கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 08.03.2021 (திங்கள்)...

 


🌹வாழ்வில் கஷ்டங்கள்

அதிகமாக வரவில்லை என்றால்,

பல விஷயங்கள் கடைசிவரை தெரியாமல் போய்விடும்.!

🌹🌹காரணமே இல்லாமல் ஒதுக்கப்படுகிறோம் என்றால் அவர்கள் தேவை நம்மிடம் முடிந்தது என்று தானே அர்த்தம்.!!

🌹🌹🌹அன்புக்காக ஏங்கும் கணவனுக்கு அன்பான மனைவி கிடைப்பதில்லை.

அன்பான மனைவி கிடைத்தவனுக்கு அன்பை புரிஞ்சுக்க தெரியவில்லை.

சூப்பராக இருக்குது அல்ல விதியின் விளையாட்டு.!!!

அனைவருக்கும் இனிய உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀படிப்பை தொடர முடியாமல் மாணவர்கள் தவிப்பு - கொரோனா கட்டுப்பாடு என்று பூட்டு; எதிர்காலம் வீணாவதாக வேதனை

👉கொரோனா ஊரடங்கு காலத்தில்  மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் - குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 76% அதிகரிப்பு

🎀🎀காமராஜர் பல்கலை பருவத்தேர்வுகள் தேதி அறிவிப்பு – மார்ச் 22 முதல் தொடக்கம்

🎀🎀பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் – இணையத்தில் வெளியீடு

🎀🎀தேசிய வருவாய் மற்றும் தகுதிப் படிப்புதவி தொகை பெறுவதற்கான தேர்வுகளுக்கான விடைக்குறிப்புகளை மாணவர்கள் சரிபார்த்து 12ம் தேதிக்குள் தங்களின் ஆட்சேபணைகளை தெரிவிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. 

🎀🎀தேசிய குடற்புழு நீக்க நாள் - மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

🎀🎀தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி அமைய உள்ள அரசுப் பள்ளிகளில் உள்ள கணினி, இணைய வசதிகள் குறித்துத் தேர்தல் ஆணையம், பள்ளிக்கல்வித் துறையிடம் தகவல் கோரியுள்ளது. 

🎀🎀வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. அதன்படி, ஆதார், பான், ஓட்டுநர் உரிமை, பாஸ்போர்ட், வங்கி கணக்கு, ஓய்வூதியம் கணக்கு, மருத்துவ காப்பீடு கணக்கு, 100 நாள் வேலை அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மூலம் வரும் தேர்தலில் வாக்களிக்கலாம். 

🎀🎀ஒரே இடத்தில் அதிக ஆண்டுகள் பணியாற்றும் அதிகாரிகள்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு 

🎀🎀அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்- பாக்ஸ் நிறுவனம் போன்றவற்றின் வழியே நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

🎀🎀ப்ளஸ்-டூ தேர்வுக்குத் தயாராகும் நேரத்தில் தேர்தலுக்கு தயராகும் பணிகளில் ஈடுபட வேண்டி உள்ளதால் தேர்தல் பணிகளில் இருந்து ப்ளஸ்-1, ப்ளஸ்-2 ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது - நாளிதழ் செய்தி 

🎀🎀பணி நிரந்தரம் கேட்டு, ஒரு வாரமாக சென்னையில் போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஒரு வார சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளது - நாளிதழ் செய்தி

🎀🎀கணினி பயிற்றுநர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் -RTI பதில்.

🎀🎀முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரான் லெப்பை மரைக்காயர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 104.

🎀🎀சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சேவியர் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

🎀🎀தேமுதிக துணை செயலாளர் சுதீஷ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு.

அதிமுக - தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாக தகவல்.

🎀🎀தி.மு.கவின் உறுதிமொழி: ‘குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.1000’

🎀🎀மியான்மரில் தொடரும் பதற்றநிலை: இந்தியாவுக்கு தப்பித்து சென்ற காவலர்கள் - திருப்பி அனுப்ப கோரும் மியான்மர்

🎀🎀ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்வதை ஐ.நா மனித உரிமை மன்றக் கூட்டத்தில் உறுதி செய்திட வேண்டும் - இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்துவிடக் கூடாது.

 - மு.க.ஸ்டாலின், தலைவர், திமுக

🎀🎀உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மத்திய அரசின் 49.9% இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி M.Tech., BioTech & M.Tech., Computational Tech பிரிவில் மாணவர் சேர்க்கை.

