முன்பு நெடுஞ்சாலை ( வேகத்தடை தேவை ) 

ஆபத்து உருவாக்கும் மரம் , கிளை அகற்றுதல் 

நான்கு வழிச் சாலை - பேருந்து வேண்டும்

மலைப்பகுதி - பேருந்து வேண்டும்

காட்டுப்பகுதி - பேருந்து வேண்டும்

பேருந்து நிறுத்தம் வேண்டும் - பள்ளி அருகே 

பேருந்து பயணத்தில் மாணவர்களுக்கு நெருக்கடிகள்


o மாணவர்கள் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்

குழந்தைகளின் ஆரோக்கியம்

குழந்தைகளின் பாதுகாப்பு

போக்குவரத்து வசதிகளை உருவாக்குதல்


o கற்றல் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்

கற்பித்தலுக்கு துணை செய்யும் கருவிகள்

வகுப்பறை கற்றலுக் கற்பித்தல் பொருட்கள்


o நலத்திட்டங்கள், உதவித்தொகைகள் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்

நலத்திட்டங்கள்

அரசு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள்

அரசு உதவித்தொகைகள் மற்றும் உதவித்தொகை வழங்கும் தேர்வுகள்


o பள்ளி வளாகம் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்

கட்டிடங்கள்  

தண்ணீர் 

மின்சாரம்

காலை / மதிய உணவு

வளாகப் பொருட்கள்

பொது வளாகம்


o ஆசிரியர்கள், பணியாளர்கள் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்

ஆசிரியர்

ஆசிரியர் பாதுகாப்பு

பணியாளர்கள் தேவை

பயிற்சிகள்


மேல்கண்ட  ஒவ்வொரு தொகுப்பிற்கு  உள்ளேயும் அது தொடர்பான தேவைகளின் பட்டியலும் . அதன் தொடர்ச்சியாக உப தேவைகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது 

செயலியில் தீர்மானங்களைத்  தேட ஏதுவாக Search Option ஆனது  தேவைகளைப் பட்டியலிடும் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்றுள்ளது 

செயலியில் தீர்மானங்கள் சார்ந்து அனைத்து தகவல்களும் சரியாகவும் முழுமையாகவும்  பெறப்படுகிறது 


உதாரணத்துக்கு :

புதிய பேருந்து வசதி  வேண்டும் ‘ என்ற தேவை ( தீர்மானம்)  புதிய செயலியில்  எவ்வாறு இருக்கிறது ,அதை வரிசையுடன் பதிவு செய்து submit/சமர்ப்பித்தல் – வரை செல்லும் படத்தையும் – அது செயலியில் எப்படி காண்பிக்கப்படும் என்ற படத்தையும்  கீழே  காணலாம் 





அதாவது பேருந்து வேண்டும் என்பதை இப்படி மேலே கண்டபடி ஒரே பக்கத்தில் பதிவிட்டு Submit கொடுக்க முடியும்.

இன்னொரு  உதாரணமாக  பள்ளியில் புதிய மாணவிகள் கழிப்பறை என்ற தேவை (தீர்மானம் ) புதிய செயலியில்  எவ்வாறு இருக்கிறது , அதை வரிசையுடன் பதிவு செய்து submit/சமர்ப்பித்தல் – வரை செல்லும் படத்தையும் – அது செயலியில் எப்படி காண்பிக்கப்படும் என்ற படத்தையும்  கீழே  காணலாம்



அதாவது கழிப்பறை வேண்டும் என்பதை இப்படி மேலே கண்டபடி பதிவிட்டு Submit கொடுக்க முடியும்

செயலியில் பெறப்படும் தீர்மானங்கள், அந்தந்த தேவை சார்ந்து  முழு விபரங்களைப்  பதிவிட ஏதுவாக இடம்பெற்றுள்ளது

செயலியில் தகவலுக்காக மட்டும் பெற்றுக்கொள்ளப்படும் -  என்ற பகுதி இடம் பெற்றுள்ளது . அதாவது ஒரு குறிப்பிட்ட விசயத்தைப் பற்றிய தகவல்களை மட்டும் பெற்றுக்கொள்ளும் பகுதி இது . அவற்றை பதிவிடும்  பதிவிடங்கள் இடம்பெற்றுள்ளன.

