கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (15-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 15, 2021



கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பங்குதாரர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். விலை உயர்ந்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். நேர்மறையான சிந்தனைகள் தோன்றும். வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : சிந்தனைகள் தோன்றும்.


கிருத்திகை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 15, 2021



குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் நீங்கும். பிள்ளைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



கிருத்திகை : சிறப்பான நாள்.


ரோகிணி : கருத்து வேறுபாடுகள் மறையும்.


மிருகசீரிஷம் : லாபம் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 15, 2021



சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவின் மூலம் கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகளால் செல்வாக்கு உயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்



மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும்.


திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும்.


புனர்பூசம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 15, 2021



தாயாருடன் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். நெருங்கிய உறவினர்களின் உதவிகளால் பிரச்சனைகள் குறையும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். வீடு மற்றும் வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். சிலருக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



புனர்பூசம் : புதிய மாற்றங்கள் உண்டாகும்.


பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.


ஆயில்யம் : செலவுகள் ஏற்படும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 15, 2021



இழுபறியான பல வேலைகளை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். தொலைபேசி மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மகம் : அனுசரித்து செல்லவும்.


பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


உத்திரம் : பிரச்சனைகள் நீங்கும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 15, 2021



சாதுர்யமாக பேசி காரியங்களை சாதிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். நெருக்கமானவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசனைகளை செய்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். நண்பர்களுக்கிடையே மதிப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



உத்திரம் : அனுகூலமான நாள்.


அஸ்தம் : லாபம் மேம்படும்.


சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 15, 2021



எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



சித்திரை : காலதாமதம் உண்டாகும்.


சுவாதி : கருத்து வேறுபாடுகள் மறையும்.


விசாகம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 15, 2021



பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். குடும்பத்தில் உங்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



விசாகம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


அனுஷம் : அனுபவம் உண்டாகும்.


கேட்டை : மேன்மையான நாள்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 15, 2021



திட்டமிட்ட காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். உறவினர் மற்றும் நண்பர்களிடம் ஆதாயமான பலன்கள் உண்டாகும். அரசு சார்ந்த செயல்பாடுகளின் மூலம் அனுகூலம் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



மூலம் : ஆதாயமான நாள்.


பூராடம் : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.


உத்திராடம் : பொறுப்புகள் மேம்படும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 15, 2021



தன்னம்பிக்கையுடன் எந்த செயலையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதரர்களால் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணைவரின் வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மறைமுகமான சில திறமைகள் வெளிப்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.


திருவோணம் : ஆதரவு அதிகரிக்கும்.


அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 15, 2021



குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வதற்கான தன உதவிகள் கிடைக்கும். சாதுர்யான பேச்சுக்களின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


சதயம் : தன உதவிகள் கிடைக்கும்.


பூரட்டாதி : இழுபறிகள் அகலும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 15, 2021



மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். மனதில் பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு உண்டாகும். அரசு பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



பூரட்டாதி : புரிதல் ஏற்படும்.


உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.


ரேவதி : சோர்வு உண்டாகும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...