கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 4.10.2020 (ஞாயிற்றுக்கிழமை)

🌹வாய் தவறி விழும் பேச்சுக்கள்

கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.

எனவே யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுவது நல்லது.!

🌹🌹பூட்டை உடைத்த பின்,

சாவி கிடைத்து என்ன பயன்.

அதுபோல வார்த்தையால் மனதை உடைத்த பின் என்ன சமாதானம் சொல்லி என்ன பயன்.!!

🌹🌹🌹எங்கே அதிகம் நம்பிக்கை வைக்கின்றோமோ

அங்கே தான் அதிகம் ஏமாற்றம் அடைகிறோம்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மேல் செல்லாது என்ற அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் திரு.நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

(நாளிதழ் செய்தி)

🎀🎀பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் உள்ளவர்கள் கவனத்திற்கு:-

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள  ஆசிரியர்கள், பிறந்த தேதி பெயர் மற்றும் பல்வேறு திருத்தங்கள் உள்ளதாக தெரிவித்து உள்ளார்கள்.

பள்ளி அளவிலேயே அல்லது வட்டார கல்வி அலுவலர் அளவிலேயே திருத்தம் செய்வதற்கான வழிமுறைகளை data centre  வெளியிட்டுள்ளது.

திருத்தம் தேவைப்படும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர் அல்லது வட்டாரக்கல்வி அலுவலர் மூலம் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

🎀🎀அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்காதீர் - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு -நாளிதழ் செய்தி 

🎀🎀INSPIRE award 2020-ற்கு விண்ணப்பிக்க 15.10.2020 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

🎀🎀இணையவழிக் கல்வியை மேற்கொள்ளும் உயா் கல்வி நிறுவனங்களுக்கு ‘நாக்’ அங்கீகாரம் கட்டாயம் என யுஜிசி வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🎀🎀மகப்பேறு மருத்துவ விடுப்பிற்கான அனுமதியையும், மகப்பேறு மருத்துவ விடுப்பு முடிந்து மீளப் பணியேற்பதற்கான அனுமதியையும் வட்டாரக் கல்வி அலுவலரிடம் பெறலாம் - RTI தகவல்

🎀🎀மருத்துவத் துறைக்கு உதவும் துணைப் படிப்புகளான பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

🎀🎀புதிர் போட்டி இந்தியில் நடைபெறுவதற்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் தொடர்பு இல்லை -  அமைச்சர் செங்கோட்டையன் 

🎀🎀மத்திய தகவல் அமைச்சகம் சாா்பில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தொடா்பான உச்சி மாநாட்டில் பங்கேற்க மாணவா்கள், ஆசிரியா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

செயற்கை நுண்ணறிவு மேம்பாடு தொடா்பான உச்சிமாநாட்டை அக்.5 முதல் 9-ஆம் தேதி வரை நடத்த மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

🎀🎀உ.பி.மாநிலம் ஹத்ராஸில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதில் படுகாயமடைந்து உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு காங்., எம்.பி. ராகுல் மற்றும் அவரது சகோதரி பிரியங்கா நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

ராகுலுடன், பிரியங்கா, வேணுகோபால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முகுல் வாஸ்னிக் ஆகியோர் உடன் சென்றனர்.

முன்னதாக, உ.பி.,யின் ஹத்ராஸ் நகரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதி அளிக்காத நிலையில் அங்கு பதற்றம் நிலவியது. அதனை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி., ராகுல், அவரது சகோதரி பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு மட்டும் போலீசார் அனுமதி அளித்தனர்.

🎀🎀அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்வதில் குழப்பம் இல்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

 நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் பல திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. 

கூட்டத்திற்கு பின் கொரோனா சிறப்பு 2 ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.   

 பின்னர் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,  அதிமுக முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்வது குறித்து அதிமுகவில் குழப்பம் இல்லை என கூறினார். வரும் 7 ம் தேதி இதற்கான முடிவு தெரிந்து விடும் எனவும் அவர் கூறினார்.

