கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்விப் படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்(Chief Minister Mr.M.K.Stalin has tabled a Bill to provide 7.5% Reservation in Professional Courses for Government School Students)...



சட்டசபையில்  உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.


தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு  7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்  சட்டமசோதாவை சட்டசபையில்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

   

பின்னர் அவர் பேசும் போது கடந்த பல ஆண்டுகளாக அரசுப்பள்ளி மாணவர்கள் விரும்பும் உயர்கல்வியை பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது; உயர்கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு கிடைப்பதில்லை என கூறினார்.


எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-



தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன் வடிவை ஒரு மனதாக நாங்களும் ஆதரிக்கிறோம். பெரும்பாலும் ஏழை, எளிய, நடுத்தர குடும்ப மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர்; அவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி கற்க முடியாத சூழல் உள்ளது என கூறினார்.


ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்டசபையில்  நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...