🌹பணம் சம்பாதிக்க நல்லவர்,கெட்டவர் எல்லோராலும் முடியும்.
ஆனால் மனிதர்களை சம்பாதிக்க நல்ல மனசுள்ள மனிதனால் மட்டும் தான் முடியும்.!
🌹🌹எங்கே அதிகம் நம்பிக்கை வைக்கிறமோ அங்கே தான் அதிகம் ஏமாற்றம் அடைகிறோம்.!!
🌹🌹🌹யாருக்காகவும் உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள்.
ஆனால் உங்களுக்காக தன்னையே மாற்றிக் கொள்பவர் கிடைத்தால்
அவர்களை தொலைத்து விடாதீர்கள்.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎀🎀தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி பள்ளிகள்,கல்லூரிகள் திறப்பு இல்லை.
கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு நடவடிக்கை.
பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு
👉அனைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்காக டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
👉இதர வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
👉டிசம்பர் 2ல் முதுநிலை இறுதியாண்டு அறிவியல் மாணவர்களுக்கு விடுதிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
🎀🎀புதிய ஓய்வூதிய திட்டத்தில் பல்வேறு தலைப்புகளின் கீழ் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு உத்தரவு - அரசு ஊழியர்கள் அதிர்ச்சி
🎀🎀இளைஞர் பாராளுமன்ற திட்டம் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களின் விபரத்தினை இணையத்தில் பதிவு செய்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🎀🎀புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
🎀🎀7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் மூலம் 395 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம்.
🎀🎀பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
👉கற்போம் எழுதுவோம் இயக்கம் புதிய வயது வந்ததோர் கல்வித் திட்டம் TN EMIS கைபேசி வாயிலாக கற்போர்*(Learners) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் (volunteer teachers) விவரங்களை பதிவேற்றம் செய்தல்* சார்ந்து இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் வெளியீடு.
🎀🎀அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்களுக்கும் இலவச நீட் பயிற்சி - பள்ளிகளில் பதிவு செய்யலாம்.
🎀🎀அஞ்சலக சேமிப்பு கணக்கு - குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூபாய் 500 ஆக உயர்த்த அறிவுறுத்தல்.
🎀🎀01.10 2020 முதல் 31.12.2020 வரையிலான காலத்திற்கு CPS தொகை மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு.
🎀🎀தேர்தல்கள்-
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் (21,22 நவம்பர் மற்றும் 12,13டிசம்பர்) அனைத்து வாக்கு சாவடி மையங்களும் திறந்திருக்க வேண்டும் - அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்
🎀🎀துறைத் தேர்வுகள் - கோவிட்-19 - மே-2020 தேர்வுகள், டிசம்பர்-2020ல் நடைபெறும். இத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கலாம்.
🎀🎀கோவிட் -19 தடுப்பு மருந்து பணிகளுக்காக உயிர் தொழில்நுட்பத்துறைக்கு 900 கோடி ருபாய் வழங்கப்பட்டுள்ளது.
🎀🎀ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக 3000 கோடி ரூபாய் EXIM வங்கிக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
🎀🎀2021 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி-20 உலக்கோப்பை தொடருக்கான கோப்பை அறிமுகம்
🎀🎀7 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்
தூத்துக்குடி, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.
🎀🎀அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆட்சிகாலத்தில் கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளையின அமெரிக்க போலீசாரால் கழுத்து நெறித்து பகிரங்கமாக கொலை செய்யப்பட்ட கறுப்பின நபரின் மகளின் முன் மண்டியிட்டு மன்னிப்பு கோரினார் அமெரிக்காவின் புதிய அதிபராக உள்ள ஜோ பைடன்.
🎀🎀தெலுங்கானாவில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் உடனே தடை விதிக்க மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
👉கொரோனா சூழலில் மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
🎀🎀இந்த ஆட்சியில் நீக்கப்பட்டதெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்ததும் சேர்க்கப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அருந்ததி ராய் பாடத்தை நீக்கியதுபோல் வரலாற்று தலைவர், திருவள்ளுவர் பெயரையும் நீக்குவார்கள். மு.க.ஸ்டாலின் கேட்டபிறகே அனைத்து திட்டங்களும் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது என்றும் கூறினார்.