🎀🎀மத்திய அரசு எம்.எஸ்.சாமிநாதன் பரிந்துரையின்படி விவசாயிகளுக்கு விலை நிர்ணயித்தால்தான் விவசாயிகள் முன்னேற்றம் அடைவார்கள் 

முத்தரசன்

🎀🎀திமுக தேர்தல் பணிக்குழு இணைத்தலைவராக ராஜ கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் ஞானசேகரன், பரணி இ.ஏ.கார்த்திகேயன் ஆகியோர் தேர்தல் பணிக்குழு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக செய்தி தொடர்பாளராக ஆர்.டி.அரசகுமாரை நியமித்து திமுக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

🎀🎀பிரிட்டனில் கொரோனா தடுப்பு மருந்து மூன்று மாதங்களுக்குள் பெருமளவில் பயன்பாட்டுக்கு வரும் என தி டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா செனேக்கா நிறுவனம் இணைந்து கொரோனாவைக் குணப்படுத்தும் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளன. இந்த மருந்தின் முதற்கட்டச் சோதனைகளில் மனித உடலில் எதிர்ப்பாற்றலை உருவாக்குவது தெரியவந்துள்ளது.

இந்த மருந்தின் இறுதிக்கட்டச் சோதனை தொடங்கியுள்ள நிலையில், விரைவில் இதற்கு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஒப்புதல் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🎀🎀நாடு முழுவதும் இன்று சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு 72 நகரங்களில், 10 லட்சத்து 58 ஆயிரம் பேர் எழுதவுள்ளனர்.

நாடு முழுவதும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு இருகட்டங்களாக இன்று  நடைபெறுகிறது.

72 நகரங்களில், 2,569 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 10 லட்சத்து 58 ஆயிரம் பேர் எழுதவுள்ளனர். காலை 9.30 மணி மற்றும் பகல் 2.30 மணி என்று இரு கட்டங்களாக தேர்வு நடைபெறும்.

தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்பு வரை மட்டுமே தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும், கொரோனா தடுப்பு வழிமுறையை பின்பற்றவும், ஹால்டிக்கெட் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை கட்டாயம் எடுத்துவரவும் UPSC அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, 60ஆயிரம் தேர்வர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு மையங்களை மாற்றியிருப்பதாக UPSC தெரிவித்துள்ளது.

🎀🎀புதிய கல்விக் கொள்கை குறித்து இணையவழி கலந்துரையாடல் - கருத்துக்களை தெரிவிக்க யுஜிசி அழைப்பு.

🎀🎀கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனைக்கு 160 பேர் தேவை - தன்னார்வலர்களுக்கு காப்பீடு வசதி உள்ளது - தமிழக சுகாதாரத்துறை தகவல்.

🎀🎀நியாயவிலைக் கடையில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சென்று பொருட்கள் பெற முடியாத சூழ்நிலையில், அவர்களால் ஒரு நபர் நியமிக்கப்பட்டு அவரால் உங்கள் பொருட்கள் வாங்குவதற்கு படிவம் வெளியீடு பூர்த்தி செய்து நியாயவிலைக் கடையில் கொடுக்கவேண்டும்.

🎀🎀பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில்(CPS) உள்ள ஆசிரியர்கள், பிறந்த தேதி, பெயர் மற்றும் பல்வேறு திருத்தங்களை ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு விண்ணப்பித்து செய்து கொள்ளலாம்.அரசு தகவல் மைய (Government Data Centre) ஆணையரின் கடிதம்,நாள்:27-05-2020

🎀🎀ஐந்து ஆண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு.

🎀🎀பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடிக்க கோரி வழக்கு: பள்ளி கல்வித்துறை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

🎀🎀பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் பெயர்களை வெளியிட கோரி வழக்கு: உயர்கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ்

🎀🎀B.Ed - தொலைதூரக் கல்வியில் பி.எட்(சிறப்பு கல்வி) பயில அக்டோபர் 31வரை விண்ணப்பிக்கலாம்.

🎀🎀விரைவில் 80,000 ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின்

🎀🎀கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அதிபர் ட்ரம்ப் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதி

அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் இருவரும் நலம் என ட்ரம்ப் ட்வீட்

🎀🎀பிரிட்டனில் இன்னும் 3 மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியீடு

🎀🎀கொரோனா தொற்றின் தன்மையை பொறுத்தே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் 

- அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

🎀🎀ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி உத்திரப் பிரதேச அரசு பரிந்துரைத்துள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                            

    என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...