தீர்மானங்கள் சார்ந்தும் பள்ளிக்குழந்தைகள் நலன் சார்ந்தும் தேவையான நேரங்களில் ஆர்வத்துடன் தங்கள் நேரத்தை ஒதுக்கி, பள்ளி மேலாண்மைக் குழு உறுபினர்கள் பள்ளிக்காக செய்யும் வேலைகளைப் பற்றி பதிவிடும்  “SMC பங்கேற்று உதவியது “ என்ற option கொடுக்கப்பட்டுள்ளது. 

தேவைகளைப் பெற்றுக்கொண்டோம் என்று சொல்வதோடு , அதன் தரத்தைப் பற்றி கூறும் – அதாவது மதிப்பீடு செய்ய ஏதுவாக options உருவாக்கப்பட்டுள்ளது 

முக்கியமாக குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக பள்ளி வளாகத்திலும் , அதைச் சுற்றிலும் உடனடியாக சரி செய்ய வேண்டிய தேவைகளை தீர்மானங்களாகப் பதிவு செய்ய , ‘Emergency needs – மிக அவசரமாக சரி செய்ய வேண்டிய தேவைகள்’ என்று தொகுத்து , செயலியில் நுழைந்ததுமே நாம் பார்க்கும் படியாக முதல் தொகுப்பாக வைக்கப்பட்டுள்ளது 

மிக மிக அவசியமான தேவைகள் தீர்மானங்களாக இந்த செயலியில் முதல் முறையாக இடம்பெற்றுள்ளது

இப்படி பல புதிய அம்சங்கள் கொண்ட செயலியை பயன்படுத்துவதற்கு வழிகாட்டும்   TNSED பெற்றோர் செயலி பற்றிய  காணொளித் தொகுப்பு (video manual) மற்றும் வழிகாட்டும் PPT போன்றவை மாநில அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும்.



TNSED Parents புதிய செயலியில் தீர்மானங்களை பதிவிடுவதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள்



 TNSED Parents புதிய செயலியில் தீர்மானங்களை பதிவிடுவதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள்:


நடைபெற இருக்கும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் வருகைப்பதிவு மற்றும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை புதிய செயலியில் உள்ளீடு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் பின்வரும்வாறு வழங்கப்படுகிறது. 


வருகைப்பதிவு:

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெறும் அன்றே நமது பெற்றோர்  செயலியில் “உறுப்பினர் வருகை” என்ற optionஇல் உறுப்பினர்களின் வருகையைப் பதிவிட வேண்டும் . 

எப்போதெல்லாம் பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் தவறாமல் உறுப்பினர்களின் வருகையை செயலியில் பதிவிட வேண்டும். 


தீர்மானங்கள் உள்ளீடு செய்தல்:

பழைய செயலியில் உள்ளீடு செய்யப்பட்டு அந்த தேவை  நிறைவேறாமல் (Unresolved) இருப்பின், அவ்வாறான தேவை இன்னும் உங்கள் பள்ளியில் இருந்தால் கூட்டத்தில் புதிதாக தீர்மானம் நிறைவேற்றி அதனை புதிய செயலியில் மீண்டும் பதிவிட வேண்டும். 

ஆகஸ்ட்-2025 இல் நடைபெற்ற மறுகட்டமைப்பு முதல் தற்போது வரை பல்வேறு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தீர்மான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவருகிறது. அவ்வாறான தீர்மானங்களை நடைபெற இருக்கும் கூட்டத்தில் பதிய செயலியில் உரிய தலைப்பு மற்றும் உப தலைப்பின் கீழ் சென்று உள்ளீடு செய்ய வேண்டும். 

பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டம் நடைபெறும் நாளன்று , உறுப்பினர்கள் பள்ளி வளாகத்தைச்  சுற்றி பார்வையிட்டபின், அப்போது கண்டறிந்த தேவைகளை பட்டியலிட்டு  உறுப்பினர்களுடன்  கலந்தாலோசித்து  சேர்ந்து முடிவெடுத்து செயலியில் தீர்மானங்களாக பதிவு செய்ய வேண்டும் . 

தீர்மானங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற குறைந்த பட்சம் 50 சதவிகித உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் 

செயலியில் பதிவிடப்படும் அனைத்து தீர்மானங்களும் பள்ளி மேலாண்மைக்  குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும். 

தீர்மானங்களைப் பதிவு செய்யும் போது அதன் விவரங்களை  சரியாக பதிவு செய்ய வேண்டும், 

புகைப்படம் பதிவு செய்ய வேண்டிய தீர்மானங்களுக்கு மிகவும் பொருத்தமான புகைப்படத்தை தேர்வு செய்து  பதிவு  செய்ய வேண்டும். 

சில தீர்மானங்களுக்கு “முன்” மற்றும் “பின்” நிலையைக்  காட்டும் இரண்டு புகைப்படங்களையும், தேவைப்படும் இடங்களில் மட்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

தீர்மானங்களுக்கு  உரிய தகவல்களை உரிய இடத்தில் பதிவு செய்த பின்பு , மேலும்  அதைப் பற்றிய கூடுதல் தகவல்கள் இருந்தால் “விவரிக்கவும் / காரணம்/ விளக்கம்” என்று குறிப்பிட்டு கேட்கப்பட்ட  இடங்களில்  மட்டும் தட்டச்சு செய்து பதிவு செய்ய வேண்டும் .


தீர்மானங்களின் நிலையை பதிவு செய்யும் போது (Status update ) செய்ய வேண்டியவை :

தீர்மானங்களின் நிலையில் முன்னேற்றம் இருக்கும் போதும், முழுமையாக தேவை பூர்த்தியான பின்பும், நிறைவேறும் போதும், தீர்மான முன்னேற்ற நிலையை உடனுக்குடன் செயலியில் பதிவு செய்யப்பட வேண்டும்.

தீர்மானங்களாக இயற்றிய தேவைகள் முழுமையாக நிறைவடைந்து , வேலை நடந்து முடிந்தால் மட்டுமே, நிறைவேற்றப்பட்டது என்று செயலியில் பதிவு செய்யவேண்டும்.

தேவை முழுமையாகப் பூர்த்தியாகாமல் “நிறைவடைந்தது” என்று பதிவு செய்யப்பட்டால், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளால், தேவை நிறைவடைய எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் போய்விடும்.


Dr. Radhakrishnan Award Instructions - DSE Proceedings



டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு


Instructions for HeadMasters / Teachers Applying for Dr. Radhakrishnan Award - DSE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளியில் காலை உணவு / மதிய உணவு உண்ணும் மாணவர்களின் விவரம் பதிவு செய்ய உத்தரவு


பள்ளியில் காலை உணவு / மதிய உணவு உண்ணும் மாணவர்களின் விவரம் பதிவு செய்ய உத்தரவு


தற்போது 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் அரசு (ஊராட்சி ஒன்றிய) / உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு உண்ணும் மாணவர்களின் விவரங்கள் மற்றும்  1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு உண்ணும் மாணவர்களின்  விவரங்கள் தொடர்புடைய வகுப்பு ஆசிரியர்களின்  Individual ID மூலம் TNSED SCHOOLS APP-ல் உள்ளிட வேண்டும்



>>>  TNSED Schools App New Version: 0.3.1 - Updated on 18-07-2025...



சத்துணவு உண்ணும் மாணவர்களின் பெற்றோர் ஒப்புதல் படிவம் - Noon Meal Consent Form...



>>> ஒப்புதல் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-07-2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-07-2025 : School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...