அதன் அடிப்படையில் EWS பிரிவினருக்கும் 10% இடங்கள் ஒதுக்கீடு.

- அண்ணா பல்கலைக்கழகம்.

பொருளாதாரத்தில் நலிந்த உயர் வகுப்பினருக்கான EWS

10% இட ஒதுக்கீடு அண்ணா பல்கலைக்கழகத்தில் அமலானது.

எம்.டெக் பயோ டெக்னாலஜி படிப்பில்

தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்காத நிலையில், 10 % இட ஒதுக்கீடு அமல்.

🎀🎀கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 48 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது

👉காங். 25,  

👉மதிமுக 6,

👉விசிக 6,

👉இந்திய கம்யூ. 6,

 👉இ.மு.லீக் 3,

👉மமக 2 தொகுதிகள் ஒதுக்கீடு

🎀🎀234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நேற்று மாலை  அறிவித்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

🎀🎀அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது

- கன்னியாகுமரியில் உள்துறை அமைச்சர் 

அமித்ஷா பேட்டி

🎀🎀திமுக கூட்டணிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆதரவு. திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும்,

பாஜக போட்டியிடும் இடங்களில், அக்கட்சியை தோற்கடிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவும் முடிவு.

கோவையில் தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன் பேட்டி.

🎀🎀புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக இருக்கிறது. 

இதில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்போம். 

- நாராயணசாமி

🎀🎀ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் ஐ.பி.எல். தொடக்கம்.

இறுதிப்போட்டி மே 30ஆம் தேதி அகமதாபத்தில் நடக்கிறது.மும்பைக்கும் பெங்களூருவுக்கும் இடையே முதல் போட்டி.

🎀🎀வெள்ளையர்களை விரட்டி அடித்தது காங்கிரஸ் 

வெள்ளையர்களுக்கு சாமரம் வீசியது பாஜக

-ப.சித‌ம்பர‌ம்

🎀🎀வெளி நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும்             இ- பாஸ் கட்டாயம் 

ஆந்திரா,  புதுவை,  கர்நாடக தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ - பாஸ் கட்டாயம்

-தமிழக அரசு அறிவிப்பு

🎀🎀மக்கள் நீதி மய்யம் கூட்டணி பேச்சுவார்த்தையில் மீண்டும் இழுபறி

ஒப்பந்தம் கையெழுத்தாவதாக மநீம பொது செயலாளர் குமரவேல் தெரிவித்திருந்த நிலையில் சமக மற்றும் ஐஜேகே நிர்வாகிகள் அதிருப்தியுடன் கிளம்பி சென்றனர்.

🎀🎀குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ₹ 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் திருச்சி மாநாட்டில் அறிவிப்பு.

அனைவருக்கும் குடிநீர், அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட 7 உறுதிமொழிகள்.10 ஆண்டு திட்டமாக படிப்படியாக நிறைவேற்றப்படும்.

-திருச்சி திமுக மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.

🎀🎀46 வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் 4 தங்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றிருக்கிறார் தல அஜித்.

🎀🎀கலைஞர் மறைந்துவிட்டார் என நினைத்துருந்தேன். ஸ்டாலின் உருவில் இருக்கிறார்.

- திமுக தலைவர் ஸ்டாலின் உரைக்கு பிறகு பொதுச் செயலாளர் துரைமுருகன் உருக்கம்.

🎀🎀மனித கழிவுகளை மனிதரே அகற்றும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

 - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

🎀🎀அடுத்த பத்து ஆண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்.

ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்   வேலையில்லா திண்டாட்டம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- திமுக தலைவர் ஸ்டாலின்.

🎀🎀அரசியலை லாபம் பெறும் தொழிலாக,கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர் .

மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது. பெண்களுக்கு 50% கொடுப்பது எங்கள் கடமை

ஆணும், பெண்ணும் சமம் என்பதே எங்கள் கொள்கை - சீமான்.

🎀🎀’இந்திய அணியின் எதிர்கால தொடக்க ஆட்டக்காரர் இவர்’ - அசத்தும் வாஷிங்டன் சுந்தர்

🎀🎀பேராசிரியர் க.அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று  சென்னை கீழ்ப்பாக்கத்தில் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்

🎀🎀திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி இத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெறும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

🎀🎀வாக்களிக்க வாருங்கள் என வாக்களிக்க அழைப்பிதழ் பத்திரிகை வடிவில் தேர்தல் ஆணையம் வெளியீடு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...