🎀🎀பல்கலை. பாடத்திட்டத்தில் இருந்து அருந்ததி ராய் புத்தகம் நீக்கப்பட்டதற்கு திமுக எம்.பி ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்துத்துவ அமைப்பான ஏ.பி.வி.பி நிர்பந்தத்தால் அருந்ததி ராய் புத்தகம் நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக கல்வித்துறையை காவித்துறையாக்கும் நோக்குடன் ஆர்.எஸ்.எஸ் வியூகப்படி புத்தகம் நீக்கப்பட்டுள்ளதாக ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.
🎀🎀மருத்துவ கலந்தாய்வு வரும் 18 அல்லது 19ம் தேதி தொடங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். 8 நிமிடத்திற்குள் ஆம்புலன்ஸ் சேவையை வழங்க இலக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.நவம்பர் 16ல் மருத்துவ படிப்பு ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். ரேங்க் பட்டியல் வெளியான ஓரிரு நாளில் மருத்துவ படிப்பு கவுன்சிலிங் தொடங்கும். முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மருத்துவ கவுன்சிலிங் நேரடியாக நடைபெறும் என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
🎀🎀சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவற்றிற்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🎀🎀CA தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு; திட்டமிட்ட தேதியில் தேர்வு தொடங்கும்: ஐசிஏஐ உறுதி
🎀🎀தமிழகத்தில் உள்ள அரசு மகளிர் விடுதிகளில் தரமான சிசிடிவி இருப்பதை உறுதி செய்ய சென்னை ஐகோர்ட் ஆணை
🎀🎀கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு
🎀🎀தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பை தமிழக அரசு ஒத்திவைத்திருப்பது மிகச்சரியான முடிவு : அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
🎀🎀ஆன்ட்ராய்டு மொபைலில் 108 ஆம்புலன்ஸ் எங்கே வந்து கொண்டிருக்கிறது என்பதை அறியும் வசதி அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
🎀🎀தமிழக கருவூலங்களில் புதிய சாஃப்ட்வேர் முறையை அமல்படுத்த தடை கோரிய வழக்கு-பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
🎀🎀தீபாவளி 2020 - தீபாவளி பண்டிகையின்போது தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் - தீப்பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் செய்தல் - தொடர்பாக - தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பள்ளிக்கல்வி துறைக்கு கடிதம்
🎀🎀அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை : பாடத்திட்டத்தில் அருந்ததிராய் படைப்பு நீக்கப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்
🎀🎀MCA கலந்தாய்வில் 813 இடங்கள் மட்டுமே நிரம்பின: 4,149 இடங்கள் காலியாக உள்ளன. 🎀🎀கொரோனா அச்சுறுத்தல் சூழலில் சமூக இடைவெளிவிட்டு தீபாவளி கொண்டாடுங்கள் என பொதுமக்களுக்கு தீயணைப்புத்துறை டிஜிபி ஜாஃபர் சேட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
👉கொரோனாவில் இருந்து மக்களை காக்க தமிழக அரசு போராடிக் கொண்டிருக்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிக சத்தமுள்ள வெடிகள், புகைகளை தவிருங்கள். விபத்து ஏற்பட்டால் தாமதிக்காமல் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
🎀🎀நாட்டு பொருளாதாரம் மீள்வதற்கான வழி தெரியவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
👉பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
🎀🎀அதிமுக மாவட்ட செயலாளர்கள் நியமனம்
(திருப்பூர்,புதுக்கோட்டை,விருதுநகர் மாவட்டங்களில் நிர்வாக வசதிக்காக விரிவாக்கம்)
👉திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அமைச்சர் உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன் நியமனம்
👉திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் எம்.பி மகேந்திரன் நியமனம்
👉திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் நியமனம்
👉புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக பி.கே.வைரமுத்து நியமனம்
👉புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நியமனம்
👉விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நியமனம்
👉விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் நியமனம்
👉தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் நியமிக்கும் வரை வைத்தியலிங்கம் எம்.பி கவனிப்பார்
👉அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் நூர்ஜகான் நியமனம்
👉அதிமுக அமைப்புச் செயலாளராக எம்.எஸ்.எம் ஆனந்தன் அறிவிப்பு
ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு
🎀🎀உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12.98 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,298,474 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 53,065,851 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 37,171,409 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 95,187 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926