கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்கல்வித்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022 : மானியக் கோரிக்கை எண்:43, நாள்: 26-08-2021 - அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்...


School Education - Policy Note 2021-2022: Grant Request No: 43, Date: 26-08-2021 - Anbil Mahesh Poyyamozhi, Minister of School Education ...


 >>> பள்ளிக்கல்வித்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022 : மானியக் கோரிக்கை எண்:43, நாள்: 26-08-2021 - அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்...




2021ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வினை 2021-22ம் ஆண்டுக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

2021-22 ஆம் நிதியாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ரூ.4.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

2021-22 கல்வி ஆண்டில் 2098 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளி கல்வி துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.

இந்த கல்வியாண்டில் மலைப்பாங்கான மற்றும் தொலைதூரப் பகுதிகளில் 12 தொடக்கப் பள்ளிகள் புதியதாக தொடங்கப்படுவதுடன் 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளன.

2020-21ம் கல்வி ஆண்டில் 26 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன; 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 36 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 46 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புது பொலிவுடன் கட்டிட அமைப்பில் ஏற்பட்ட பழுதுகள் சரி செய்யப்படும்.

குளிர்சாதன வசதி, இதர மின்சார வசதிகள் புதிய தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்படும்

மின் நூலகம் உருவாக்கப்பட்டு உலகமெங்கும் உள்ள வாசகர்கள் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்படும்.

எங்களைப் பொறுத்தவரை நீட் தேர்வாக இருந்தாலும் சரி, இரு மொழிக் கொள்கையாக இருந்தாலும் சரி, அரசு முன்வைக்கும் நல்ல நடவடிக்கைகளுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் - சட்டமன்றத்தில் செங்கோட்டையன் பேச்சு


#பாலியல் தொல்லைகளில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க மாணவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும்
- பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பு


#ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15ஆம் தேதி முதல் 22 ஆம் வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரம் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

- பள்ளி கல்வி துறை கொள்கை விளக்க குறிப்பு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மிகச்சிறந்த பவர் பேங்க் (Power Bank) மாடல்களின் விவரங்கள்

  இந்தியாவில் தற்போது (2025) விற்பனையில் உள்ள மிகச்சிறந்த மற்றும் நம்பிக்கையான பவர் பேங்க் (Power Bank) மாடல்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்ப...